என் மலர்tooltip icon

    சிவகங்கை

    • காரைக்குடியில் குறைதீர் கூட்டத்தில் விவசாயிகளுக்கு வேளாண் இடுபொருட்கள், பண்ணைக்கருவிகள் கலெக்டர் வழங்கினார்.
    • தோட்டக்கலைத்துறை துணை இயக்குநர் அழகுமலை மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

    சிவகங்கை

    சிவகங்கை மாவட்டம், காரைக்குடி கவியரசு கண்ணதாசன் மணி மண்டபத்தில் விவசாயிகள் குறை தீர்க்கும் கூட்டம் கலெக்டர் மதுசூதன்ரெட்டி தலைமையில் நடந்தது.

    இதில் நெல் பயிருக்கான இழப்பீடு மற்றும் பயிர்க் காப்பீட்டுத் தொகை வழங்கக் கோருதல், எந்திரம் மூலம் நடவு செய்வதற்கு மானியம் வழங்கக் கோருதல், கரும்பு பயிருக்கு சொட்டு நீர் பாசனம் அமைத்துத் தரக் கோருதல், வறட்சி நிவாரணம் வழங்கக் கோருதல், பண்ணைக்குட்டை அமைத்துத் தரக் கோருதல் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகள் தொடர்பாக, கலெக்டரிடம் விவசாயிகள் கோரிக்கை மனு கொடுத்தனர்.

    கூட்டத்தில் விவசாயிகள் எடுத்துரைத்த கோரிக்கைகள் மீது சம்பந்தப்பட்ட பகுதிகளில் மேற்கொள்ளப்பட்டு வரும் பணிகள் தொடர்பாக துறை சார்ந்த அலுவலர்கள் புள்ளி விபரங்களுடன் எடுத்துரைத்தனர். சிவகங்கை மாவட்டத்தில் உள்ள நீர் நிலையிலுள்ள ஆக்கிரமிப்புக்களை உடனடியாக அகற்றி பயன்பாட்டிற்கு கொண்டு வரவும், விவசாய நிலங்களை விலங்குகள் சேதப்படுத்தாமல் பாதுகாக்கவும், தேவை யான நிலங்களில் தடுப்ப ணைகள் ஏற்படுத்தி நிலத்தடி நீர் மட்டத்தை பாதுகாக்கவும், குறிப்பாக நீர்நிலைகளில் கருவேல் மரங்கள் அகற்றுதல் போன்ற விவசாயிகளின் கோரிக்கைகள் தொடர்பாக, மாவட்ட நிர்வாகத்தின் சார்பில் மேற்கொள்ளப்பட்டு வரும் நடவடிக்கைகள் குறித்து எடுத்துரைக்கப்பட்டது.

    16 விவசாயிகளுக்கு அரசின் நலத்திட்ட உதவிகளான வேளாண் இடு பொருட்கள், பண்ணைக்கருவிகளை கலெக்டர் மதுசூதன்ரெட்டி வழங்கினார். விவசாயி களுக்கு பயனுள்ள வகை யில் உழவர் இதழையும் கலெக்டர் வெளியிட்டார். அதனை விவசாயிகள் பெற்றுக் கொண்டனர்.

    இந்த கூட்டத்தில் மாவட்ட வருவாய் அலுவலர் மணிவண்ணன், கூட்டுறவுச் சங்கங்களின் இணைப்பதிவாளர் கோ.ஜினு, மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கியின் மேலாண்மை இயக்குநர் ரவிச்சந்திரன், வருவாய் கோட்டாட்சியர்கள் சுகிதா (சிவகங்கை), பால்துரை (தேவகோட்டை), வேளாண்மைத்துறை இணை இயக்குநர் தனபாலன், தோட்டக்கலைத்துறை துணை இயக்குநர் அழகுமலை மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

    • அ.தி.மு.க. சார்பில் ஜெயலலிதா பிறந்தநாள் விழா நடந்தது.
    • ஜெயலலிதா படத்திற்கு மலர்தூவி மரியாதை செலுத்தி பொதுமக்களுக்கு இனிப்பு வழங்கினர்.

    காரைக்குடி

    முன்னாள் முதல்-அமைச்சர் ஜெ.ஜெயலலிதாவின் பிறந்தநாளை முன்னிட்டு சிவகங்கை மாவட்டம் சாக்கோட்டை தெற்கு ஒன்றிய அ.தி.மு.க சார்பில் ஒன்றியம் முழுவதும் பல்வேறு இடங்களில் பிறந்தநாள் விழா கொண்டாடப்பட்டது. அரியக்குடியில் நடந்த விழாவில் சாக்கோட்டை தெற்கு ஒன்றிய செயலாளர் செந்தில்நாதன் தலைமை தாங்கினார்.சாக்கோட்டை ஒன்றிய சேர்மன் சரண்யா செந்தில்நாதன், அரியக்குடி ஊராட்சி மன்ற தலைவர் சுப்பையா முன்னிலை வகித்தனர்.

    ஜெயலலிதா படத்திற்கு மலர்தூவி மரியாதை செலுத்தி பொதுமக்களுக்கு இனிப்பு வழங்கினர்.இதில் அரியக்குடி கிளை அவைத் தலைவர் சீனிவாசன், கிளை கழக செயலாளர்கள் சுப்பிரமணியன், செந்தில்நாதன், மோகன், முத்துராஜ், அந்தோணிமகிமை, முருகன், துரைராஜ்குமார், ஊராட்சிமன்ற துணை தலைவர் துரை உள்பட பலர் கலந்து கொண்டனர். சங்கராபுரம் என்.ஜி.ஓ.காலனியில் நடந்த விழாவில் ஒன்றிய கவுன்சிலர்கள் சுப்பிரமணியன், தேவிமீனாள், மாவட்ட பேரவை துணை செயலாளர் நாகராஜன், கிளை செயலாளர் மகேந்திர குமார், ஐ.டி.விங் கபிலன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

    • ஜெயலலிதாவின் பிறந்த நாளில் அ.தி.மு.க.வினர் இனிப்பு வழங்கி கொண்டாடினர்.
    • நகர செயலாளர் ஏ.இப்ராம்சா அனைவரையும் வரவேற்றார்.

    நெற்குப்பை

    சிவகங்கை மாவட்டம் திருப்பத்தூரில் காந்தி சிலை, அண்ணா சிலை ஆகிய பகுதிகளில் தமிழக முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் 75-வது பிறந்தநாளை முன்னிட்டு அ.தி.மு.க. நிர்வாகிகள் மாவட்ட அவைத்தலைவர் ஏ.வி.நாகராஜன் தலைமை யில் பட்டாசு வெடித்து இனிப்புகள் வழங்கி கொண்டாடப்பட்டது.

    முன்னதாக நகர செயலாளர் ஏ.இப்ராம்சா அனைவரையும் வரவே ற்றார். நிகழ்ச்சியில் பொதுக்குழு உறுப்பினர் கரு.சிதம்பரம், ஒன்றிய செயலாளர்கள் கல்லல் ஜெ.குணசேகரன், லெ.சிவ மணி, மாவட்ட ஜெ பேரவை இணை செயலாளர் முருகேசன், மாவட்ட வழக்கறிஞர் அணி இணை செயலாளர் அழகர்சாமி, வழக்கறிஞர் ராஜசேகர், மாவட்ட சிறுபான்மையினர் நல பிரிவு இணை செயலாளர்கள் ஷபா ராஜாமுகமது, இப்ராம்சா, ஆசிப் இக்பால், பேரூராட்சி கவுன்சிலர் சையது முகமது ராபின் மற்றும் மாவட்ட, ஒன்றிய பேரூர், நகர நிர்வாகிகள் உள்ளிட்ட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

    • சிம்ம வாகனத்தில் உற்சவர் அம்மன் எழுந்தருளி வீதி உலா நடந்தது.
    • ஏராளமான பக்தர்கள் பால்குடம் எடுத்து வந்து நேர்த்திக்கடன் செலுத்தினர்.

    சிவகங்கை மாவட்டம் காரைக்குடி பர்மா காலனி பகுதியில் சக்தி வீரமாகாளியம்மன் கோவில் உள்ளது. இந்த கோவிலில் ஆண்டுதோறும் மாசி மாதத்தில் பூக்குழி திருநடன உற்சவ விழா நடைபெறும். இந்த விழாவில் 9-ம் நாள் அன்று அந்த கோவில் பகுதியில் உள்ள திடலில் அரிவாள் ஏணி மீது சாமியாடி நின்று, பக்தர்களை நோக்கி பூக்களை வீசி அருள்வாக்கு கூறும் நிகழ்ச்சி நடைபெறும்.

    இந்த ஆண்டுக்கான விழா கடந்த 15-ந்தேதி காப்புக்கட்டுதலுடன் தொடங்கியது. நாள்தோறும் அம்மனுக்கு சிறப்பு பூஜைகள் நடைபெற்று வந்தன. விழாவின் 9-ம் நாளான நேற்று முன்தினம் இரவு 9.30 மணிக்கு பர்மாகாலனி பகுதியில் உள்ள திடலில் 11 அரிவாள்களை படிகளாக்கி ஏணி உருவாக்கப்பட்டது.

    சிம்ம வாகனத்தில் உற்சவர் அம்மன் எழுந்தருளி வீதி உலா வந்து, அந்த திடலில் எழுந்தருளினார்.

    அதைத்தொடர்ந்து சாமியாடி, அரிவாள் ஏணி மீது ஏறிச் சென்றார். அதன் உச்சியில் நின்றும், அமர்ந்து கொண்டும், பூக்களை பக்தர்களை நோக்கி தூவியபடி அருள்வாக்கு கூறினார். அப்போது அங்கு ஏராளமான பக்தர்கள் சாமி தரிசனம் செய்தனர். அதன் பின்னர் மீண்டும் அம்மனுக்கு தீபாராதனை காண்பிக்கப்பட்டது. 10-ம் நாள் விழாவான நேற்று ஏராளமான பக்தர்கள் பால்குடம் எடுத்து வந்து நேர்த்திக்கடன் செலுத்தினர். விழாவையொட்டி பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.

    • தேர்தல் வழக்கு தொடர எதிர்தரப்புக்கு சுப்ரீம் கோர்ட்டு அனுமதி அளித்தது.
    • சாக்கோட்டை ஊராட்சி ஒன்றியம் சங்கராபுரம் பஞ்சாயத்து தேர்தலில் தேவி மாங்குடி வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டது.

    காரைக்குடி

    தமிழகத்தில் கிராமப்புற உள்ளாட்சி தேர்தல் நடந்தது. இதில் சிவகங்கை மாவட்டம் காரைக்குடி அருகே உள்ள சாக்கோட்டை ஊராட்சி ஒன்றியம் சங்கராபுரம் பஞ்சாயத்து தேர்தலில் தேவி மாங்குடி வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டது.

    இதுகுறித்து ஐகோர்ட்டு உத்தரவுக்கு எதிராக பிரியதர்சினி அய்யப்பன் தொடர்ந்த மேல் முறையீட்டு மனுவை விசாரித்த சுப்ரீம் ேகார்ட்டு, ஐேகார்ட்டு வழங்கிய உத்தரவில் தலையிட முடியாது என்று கூறி மேல்முறையீட்டு மனுவை தள்ளுபடி செய்து கடந்த வாரம் வழக்கை முடித்து வைத்தது.

    இந்தநிலையில் தேவி மாங்குடி பஞ்சாயத்து தலை வராக பதவியேற்க தடை விதிக்க வேண்டும் என்று பிரியதர்சினி அய்யப்பன் தரப்பில் தாக்கல் செய்திருந்த புதிய மனு சுப்ரீம் கோர்ட்டில் நீதிபதிகள் பி.ஆர்.கவாய், அரவிந்த் குமார் ஆகியோர் தலைமையிலான அமர்வில் விசாரணைக்கு வந்தது.

    அப்போது இந்த விவகாரத்தில் தேர்தல் வழக்கு தொடர மனுதாரருக்கு அனுமதி வழங்குவதாக உத்தரவிட்டு வழக்கை முடித்து வைத்தனர்.

    • 174 பேருக்கு ரூ.14.35 கோடி கடனுதவி வழங்கப்பட்டது.
    • வங்கிகளின் வாயிலாக கடனுதவிகள் பெறும் பயனாளிகள் அதனை முறையாக செலுத்த வேண்டும்.

    சிவகங்கை

    சிவகங்கை மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் அனைத்து வங்கிகளையும் ஒருங்கிணைத்து மாவட்ட முன்னோடி வங்கி சார்பில் வாடிக்கையாளர்கள் சந்திப்பு முகாம் நடந்தது. இதில் கலெக்டர் மதுசூதன் ரெட்டி பங்கேற்று வாடிக்கையாளர்களுக்கு பல்வேறு வங்கி கடனுதவிகளுக்கான ஆணைகளை வழங்கினார்.

    பின்னர் அவர் பேசியதாவது:-

    சிவகங்கை மாவட்டத்தில் ஒரு ஆண்டிற்கு சராசரியாக ரூ.8,500 கோடி வரையிலான வங்கி கடன் உதவிகள் பொதுமக்களுக்கு வழங்கப்பட்டு வருகிறது. பொதுமக்களுக்கு பொருளாதார ரீதியாக உதவிடும் வகையில் வங்கி கடன் உதவிகள் வழங்குவது மட்டுமின்றி அவர்களின் சேமிப்பினையும் முறையாக பாதுகாப்பதற்கும் வங்கிகள் உதவி வருகின்றன.

    மேலும் அனைத்து வங்கிகளின் சார்பில் வாடிக்கையாளர்களுக்கு வழங்கப்படும் ஏ.டி.எம்.கார்டு, அதன் கடவுச்சொல் ஆகியவைகள் தொடர்பான விபரங்களை மற்றவர்களுக்கு தெரிவிக்கக்கூடாது. எந்த வங்கியின் வாயிலாகவும் மேற்கண்ட விபரங்கள் குறித்து கோரப்படமாட்டாது. இது குறித்து போதுமான விழிப்புணர்வுடன் பொதுமக்கள் இருக்க வேண்டும்.

    பொதுமக்களின் நலனைக்கருத்தில் கொண்டு, அவர்கள் பயன்பெறும் வகையில் மத்திய மற்றும் மாநில அரசின் சார்பில் பல்வேறு கடனுதவிகள் மானியத்துடன் வழங்கப்பட்டு வருகிறது. வங்கிகளின் வாயிலாக கடனுதவிகள் பெறும் பயனாளிகள் அதனை முறையாக செலுத்த வேண்டும்.

    மானியத்துடன் கூடிய கடனுதவிகள் வழங்கப்படும் திட்டங்கள் குறித்து அறிந்து கொண்டு, அதனை முழுமையாக பயன்படுத்திக்கொண்டு பயன்பெற வேண்டும்.

    இவ்வாறு அவர் பேசினார்.

    இந்த நிகழ்ச்சியில் அனைத்து வங்கிகளின் சார்பில் விவசாயக்கடன், கல்விக்கடன், தொழில்கடன், மகளிர் சுயஉதவி குழுக்கடன், வாகனக்கடன் உள்ளிட்ட பல்வேறு கடனுதவிகள் என மொத்தம் 174 வாடிக்கையாளர்களுக்கு ரூ.14.35கோடி மதிப்பீட்டில் கடனுதவிக்கான ஆணைகளை கலெக்டர் வழங்கினார்.

    இதில் காரைக்குடி மண்டல இந்தியன் ஓவர்சீஸ் வங்கி மேலாளர் லீனா, மாவட்ட முன்னோடி வங்கி மேலாளர் இளவழகன் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.

    • மாநில கல்வி கொள்கை குறித்து தெக்கூர் கல்லூரி மாணவர்களிடம் நீதிபதி கருத்துகளை கேட்டறிந்தார்.
    • இதில் சிவகங்கை மாவட்ட முதன்மைக்கல்வி அலுவலர் சுவாமிநாதன் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

    சிவகங்கை

    தமிழக அரசு மாநில அளவில் புதிய கல்விக்கொள்கை உருவாக்கப்பட வேண்டும் என்பதன் அடிப்படையில் மாநில கல்விக்கொள்கை கருத்துருவை தயாரிப்பதற்கான குழுவை நியமித்துள்ளது.

    இவ்வாறு நியமிக்கப்பட்ட தமிழ்நாடு மாநிலக் கல்விக் கொள்கை குழுவின் தலைவர்-முன்னாள் டெல்லி ஐகோர்ட்டு தலைமை நீதிபதி முருகேசன் சிவகங்கை மாவட்டம் திருப்பத்தூர் அருகில் அ.தெக்கூரில் உள்ள சிங்கை சித்தர் அய்யா கலை மற்றும் அறிவியல் கல்லூரிக்கு வருகை புரிந்து மாணவ, மாணவிகளை சந்தித்து தற்போது நடைமுறையில் உள்ள கல்வி முறையை பற்றி கருத்துக்களை கேட்டறிந்தார்.

    கிராமப்புறத்தில் அமைந்துள்ள இந்த கல்லூரியில் படிக்கும் மாணவ- மாணவிகள் தற்போது நடைமுறையில் உள்ள கற்றல், கற்பித்தல் முறைகள், தேர்வு முறைகள் பற்றிய கருத்துக்களை தெரிவித்தனர். மேலும், மாணவர்களுடன் கலந்துரையாடிய போது பள்ளி மற்றும் கல்லூரிகளில் தற்போது நடைபெற்று வரும் கற்றல் கற்பித்தல் நிகழ்வுகள், பாடத்திட்டங்கள், தேர்வு முறைகள், ஆசிரியர் -மாணவர் உறவு முறை ஆகியவற்றில் உள்ள சிக்கல்களை எவ்வாறு கையாள்வது?, பாடங்களை புரிந்து படித்து தேர்வை தன்னம்பிக்கையுடன் எதிர்கொள்வது என்ற வகையில் மாணவர்களை ஊக்கப்படுத்தும் வகையில் கருத்துக்களை நீதிபதி தெரிவித்தார்.

    பின்னர் கல்லூரி ஆசிரியர்களுடன் கலந்துரையாடி மாணவர்களின் கல்வி தரத்தை எவ்வாறு மேம்படுத்துவது? என்பது குறித்து அறிவுரை வழங்கி, கல்லூரி நிர்வாகத்தினரிடம் கலந்துரையாடி கல்லூரி நிர்வாகத்தில் ஏற்படும் பிரச்சினைகளை எவ்வாறு கையாள்வது?, கல்லூரியின் தரத்தை முன்னேற்றம் அடையச்செய்வது பற்றி ஆலோசனை வழங்கினார்.

    இதில் சிவகங்கை மாவட்ட முதன்மைக்கல்வி அலுவலர் சுவாமிநாதன் மற்றும் பலர் கலந்துகொண்டனர்.

    • இடைக்காட்டூர் திரு இருதய ஆண்டவர் திருத்தலத்தில் பள்ளி மாணவர்கள் தேர்வுக்காக பிரார்த்தனை நடந்தது.
    • இதே போல் சிவகங்கை விஷ்ணுதுர்கை கோவிலில் உள்ள சரசுவதி கோவிலிலும் மாணவர்கள் வழிபாடு செய்தனர்.

    மானாமதுரை

    சிவகங்கை மாவட்டம் மானாமதுரை அருகே உள்ள புகழ்பெற்ற இடைக்காட்டூர் திரு இருதய ஆண்டவர் திருத்தலம் உள்ளது.இங்கு மானாமதுரை-சிவகங்கை ரோட்டில் சுந்தர நடப்பு பகுதியில் செயல்படும் தனியார் மவுன்ட் போர்டு பள்ளி மாணவர்கள் வருகிற பிளஸ்-2 மற்றும் 10-ம் வகுப்பு பொது தேர்வுக்காக தயார்படுத்தி வரும் நிலையில், மாணவர்கள் இடைக்காட்டூர் திரு இருதய ஆண்டவர் திருத்தலத்திற்கு சென்று சிறப்பு பிரார்த்தனையில் ஈடுபட்டனர்.

    தேர்வில் அதிக மதிப்பெண்களுடன் வெற்றி பெற வேண்டிக் கொண்டனர். மாணவர்கள் கொண்டு வந்த நுழைவு தேர்வு சீட்டினை இடைக்காட்டூர் திருஇருதய திருத்தல அருட்பணியாளர் இம்மானுவேல் தாசனிடம் கொடுத்து ஆசீர்வாதம் பெற்றனர். இதே போல் சிவகங்கை விஷ்ணுதுர்கை கோவிலில் உள்ள சரசுவதி கோவிலிலும் மாணவர்கள் வழிபாடு செய்தனர்.

    • சிவகங்கை அருகே லாரி மீது கார் மோதி விபத்து ஏற்பட்டது.
    • இதில் அதிர்ஷ்டவசமாக டாக்டர் உயிர் தப்பினார்.

    நெற்குப்பை

    சிவகங்கை அரசு மருத்துவ மனையில் குழந்தைகள் நல மருத்துவராக பணிபுரிந்து வருபவர் ராஜ்குமார்.இவர் காலையில் பணிக்கு சென்று விட்டு மதியம் 1 மணியளவில் காரில் திருப்பத்தூர் நோக்கி வந்து கொண்டிருந்தார். திருக்கோஷ்டியூரை அடுத்த கே.பிள்ளையார் பட்டி அருகே கார் வந்த போது எதிரே பேரீச்சம் பழம் ஏற்றிக்கொண்டு லாரி வந்தது.

    அப்போது எதிர்பாராத விதமாக கட்டுப்பாட்டை இழந்த கார் லாரி மீது பயங்கர மாக மோதியது. இருந்தபோதிலும் காரில் உள்ள உயிர் காக்கும் பலூன் உடனடியாக விரிந்தது. இதனால் காரை ஓட்டி வந்த டாக்டர் அதிர்ஷ்டவசமாக காயமின்றி உயிர் தப்பினார்.

    இருப்பினும் லாரி கார் மீது கவிழ்ந்து விழுந்தது. இதனால் லாரியை ஓட்டி வந்த புதுக்கோட்டையைச் சேர்ந்த டிரைவர் சுல்தான் மற்றும் உதவியாளர் மகேஸ்வரன் ஆகியோர் பலத்த காயமடைந்தனர். தகவல் அறிந்து வந்த திருக்கோஷ்டியூர் போலீஸ் நிலைய இன்ஸ்பெக்டர் மற்றும் போலீசார் அவர்களை மீட்டு சிவகங்கை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இந்த விபத்து குறித்து வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • சிங்கம்புணரி அருகே வடமாநில தொழிலாளி மூச்சுதிணறி பரிதாபமாக இறந்தார்.
    • எஸ்.வி.மங்கலம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    சிங்கம்புணரி

    சிவகங்கை மாவட்டம் சிங்கம்புணரி அருகே எஸ்.வி.மங்கலத்தில் காவிரி கூட்டு குடிநீர் திட்டத்தில் பிரதான லைனில் இரும்பு குழாய் பதிக்கும் பணி நடைபெற்று வருகிறது. இந்த இரும்பு குழாய்களை இணைக்கும் பணியில் வட மாநில தொழிலாளர்கள் ஈடுபட்டு வந்தனர். நேற்று மாலை இதற்கான பணிகள் நடந்துகொண்டிருந்தது. 12 மீட்டர் நீளம் கொண்ட இரும்பு பைப்பின் உள்ளே சென்று அதனை இணைக்கும் பணியில் சில தொழிலாளர்கள் ஈடுபட்டிருந்தனர். அப்போது அங்கு பணியில் இருந்த மேற்கு வங்க மாநிலம் முர்ஷிதாபாத்தைச் சேர்ந்த தேபாப்ரட்டா ஹால்டர் (வயது 31) என்ற தொழிலாளிக்கு மூச்சுத் திணறல் ஏற்பட்டு மயக்கமடைந்தார்.

    சக தொழிலாளர்கள் உடனடியாக அவரை அருகில் உள்ள மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக கொண்டு சென்றனர். ஆனால் அவரை பரிசோதித்த டாக்டர்கள் ஏற்கனவே இறந்துவிட்டதாக தெரிவித்தனர். தகவல் அறிந்த எஸ் வி மங்கலம் போலீசார் இறந்த தொழிலாளியின் உடலை கைப்பற்றி சிங்கம்புணரி அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். மேலும் இதுதொடர்பாக வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • இளையான்குடி கல்லூரியில் அறிவியல் கண்காட்சி நடந்தது.
    • சிவகங்கை மாவட்டம் இளையான்குடி சாகிர் உசேன் கல்லூரி இயற்பியல்துறை சார்பில் அறிவியல் கண்காட்சி மற்றும் கோளரங்கம் 2 நாட்கள் நடந்தது.

    மானாமதுரை

    சிவகங்கை மாவட்டம் இளையான்குடி சாகிர் உசேன் கல்லூரி இயற்பியல்துறை சார்பில் அறிவியல் கண்காட்சி மற்றும் கோளரங்கம் 2 நாட்கள் நடந்தது. கல்லூரி செயலர் ஜபருல்லாஹ் கான், கல்லூரி முதல்வர் அப்பாஸ் மந்திரி ஆகியோர் கண்காட்சியை தொடங்கி வைத்தனர். இயற்பியல் துறை மாணவ-மாணவிகள் அறிவியல் மாதிரிகளை காட்சிப்படுத்தி விளக்கினர். இளையான்குடி சுற்றுவட்டார பகுதிகளில் இருந்து பள்ளி, கல்லூரி மாணவ-மாணவிகள் கண்காட்சியை பார்வையிட்டனர். கல்லூரி ஆட்சிக்குழு பொருளாளர் அப்துல் அஹது, ஆட்சிக்குழு உறுப்பினர்கள் அபூபக்கர் சித்திக், சிராஜுதீன், அல்ஹாஜ், நசீர் கான், அப்துல் சலீம், சுயநிதி பாடப்பிரிவு இயக்குனர் சபினுல்லாஹ் கான் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். நிகழ்வில் 

    • சிப்காட் நவீன அரிசி ஆலையில் 2 ஆயிரம் மெட்ரிக் டன் நெல் பாதுகாப்பாக வைக்கப்பட்டுள்ளது.
    • இந்த தகவலை கலெக்டர் மதுசூதன் ரெட்டி தெரிவித்துள்ளார்.

    சிவகங்கை

    சிவகங்கை மாவட்டம் மானாமதுரை ஊராட்சி ஒன்றியம் சிப்காட் வளாகத்தில் அமைந்துள்ள கூட்டுறவு, உணவு மற்றும் நுகர்வோர் பாதுகாப்புத்துறை, தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக்கழகத்தின் சார்பில் செயல்பட்டு வரும் நவீன அரிசி ஆலையை மாவட்ட கலெக்டர் மதுசூதன் ரெட்டி நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

    பின்னர் அவர் கூறியதாவது:-

    சிவகங்கை மாவட்டத்தில் கொள்முதல் செய்யப்படும் நெல்லினை மழையிலிருந்து நனையாமல் பாதுகாக்கும் வகையில் 60.600 மெட்ரிக் டன் கொள்ளளவு கொண்ட மேற்கூறை அமைப்பிலான நெல் சேமிப்பு மேடைகள் அமைக்கும் பணி நடைபெற்று வருகிறது. இதில் பணி முடிக்கப்பட்ட 31,600 மெட்ரிக் டன்கொள்ளளவு கொண்ட நெல் சேமிப்பு மேடைகள் முதல்-அமைச்சரால் கடந்த 11-ந் தேதி திறந்து வைக்கப்பட்டுள்ளது.

    மேலும் 14,573 மெட்ரிக் டன் நகர்வு செய்யப்பட்ட நெல்லில் 2,000 மெட்ரிக் டன், மானாமதுரை சிப்காட் நவீன அரிசி ஆலை வளாகத்தில் முதல்-அமைச்சரால் திறந்து வைக்கப்பட்ட 10,000 மெட்ரிக் டன் கொள்ளளவு கொண்ட மேற்கூரை அமைப்பிலான மேடையில் சேமிக்கப்பட்டுள்ளது. மீதமுள்ள 12,573 மெட்ரிக் டன் நெல் சிவகங்கை மாவட்டம் காரைக்குடி மற்றும் மானாமதுரை நவீன அரிசி ஆலையின் கிடங்கில் பாதுகாப்பாக வைக்கப்பட்டுள்ளது.

    தமிழ்நாடு நகர்பொருள் வாணிப கழகம் சிவகங்கை மண்டலத்தில் 2022-23-ல் நேரடி நெல் கொள்முதல் நிலையங்கள் மூலமாக விவசாயிகளிடம் இருந்து கொள்முதல் செய்வதற்கு சிவகங்கை மாவட்டத்தில் 62 நேரடி நெல் கொள்முதல் நிலையங்கள் திறக்கப்பட்டு, கடந்த 21-ந் தேதி வரை 19,365 மெட்ரிக் டன் நெல் கொள்முதல் செய்யப்பட்டுள்ளது.

    அதில் 14,573 மெட்ரிக் டன் நகர்வு செய்யப்பட்டு பாதுகாப்பாக சேமிக்கப்பட்டுள்ளது. இந்த கொள்முதலில் 4,549 விவசாயிகள் பயனடைந்துள்ளனர். இதில் 3,134 விவசாயிகளுக்கு ரூ.29.40 கோடி விவசாயிகளின் வங்கிக்கணக்கில் பணமாக பரிமாற்றம் செய்யப்பட்டுள்ளது.

    மேலும் மானாமதுரை பகுதிகளில் 25 இடங்களில் இயங்கும் நெல் கொள்முதல் நிலையங்களிலிருந்து நெல் கொள்முதல் செய்யப்பட்டு. நவீன அரிசி ஆலை வளாகத்தில் மேற்கூரை அமைப்பிலான நெல் மேடைகளில் சேமிக்கப்பட்டு பாதுகாப்பாக உள்ளது.

    இவ்வாறு அவர் கூறினார்.

    இந்த ஆய்வின்போது தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக்கழக மண்டல மேலாளர் அருண்பிரசாத், செயற்பொறியாளர் முருகன், மேலாளர் முத்துப்பாண்டி மற்றும் அரசு அலுவலர்கள் உள்பட பலர் உடனிருந்தனர்.

    ×