search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    மழையால் சேதமடைந்த பகுதிகளில்  உடனடியாக சீரமைப்பு பணிகள்
    X

    திருப்பத்தூர் யூனியன் காட்டாம்பூர் ஊராட்சி தேவரம்பூர் கிராமத்தில் நடந்த கால்நடை விழிப்புணர்வு முகாமை அமைச்சர் பெரியகருப்பன் தொடங்கி வைத்து பார்வையிட்டார்.

    மழையால் சேதமடைந்த பகுதிகளில் உடனடியாக சீரமைப்பு பணிகள்

    • மழையால் சேதமடைந்த பகுதிகளில் உடனடியாக சீரமைப்பு பணிகளை அமைச்சர் பெரியகருப்பன் தொடங்கி வைத்தார்.
    • சிறு பாலத்தை பெரிய பாலமாக கட்டுவதற்கான திட்ட மதிப்பீட்டினை தயார் செய்யுமாறு உத்தரவிட்டார்.

    சிவகங்கை

    தமிழகத்தில் தற்போது பருவமழையின் காரணமாக, ஆறுகள், ஏரிகள், குளம், குட்டைகள் ஆகியவைகளில் நீர்வரத்து அதிகமாக காணப்படுகிறது. சிவகங்கை மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் உள்ள கண்மாய்கள், ஊரணிகள் ஆகியவைகளில் அதிகளவில் நீர்வரத்து காணப்படுகிறது.

    மழைகாலங்களில் பெறப்படும் நீரை முறையாக சேமிப்பதற்கு ஏதுவாக, வரத்து வாய்கால்கள் சீரமைக்கப்பட்டு, தடை யின்றி கண்மாய்கள் மற்றும் ஊரணிகளுக்கு நீர் செல்வதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளது. மேலும், கரைகள் பலப்படுத்தப்பட்டு, மதகுகளிலும் மராமத்துப் பணிகள் மேற்கொள்ள ப்பட்டுள்ளது.

    குறிப்பாக, பேரிடா் காலங்களில் எதிர்பா ராதவிதமாக ஏற்படும் விளைவுகளை எதிர்கொ ள்வதற்கு ஏதுவாக, மீட்புப்பணிகளுக்கான தன்னார்வலா்கள் மற்றும் மணல் மூட்டைகள், ஜே.சி.பி. எந்திரங்கள் தயார்நிலையில் உள்ளன.

    தற்போது பெய்து வரும் மழையால் திருப்பத்தூர் உட்கோ ட்டத்தைச் சோ்ந்த செவ்வூர் - கண்டவராயன்பட்டி சாலையில் உள்ள சிறு பாலம் சேதமடைந்து உள்ளது. இதை அமைச்சர் பெரியகருப்பன், கலெக்டர் மதுசூதன்ரெட்டியுடன் பார்வையிட்டு சேதமடைந்த சிறு பாலத்தை பெரிய பாலமாக கட்டுவதற்கான திட்ட மதிப்பீட்டினை தயார் செய்யுமாறு உத்தரவிட்டார்.

    உடனடியாக சீரமைப்புப் பணிகளை மேற்கொள்ளவும், ஊரக வளா்ச்சித்துறை மற்றும் நெடுஞ்சாலைத்துறை அலுவலா்களுக்கு அறிவுறுத்தினார். அதனைத்தொடா்ந்து, திருப்பத்தூர் ஊராட்சி ஒன்றியம், அ.வேலங்குடி ஊராட்சியிலுள்ள கருப்பா் கோவில் பகுதியிலுள்ள ஊரணி மழையின் காரணமாக, நிரம்பி, ஊரணியின் சுற்று ச்சுவா் இடிந்து பழுது ஏற்பட்டுள்ளது.

    அதனையும் தற்காலிமாக, மணல் மூட்டைகளை கொண்டு சீரமைப்புப் பணிகளை உடனடியாக மேற்கொண்டு, சுற்றுச்சுவா் அமைப்பதற்கான திட்ட மதிப்பீடு தயார் செய்வதற்கும் அலுவலா்களுக்கு அமைச்சா் பெரியகருப்பன் அறிவுறுத்தினார்.

    Next Story
    ×