என் மலர்
சிவகங்கை
- சிங்கம்புணரி தாலுகா எஸ்.புதூர் ஒன்றியத்தில் பால் உற்பத்தியாளர்களுக்கு கடனுதவி வழங்கப்பட்டது.
- 10 நபர்களுக்கு வங்கி மேலாளர் ரமேஷ்பாபு அதற்கான காசோலையை வழங்கினார்.
திருப்பத்தூர்
சிவகங்கை மாவட்டம் சிங்கம்புணரி தாலுகா எஸ்.புதூர் ஒன்றியம் வாராப்பூர் கிராமத்தில் செயல்பட்டு வரும் பால் உற்பத்தியாளர் சங்கங்களுக்கு கடனுதவி வழங்கும் நிகழ்ச்சி ஊராட்சி மன்ற தலைவர் மலர்விழி நாகராஜன் தலைமையில் நடைபெற்றது. இக்கிராமத்தைச் சுற்றியுள்ள பகுதிகளில் பால் உற்பத்தியை அதிகப்படுத்தும் முயற்சியாக பால் உற்பத்தியாளர் சங்கங்களில் உள்ள உறுப்பினர்களுக்கு புதிதாக கறவை மாடு வாங்குவதற்கு புதுக்கோட்டை மாவட்டம் பொன்னமராவதியில் செயல்பட்டு வரும் கனரா வங்கி கிளையில் முதல் கட்டமாக சுமார் பத்து நபர்களை தேர்வு செய்து நபர் ஒன்றுக்கு ரூ.50 ஆயிரம் வீதம் வழங்கும் கடன் முயற்சியை ஊராட்சி மன்ற தலைவர் மேற்கொண்டு வந்தார்.
அதன் அடிப்படையில் இங்குள்ள சமுதாயக் கூடத்தில் தேர்வு செய்யப்பட்ட 10 நபர்களுக்கு வங்கி மேலாளர் ரமேஷ்பாபு அதற்கான காசோலையை வழங்கினார். நிகழ்ச்சியில் வங்கி அலுவலர் அஞ்சு, துணைத் தலைவர் சித்ரா, செயலர் வெள்ளைச்சாமி,வார்டு உறுப்பினர்கள்,பொன்னமராவதி வி. என்.ஆர்.கன்ஸ்ட்ரக்சன் உரிமையாளர் நாகராஜன் மற்றும் ஊர் முக்கியஸ்தர்கள் ஆகியோர் கலந்து கொண்டனர்.
- திருப்பத்தூரில் ‘மக்களுடன் முதல்வர்’ திட்டத்தின் சிறப்பு முன்னோடி முகாம் நடந்தது.
- இந்த முகாமில் கலெக்டர் பங்கேற்று ஆய்வு நடத்தினார்.
சிவகங்கை
சிவகங்கை மாவட்டம் திருப்பத்தூர் பேரூராட்சி பகுதியிலுள்ள தனியார் மண்டபத்தில் ''மக்களுடன் முதல்வர்" என்ற புதிய திட்டத்தின் கீழ் சிறப்பு முன்னோடி முகாம் நடந்தது. இதில் கலெக்டர் ஆஷா அஜித் கலந்து கொண்டு பேசியதாவது:-
முதலமைச்சரின் புதிய திட்டமான "மக்களுடன் முதல்வர்" என்ற திட்டம் தமிழகத்தில் செயல்ப டுத்தப்படவுள்ளது. இதில் அரசின் 13 துறைகள் பங்கேற்க வுள்ளன. இத்துறைகளின் கீழ் செயல்படுத்தப்பட்டு வரும் பல்வேறு திட்டங்க ளின் பயன்களை பெறு வதற்கு ஏதுவாக இம்மு காமினை நடத்துவதற்கு முதல்-அமைச்சரால் உத்தர விடப்பட்டுள்ளது.
அதன் முன்னோட்டமாக, தமிழகத்தில் 6 மாநக ராட்சிகள், 7 நகராட்சிகள், 7 பேரூராட்சிகள் மற்றும் 4 பிற நகர் பகுதிகளில் மக்களுடன் முதல்வர் திட்டம் முகாம் நடை பெறுகிறது.
சிவகங்கை மாவட்டம் திருப்பத்தூரில் இன்று நடந்த முகாமில் மொத்தம் 944 மனுக்கள் பெறப் பட்டுள்ளது. இதில், தகுதியுடைய மனுக்கள் மீது உடன் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு உரிய பலன்கள் வழங்கப்படும்.
இதுபோன்று, தங்களது பகுதிகளில் நடைபெறும் முகாம்களில் பொதுமக்கள் தங்களது கோரிக்கைகள் தொடர்பாக உரிய ஆவணங்களுடன் மனுக்க ளை அளித்து, தங்களது கோரிக்கைகளை நிவர்த்தி செய்து கொள்வதற்கு பயன்படுத்திக்கொள்ள வேண்டும்.
இவ்வாறு அவர் பேசினார்.
இந்நிகழ்ச்சியில், மாவட்ட வருவாய் அலு வலர் மோகனச்சந்திரன், தேவகோட்டை வருவாய் கோட்டாட்சியர் பால்துரை, திருப்பத்தூர் பேரூராட்சி தலைவர் கோகிலாராணி மற்றும் பேரூராட்சி மன்ற உறுப்பினர்கள் உட்பட சம்மந்தப்பட்ட துறை சார்ந்த அலுவலர்கள் பலர் கலந்து கொண்டனர்.
- காய்கறி, உணவு கழிவுகள் மூலம் பயோ கியாஸ் தயாரித்து உணவு சமைக்கும் பணியை சிவகங்கை கலெக்டர் தொடங்கி வைத்தார்.
- 200 முதல் 250 கிலோ காய்கறி, உணவுக்கழிவு மூலம் 3 மணி நேரத்துக்குரிய எரிவாயு கிடைக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
சிவகங்கை
சிவகங்கை மாவட்டம் மறவமங்கலம் அரசு மேல் நிலைப் பள்ளியில் 300-க்கும் மேற்பட்ட மாணவர்கள் பயின்று வருகின்றனர். அவர்களுக்கு விறகு அடுப் பில் சத்துணவு சமைத்து வழங்கப்பட்டு வந்தது. அதன்மூலம் உண்டாகும் புகையால் சமையலர்கள், மாணவர்கள் பாதிப்புக்குள் ளாகி வந்தனர்.
இப்பிரச்சினையை போக்க ஊராட்சி மன்ற தலைவர் அன்பழகன் ஏற்பாட்டில் தூய்மை பாரத திட்டத்தின் கீழ் பள்ளி வளாகத்தில் ரூ.15 லட்சத்தில் காய்கறி, உணவுக்கழிவுகளில் இருந்து தயாரிக்கும் பயோ கேஸ் அமைப்பு ஏற்படுத்தப்பட்டது. இதில் இருந்து கிடைக்கும் எரிவாயு மூலம் மாணவர்களுக்காக சத்துணவு சமைக்கப்பட உள்ளது.
நாள் ஒன்றுக்கு அதிகபட்சம் 200 முதல் 250 கிலோ காய்கறி, உணவுக்கழிவு மூலம் 3 மணி நேரத்துக்குரிய எரிவாயு கிடைக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இப்பணிகள் முழுமையாக நிறைவடைந்த நிலையில் மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குனர் சிவராமன் முன்னிலையில், மாவட்ட கலெக்டர் ஆஷா அஜித் ரிப்பன் வெட்டி திறந்து வைத்து பார்வையிட்டார்.
இதில் வட்டார வளர்ச்சி அலுவலர் ரத்தினவேல், கிராம நிர்வாக அலுவலர் தினேஷ், ஊராட்சி செயலாளர் ஜான்சிராணி, பள்ளி ஆசிரியர்கள், அரசு அலுவலர்கள் பலர் பங்கேற்றனர்.
- வடமாடு மஞ்சுவிரட்டு நடத்த அரசு அனுமதிக்க வேண்டும்.
- தமிழ்நாடு வடமாடு நலச்சங்கத்தின் சார்பில் சங்க கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
சிவகங்கை
சிவகங்கை மாவட்டத்தில் தமிழ்நாடு வடமாடு நலச் சங்கத்தின் சார்பில் ஆலோ சனை கூட்டம் நடை பெற்றது. இக்கூட்டத்தில் ஆண்டு முழுவதும் வடமாடு மஞ்சுவிரட்டு நடத்த அரசு அனுமதிக்க வேண்டும் என்பதை வலியுறுத்தி தீர்மானம் நிறைவேற்றப் பட்டது.
சங்கத்தின் கவுரவ தலைவர் சேவியர்தாஸ், மாவட்ட செயலாளர் ராஜா ஆகியோர் தலைமையில் நடைபெற்ற இந்த கூட்டத்தில் மாநில கவுரவ தலைவர் செல்வம், மாநில தலைவர் அந்தோணி முத்து, மாநில செயலாளர் ரெக்குமோகன், மாநில துணைத்தலைவர் பரத்ராஜ், மாநில பொருளாளர் முத்து பாண்டி ஆகியோர் கலந்து கொண்டனர்.
கூட்டத்தில் மாவட்ட தலைவர் சதீஸ்வரன், கவுரவ ஆலோசகர் தனசேக ரன், பொருளாளர் ரஞ்சித், மாவட்ட துணை செயலா ளர் பிரபு மற்றும் பலர் கலந்து கொண்டனர்.
தற்பொழுது வடமாடு மஞ்சுவிரட்டு நடத்த தமிழக அரசு 6 மாத காலம் மற்றும் அனுமதி வழங்கி உள்ள நிலையில் ஆண்டு முழுவ தும் வடமாடு மஞ்சுவிரட்டு நடத்த அனுமதி வழங்கி அரசாணை வெளியிட வேண்டும் என முதல்-அமைச்சருக்கும், விளையாட்டுத்துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலி னுக்கு கோரிக்கை விடுக்கப் பட்டு தீர்மானம் நிறை வேற்றப்பட்டது.
இந்த நிகழ்ச்சியில் மோகன், கவியரசன், பார்த்திபன், மோசஸ், செல்வகணேசன், செல்வம், கவுந்தர பாண்டியன், விஜய், ஸ்ரீதர் ராஜ், முனீஸ்வரன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
- மறைமாவட்ட 3-வது புதிய ஆயராக லூர்து ஆனந்தம் நியமனம் செய்துள்ளனர்.
- 26-ந்தேதி இத்திரு நிலைப்பாட்டு நிகழ்வானது மாலை 4 மணிக்கு தொடங்கி இரவு 8 மணிக்கு நிறைவு பெறுகிறது.
சிவகங்கை
சிவகங்கை மறை மாவட்டத்தின் 3-வது புதிய ஆயராக லூர்து ஆனந்தம் வருகிற 26-ந்தேதி அன்று சிவகங்கை புனித ஜஸ்டின் மேல்நிலைப் பள்ளியில் பொறுப்பேற்கிறார்.
இவ்விழாவில் திருத் தந்தையின் இந்திய தூதர் பேராயர் லியோ போல்டோ ஜிரல்லி முன்னிலை வகிக்கிறார். மதுரை உயர் மறைமாவட்ட பேராயர் அந்தோணி பாப்புசாமி புதிய ஆயரை திருநிலைப்படுத்துகிறார். தூத்துக்குடி மறைமாவட்ட ஆயரும் சிவகங்கை மறைமாவட்டத்தின் பரிபாலகரமான மேதகு ஆயர் ஸ்டீபன், சிவகங்கை மேனாள் ஆயர் சூசைமாணிக்கம், சென்னை மயிலை உயர் மறைமாவட்ட பேராயர் மேதகு ஜார்ஜ் அந்தோணிசாமி மற்றும் பிற மறைமாவட்டங்களின் ஆயர்களும் இத்திருலை பாட்டு நிகழ்வில் கலந்து கொள்கின்றனர்.
மேலும் பாண்டிச்சேரி கடலூர் உயர் மறைமாவட்ட பேராயர் பிரான்சிஸ் கலிஸ்ட், சென்னை சி.எஸ்.ஐ. மேனாள் பேராயர் தேவசகாயம் அமைச்சர் பெரியகருப்பன், மனித நேய மக்கள் கட்சி தலைவர் ஜவாஹிருல்லா, மாநில சிறுபான்மை நல ஆணையர் பீட்டர் அல்போன்ஸ், திருச்சி எம் எல் ஏ இனிகோ இருதயராஜ் ஆகியோர் பங்கேற்று சிறப்பு செய்கின்றனர்.
26-ந்தேதி இத்திரு நிலைப்பாட்டு நிகழ்வானது மாலை 4 மணிக்கு தொடங்கி இரவு 8 மணிக்கு நிறைவு பெறுகிறது. இந்த மாபெரும் திருநிலைப்பாட்டு நிகழ்வில் அனைவரும் பங்கேற்று சிறப்பு செய்ய சிவகங்கை கத்தோலிக்க மறைமாவட்டம் அழைப்பு விடுத்துள்ளது.
- நூல் வெளியீட்டு விழா நடந்தது.
- வந்தேறும் குடிகள் நூல் குறித்து மன்னர் மேல் நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர் சுந்தர்ராஜன் பேசினார்.
சிவகங்கை
சிவகங்கை மாவட்ட மைய நூலகத்தில் நடந்த 56-வது தேசிய நூலக வார விழாவில் வந்தேறும் குடிகள் என்ற நூலை முன்னாள் அழகப்பா பல்கலைக்கழக துணை வேந்தர் சுப்பையா வெளியிட சிவகங்கை நகர் மன்ற தலைவர் துரை ஆனந்த் பெற்றுக் கொண்டார்.
மாவட்ட நூல் இருப்பு சரிபார்ப்பு அலுவலர் வெள்ளைச்சாமி கண்ணன் தலைமை வகித்தார். நூலகர் முத்துக்குமார் வரவேற்றார். தமிழ்ச் செம்மல் பகிரத நாச்சியப்பன் வாசிப்பின் அவசியம் குறித்து பேசினார்.
வந்தேறும் குடிகள் நூல் குறித்து மன்னர் மேல் நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர் சுந்தர்ராஜன் பேசினார்.
நூலகத் தன்னார்வ லர்கள் ரமேஷ் கண்ணன், தொழிலதிபர் பாண்டிவேல், நல்லாசிரியர் கண்ணப்பன், புலவர் மெய் ஆண்டவர் ஆகியோர் வாழ்த்துரை வழங்கினர். நூல் ஆசிரியர் ஈஸ்வரன் ஏற்புரை வழங்கினார். நூலகர் கனக ராஜன் நன்றி கூறினார்.
விழாவில் நூலகர்கள், நூலக பணியாளர்கள் மற்றும் வாசகர்கள், பள்ளி மாணவ, மாணவிகள், பொதுமக்கள் ஆகியோர் கலந்து கொண்டனர்.
- அதிகாரிகளை கண்டித்து மறியல் போராட்டம் நடத்த முடிவு செய்துள்ளனர்.
- திருவள்ளூர் சங்கையா கோவில் முன்பு உயர் கோபுர மின்விளக்கு அமைத்து தர வேண்டும் என்றார்.
மானாமதுரை
சிவகங்கை மாவட்டம் இளையான்குடி ஊராட்சி ஒன்றிய குழுக் கூட்டம் தலைவர் முனியாண்டி தலைமையில் நடைபெற்றது. துணைத்தலைவர் தனலட் சுமி, ஆணையாளர் முத்துக் குமரன், வட்டார வளர்ச்சி அலுவலர் பால சுப்பிரமணி யன் மற்றும் வார்டு உறுப்பி னர்கள் கூட்டத்தில் கலந்து கொண்டனர்.
கூட்டத்தில் பல்வேறு நிறைவேற்றப் பட வேண்டிய தீர்மானங்கள் வாசிக்கப் பட்டு உறுப்பினர்களிடம் ஒப்புதல் பெறப்பட்டது. அதைத் தொடர்ந்து பேசிய தி.மு.க. உறுப்பினர் முருகா னந்தம் மின்சாரம், குடிநீர், நெடுஞ்சாலை உள்ளிட்ட துறை அதிகாரிகள் இந்த கூட்டத்தில் பங்கேற்க வில்லை. ஏற்கனவே நடந்த பல கூட்டங்களிலும் இவர் கள் கலந்து கொள்ளவில்லை உறுப்பினர்கள் கேட்கும் கேள்விகளுக்கு பதில் சொல்ல ஆள் இல்லை. எனவே கூட்டத்தில் பங்கேற் காத துறை அதிகாரிகளைக் கண்டித்து ஊராட்சி ஒன்றிய அலுவலகம் முன்பு தலைவர் தலைமையில் மறியல் போராட்டம் நடத்த வேண் டும்.
உறுப்பினர் முருகன் பேசும் போது அனைத்து ஊராட்சிகளிலும் கொசு மருந்து அடிப்பதற்காக வாங்கப்பட்ட இயந்திரங் கள் எப்படி பயன்படுத்துவது எனத் தெரியாமலேயே அவைகள் கிடப்பில் போடப் பட்டுள்ளது. இதன் மூலம் அரசு நிதி வீணடிக்கப்படு கிறது. அனைத்து ஊராட்சி களிலும் கொசுத் தொல்லை யால் மக்கள் அவதிப்படு கின்றனர். எனவே கொசு உற்பத்தியை கட்டுப்படுத்த நடவடிக்கை எடுக்க வேண் டும் என்றார்.
உறுப்பினர் கீர்த்தனா கனகராஜ் பேசும்போது அனைத்து ஊராட்சிகளிலும் உள்ள அரசு பள்ளிகளின் கழிப்பறையை பராமரிக்க வேண்டும். விளாங்குளத்தில் சாய்ந்த நிலையில் உள்ள மின்கம்பங்களை சரி செய்ய வேண்டும். திருவள்ளூர் சங்கையா கோவில் முன்பு உயர் கோபுர மின்விளக்கு அமைத்து தர வேண்டும் என்றார்.
துணைத் தலைவர் தனலட்சுமி பேசும்போது ஊராட்சி ஒன்றியத்தில் வளர்ச்சி திட்ட பணிகளை மேற்கொள்ள திட்டமிடும் போது அனைத்து உறுப்பினர்களிடம் கலந்து பேசி திட்ட பணிகளை ஒதுக்கீடு செய்ய வேண்டும் என்றார்.
உறுப்பினரின் கேள்வி களுக்கு பதில் அளித்த ஆணையாளர் முத்துக்கும ரன் கோரிக்கைகள் நிறை வேற நடவடிக்கைகள் எடுக்கப்படும் என்றார்.
- அரசு விடுதியில் தங்கி படிக்கும் மாணவர்களுக்கு கலெக்டர் பாராட்டு தெரிவித்தார்.
- இதில் மாவட்ட வருவாய் அலுவலர் மோகனச்சந்திரன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
சிவகங்கை
சிவகங்கை மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நடந்தது. கலெக்டர் ஆஷா அஜித் தலைமை தாங்கினார். கூட்டத்தில் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி பொதுமக்களிட மிருந்து 434 மனுக்கள் பெறப்பட்டது. பின்னர் மாவட்ட பிற்படுத்தப் பட்டோர் மற்றும் சிறு பான்மையினர் நல அலுவ லகத்தின் சார்பில் ஒரு பயனாளிக்கு ரூ.5 ஆயிரம் மதிப்பீட்டிலான தேய்ப்பு பெட்டியும், மாற்றுத்தி றனாளிகள் நலத்துறையின் சார்பில் 7 பேருக்கு ரூ.15 ஆயிரத்து 30 மதிப்பீட்டில் பல்வேறு வகையான உபகரணங் களையும் கலெக்டர் வழங்கினார்.
மேலும் மாவட்ட குழந்தை கள் பாதுகாப்பு அலுவலகத்தின் சார்பில் அரசு குழந்தைகள் இல்ல குழந்தைகளுக்கான வானவில் கொண்டாட்ட போட்டிகளில் தேர்வு செய்யப்பட்ட காரைக்குடி அரசு குழந்தைகள் இல்லம் மற்றும் சிவகங்கை அரசு குழந்தைகள் இல்லம் ஆகியவற்றில் தங்கி படிக்கும் 4 மாண வர்களுக்கு பரிசு மற்றும் பாராட்டு சான்றிதழ்களை கலெக்டர் ஆஷா அஜித் அவர்கள் வழங்கினார்.
இதில் மாவட்ட வருவாய் அலுவலர் மோகனச்சந்திரன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
- மொபட்டில் சென்ற பெண்ணிடம் 10 பவுன் தாலி செயின் பறிக்கப்பட்டது.
- திருடுபோன நகையின் மதிப்பு ரூ.5 லட்சம் ஆகும்.
தேவகோட்டை
சிவகங்கை மாவட்டம் தேவகோட்டை அருகே உள்ள நாகாடியை சேர்ந்த வர் சுப்பிரமணியன். இவரது மனைவி கனகம் (வயது45). இவர் சம்பவத்தன்று மொபட்டில் தேவகோட்டை பஜாருக்கு சென்றார். அங்கு ரெடிமேட் ஆடைகளை வாங்கிவிட்டு வீட்டுக்கு புறப்பட்டார்.
தேவகோட்டை-சிவ கங்கை சாலையில் சென்று கொண்டிருந்த போது மர்ம நபர் ஒருவர் அவரை மற்றொரு மோட்டார் சைக்கிளில் பின் தொடர்ந்தார். ஆள் நடமாட்டம் இல்லாத பகுதியில் வந்தபோது திடீரென அந்த நபர் கனகத்தை வழிமறித்தார். இதனால் அதிர்ச்சியடைந்து வாகனத்தை நிறுத்தினார். அப்போது மர்ம நபர் கத்தியை காட்டி மிரட்டி கனகம் கழுத்தில் அணிந்தி ருந்த 10 பவுன் தாலிச் செயினை பறித்துக் கொண்டு மின்னல் வேகத்தில் தப்பினார்.
இதுகுறித்து அவர் வேலாயுதபட்டிணம் போலீசில் புகார் செய்தார். வழக்குப்பதிவு செய்த போலீசார் பட்டப்பகலில் தாலிச்செயினை பறித்த மர்ம நபரை தேடி வருகின் றனர். திருடுபோன நகையின் மதிப்பு ரூ.5 லட்சம் ஆகும்.
- மதுரை நோக்கி வந்த கார் மின் கம்பத்தில் மோதி விபத்து ஏற்பட்டது.
- இந்த சம்பவத்தால் அந்த பகுதியில் சுமார் சிறிது நேரம் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.
திருப்பத்தூர்
மதுரையில் இருந்து பொன்னமராவதிக்கு பயணிகளுடன் வாடகை கார் ஒன்று புறப்பட்டது. இந்த காரை லியாகத் அலி என்பவர் ஓட்டி வந்தார். பயணிகளை இறக்கி விட்டு மீண்டும் அந்த கார் மதுரையை நோக்கி செல்லும்போது சிவகங்கை மாவட்டம் திருப்பத்தூர் அருகே உள்ள ஆ.தெக்கூருக்கு வரும்போது திடீரென்று அந்த கார் கட்டுப் பாட்டை இழந்து தாறுமாறாக ஓடி சாலையோரம் இருந்த மின் கம்பத்தில் மோதியது.
இதில் கார் தலை குப்புற கவிழ்ந்தது. டிரைவர் எந்தவித காயமின்றி அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினார். இருப்பினும் அந்த மின்கம்பம் சேதமானதால் அந்த பகுதி களில் மின்தடை ஏற்பட்டது. இதனால் அக்கம் பக்கத்தில் உள்ளவர்கள் சத்தம் கேட்டு உடனடியாக நெற்குப்பை போலீஸ் நிலையத்திற்கு தகவல் தெரிவித்தனர்.
சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த காவல் ஆய்வாளர் சுந்தர பாண்டி யன் விபத்துக்கான காரணம் குறித்து விசாரணை நடத்தி வருகிறார். இந்த சம்பவத்தால் அந்த பகுதியில் சுமார் சிறிது நேரம் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.
- சிவகங்கை சட்டமன்ற தொகுதி கல்லல் ஒன்றிய அ.தி.மு.க. சார்பில் பூத் கமிட்டி ஆய்வுக்கூட்டம் நடந்தது.
- தி.மு.க.வில் இருந்து 15-க்கும் மேற்பட்டவர்கள் விலகி அ.தி.மு.க.வில் மாவட்ட செயலாளர் முன்னிலையில் இணைந்தனர்.
சிவகங்கை
சிவகங்கை சட்டமன்றத் தொகுதி கல்லல் தெற்கு ஒன்றிய அ.தி.மு.க. சார்பில் பூத் கமிட்டி பொறுப்பாளர்கள் ஆய்வுக் கூட்டம் பனங்குடியில் ஒன்றிய செயலாளர் சேவியர் தாஸ் தலைமையில் நடைபெற்றது. இக்கூட்டத்தில் மாவட்ட செயலாளர் செந்தில்நாதன் எம்.எல்.ஏ., சிவகங்கை மாவட்ட பொறுப்பாளரும், அமைப்பு செயலாளருமான ஏ.கே.சீனிவாசன், முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் நாகராஜன், நகர செயலாளர் ராஜா ஆகியோர் சிறப்பு அழைப்பாளர்களாக கலந்து கொண்டு ஆய்வுப் பணிகளை மேற்கொண்டனர்.
அப்போது அ.தி.மு.க. அமைப்பு செயலாளர் சீனிவாசன் பேசுகையில், அ.தி.மு.க. ஆட்சியில் தான் தமிழகத்தில் 80 சதவீத மருத்துவ கல்லூரி, 90 சதவீத சட்டக் கல்லூரிகள் அமைக்கப்பட் டது. மேலும் 20 ஆயிரத்திற் கும் மேற்பட்ட ரேசன் கடைகள் திறக்கப்பட்டது. 12 ஆயி ரத்திற்கும் மேற்பட்ட கிராம நிர்வாக அலுவலர்களை நியமனம் செய்துள்ளது.
இதை நமது கட்சி நிர்வா கிகள் பொதுமக்களிடம் எடுத்து கூறி விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டும் என்றார். மேலும் கல்லல் ஒன்றியத்தில் தி.மு.க.வில் இருந்து 15-க்கும் மேற்பட்டவர்கள் விலகி அ.தி.மு.க.வில் மாவட்ட செயலாளர் செந் தில் நாதன் முன்னிலையில் இணைந்தனர்.
- சிவகங்கையில் நடந்த 70-வது கூட்டுறவு வார விழாவில் பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டன.
- மாற்றுத்திறனாளிகளுக்கு கடனுதவிகள், சிறு வணிகக்கடன் திட்டம் போன்ற திட்டங்கள் வழங்கப்படுவதாக விழாவில் அமைச்சர் பேசினார்.
சிவகங்கை
சிவகங்கை நகராட்சிக்குட் பட்ட தனியார் மகாலில், கூட்டுறவுத்துறையின் சார்பில் 70-வது அனைத்திந்திய கூட்டுறவு வார விழா நடைபெற்றது. விழாவுக்கு மாவட்ட கலெக்டர் ஆஷா அஜித் தலைமை தாங்கினார். இதில் கூட்டுறவுத்துறை அமைச்சர் கே.ஆர்.பெரிய கருப்பன் கலந்துகொண்டு பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகள் மற்றும் சிறந்த கூட்டுறவு சங்கங்களுக்கு கேடயங்கள் வழங்கினார். அப்போது அவர் பேசியதாவது:-
தமிழ்நாடு முதலமைச்சர் ஏழை, எளிய மக்கள் பயன் பெறும் வகையில் பல்வேறு நலத்திட்டங்களை அறிவித்து சிறப்பான முறையில் செயல்படுத்தி வருகிறார். அதில் கூட்டுறவுத்துறையின் வாயிலாக பொதுமக்களுக்கு பயனுள்ள வகையில் எண்ணற்ற திட்டங்களை செயல்படுத்தி, பொதுமக்களின் இல்லங்களுக்கே சென்று உரிய பயன்களை வழங்குவ தற்கென நடவடிக்கையும், மேற்கொள்ளப்பட்டு வருகிறது. கூட்டுறவு வங்கிகள் மூலம் விவசாயிகளுக்கு தேவையான கடனுதவிகள் மட்டு மன்றி, மகளிர் சுய உதவிக் குழுக்களுக்கு சுழல் நிதி கடன்கள், மாற்றுத்திறனாளிகளுக்கு பல்வேறு தொழில்கள் துவங்கி பயன்பெறும் வகையில், கடனுதவிகள், சிறு வணிகக்கடன் திட்டம் போன்ற திட்டங்கள் வழங்கப்படுகிறது. முதல்-அமைச்சர் மு.க. ஸ்டாலின் ஆட்சி பொறுப்ற்ற கடந்த இரண்டரை ஆண்டுகளில் சிவகங்கை மாவட்டத்தில் மட்டும் அனைத்து கூட்டுறவு நிறுவ னங்களின் மூலம் 71,456 உறுப்பினர்களுக்கு ரூ.374.18 கோடி மதிப்பீட்டில் பயிர்கட னுதவியும், 7,853 உறுப்பி னர்களுக்கு ரூ.48.35 கோடி மதிப்பீட்டில் கால்நடை பராமரிப்பு கடனுதவியும், 2,47, 920 உறுப்பினர்களுக்கு ரூ.1,519.03 கோடி மதிப்பீட் டில் நகைக்கடனுதவியும், 2,384 குழுக்களுக்கு ரூ.134.98 கோடி மதிப்பீட்டில் சுய உதவிக்குழு கடனுதவியும், 1,368 உறுப்பினர்களுக்கு ரூ.4.76 கோடி மதிப்பீட்டில் சிறுவணிக கடனுதவியும் வழங்கப்பட்டுள்ளது.
மொத்தம் 4,18,657 நபர் களுக்கு ரூ.3,537.12 கோடி மதிப்பீட்டில் கடனுதவிகள் தற்சமயம் வரை கூட்டுறவுத் துறையின் சார்பில் மாவட் டம் முழுவதும் வழங்கப்பட்டுள்ளது.
2 பயனாளிகளுக்கு கருணை அடிப்படையிலான பணிநியமன ஆணைகளை யும், 1 பயனாளிக்கு ரூ.3 லட்சம் மதிப்பீட்டில் காப் பீட்டு தொகைக்கான காசோ லையினையும் என மொத் தம் 3,171 பயனாளிகளுக்கு ரூ.34,88,51,260 மதிப்பீட்டி லான நலத்திட்ட உதவிகள் இவ்விழாவின் வாயிலாக வழங்கப்படவுள்ளது என் றார்.
நிகழ்ச்சியில் கூட்டுறவு சங்கங்களின் மண்டல இணைப்பதிவாளர் கோ. ஜூனு, சிவகங்கை மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கி மேலாண்மை இயக்குநர் கே.சி.ரவிச்சந்திரன், ஆவின் பால்வளத்தலைவர் சேங்கைமாறன், சிவகங்கை ஊராட்சி ஒன்றியக்குழு தலைவர் மஞ்சுளா பால சந்தர், சிவகங்கை நகர்மன்ற தலைவர் சி.எம்.துரை ஆனந்த், துணைத்தலைவர் கார்கண்ணன், துணை பதி வாளர்கள் பாலசந்தர், நாக ராஜன், குழந்தைவேல், ஸ்ரீமான், பாரதி, சேதுராமன், குமரன், காஞ்சிரங்கால்
ஊராட்சி மன்றத்தலைவர் கே.எஸ்.எம்.மணிமுத்து மற்றும் மத்திய கூட்டுறவு வங்கி பொது மேலாளர் (பொ) மாரிச்சாமி, நுகர்பொ ருள் வாணிபக்கழக மண்டல மேலாளர் அருண்பிரசாத், கூட்டுறவு சார்பதிவாளர், செயலாட்சியர்கள் பொன் னையா, சரவணன், சிவ கங்கை கூட்டுறவு மேலாண்மை நிலைய முதல்வர் (பொ) பொ.சக்திவேல் மற்றும் உள்ளாட்சி அமைப்பு களின் பிரதிநிதிகள், கூட்டுறவு சங்கங்களை சார்ந்த தலைவர்கள் மற்றும் உறுப் பினர்கள், அரசு அலுவலர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.






