என் மலர்tooltip icon

    சிவகங்கை

    • காரைக்குடியில் காலித் பிரியாணி ஓட்டலை அமைச்சர் கே.ஆர்.பெரியகருப்பன் திறந்து வைத்தார்.
    • முன்னாள் அமைச்சர் தென்னவன்,நகர்மன்ற தலைவர் முத்து துரை கலந்துகொண்டனர்.

    காரைக்குடி

    தமிழகத்தின் பிரபல ஓட்டல்களில் ஒன்றான காலித் பிரியாணி ஓட்டல் கிளை திறப்பு விழா காரைக்குடியில் நடந்தது. எஸ்.ஏ.எம். குழும சேர்மன் சித்திக் வரவேற்றார். அமைச்சர் கே.ஆர்.பெரியகருப்பன் தலைமை தாங்கி ரிப்பன் வெட்டி ஓட்டலை திறந்து வைத்தார்.

    முன்னாள் அமைச்சர் தென்னவன்,நகர்மன்ற தலைவர் முத்து துரை, துணைத்தலைவர் குணசேகரன், புதுவயல் பேரூராட்சி தலைவர் முகம்மது மீரா, மாவட்ட உணவு பாதுகாப்பு அலுவலர் டாக்டர் பிரபாவதி ஆகியோர் குத்துவிளக்கு ஏற்றினர்.

    காரைக்குடியில் முதன்முறையாக அரேபியன் மந்தி பிரியாணி விற்பனையை அமைச்சர் பெரியகருப்பன் தொடங்கி வைத்தார். இதில் சாக்கோட்டை மேற்கு ஒன்றிய செயலாளர் கே.ஆர்.ஆனந்த்,கிழக்கு ஒன்றிய செயலாளர் சின்னத்துரை, பொதுக்குழு உறுப்பினர் பள்ளத்தூர் கே.எஸ்.ரவி, சாக்கோட்டை கிழக்கு ஒன்றிய துணை செயலாளர் சத்யா ராஜா,அரசு வழக்கறிஞர் பாலசுப்பிர மணியன்,புதுவயல் பேரூராட்சி துணை தலைவர் பகுர்தீன் அலி,நகர்மன்ற உறுப்பினர்கள் கலா காசிநாதன்,சொ.கண்ணன்,முன்னாள் நகர இளைஞரணி அமைப்பாளர் காரை சுரேஷ்,தொழிலதிபர் ஜெரா ல்டின் தாமஸ்,புதுவயல் சித்திக்,ஆப்பிள் மொபைல் உரிமையாளர்கள் செல்வம், வெங்கட்,அனைத்து கட்சி நிர்வாகிகள்,தொழிலதிபர்கள்,பொதுமக்கள் திரளாக கலந்து கொண்டனர்.எச்.ஏ.எம் குழும மேனேஜிங் டைரக்டர் எஸ்.முகம்மது பாசில் நன்றி கூறினார்.

    • திருப்பத்தூர் அருேக நடுவிக்கோட்டையில் நடந்த வி.எஸ்.எம். திருமண மகால் திறப்பு விழாவில் முக்கிய பிரமுகர்கள் பங்கேற்றனர்.
    • சேதுபாஸ்கரா கல்வி குழும நிறுவனர் சேதுகுமணன் பங்கேற்றார்.

    நெற்குப்பை

    சிவகங்கை மாவட்டம் திருப்பத்தூர் தாலுகா கல்லல் ஒன்றியம் கண்டர மாணிக்கம் அருகே உள்ள நடுவிக்கோட்டையில் உள்ள மேலையூர் கிராமத்தில் ஆ.று.வீரய்யா சேர்வை சவுந்தரம்மாள் (வி.எஸ்.எம்.) திருமண மஹால் திறப்பு விழா விமரிசையாக நடைபெற்றது.

    விழாவிற்கு சிறப்பு அழைப்பாளராக 'கல்வி தந்தை' என போற்றப்படும் சேதுபாஸ்கரா கல்வி குழும நிறுவனரான சேது குமணன் பங்கேற்று வி.எஸ்.எம். திருமண மகாலை திறந்து வைத்தார். இதில் பொறியாளர் ராஜா, காளிமுத்து, ஜெயக்குமார், கவுதமன், ஊராட்சி மன்ற தலைவர் வசந்தா சோமன் மற்றும் பல்வேறு கட்சியை சார்ந்த அரசியல் பிரமுகர்கள், தொழில் அதிபர்கள், முக்கி யஸ்தர்கள், பொதுமக்கள் ஆகியோர் கலந்து கொண்டனர்.

    முன்னதா விழாவில் பங்கேற்ற சேதுகுமணன் சால்வை அணிவிக்கப்பட்டு கவுரவிக்கப்பட்டார்.

    • தேவகோட்டையில் நாளை மின்தடை ஏற்படுகிறது.
    • காலை 10 மணி முதல் மாலை 2 மணி வரை மாதந்திர பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளன.

    தேவகோட்டை,

    சிவகங்கை மாவட்டம் தேவகோட்டை துணை மின் நிலையத்தில் நாளை (15-ந் தேதி) காலை 10 மணி முதல் மாலை 2 மணி வரை மாதந்திர பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளன.

    இதன் காரணமாக தேவகோட்டை டவுன், ராம்நகர், உதையாச்சி, உடப்பன்பட்டி, எழுவன்கோட்டை, கண்ணங்கோட்டை, காரை, கோட்டூர், வேப்பங்குளம், கல்லங்குடி, நானாகுடி, திருமணவயல், நாகாடி, அனுமந்தக்குடி, ஊரணிக்கோட்டை பனங்குளம், மாவிடுத்திக்கோட்டை, காயாவயல், புளியால், கண்டதேவி, ஆறாவயல், உஞ்சனை, மற்றும் சுற்றுவட்டார கிராமங்களில் மின்தடை ஏற்படும் என்று மின் வாரிய உதவி செயற்பொறியாளர் ஜோசப் செல்வராஜ் தெரிவித்தார்.

    • தமிழகத்தில் இ-சேவை மையங்கள் மூலம் 215 சேவைகளை மக்களுக்கு வழங்கி வருகிறோம். ஓராண்டில் இது ஒரு சாதனைஆகும்.
    • தமிழ்நாட்டை டிஜிட்டல் நாடாக கொண்டு வரவே இ-அலுவலக கட்டமைப்பு உருவாக்கப்பட்டுள்ளது.

    நெற்குப்பை:

    சிவகங்கை மாவட்டம் திருப்பத்தூர் தாலுகா பூலாங்குறிச்சி ஊராட்சியில் பழமை வாய்ந்த லட்சுமி விலாஸ் செட்டிநாடு இல்லம் உள்ளது. இதன் நூற்றாண்டு விழா நடந்தது.

    விழாவில் சிறப்பு விருந்தினராக அமைச்சர் மனோ தங்கராஜ் கலந்து கொண்டார். பின்னர் அவர் நிருபர்களிடம் கூறியதாவது:-

    சமீபத்தில் அமித்ஷா தமிழ்நாடு வெற்றிடமாக உள்ளது என்று கூறி உள்ளார். தமிழ்நாட்டை பொறுத்தவரை பா.ஜனதா ஒரு காலி பெருங்காய டப்பா. அது எப்போதும் வெற்றிடமாகதான் இருக்கும்.

    திராவிட இயக்க அரசு இருக்கும் வரை தமிழகத்தில் தலைமைக்கு வெற்றிடமே இருக்காது. திமு.க.விற்கு களங்கம் விளைவிக்க பா.ஜனதா நினைத்தால் அது ஒருபோதும் நடக்காது.

    ராஜீவ்காந்தி கொலை வழக்கில் கைதாகி சிறையில் இருந்த 6 பேர் விடுதலையானது மனிதாபிமானம் உள்ள செயல். அதனை அனைவரும் வரவேற்றுள்ளதைப்போல் நானும் வரவேற்கிறேன்.

    தமிழகத்தில் இ-சேவை மையங்கள் மூலம் 215 சேவைகளை மக்களுக்கு வழங்கி வருகிறோம். ஓராண்டில் இது ஒரு சாதனைஆகும். தமிழ்நாட்டை டிஜிட்டல் நாடாக கொண்டு வரவே இ-அலுவலக கட்டமைப்பு உருவாக்கப்பட்டுள்ளது. தகவல் தொழில்நுட்ப துறையில் தமிழகம் கடந்த நிதியாண்டில் ரூ.1 லட்சத்து 9 ஆயிரம் கோடி ஏற்றுமதி செய்துள்ளது, மிகப்பெரிய சாதனைஆகும். ஐ.டி. துறையை மேலும் வலுப்படுத்த தமிழக அரசு பல்வேறு கொள்கை திட்டங்களை வகுத்து வருகிறது.

    இவ்வாறு அவர் கூறினார்.

    இந்த நிகழ்ச்சியில் கலெக்டர் மதுசூதன் ரெட்டி மற்றும் வெளிநாட்டு சுற்றுலா பயணிகள், வெளிநாடு வாழ் இந்தியர்கள் பங்கேற்றனர்.

    • கால்நடைகளுக்கு தேவையான தீவனப்புல் வளர்க்க விதைத் தொகுப்பு வாங்க மானியம் வழங்கப்படும் என கலெக்டர் கூறினார்.
    • கால்நடை மருத்துவ பல்கலைக்கழகம் மூலம் கொள்முதல் செய்யப்பட்டு வழங்கப்படும்.

    சிவகங்கை

    சிவகங்கை மாவட்ட கலெக்டர் மதுசூதன்ரெட்டி விடுத்துள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

    தமிழக அரசின் ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறை தாட்கோ மூலம் ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினருக்கான பொருளாதார மேம்பாட்டுத் திட்டத்தின் கீழ் கால்நடைகளுக்கு தேவைப்படும தீவனப்புல் வளர்க்க விதைத் தொகுப்பு மற்றும் புல்கறனைகள் வாங்குவதற்கு மானியம் வழங்குவதற்கான அரசாணை வரப்பெற்றுள்ளது.

    இந்த திட்டத்தின் கீழ் பயன்பெற விண்ணப்பதாரர் ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியின இனத்தைச் சேர்ந்தவராக இருக்க வேண்டும். விண்ணப்பதாரர் 18-65 வயதிற்குள்ளாக இருக்க வேண்டும். ஆதி திராவிடர் மற்றும் பழங்குடியின விவசாயிகள் தீவனப்புல் மற்றும் புல்கறனைகள் வளர்க்க ஆர்வமுள்ளவர்கள் கால்நடை உதவி மருத்து வரிடம் பரிந்துரை பெற்று விண்ணப்பங்கள் சமர்ப்பிக்க வேண்டும்.

    ஆதி திராவிட மற்றும் பழங்குடியின விவசாயிகள் பிரதம பால் உற்பத்தியாளர்கள் கூட்டுறவு சங்கங்களுக்கு பால் வழங்கும் உறுப்பினர்களாக இருக்க வேண்டும். பயனாளிகளுக்கு விதைத் தொகுப்பு, புல்கறனைகளுடன் தீவனங்களை வளர்க்க தேவையான பயிற்சி, கையேடுகள் மற்றும் களப்பயிற்சி ஆகியவற்றின் செலவினங்கள் ஒரு பயனாளிக்கு ஏக்கருக்கு ரூ.10 ஆயிரம் என்ற மானிய தொகைக்கு உட்பட்டு தமிழ்நாடு பால் உற்பத்தியாளர்கள் கூட்டுறவு இணையம் மூலம் இந்த திட்டம் செயல்படுத்தப்படும்.

    தீவன விதைகள் ஆவின் நிறுவனம், தமிழ்நாடு கால்நடை மற்றும் விலங்கு அறிவியல் பல்கலைக்கழகம் மற்றும் கால்நடை மருத்துவ பல்கலைக்கழகம் மூலம் கொள்முதல் செய்யப்பட்டு வழங்கப்படும்.

    இந்த திட்டத்தில் பயன்பெற விருப்பமுள்ள ஆதிதிராவிடர் பயனாளிகள் https:/ /application.tahdco.com என்ற இணையதளத்திலும், பழங்குடியின பயனாளிகள் https://fast.tahdco.com என்ற இணையதளத்திலும் பதிவு செய்து பயன்பெறலாம்.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    • காரைக்குடியில் அ.ம.மு.க. செயலாளர்கள் அறிமுக கூட்டம் நடந்தது.
    • தெற்கு நகர செயலாளராக கார்த்திக், வடக்கு நகர செயலாளராக அஸ்வின்குமார் நியமிக்கப்பட்டு அறிமுகப்படுத்தப்பட்டனர்.

    காரைக்குடி

    காரைக்குடி நகர அம்மா மக்கள் முன்னேற்ற கழகம் காரைக்குடி வடக்கு, காரைக்குடி தெற்கு என இரண்டாக பிரிக்கப்பட்டது. புதிய நகர செயலாளர்கள் அறிமுக கூட்டம் மற்றும் உறுப்பினர் அட்டை வழங்கும் விழா மாவட்ட அ.ம.மு.க. அலுவலகத்தில் நடந்தது.

    மாவட்ட செயலாளர் தேர்போகி பாண்டி தலைமை தாங்கினார்.மாநில பொறியாளர் அணி தலைவர் சரவணன் முன்னிலை வகித்தார்.மாவட்ட வழக்கறிஞர் அணி செயலாளர் விமல் வரவேற்றார்.

    காரைக்குடி தெற்கு நகர செயலாளராக கார்த்திக், வடக்கு நகர செயலாளராக அஸ்வின் குமார் நியமிக்கப்பட்டு அறிமுகப்படுத்தப்பட்டனர். அனைத்து நிர்வாகிகள் மற்றும் உறுப்பினர்களுக்கு உறுப்பினர் அடையாள அட்டையை மாவட்ட செயலாளர் தேர்போகி பாண்டி வழங்கி உறுப்பினர் சேர்க்கையை அதிகப்படுத்த தேவையான ஆலோசனைகளை வழங்கினார்.

    இதில் பொதுக்குழு உறுப்பினர் பழனி பெரியசாமி, மாவட்ட எம்.ஜி.ஆர். மன்ற இணை செயலாளர்கள் பந்தாபாண்டி, முத்துபாரதி, மாவட்ட பொருளாளர் லாரன்ஸ், மாவட்ட இளம்பெண்கள் பாசறை செயலாளர் சுமதி உள்பட நிர்வாகிகள், தொண்டர்கள், மகளிரணியினர் திரளாக கலந்துகொண்டனர்.நகர தலைவர் மைக்கேல் நன்றி கூறினார்.

    • சிங்கம்புணரி அருகே பஸ் சக்கரத்தில் சிக்கி கல்லூரி மாணவர் பலியானார்.
    • இந்த விபத்து தொடர்பாக போலீசார் வழக்கு பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    சிங்கம்புணரி

    சிவகங்கை மாவட்டம் சிங்கம்புணரி அருகே உள்ள மருதிப்பட்டியை சேர்ந்தவர் கார்த்திகேயன். இவரது மகன் ஆகாஷ் (வயது 19). இவர் மதுரையில் உள்ள தனியார் கலை அறிவியல் கல்லூரியில் முதலாம் ஆண்டு படித்து வந்தார்.நேற்று மாலை மாணவர் ஆகாஷ், திருப்பத்தூரில் உள்ள நண்பர் வீட்டுக்கு சென்று வருவதாக பெற்றோரிடம் கூறி விட்டு மோட்டார் சைக்கிளில் சென்றுள்ளார்.

    சிங்கம்புணரி அருகே எம்.கோவில்பட்டி பகுதியில் சென்று கொண்டி ருந்தபோது அவரது மோட்டார் சைக்கிள், எதிரே காரைக்குடியில் இருந்து திண்டுக்கல் நோக்கி சென்ற தனியார் பஸ் மீது மோதியது. இதில் பஸ் சக்கரத்தில் சிக்கிய மாணவர் ஆகாஷ் உடல் நசுங்கி சம்பவ இடத்தி லேயே பலியானார்.

    இந்த விபத்து குறித்து தகவல் அறிந்த எஸ்.பி.மங்கலம் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று மாணவரின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக சிங்கம்புணரி அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். இந்த விபத்து தொடர்பாக போலீசார் வழக்கு பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • காரைக்குடி தெற்கு நகர அ.ம.மு.க. செயலாளராக கார்த்திக் நியமனம் செய்யப்பட்டுள்ளார்.
    • டி.டி.வி. தினகரன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியுள்ளார்.

    காரைக்குடி

    அ.ம.மு.க. பொதுச் செயலாளர் டி.டி.வி. தினகரன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

    சிவகங்கை மாவட்டம் காரைக்குடி நகர அ.ம.மு.க. இரண்டாகப் பிரிக்கப்பட்டு காரைக்குடி தெற்கு நகர செயலாளராக, ரித்தீஷ் பஸ் உரிமையாளர் கார்த்திக் அறிவிக்கப்பட்டுள்ளார். காரைக்குடி வடக்கு நகர செயலாளராக அஸ்வின் குமார் அறிவிக்கப்பட்டுள்ளார். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    2 நகரச் செயலாளர்களும் மாவட்டச் செயலாளர் தேர்போகி பாண்டி, மாவட்ட பொருளாளர் லாரன்ஸ் மற்றும் முக்கிய நிர்வாகிகளை சந்தித்து வாழ்த்து பெற்றனர்.

    • நெற்குப்பையில் வெள்ளம் சூழ்ந்த பகுதிகளை பேரூராட்சி தலைவர் நேரில் சென்று ஆய்வு செய்தார்.
    • நேற்று இரவு பெய்த கனமழையின் காரணமாக குடியிருப்பு பகுதி மற்றும் சுற்றுப்பகுதிகளில் வெள்ளம் சூழ்ந்தது.

    நெற்குப்பை

    சிவகங்கை மாவட்டம் திருப்பத்தூர் தாலுகா நெற்குப்பை பேரூராட்சியில் உள்ள மண்டு கருப்பர் கோவில் தெருவில், காலனி தெருவில் நேற்று இரவு பெய்த கனமழையின் காரணமாக குடியிருப்பு பகுதி மற்றும் சுற்றுப்பகுதிகளில் வெள்ளம் சூழ்ந்தது. உடனடியாக பேரூராட்சி மன்ற தலைவர் புசலான் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து தூய்மை பணியாளர்கள் உதவியோடு தேங்கியுள்ள தண்ணீரை அப்புறப்படுத்தும் நடவடிக்கையில் ஈடுபட்டார். இளநிலை உதவியாளர் சேரலாதன், தூய்மை பணி மேற்பார்வையாளர் சிற்றரசு மற்றும் தூய்மை பணியாளர்கள் உடன் இருந்தனர்.

    • மாடுகள் மேய்ந்ததில் 75 ஏக்கர் நெற்பயிர்கள் நாசமாகின.
    • கடந்த ஆண்டும் இதேபோன்று மாடுகளால் விவசாயம் பாதிக்கப்பட்ட விவசாயிகள் காவல்துறைக்கு புகார் செய்தனர்.

    மானாமதுரை

    சிவகங்கை மாவட்டம் மானாமதுரை தாலுகா பனிக்கனேந்தல் 3 கண்மாய் பாசனத்தில் உள்ள 75 ஏக்கர் விவசாயத்தில் 50 மாடுகள் மேய்ந்து நாசமானது. இது தொடர்பாக கிராம மக்களும், தமிழ்நாடு விவசாயிகள் சங்க பொறுப்பாளர்களும் வட்டாட்சியர் சாந்தியிடம் புகார் செய்தனர்.

    மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் மானாமதுரை ஒன்றிய செயலாளர் ஆண்டி, விவசாயிகள் சங்கத்தின் மாவட்ட தலைவர் வீரபாண்டி மற்றும் விவசாயிகள் இரவு நேரங்களில் மாடுகள் விவசாய நிலங்களில் புகுந்து நெற்பயிர்களை அழித்ததை விவசாயிகள் சுட்டிக் காண்பித்தனர்.

    இந்த கிராமத்தில் 3 கண்மாய்கள் உள்ளது. 3 கண்மாய்கள் மூலம் மொத்தம் 100 ஏக்கர் பாசன பாசனம் பெறுகிறது. வைகை கரையோரம் இருந்தாலும் வைகை தண்ணீர் வருவதற்கான வாய்ப்புகள் இல்லை.

    கண்மாயை நம்பித்தான் விவசாயம் நடைபெற்று வருகிறது. கண்மாயில் மழை தண்ணீர் நிரம்பி விவசாயம் நடைபெறுகிறது. இங்கு நெல் விவசாயம் நடைபெற்று வருகிறது. 3 மாத காலம் நெல் விவசாயத்தை பாதுகாக்க வேண்டிய அவசியம் விவசாயிகளிடம் உள்ளது.

    பூச்சிகளில் இருந்து பாதுகாப்பு செய்ய வேண்டி உள்ளது. பன்றிகளால் பாதிப்பு ஏற்படாமல் பாதுகாக்க வேண்டி உள்ளது. அதுபோக கடந்த 3 ஆண்டு காலமாக மானாமதுரை நகர் அழகர் கோவில் தெருவில் உள்ள சுமார் 75 மாடுகளால் விவசாயம் அழிக்கப்பட்டு வருகிறது.

    மாடுகள் வளர்ப்போர் மாலையில் அவிழ்த்து விடுகிறார்கள். இந்த மாடுகள் வைகை கரை ஓரம் செல்கிற பாதையில் நல்ல நிலையில் இருக்கும் நெற்பயிர்களை மேய்ந்து அழித்து வருகிறது. இதனால் விவசாயிகளுக்கு நஷ்டம் ஏற்பட்டுள்ளது.

    இதுகுறித்து விவசாயிகள் மானாமதுரை வட்டாட்சியர் சாந்தியிடம் புகார் தெரிவித்தனர் . கடந்த ஆண்டும் இதேபோன்று மாடுகளால் விவசாயம் பாதிக்கப்பட்ட விவசாயிகள் காவல்துறைக்கு புகார் செய்தனர். அதன் பின்பு ஓரளவுக்கு மாட்டின் உரிமையாளர்கள் கட்டுப்பட்டு இருந்தனர். தற்போது மீண்டும் மாடுகள் அவிழ்த்து விடப்படுகிறது.

    அந்த மாடுகள் கடந்த 4 நாட்களாக நெற்பயிர்களை அழித்து 75 ஏக்கர் விவசாயத்தை மேய்ந்ததால் விவசாயிகள் பாதிப்படைந்துள்ளனர்.தற்போது விவசாயிகள் மும்முரமாக பாசன பணிகளில் இரவு, பகல் பாராமல்பணி செய்து வருகின்றனர்.

    ஆனால் கால்நடைகளில் இருந்து விவசாயத்தை காப்பதற்கு நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என்று தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தின் மாவட்ட தலைவர் வீரபாண்டி, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மானாமதுரை ஒன்றிய செயலாளர் ஆண்டி மற்றும் விவசாயிகள் வட்டாட்சியரிடம் கேட்டுக் கொண்டனர்.

    • திருப்புவனத்தில் சமுதாய வளைகாப்பு விழா நடந்தது.
    • இதனை தமிழரசி எம்.எல்.ஏ. தொடங்கி வைத்தார்.

    மானாமதுரை

    சிவகங்கை மாவட்டம் திருப்புவனத்தில் ஒருங்கிணைந்த குழந்தைகள் வளர்ச்சி திட்ட பணிகள் மூலம் சமுதாய வளைகாப்பு விழா நடந்தது. மானாமதுரை சட்டமன்ற உறுப்பினர் தமிழரசி குத்துவிளக்கு ஏற்றி விழாவை தொடங்கி வைத்தார்.

    இதில் சிவகங்கை மாவட்ட தி.மு.க. துணைச் செயலாளர்-திருப்புவனம் பேரூராட்சி தலைவர் சேங்கைமாறன், ஒன்றிய குழு தலைவர் சின்னையா, துணைத்தலைவர் மூர்த்தி, பேரூராட்சி செயல்அலுவலர் ஜெயராஜ் மற்றும் வட்டார குழந்தை வளர்ச்சிப் பணிகள் திட்ட அலுவலர், ஒன்றிய, மாவட்ட கவுன்சிலர்கள், வார்டு கவுன்சிலர்கள், கர்ப்பிணிப் பெண்கள் கலந்து கொண்டனர்.

    • காரைக்குடி ெரயில் நிலையத்தில் அவசர சிகிச்சை மையம் தொடக்க விழா நடந்தது.
    • அவசர ஊர்தியும் மக்கள் பயன்பாட்டுக்காக நிறுத்திவைக்கப்படும் என கே.எம்.சி. மருத்துவமனையின் தலைமை மருத்துவர் தெரிவித்தார்.

    காரைக்குடி

    காரைக்குடி கே.எம்.சி மருத்துவமனை சார்பில், காரைக்குடி ெரயில் நிலையத்தில் முதல் உதவி சிகிச்சை மையம் கமாண்டெண்ட் ெரயில்வே புரொடெக்க்ஷன் போர்ஸ் செல்வராஜ் மற்றும் ஸ்டேஷன் மாஸ்டர் கொலம்பஸ் டோபோ ஆகியோரால் தொடங்கி வைக்கப்பட்டது.

    முதல் உதவி சிகிச்சை மையத்தை பற்றி கே.எம்.சி. மருத்துவமனையின் தலைமை மருத்துவர் காமாட்சி சந்திரன் பேசுகையில் இந்த முதல் உதவிமையம் கே.எம்.சி மருத்துவமனை சார்பாக அடிப்படை அவசர சிகிச்சை உபகரணங்களுடன் 24 மணிநேரமும் ெரயில் பயணிகள் மற்றும் ெரயில்வே பணியாளர்கள் பயன்பெறும் வகையில் கட்டணமில்லா மருத்துவ உதவி பெரும் வகையில் செயல்படும் என தெரிவித்தார். மேலும் அவசர ஊர்தியும் மக்கள் பயன்பாட்டுக்காக நிறுத்திவைக்கப்படும் என தெரிவித்தார். இந்த நிகழ்ச்சியில் கே.எம்.சி மருத்துவமனையின் தலைமை மருத்துவர் காமாட்சி சந்திரன் மற்றும் டாக்டர்கள் காளியப்பு, பாலாஜி, பிரசாந்த் மற்றும் கே.எம்.சி. மருத்துவர்கள், பணியாளர்கள் மற்றும் காரைக்குடி ரயில் நிலைய அதிகாரிகள் மற்றும் ெரயில்வே பணியாளர்கள் கலந்து கொண்டனர்.

    ×