நோயாளிகளுக்கு உணவுப்பொருட்கள் வழங்கல்

நோயாளிகளுக்கு உணவுப்பொருட்கள் வழங்கினர். உலக நீரழிவு தினத்தை முன்னிட்டு விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் இந்த பொருட்கள் வழங்கப்பட்டன.
நோயாளிகளுக்கு உணவுப்பொருட்கள் வழங்கல்
Published on

சிங்கம்புணரி

சிவகங்கை மாவட்டம் சிங்கம்புணரி அரசு தலைமை மருத்துவமனைக்கு வந்த மனிதநேய மக்கள் கட்சியினர், உள் நோயாளிகள் அனைவருக்கும் ரொட்டி, பழங்கள், பிஸ்கட் ஆகியவற்றை வழங்கினர். உலக நீரழிவு தினத்தை முன்னிட்டு விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் இந்த பொருட்கள் வழங்கப்பட்டன.

அரசு தாலுகா தலைமை மருத்துவர் அயன்ராஜ் முன்னிலை வகித்தார். ம.ம.க. மாவட்ட இளைஞரணி பொறுப்பாளர் முகமது அசாருதீன் தலைமை தாங்கினார். மாவட்ட சிறுதொழில் சங்க தலைவர் சிவனேஷ் ராஜா, ம.ம.க. நகரத் தலைவர் அப்துல் வஹாப், செயலாளர் சேக் அப்துல்லா, பொருளாளர் சேக் அப்துல்லா, ம.ம.க. நகரச் செயலாளர் ஜாபர் அலி, எஸ்.டி.பி.ஐ. அன்வர்தீன் நசீர் ராஜா மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com