என் மலர்tooltip icon

    சிவகங்கை

    • சிவகங்கை மாவட்டத்தில் டாக்டர் அம்பேத்கர் விருதுக்கு விண்ணப்பிக்கலாம் என கலெக்டர் தெரிவித்துள்ளார்.
    • விருதுகள் வழங்குவதற்கு ஆணைகள் வெளியிடப்பட்டுள்ளன.

    சிவகங்கை

    சிவகங்கை மாவட்டத்தில் 2022-2023-ம் நிதியாண்டிற்கான டாக்டர் அம்பேத்கர் தமிழ்நாடு அரசு விருது தமிழ் வளர்ச்சிக்கு பாடுபடும் மற்றும் பட்டியல் இன மக்களின் முன்னேற்றத்திற்கு தொண்டு செய்யும் ஆதிதிராவிட இனத்தைச் சேர்ந்த தமிழறிஞர்கள், கவிஞர்கள், சான்றோர் ஆகியோர்களில் சிறந்தோருக்கு, 2023-ம் ஆண்டில் திருவள்ளுவர் திருநாளன்று விருதுகள் வழங்குவதற்கு ஆணைகள் வெளியிடப்பட்டுள்ளன.

    டாக்டர் அம்பேத்கர் தமிழ்நாடு அரசு விருது பெற விரும்பும் தகுதிவாய்ந்த நபர்கள் உரிய விண்ணப்பப் படிவத்தினை சிவகங்கை மாவட்ட ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நல அலுவலகத்தில் பெற்று வருகிற 30-ந்தேதிக்குள் மேற்படி அலுவலகத்திற்கு உரிய ஆவணங்களுடன் நேரில் சமர்ப்பிக்க வேண்டும்.

    இந்த தகவலை சிவகங்கை மாவட்ட கலெக்டர் மதுசூதன் ரெட்டி தெரிவித்துள்ளார்.

    • சமுதாய வளைகாப்பு விழா நடந்தது.
    • வட்டார மருத்துவ அலுவலர் கலந்துகொண்டார்.

    சிங்கம்புணரி

    சிவகங்கை மாவட்டம் சிங்கம்புணரி அருகே உள்ள எஸ்.புதூர் சமுதாய கூடத்தில் கர்ப்பிணி பெண்களுக்கான சமுதாய வளைகாப்பு விழா நடந்தது. மாவட்ட ஊராட்சி குழு தலைவர் பொன்மணி பாஸ்கரன், பாரிவள்ளல், ஒன்றிய தி.மு.க. செயலாளர் செல்வராஜ் ஆகியோர் பங்கேற்று 100 கர்ப்பிணிகளுக்கு சீதனப்பொருட்களை வழங்கினர்.

    அனைத்து கர்ப்பிணி பெண்களுக்கும் 7 வகையான உணவுகளை மாவட்ட ஊராட்சி குழு தலைவர் பரிமாறினார். இதில் வட்டார மருத்துவ அலுவலர் அர்ச்சனா, வட்டார மருத்துவர் கோபி கிருஷ்ணராஜா. குழந்தைகள் வளர்ச்சி திட்ட ஒருங்கிணைப்பாளர் (கூடுதல் பொறுப்பு) சூர்யா மற்றும் அங்கன்வாடி பணியாளர்கள் கலந்துகொண்டனர்.

    • சிங்கம்புணரியில் வேளாண்மை விற்பனை இயக்குநர் ஆய்வு செய்தார்.
    • நெல் மற்றும் வேளாண் விளை பொருட்களை பார்வையிட்டார்.

    சிங்கம்புணரி

    சிவகங்கை மாவட்டம் சிங்கம்புணரி உழவர் சந்தையை மாநில வேளாண்மை விற்பனை மற்றும் வணிகத்துறை இயக்குநர் நடராஜன் ஆய்வு செய்தார். விவசாயிகளிடம் குறைகளை கேட்டறிந்தார். ஒழுங்குமுறை விற்பனை கூடத்தின் செயல்பாடுகள் மற்றும் விவசாயிகளால் இருப்பு வைக்கப்பட்டுள்ள நிலக்கடலை, நெல் மற்றும் வேளாண் விளை பொருட்களை பார்வையிட்டார். நேரடி கொப்பரை கொள்முதல் செய்யும் திட்டத்தின் பயனாளிகளிடம் குறைகளை கேட்டு அறிந்தார். மேலும் ஒழுங்குமுறை விற்பனை கூடத்தில் புதிதாக தொடங்கப்பட்ட மின்னணு தேசிய வேளாண் சந்தை திட்டம் செயல்படும் விதம், மக்களின் ஆதரவு உள்ளிட்ட விஷயங்களை நிர்வாகிகளிடம் கேட்டறிந்தார்.

    சிவகங்கை மாவட்டத்தின் முதல் தென்னை உற்பத்தியாளர் கம்பெனியின் எண்ணெய் உற்பத்தி வெளிநாடுகளுக்கு ஏற்படும் ஏற்றுமதி செய்வது சம்பந்தமாக செயல்பாடுகளை ஆய்வு செய்தார். இந்த ஆய்வின் போது வேளாண்மை துணை இயக்குநர் (மேலாண் வணிகம்) சுரேஷ், வேளாண்மை விற்பனைக்குழு செயலாளர் சாந்தி, வேளாண்மை அலுவலர் காளிமுத்து, கனிமொழி, புவனேசுவரி, விற்பனை கூட கண்காணிப்பாளர் கார்த்திகேயன், மாயாண்டி, வேளாண் உதவி அலுவலர்கள் ராதா, நாகராஜ் ஆகியோர் கலந்து கொண்டனர்.

    பேரூராட்சி தலைவர் அம்பலமுத்து, துணைத்தலைவர் செந்தில், தி.மு.க. நகர தலைவர் கதிர்வேல் மற்றும் உழவர் உற்பத்தியாளர் நிறுவனங்களின் இயக்குநர்கள் கலந்து கொண்டனர்.இதற்கான ஏற்பாடுகளை வேளாண்மை உதவி இயக்குநர் ரத்னகாந்தி செய்திருந்தார்.

    • பிரான்மலை அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் கலெக்டர் ஆய்வு செய்தார்.
    • ஆய்வில் வட்டார மருத்துவ அலுவலர் நபீசாபானு மற்றும் செவிலியர்கள் கலந்து கொண்டனர்.

    சிவகங்கை

    சிவகங்கை மாவட்டம் சிங்கம்புணரி ஊராட்சி ஒன்றியம் பிரான்மலை அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தின் செயல்பாடு கள் மற்றும் அங்கு புதிதாக கட்டப்பட்டு வரும் வட்டார பொது சுகாதார அலகு மருத்துவ கட்டிட கட்டுமான பணிகளை கலெக்டர் மதுசூதன் ரெட்டி நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

    இந்த ஆய்வின்போது அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் உள்நோயா ளிகள் பிரிவு, வெளி நோயாளிகள் பிரிவு, மகப்பேறு சிகிச்சை பிரிவு, குழந்தைகள் நலப்பிரிவு, மருந்துகள் இருப்பு விபரம் மற்றும் இருப்பு மருத்துவ உபகரணங்கள், தேவையான மருத்துவ உபகரணங்கள் மற்றும் மேம்படுத்த வேண்டிய உட்கட்டமைப்பு வசதிகள், பராமரிக்கப்பட்டு வரும் பதிவேடுகள், மருத்து வமனைக்கு வருகை புரி யும் நோயாளிகளின் சராசரியான எண்ணிக்கை, முதல்-அமைச்சரின் மக்களைத்தேடி மருத்துவ திட்டத்தின் மூலம் சிகிச்சை மற்றும் மருந்து, மாத்திரைகள் பெற்று பயன்பெறுபவர்களின் எண்ணிக்கை குறித்து வட்டார மருத்துவ அலுவலரிடம் கலெக்டர் கேட்டறிந்தார்.

    இதைத்தொடர்ந்து பிரான்மலை அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் ரூ.50 லட்சம் மதிப்பீட்டில் புதிதாக கட்டப்பட்டு வரும் வட்டார பொது சுகாதார அலகு கட்டிட பணிகள் குறித்தும், அதன் நிலை குறித்தும் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டு, பணிகளை தரமான முறையில் விரைந்து முடித்து, பயன்பாட்டிற்கு கொண்டு வர துறை சார்ந்த அலுவலர்களுக்கு கலெக்டர் உத்தரவிட்டார்.

    இந்த ஆய்வில் வட்டார மருத்துவ அலுவலர் நபீசாபானு மற்றும் செவிலியர்கள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

    • இருசக்கர வாகன பயன்பாடு குறித்து பள்ளி மாணவிகளுக்கு விழிப்புணர்வு
    • இதனால் விபத்துக்கள் அதிகரித்து வருகின்றன.

    சிவகங்கை

    சிவகங்கை அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் வட்டார போக்குவரத்து அலுவலகம் சார்பில் மாணவிகளுக்கான விழிப்புணர்வு கூட்டம் நடந்தது. இதில் இருசக்கர வாகன பயன்பாடு, அதன் அபரிமிதமான விளைவுகளை வட்டார போக்குவரத்து அலுவலர் மூக்கன் விளக்கினார்.

    அவர் பேசுகையில், போக்குவரத்து விதிமுறைகள் தெரியாமல் சிறுவர்கள் வாகனத்தை வேகமாக ஓட்டுகின்றனர். வாகன நெரிசல் அதிகமாக உள்ள சாலையில் கூட வேகமாக செல்கின்றனர். இதனால் விபத்துக்கள் அதிகரித்து வருகின்றன.

    இதை தடுக்க தமிழக போக்குவரத்துத்துறை 2019ல் திருத்தப்பட்ட மோட்டார் வாகன ஓட்டுநர் மற்றும் பழகுநர் உரிமம் சட்டப்பிரிவின்படி 18 வயதுக்கு கீழ் வாகனங்களை ஓட்டும் சிறுவர்களின் பெற்றோர் அல்லது பாதுகாவலருக்கு ரூ.25 ஆயிரம் அபராதம், 3 ஆண்டு சிறை தண்டனையும் விதிக்கப்படும் என்று எடுத்துரைத்தார்.

    இதில் தலைமை ஆசிரியர் சிவமணி, மோட்டார் வாகன ஆய்வாளர் மாணிக்கம், உதவி காவல் ஆய்வாளர் தமிழ்ச்செல்வி உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

    • கற்றல் பணிகளை விட மற்ற பணிகளை அதிகமாக செய்கிறோம் என சிவகங்கை முதன்மை கல்வி அதிகாரியிடம் ஆசிரியர் கூட்டமைப்பினர் புகார் அளித்தனர்.
    • இதுகுறித்து நடவடிக்கை எடுப்பதாக முதன்மை கல்வி அலுவலர் உறுதி அளித்தார்.

    சிவகங்கை

    சிவகங்கை மாவட்ட அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர் இயக்கங்களின் கூட்டமைப்பான ஜாக்டோ ஜியோ சார்பில் மாநில, மாவட்ட நிர்வாகிகள் மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் சுவாமிநாதனை சந்தித்து பேசினர்.

    அப்போது நிர்வாகிகள், முதன்மை கல்வி அலுவலரிடம், மாநில உயர் அலுவலர்கள் அடங்கிய மண்டல ஆய்வு கள் சமீபத்தில்தான் முடிவ டைந்துள்ளதால் அந்த குழு அளித்துள்ள மீளாய்வு கருத்துகள் பள்ளிகளில் ஆசிரியர்களால் நடைமுறை ப்படுத்தப்பட்டு வரும் சூழலில், மாவட்ட அளவிலான குழு அமைத்து தொடர் ஆய்வுகள் மேற்கொள்ள திட்டமிடப்படுவதால் பதிவேடுகள் தயார் செய்வ திலேயே ஆசிரியர்களின் நேரம் வீணடிக்கப்படுகிறது.

    இதனால் கற்றல், கற்பித்தலில் உள்ள சமநிலை பாதிக்கப்படுகிறது என்று எடுத்துரைத்தனர். தேவையற்ற பதிவேடுகளை ஆய்வுக்கு வரும் அலுவலர்களால் வலியுறுத்தப்படுவது ஆசிரியர்கள் மத்தியில் மன அழுத்தத்தை ஏற்படுத்துகிறது.

    இது மாவட்ட கல்வி வளர்ச்சியை பாதிக்கும். பள்ளிகளில் ஆய்வுகள் மேற்கொள்ளும்போது அறியப்படும் குறைகளை சரி செய்வதற்கு உரிய அறிவுரைகளை ஆசிரிய ர்களுக்கு வழங்க வேண்டும்.கற்றல் இடைவெளியால் மாணவர்களிடம் ஏற்பட்டுள்ள நடத்தை மாற்றங்களை சரி செய்ய வழிமுறைகளை ஏற்படுத்த வேண்டும் என்று வலியுறுத்தப்பட்டது. இதுகுறித்து நடவடிக்கை எடுப்பதாக முதன்மை கல்வி அலுவலர் உறுதி அளித்தார். இந்த சந்திப்பில் சிவகங்கை மாவட்ட கல்வி அலுவலர் (இடைநிலை) சண்முக நாதன், மாவட்ட கல்வி அலுவலர் (தொடக்கக்கல்வி) முத்துச்சாமி, தேவகோட்டை மாவட்ட கல்வி அலுவலர் (தொடக்கக்கல்வி) மாரி முத்து, உதவி திட்ட அலுவலர் பீட்டர் லெமாயூ, முதன்மைக் கல்வி அலுவலரின் நேர்முக உதவியாளர் (இடைநிலை) அருளானந்து உள்ளிட்ட அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

    • காரைக்குடி சட்டமன்ற உறுப்பினர் மாங்குடி தலைமை தாங்கி ரேசன் கடையை திறந்து வைத்தார்.
    • ஊராட்சி மன்ற உறுப்பினர் சீனிவாசன் நன்றி கூறினார்.

    காரைக்குடி

    சிவகங்கை மாவட்டம் சாக்கோட்டை ஊராட்சி ஒன்றியம் இலுப்பக்குடி பஞ்சாயத்திற்கு உட்பட்ட பொன்நகரில் ரேசன் கடை தொடங்க வேண்டும் என்று அந்த பகுதி மக்கள் நீண்டநாளாக கோரிக்கை விடுத்தனர்.

    சாக்கோட்டை யூனியன் தலைவர் சரண்யா செந்தில்நாதன், இலுப்பக்குடி ஊராட்சி மன்ற தலைவர் வைரமுத்து அன்பரசன் ஆகியோரின் முயற்சியால் பொன்நகரில் பகுதிநேர ரேசன் கடை திறக்கப்பட்டது. காரைக்குடி சட்டமன்ற உறுப்பினர் மாங்குடி தலைமை தாங்கி ரேசன் கடையை திறந்து வைத்தார்.

    சாக்கோட்டை யூனியன் தலைவர் சரண்யா செந்தில்நாதன், இலுப்பக்குடி ஊராட்சி மன்ற தலைவர் வைரமுத்து அன்பரசன் முன்னிலை வகித்தனர்.

    சாக்கோட்டை ஒன்றிய முன்னாள் தலைவர் முத்துராமலிங்கம், சாக்கோட்டை அ.தி.மு.க. மேற்கு ஒன்றிய செயலாளர் செந்தில்நாதன், இலுப்பக்குடி ஊராட்சி முன்னாள் தலைவர் அன்பரசன், ஊராட்சி துணை தலைவர் திருநெல்லை ரகுபதி, குடிமைப்பொருள் தாசில்தார் ஜெயநிர்மலா, பொன்.துரைசிங்கம், செல்வகுமார் உள்பட பலர் கலந்துகொண்டனர்.

    ஊராட்சி மன்ற உறுப்பினர் சீனிவாசன் நன்றி கூறினார்.

    • மின்சாரம் தாக்கி 10-ம் வகுப்பு மாணவர் பரிதாப இறந்தார்.
    • மின்மோட்டாரை இயக்க முற்பட்டபோது எதிர்பாராத விதமாக மின்சாரம் தாக்கியது.

    திருப்பத்தூர்

    சிவகங்கை மாவட்டம் திருப்பத்தூர் தாலுகா மகிபாலன்பட்டி ஊராட்சிக்குட்பட்ட சாலபட்டி கிராமத்தை சேர்ந்தவர் ராஜேந்திரன். இவரது மகன் ரமேஷ்(15). இவர் மகிபாலன்பட்டி அரசு உயர்நிலைப்பள்ளியில் 10-ம் வகுப்பு படித்து வந்தார். இவர் இன்று அதிகாலை வீட்டில் இருந்த மின்மோட்டாரை இயக்க முற்பட்டபோது எதிர்பாராத விதமாக மின்சாரம் தாக்கியது. இதில் தூக்கி வீசப்பட்ட ரமேஷ் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். இதுகுறித்து தகவல் அறிந்த கண்டவராயன்பட்டி போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து மாணவனின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக திருப்பத்தூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இந்த சம்பவம் தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். முன்னதாக மின்சாரம் தாக்கி உயிரிழந்த மாணவனின் உடலை பார்த்து பெற்றோர், குடும்பத்தினர் கதறி அழுதது பரிதாபமாக இருந்தது.

    • மானாமதுரை அரசு மருத்துவமனைக்கு வசதிகள் செய்து தர கோரி மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு ஆர்ப்பாட்டம் நடத்தினர்.
    • நாள் ஒன்றுக்கு 400 முதல் 500 வரை நோயாளிகள் வந்து சிகிச்சை பெற்று ெசல்கிறார்கள்.

    மானாமதுரை

    சிவகங்கை மாவட்டம் மானாமதுரையில் உள்ள அரசு மருத்துவமனைக்கு தேவையான அத்தியாவசிய வசதிகள் செய்து தர வேண்டும் என்பதை வலியுறுத்தி மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியின் சார்பில் ஆர்ப்பாட்டம் நடந்தது.

    மாநில குழு உறுப்பினர் விஜயராஜன், மாவட்டச் செயலாளர் தண்டியப்பன், மாவட்ட செயற்குழு உறுப்பினர்கள் வீரபாண்டி, முத்துராமலிங்க பூபதி, சுரேஷ், திருப்புவனம் ஒன்றிய செயலாளர் அய்யம்பாண்டி, சிவகங்கை ஒன்றிய செயலாளர் உலகநாதன், இளையான்குடி ஒன்றிய செயலாளர் ராஜு, மாவட்ட குழு உறுப்பினர்கள் ஜெயந்தி, ஜெயராமன், மானாமதுரை ஒன்றிய குழு உறுப்பினர்கள் முனிராஜ், பரமாத்மா, முருகானந்தம், ராஜாராமன், மூர்த்தி, பாலசுந்தரி ஆகியோர் பேசினர். மானாமதுரை அரசு 

    • சாலையில் திரிந்த மாடுகளை நகராட்சி பணியாளர்கள் பிடித்து அபராதம் விதித்தனர்.
    • மாடுகளை சாலைகளில், தெருக்களில் மேய்ச்சலுக்கு விடக்கூடாது என்று எச்சரித்து ஒப்படைத்தனர்.

    மானாமதுரை

    சிவகங்கை மாவட்டம் மானாமதுரை நகர்பகுதியில் சிவகங்கை ரோடு, ராமேசுவரம் செல்லும் நான்கு வழிசாலை, பழைய பஸ்நிலையம், சுந்தரபுரம், கடைவீதி, சிவகங்கை ரோடு, தாயமங்கலம்ரோடு, கன்னார் தெரு, சிப்காட், மூங்கில் ஊரணி ஆகிய பகுதிகளில் ஏராளமான வீடுகளில் உள்ள பசுமாடுகளை இரவு-பகலாக அதன் உரிமையாளர்கள் மேய்ச்சலுக்கு அவிழ்த்து விடுகின்றனர்.

    சாலையில் சுற்றி திரியும் இந்த மாடுகளால் இருசக்கர வாகனங்களில் செல்பவர்கள் விபத்தில் சிக்கி காயமடைந்து வருகின்றனர். இதுகுறித்து நகராட்சி அலுவலகத்தில் புகார் செய்யப்பட்டது. நகராட்சி நிர்வாகம் மாடுகளை சாலை மற்றும் தெருபகுதியில் மேய்ச்சலுக்கு விடக்கூடாது என்று வாகனத்தில் ஒலி பெருக்கி மூலம் அறிவிக்கப்பட்டது. இதை பொருட்படுத்தாமல் வழக்கம்போல் மாடுகள் ரோட்டில் திரிந்தன. நகராட்சி ஆணையாளர் சக்திவேல் உத்தரவின்படி சுகாதார ஆய்வாளர் தங்கதுரை மற்றும் பணியாளர்கள் கடைவீதி மற்றும் சாலையில் திரிந்த 10-க்கும் மேற்பட்ட பசுமாடுகளை பிடித்து நகராட்சி அலுவலக வளாகத்தில் கட்டிபோட்டனர்.

    அந்த மாடுகளுக்கு தண்ணீர், புல், கீரைகளை வழங்கினர். மாடுகளை தேடி வரும் உரிமையாளர்களுக்கு அபராதம் விதித்து மீண்டும் மாடுகளை சாலைகளில் , தெருக்களில் மேய்ச்சலுக்கு விடக்கூடாது என்று எச்சரித்து ஒப்படைக்கப்படும்.

    • சிவகங்கை மாவட்டத்தில் பேரூராட்சி பகுதிகளில் பல்வேறு திட்ட பணிகளை கலெக்டர் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
    • மக்கும் குப்பை, மக்காத குப்பை பிரித்து வாங்கப்படுவதை பார்வையிட்டு, அங்குள்ள பொதுமக்களிடம் கேட்டறிந்தார்.

    சிவகங்கை

    சிவகங்கை மாவட்டம், திருப்பத்தூர், சிங்கம்புணரி மற்றும் நெற்குப்பை ஆகிய பேரூராட்சிக்குட்பட்ட பகுதிகளில், பல்வேறு திட்டங்களின் கீழ் மேற்கொள்ளப்பட்டு வரும் பல்வேறு பணிகள் தொடர்பாக, மாவட்ட கலெக்டர் மதுசூதன் ரெட்டி பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

    திருப்பத்தூர் பேரூராட்சி அலுவலகத்தில் வடகிழக்கு பருவமழை முன்னெச்சரிக்கையினை எதிர்நோக்கி தயார்நிலையில் வைக்கப்பட்டுள்ள தடுப்பு உபகரணங்கள் மற்றும் தூய்மைப் பணியாளர்கள் ஓய்வு அறை ஆகியவை குறித்து ஆய்வு மேற்கொண்டு, திருப்பத்தூர்-காரைக்குடி ரோடு வார்டு 10ல் கைவண்டி மூலம் முதல்நிலை சேகரம் மக்கும் குப்பை, மக்காத குப்பை பிரித்து வாங்கப்படுவதை பார்வையிட்டு, அங்குள்ள பொதுமக்களிடம் கேட்டறிந்தார்.

    மேலும், கலைஞர் நகர்ப்புற மேம்பாட்டுத் திட்டம் 2021-2022-ம் ஆண்டின் கீழ் ரூ.195 லட்சம் மதிப்பீட்டில் புதிதாக கட்டப்பட்டு வரும் அறிவுசார் மையம் மற்றும் தென்மாபட்டு பகுதியில், தூய்மை பாரத திட்டம் 2021-22-ம் ஆண்டின் கீழ் ரூ.15லட்சம் மதிப்பீட்டில் புதிதாக கட்டப்பட்டு வரும் சமுதாய கழிப்பிடம், புதுப்பட்டி வார்டு2-ல் கலைஞர் நகர்ப்புற மேம்பாட்டுத் திட்டம் 2021-22-ம் ஆண்டின் கீழ் மருதாண்டி ஊரணியில் ரூ.53.80 லட்சம் மதிப்பீட்டில் புதிய நடைபாதை, தடுப்புச்சுவர் அமைக்கும் பணி உள்பட பல்வேறு பணிகளை ஆய்வு செய்தார்.

    இந்த ஆய்வுகளின் போது, உதவி இயக்குநர் (பேரூராட்சிகள்) ராஜா, பேரூராட்சித் தலைவர்கள் கோகிலாராணி (திருப்பத்தூர்), புசலான் (நெற்குப்பை), அம்பலமுத்து (சிங்கம்புணரி), உதவி செயற்பொறியாளர், உதவிப்பொறியாளர், பேரூராட்சி செயல் அலுவலர்கள், பேரூராட்சி துணைத்தலைவர்கள் மற்றும் உறுப்பினர்கள் உடனிருந்தனர்.

    • மானாமதுரை பஞ்சமுக பிரித்யங்கிரா தேவி கோவிலில் அமாவாசை யாகம் நடந்தது.
    • புனிதநீர் கலசத்தை மேளதாளத்துடன் எடுத்துச் செல்லப்பட்டு மஹா பஞ்சமுக பிரத்யங்கிரா தேவிக்கு புனித நீர் ஊற்றி அபிஷேகம் நடைபெற்றது.

    மானாமதுரை

    சிவகங்கை மாவட்டம் மானாமதுரை அருகே உள்ள பஞ்ச பூதேஸ்வரம் என்னும் இடத்தில் 24 மணி நேரமும் அன்னதானம் நடைபெறும் பிரசித்தி பெற்ற மகா பஞ்சமுக பிரித்தியங்கிர தேவி கோவில் உள்ளது. இங்கு அமாவாசை தினத்தை முன்னிட்டு மகா கணபதி ஹோமத்துடன் யாகம் தொடங்கியது.

    உலக மக்கள் துன்பத்தில் இருந்து விடுபட்டு வாழ்கையில் அனைத்து செல்வங்களை பெற்று பேரானந்தத்துடன் வாழ வேண்டியும், இயற்கை விவசாயம் செழிக்க வேண்டியும், நோய் தொற்றுகள் வரக்கூடாது எனவேண்டியும் பிரித்தியங்கிரா யாகம், வனதுர்க்கை யாகம் நடந்தது.

    இந்த சிறப்பு யாகத்தில் அனைத்து வகை பழங்கள், உயர்ரக மிளகு, தேன், நெய் மற்றும் நோய் தீர்க்கும் மூலிகை பொருட்கள், பட்டு வஸ்திரம், பட்டு புடவைகள், மிகப்பெரிய பூமாலைகள் போடப்பட்டு யாகத்தை தஞ்சை குருஜி கணபதி சுப்பிரமணியம் சாஸ்திரி மற்றும் அவரது சீடர்கள் நடத்தினர். 

    ×