என் மலர்tooltip icon

    சிவகங்கை

    • சிவகங்கை மாவட்டம் மானாமதுரை மேல்கரை பகுதியில் வ.உ.சிதம்பரனார் நினைவுநாள் அனுசரிக்கப்பட்டது.
    • பொதுமக்கள் வ.உ.சி. படத்திற்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.

    மானாமதுரை

    சிவகங்கை மாவட்டம் மானாமதுரை மேல்கரை பகுதியில் கப்பலோட்டிய தமிழர் வ.உ. சிதம்பரனாரின் 86-வது நினைவு நாள் நடந்தது. இதில் தி.மு.க. கவுன்சிலர் சதீஷ்குமார், காங்கிரஸ் கவுன்சிலர் புருஷோத்தமன் மற்றும் பொதுமக்கள் வ.உ.சி. படத்திற்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர். இதேபோல் கால்பிரவு, பெரிய கோட்டை, திருப்பாசேத்தி பகுதியில் வ.உ.சி. நினைவுநாள் நிகழ்ச்சி நடந்தது.

    • சிவகங்கை மாவட்டம் இளையான்குடி சாகிர் உசேன் கல்லூரியில் தேர்தல் விழிப்புணர்வு பாட்டுப்போட்டி நடந்தது.
    • வாக்களிப்பதன் அவசியம் உள்ளிட்ட கருத்துக்கள் அடங்கிய பாடல்களை பாடினர்.

    மானாமதுரை

    சிவகங்கை மாவட்டம் இளையான்குடி சாகிர் உசேன் கல்லூரி நாட்டு நலப்பணித்திட்டம் சார்பில் தேர்தல் வாக்களிப்பு குறித்த விழிப்புணர்வு பாட்டுப்போட்டி நடந்தது.

    இதில் மாணவிகள் பங்கேற்று தேர்தலில் 100 சதவீத வாக்களிப்பு, வாக்களிக்க பணம் பெறக்கூடாது, வாக்களிப்பதன் அவசியம் உள்ளிட்ட கருத்துக்கள் அடங்கிய பாடல்களை பாடினர். சிறப்பாக பாடல் வரிகள் அமைத்து, பாடிய மாணவிகளின் பெயர்கள் இளையான்குடி வட்டாட்சியருக்கு பரிந்துரைக்கப்பட்டது. போட்டியில் கலந்துகொண்ட மாணவிகளையும் நிகழ்ச்சியை ஒருங்கிணைத்த நாட்டு நலப்பணித்திட்ட அலுவலர்கள் அஸ்மத்து பாத்திமா, பீர் முகம்மது, அப்ரோஸ், சேக் அப்துல்லா ஆகியோரையும் முதல்வர் அப்பாஸ் மந்திரி பாராட்டினார்.

    • மானாமதுரை அருகே சிலம்பத்தில் உலக சாதனை படைத்த பெண்ணுக்கு பாராட்டுகள் குவிகின்றன.
    • கிராம பெண்கள் வாழ்கையில் பல்வேறு சாதனைகளை செய்ய வேண்டும் என முன் உதாரணமாக வெற்றி பெற்று விழிப்புணர்வும் ஏற்படுத்தி உள்ளார்.

    மானாமதுரை

    சிவகங்கை மாவட்டம் மானாமதுரை அருகே திருப்பாசேத்தி மலவராய னேந்தல் கிராமத்தைச் சேர்ந்தவர் ஆட்டோ டிரைவர் பாலன். இவரது மகள் செல்வ பிரியா (வயது 21). இவர் சிறுவயதில் இருந்தே சாதனை படைக்க வேண்டும் என பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டு வருகிறார்.

    ஓவிய போட்டி, தடகள போட்டி, படிப்பு என எல்லா வற்றிலும் திறமையை மெருகேற்றிக் கொண்ட இவர் தமிழர்களின் வீர விளையாட்டான சிலம்பத்திலும் பயிற்சி பெற்று அனைவருக்கும் சொல்லிக்கொடுக்கும் வகையில் கோலோச்சி இருக்கிறார். பி.எஸ்.சி. பட்டப்படிப்பு முடித்த இவர் சிலம்ப மாஸ்டர் குமாரிடம் முறையாக கற்று தினமும் பயிற்சி மேற்கொண்டார்.

    இந்நிலையில் கடந்த செப்டம்பர் மாதம் நடை பெற்ற உலக சாதனைப்போட்டியில் தொடர்ந்து 2 மணி நேரம் சிலம்பம் சுற்றி செல்வ பிரியா உலக சாதனை படைத்துள்ளார்.

    இந்த சாதனைக்கு அவரது பெற்றோர் மற்றும் பேராசிரியைகள் ஜெபா, சுகன்யா உள்ளிட்ட பலர் உறுதுணையாக இருந்துள்ளனர். தொடர்ந்து செல்வபிரியா தனது கிராமத்தில் இருக்கும் பள்ளி மாணவர்களுக்கு இலவசமாக சிலம்பம் கற்றுக் கொடுத்து வருகிறார்.

    கிராம பெண்கள் வாழ்கையில் பல்வேறு சாதனைகளை செய்ய வேண்டும் என முன் உதாரணமாக வெற்றி பெற்று விழிப்புணர்வும் ஏற்படுத்தி உள்ளார். இதுகுறித்து அவர் கூறுகையில், சிவகங்கையில் என்னைப்போல் சாதிக்க பல்வேறு பெண்கள் இருக்கி றார்கள். அவர்களுக்கு உரிய வழிகாட்டுதல்களையும், வாய்ப்பையும் கொடுக்க வேண்டும் என்றார்.

    • சிவகங்கை மாவட்டத்தில் செயல்படுத்தப்படும் வளர்ச்சி திட்டப்பணிகள் குறித்து கண்காணிப்பு அலுவலா் ஆய்வு செய்தார்.
    • நமக்கு நாமே திட்டத்தின் கீழ் 48 காலனி நடுநிலைப்பள்ளியில், கட்டப்பட்டுள்ள சமையலறை மற்றும் வைப்பு அறையையும் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

    சிவகங்கை

    தமிழகத்திலுள்ள அனைத்து மாவட்டங்களிலும் மேற்கொள்ளப்பட்டு வரும் வளா்ச்சித் திட்டப்பணிகள் மற்றும் பொதுமக்களுக்கு வழங்கப்படும் நலத்திட்ட உதவிகளை கண்காணிப்பதற்கு ஏதுவாக, ஒவ்வொரு மாவட்டத்திற்கும் கண்காணிப்பு அலுவ லா்களை முதலமைச்சா் மு.க.ஸ்டாலின் நியமித்துள்ளார்.

    அதனடிப்படையில், சிவகங்கை மாவட்டத்திற்கு மாவட்ட கண்காணிப்பு அலுவலராக நியமிக்கப்பட்டுள்ள உணவு பாதுகாப்புத்துறை ஆணையா் லால்வேனா, மாவட்டத்தில் மேற்கொள்ளப்பட்டு வரும் அனைத்துப்பணிகள் தொடா்பாக அவ்வப்போது ஆய்வு செய்து அரசின் கவனத்திற்கு எடுத்துச் சென்று, நடவடிக்கை எடுத்து வருகிறார்.

    நேற்று மாவட்ட கண்காணிப்பு அலுவலா், கலெக்டருடன் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில், பல்வேறு துறைகளின் சார்பில் மேற்கொள்ளப்பட்டு வரும் வளா்ச்சிப் பணிகள் தொடா்பாக ஆய்வு செய்தார். சிவகங்கை ஊராட்சி ஒன்றியம், இடையமேலூர் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் புற நோயாளிகள் பிரிவு, தாய் சேய் நலப்பிரிவு, மருந்தகம், மருந்துகளின் இருப்பு மற்றும் பராமாிப்புப் பதிவேடு, தேவையான மருந்துகளின் எண்ணிக்கை மற்றும் ஊசிபோடும் அறை ஆகியவற்றை பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

    வேளாண்மைத்துறையின் சார்பில் ஆலங்குளம் ஊராட்சியில், விவசாயியை சந்தித்து, தோட்டத்தில் மேற்கொள்ளப்பட்டு வரும் இயற்கை விவசாயம் குறித்து கலந்துரையாடினார். ஒருங்கிணைந்த தேசிய தோட்டக்கலை வளா்ச்சி இயக்கத்தின் கீழ் இயற்கை உரத் தொகுப்பையும் வழங்கினார்.

    சிவகங்கை நகராட்சிப் பகுதியில் ரூ.37.50 லட்சம் மதிப்பீட்டில் கட்டப்பட்டு வரும் நம்ம டாய்லெட் - நகராட்சி பொது கழிப்பறை கட்டுமானப் பணிகளின் நிலை குறித்தும், நமக்கு நாமே திட்டத்தின் கீழ் 48 காலனி நடுநிலைப்பள்ளியில், கட்டப்பட்டுள்ள சமையலறை மற்றும் வைப்பு அறையையும் பார்வையிட்டு ஆய்வு செய்து, மாணவர்களுடன் கற்றல் முறை குறித்தும் கலந்துரையாடினார்.

    சிவகங்கை ஊராட்சி ஒன்றியம், வாணியங்குடி ஊராட்சியில், பொியார் நினைவு சமத்துவபுரத்தில் உள்ள பையூர் பிள்ளைவயல் நியாயவிலைக் கடையில் ஆய்வு செய்து, பொதுமக்க ளுக்கு வழங்க ப்படும் குடிமைப்பொ ருட்களின் தரம் மற்றும் இருப்பு நிலை குறித்தும், செயல்பாடுகள் தொடா்பாகவும் ஆய்வு செய்தார்.சிவகங்கை ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தின் செயல்பாடுகள் குறித்து மாவட்ட கண்காணிப்பு அலுவலர் லால்வேனா ஆய்வு செய்தார். இதேபோன்று மாவட்டத்தில் பல்வேறு பகுதிகளில் நடை பெற்று வரும் வளர்ச்சி பணிகளை பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

    • தேவகோட்டை விருசுழி ஆற்றில் ஐப்பசி முதல் மற்றும் கடைசி நாளில் 7 சுவாமிகள் கலந்து கொள்ளும் தீர்த்தவாரி உற்சவம் நடைபெறும்.
    • ஆற்றின்கரையில் சுவாமிகளுக்கு சிறப்பு அபிஷேகம் மற்றும் தீபாராதனை-தீர்த்தவாரி நடைபெற்றது.

    தேவகோட்டை

    தேவகோட்டை விருசுழி ஆற்றில் ஐப்பசி முதல் மற்றும் கடைசி நாளில் 7 சுவாமிகள் கலந்து கொள்ளும் தீர்த்தவாரி உற்சவம் நடைபெறும். அதன்படி நேற்று முன்தினம் ரங்கநாத பெருமாள், மீனாட்சி சுந்தரேசர், சிதம்பர விநாயகர், கைலாசநாதர், கோதண்ட ராமர், கிருஷ்ணர், கோட்டூர் நயினார்வயல் அகத்தீஸ்வரர் ஆகிய சுவாமிகள் மேள தாளத்துடன் ஒவ்வொரு சாமிகளும் அலங்காரம் செய்து நகரில் முக்கிய வீதிகளின் வலம் வந்து தேவகோட்டை விருசுழி ஆற்றின் ஒத்தக்கடை அருகே ஒன்று சேர்ந்தது.

    ஆற்றின்கரையில் சுவாமிகளுக்கு சிறப்பு அபிஷேகம் மற்றும் தீபாராதனை-தீர்த்தவாரி நடைபெற்றது. அதனைத்தொடர்ந்து அனைத்து சுவாமிகளும் பிரியாவிடை பெற்று முக்கிய வீதி வழியாக அந்தந்த கோவில்களுக்கு சென்றன. இவ்விழாவில் தேவகோட்டை காரை சேர்க்கை கோட்டூர் நைனார்வயல், அடசிவயல், பூங்குடி, திருமணவயல் பாவனக்கோட்டை பூங்குடி மற்றும் சுற்றியுள்ள கிராமங்களை சேர்ந்த ஏராளமான பொதுமக்கள் பாதயாத்திரையாக வந்து தீர்த்தவாரியில் கலந்து கொண்டனர்.

    • சிவகங்கை, மானாமதுரை உள்ளிட்ட பல்வேறு கிராமங்களுக்கு 15 நாட்களுக்கு தண்ணீர் திறக்க சமாதான கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டது.
    • இதனால் விவசாயிகள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.

    சிவகங்கை

    மானாமதுரை அருகே உள்ள அன்னியனேந்தல் என்ற இடத்தில் மானாமதுரை பிரதான கண்மாய்க்கு ரீச் கால்வாய் செல்கிறது. இந்த கால்வாய் மூலம் மானாமதுரை, கால்பிரவு, கிருங்காங்கோட்டை, கீழமேல்குடி, நாட்டர் கால்வாய் மூலம் 16 கிராமங்கள் பயன்பெறுவதற்காக வைகை தண்ணீர் கொண்டு செல்ல நடவடிக்கை எடுக்கப்பட்டு வந்தது.

    கடந்த 15-ந் தேதி பொதுப்பணித் துறை அதிகாரிகள் ரீச் கால்வாய் அடைப்பை ஜே.சி.பி. மூலம் அகற்றும்போது மிளகனூர் கிராமத்தினர் பணிகளை நிறுத்த கூறியதால் அதிகாரிகளும் நிறுத்தினர். பின்னர் உயர் அதிகாரிகளின் ஆலோசனைக்கு பிறகு நேற்று காலை மீண்டும் போலீஸ் பாதுகாப்புடன் மானாமதுரை கண்மாய்க்கு செல்லும் ரீச் கால்வாய் அடைப்பை நீக்குவதற்கு வந்தனர். மிளகனூர் கிராமத்தினர் அடைப்பை உடைக்கக்கூடாது என்று மீண்டும் கூறியதால் அதிகாரிகள் இதுகுறித்து மானாமதுரை தாலுகா அலுவலகத்தில் சமாதானம் கூட்டத்திற்கு ஏற்பாடு செய்தனர்.

    கோட்டாட்சியர் சுகிதா, தாசில்தார் சாந்தி, பொதுப்பணித்துறை அதிகாரிகள் மோகன் குமார், செந்தில் குமார், பூமிநாதன், மற்றும் வருவாய்துறை அதிகாரிகள் கலந்து கொண்டனர். முதலில் மிளகனூர் கிராமத்தினரிடம் அதிகாரிகள் பேசினர். பின்னர் மானாமதுரை, கீழமேல்குடி, கால்பிரிவு, கிருங்காக்கோட்டை உட்பட கிராமத்தின் விவசாயிகள் பங்கேற்றனர். இந்த கூட்டத்தின் முடிவில் அடுத்த மாதம் டிசம்பர் 5-ந் தேதி மேற்கண்ட கிராமங்களுக்கு தண்ணீர் திறக்க முடிவு செய்யப்பட்டது. அதிகாரிகளின் நடவடிக்கைகளால் பல ஆண்டுகள் தண்ணீர் இல்லாமால் இருந்த விவசாய நிலங்கள் புத்துணர்ச்சி பெற்றுள்ளது. விவசாயிகளும் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

    • சேதமடைந்த தரைப்பாலத்தை சீரமைக்க வேண்டும் என்று அதிகாரிகளுக்கு செந்தில்நாதன் எம்.எல்.ஏ. உத்தரவிட்டுள்ளார்.
    • கோரவலசை பாலப்பணியை விரைந்து முடிக்க வேண்டும் என்றும் அதிகாரிக்கு உத்தரவிட்டார்.

    சிவகங்கை

    சிவகங்கை மாவட்டம் காளையார் கோவில் ஊராட்சி ஒன்றியம் மாரந்தை ஊராட்சி தளிர்தலை கிராமத்திற்கு செல்லும் தரைப்பாலம் மழையால் முழுமையாக சேதமடைந்தது.

    இதனால் பொதுமக்களின் போக்குவரத்திற்கு சிரமம் உள்ளதாகவும், மழை காலம் ஆரம்பித்துவிட்டதால் ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட வாய்ப்பு இருப்பதாலும் பொதுமக்கள் அ.தி.மு.க. எம்.எல்.ஏ. செந்தில்நாதனிடம் கோரிக்கை விடுத்ததன் பேரில் மாரந்தை ஊராட்சியில் சட்டமன்ற உறுப்பினர் ஆய்வு செய்தார். சேதமடைந்த தளிர்தலை தரைப்பாலத்தை உடனடியாக சீரமைக்குமாறு அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார். அதேபோல் கோரவலசை பாலப்பணியை விரைந்து முடிக்க வேண்டும் என்றும் அதிகாரிக்கு உத்தரவிட்டார்.

    • வைகை ஆற்று தண்ணீரை கண்மாய்களுக்கு திருப்பி விட வேண்டும் என பொதுமக்கள் கலெக்டரிடம் கோரிக்கை விடுத்தனர்.
    • கால்வாய் முகப்பு மேடாக இருப்பதால் கண்மாய்க்கு பல ஆண்டுகளாக வைகை தண்ணீர் வரவில்லை.

    சிவகங்கை

    சிவகங்கை மாவட்டம் மானாமதுரை கீழமேல்குடி, கால்பிரவு கிருங்கா கோட்டை, நாட்டார் கால்வாய் மற்றும் இதர பாசன கால்வாய் விவசாயிகள் சார்பில் மாவட்ட கலெக்டர் மதுசூதன்ரெட்டியிடம் கோரிக்கை மனு அளிக்கப்பட்டது. அதில் கூறியிருப்பதாவது:-

    கிருங்காக்கோட்டை கண்மாய்க்கு வைகை ஆற்றில் இருந்து தண்ணீர் வரும் கால்வாயின் முகப்பு அன்னியநேந்தல் அருகில் மிளகனூர் கால்வாய்க்கு அருகில் உள்ளது. மேற்படி கண்மாய்க்கு வைகை தண்ணீர் வரும் கால்வாய் முகப்பு மேடாக இருப்பதால் மேற்கண்ட கண்மாய்க்கு பல ஆண்டுகளாக வைகை தண்ணீர் வரவில்லை.

    தற்சமயம் வைகை ஆற்றில் அதிகளவு தண்ணீர் வந்து அனைத்து கண்மாய்களும் நிரம்பிய நிலையில் அனைத்து கால்வாய் முகப்புகளும் அடைக்கப்பட்டு வைகை தண்ணீர் வீணாக கடலுக்கு செல்கிறது. அந்த தண்ணீரை மானாமதுரை, கீழமேல்குடி, கால்பிரவு கிருங்காகோட்டை, நாட்டார் கால்வாய் வழியாக நிரம்பாத கண்மாய்களுக்கு கொண்டு செல்ல வேண்டும்.

    இது தொடர்பாக பொதுப்பணித்துறை அதிகாரிகளிடம் முறையிட்டபோது, அவர்கள் கால்வாயின் வழித்தடங்களை நேரில் பார்வையிட்டு மேற்படி கால்வாய் முகப்பினை சரி செய்ய வந்த நிலையில் மிளகனூர் கிராமத்தினர் வாக்குவாதம் செய்து வேலை செய்யவிடாமல் தடுத்துவிட்டனர்.

    இதற்கு உரிய நடவடிக்கை எடுத்து மேற்படி கால்வாய் முகப்பினை சரி செய்து கால்வாய் வழியாக கண்மாய்களுக்கு தண்ணீர் செல்ல நடவடிக்கை எடுக்க வேண்டும்.

    இவ்வாறு அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.

    • கூட்டுறவுத்துறையின் சார்பில் நடைபெற்றுவரும் 69-வது அனைத்திந்திய கூட்டுறவு வாரவிழா சிவகங்கையில் நடந்தது.
    • இதில் ஏராளமானோர் கலந்துகொண்டு ரத்ததானம் செய்தனர்.

    சிவகங்கை

    கூட்டுறவுத்துறையின் சார்பில் நடைபெற்றுவரும் 69-வது அனைத்திந்திய கூட்டுறவு வாரவிழா சிவ கங்கை மாவட்டத்தில் கடந்த 14-ந்தேதி கொடியேற்றத்துடன் தொடங்கப்பட்டு பல்வேறு நிகழ்ச்சிகள் நடைபெற்று வருகின்றன.

    14-ந்தேதி பையூர் பிள்ளைவயல் கூட்டுறவு சங்கத்தின் சார்பில் செயல்படுத்தப்படும் திட்டங்கள் குறித்து தெரு கூத்து நிகழ்ச்சியும், மரம் நடும் விழாவும் நடந்தது. 15-ந்தேதி சிவகங்கை கூட்டுறவு பயிற்சி நிலைய மாணவர்களுக்கு பேச்சு போட்டிகள் நடந்தன.

    16-ந்தேதி பொதுமக்கள் மற்றும் கூட்டுறவுத்துறை அலுவலர்கள் பங்கேற்ற ரத்ததான முகாம் சிவகங்கை அரசு மருத்துவக்கல்லூரி யில் நடந்தது. இதில் ஏராள மானோர் ரத்ததானம் செய்தனர்.

    முன்னதாக முகாமை மாவட்ட கலெக்டர் மதுசூதன்ரெட்டி தொடங்கி வைத்து பார்வையிட்டார். இதில் இணை பதிவாளர் ஜீனு, மேலாண்மை இயக்குநர் ரவிச்சந்திரன், சிவகங்கை சரக துணைப்பதிவாளர் பாலச்சந்திரன், இணைப்பதிவாளர் நாகராஜன், துணைப்பதிவாளர் குழந்தை வேலு, மருத்துவக்கல்லூரி துணை முதல்வர் சர்மிளா திலகவதி, மருத்துவ கண்கா ணிப்பாளர் ராமநாதன், உதவி நிலைய மருத்துவர் முகமது ரபி, அவசர சிகிச்சை பிரிவு டாக்டர் ரவிச்சந்திரன் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.இன்று (வியாழக்கிழமை) மன்னர் மேல்நிலைப்பள்ளி யில் ஓவிய ேபாட்டியும், இடைய மேலூர் கூட்டுறவு பால் உற்பத்தியாளர்கள் சங்கத்தின் சார்பில் கால்நடை மருத்துவ முகாமும் நடக்கிறது. நாளை (18-ந்தேதி) காரைக்குடியில் மருத்துவ முகாமும், 19-ந்தேதி இளையான்குடி, காரைக்குடி கூட்டுறவு நகர வங்கிகளின் உறுப்பினர்கள் சந்திப்பு முகாம் நடக்கிறது. 20-ந்தேதி திருப்பத்தூர் கூட்டுறவு நிறைவு விழா நடக்கிறது.

    • அரசின் பல்வேறு நலத்திட்டங்களை பெற அமைப்புசாரா தொழிலாளர்கள் தங்களது விபரங்களை தேசிய தரவுதளத்தில் பதிவேற்ற வேண்டும்.
    • பிரதமரின் விபத்து காப்பீட்டுத் திட்டத்தின் கீழ் ரூ. 2 லட்சத்திற்கான விபத்து காப்பீடு வழங்கப்படும் என்று சிவகங்ககை லெக்டர் தெரிவித்துள்ளார்.

    சிவகங்கை

    சிவகங்கை மாவட்ட கலெக்டர் மதுசூதன்ரெடடி விடுத்துள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

    இந்திய அரசு அமைப்பு சாரா தொழிலாளளர்களின் விவரங்களை ஒருங்கிணைக்க உச்சநீதிமன்ற உத்தரவின்படி 'அமைப்பு சாரா தொழிலாளர்களின் தேசிய தரவு தளம் என்ற ஒரு தரவுதளத்தை உருவாக்கியுள்ளது.

    https://eshram.gov.in என்ற வலைதளத்தின் மூலம் கட்டுமானத் தொழிலாளர்கள் புலம் பெயர்ந்த தொழிலாளர்கள், வீட்டுப்பணியாளர்கள், விவசாயத்தொழிலாளர்கள், குத்தகைதாரர்கள்,பேக்கிங் செய்வோர் உள்ளிட்ட 370 வகையான துறைகளில் வேலை பார்க்கும் இ.எஸ்.ஐ., பி.எப்., பிடித்தம் செய்யப்படாத அமைப்பு சாரா தொழிலாளர்கள் தங்களின் விவரங்களை அனைத்து பொது சேவை மையங்களிலும் மற்றும் அனைத்து இ-சேவை மையங்களிலும் பதிவு செய்யும் பணி நடைபெற்று வருகிறது.

    eSHRAM Portal- லில் தொழிலாளர்கள் சுயமாகவும் பதிவு செய்து கொள்ள லாம். மாநில அரசின் பல்வேறு வகையான நலத்திட்டங்களின் கீழ் பதிவு செய்துள்ள அனைத்துத் தொழிலாளர்களும் இத்தரவுதளத்தின் கீழ் பதிவு செய்ய வேண்டும்.

    இத்தரவுதளத்தில் தொழிலாளர்கள் தங்களைப்பதிவு செய்து கொள்ள வயது 16 முதல் 59-க்குள் இருக்க வேண்டும். மேலும் எந்த கட்டணமும் செலுத்த தேவையில்லை. பதிவேற்றம் செய்வதற்கு ஆதார் அட்டை, ஆதாரில் இணைக்கப்பட்ட மொபைல் எண் ஓ.டி.பி. மூலம் அல்லது கைரேகை மூலம் பதிவு செய்து கொள்ளலாம். வங்கி கணக்குப் புத்தகம் போன்ற தேவையான விவரங்கள் இருக்க வேண்டும்.

    மேலும் இத்தரவுகளை பதிவேற்றம் செய்த பிறகு பயனாளிகளுக்கு UAN என்ற 12-இலக்க எண் கொண்ட அடையாள அட்டை வழங்கப்படும்.

    அமைப்புசாரா தொழிலாளர்கள் வேலை காரணங்களுக்காகவோ அல்லது வேறு ஏதும் பிற காரணங்களுக்காகவோ புலம்பெயர நேர்ந்தாலும், அரசிடமிருந்து பெற வேண்டிய சலுகைகளைப் பெற இந்த அடையாள அட்டை உதவியாக இருக்கும். இந்த தரவுதளத்தில் தன்னை இணைத்துக் கொள்ளும் அமைப்புசாரா தொழிலாளர்களுக்கு பிரதமரின் விபத்து காப்பீட்டுத் திட்டத்தின் கீழ் ரூ. 2 லட்சத்திற்கான விபத்து காப்பீடு வழங்கப்படும்.

    எனவே உச்சநீதிமன்ற உத்தரவின்படி இந்திய அரசால் உருவாக்கப்படும் அமைப்புசாரா தொழலாளர்களுக்கான இத்தேசிய தரவுதளத்தில் அனைவரும் பதிவு செய்து கொள்ள வேண்டும்.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    • பெண்கள் தங்களது உரிமைகளை தெரிந்து கொள்ள வேண்டும் என்று சிவகங்கை நீதிபதி பேசினார்.
    • காரைக்குடி உமையாள் ராமநாதன் மகளிர் கல்லூரியில் பெண்களுக்கான அரசியல் அமைப்பு சட்டம் குறித்த விழிப்புணர்வு முகாம் நடந்தது.

    சிவகங்கை

    சிவகங்கை மாவட்ட சட்டப்பணிகள் ஆணைக்குழு சார்பில் காரைக்குடி உமையாள் ராமநாதன் மகளிர் கல்லூரியில் பெண்களுக்கான அரசியல் அமைப்பு சட்டம் குறித்த விழிப்புணர்வு முகாம் நடந்தது. மாவட்ட சட்டப்பணிகள் ஆணைக்குழு செயலாளரும், சார்பு நீதிபதியுமான பரமேஸ்வரி தலைமை தாங்கினார். அப்போது அவர் பேசிய தாவது:-

    அரசியல் அமைப்பு சட்டத்தின் ஷரத்துக்களில் பெண்கள் பாதுகாப்புக்கும், உரிமைக்கும் முக்கியத்துவம் கொடுக்கப்பட்டுள்ளது. இதனடிப்படையில் பல்வேறு சட்டங்கள் இயற்றப்பட்டுள்ளன.

    பெண்கள் அவற்றினை தெரிந்து கொண்டு சமுதாயத்தில் தங்களுக்கு இழைக்கப்படும் அநீதிகளில் இருந்து பாதுகாத்துக் கொள்ள வேண்டும். தங்க ளது உரிமைகளை தெரிந்து கொண்டு வாழ வேண்டும்.

    இவ்வாறு அவர் பேசினார்.

    விழாவில் கல்லூரி முதல்வர் ஹேம மாலினி, துணை முதல்வர் விசாலாட்சி, கவிதா, உதவி பேராசிரியர் வீரமணி, வக்கீல் மணிமேகலை ஆகியோர் பேசினர். இதில் 700-க்கும் மேற்பட்ட மாணவிகள் பங்கேற்றனர்.

    • காரைக்குடியில் சிலம்பாயி ஹோமியோபதி மருத்துவமனை திறப்பு விழா நடந்தது.
    • நாம் தமிழர் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் தலைமை தாங்கி மருத்துவமனையை திறந்து வைத்து பேசினார்.

    காரைக்குடி

    சிவகங்கை மாவட்டம் காரைக்குடி அருணா நகரில் புதிதாக கட்டப்பட்ட சிலம்பாயி ஹோமியோபதி மருத்துவமனை திறப்பு விழா நடைபெற்றது.

    நாம் தமிழர் கட்சியின் சிவகங்கை நாடாளுமன்ற தொகுதி செயலாளர் கரு.சாயல்ராம் வரவேற்றார்.நாம் தமிழர் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் தலைமை தாங்கி மருத்துவமனையை திறந்து வைத்து பேசினார்.

    மாநில ஒருங்கிணைப்பா ளர்கள் வெற்றிக்குமரன், கோட்டைக்குமார், ஹீமா யூன் கபீர், சாட்டை துரை முருகன் ஆகியோர் முன் னிலை வகித்தனர். இதில் மாநில மகளிர் பாசறை ஒருங்கிணைப்பாளர் அமுதா நம்பி, தென்சென்னை மாவட்ட செயலாளர் புகழேந்தி, மாநில கொள்கை பரப்புச் செயலாளர்கள் செயசீலன், ராவணன் சுரேஷ், திருச்சி நாடாளுமன்ற தொகுதி செயலாளர் வழக்கறிஞர் திருச்சி பிரபு, மாநில ஒருங்கிணைப்பாளர் இசை மதிவாணன், மாநில மருத்துவ பாசறை ஒருங்கி ணைப்பாளர் மருத்துவர் பிரபாகரன், சிவகங்கை வடக்கு மாவட்ட தலைவர் ராமசெயம் உள்பட மாநில, மாவட்ட நாம் தமிழர் கட்சி நிர்வாகிகள், தொண்டர்கள், இளஞ்சியமங்களம் கிராம மக்கள் உள்பட பலர் கலந்து கொண்டனர். மருத்துவர் சாரா ராமு நன்றி கூறினார்.

    ×