என் மலர்

  உள்ளூர் செய்திகள்

  விவசாயிகளுக்கு வேளாண் இடுபொருட்கள், பண்ணைக்கருவிகள் வழங்கல்
  X

  கூட்டத்தில் தோட்டகலைத்துறையின் சார்பில் விவசாயிகளுக்கு நலத்திட்ட உதவிகளை கலெக்டர் மதுசூதன்ரெட்டி வழங்கினார்.

  விவசாயிகளுக்கு வேளாண் இடுபொருட்கள், பண்ணைக்கருவிகள் வழங்கல்

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • காரைக்குடியில் குறைதீர் கூட்டத்தில் விவசாயிகளுக்கு வேளாண் இடுபொருட்கள், பண்ணைக்கருவிகள் கலெக்டர் வழங்கினார்.
  • தோட்டக்கலைத்துறை துணை இயக்குநர் அழகுமலை மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

  சிவகங்கை

  சிவகங்கை மாவட்டம், காரைக்குடி கவியரசு கண்ணதாசன் மணி மண்டபத்தில் விவசாயிகள் குறை தீர்க்கும் கூட்டம் கலெக்டர் மதுசூதன்ரெட்டி தலைமையில் நடந்தது.

  இதில் நெல் பயிருக்கான இழப்பீடு மற்றும் பயிர்க் காப்பீட்டுத் தொகை வழங்கக் கோருதல், எந்திரம் மூலம் நடவு செய்வதற்கு மானியம் வழங்கக் கோருதல், கரும்பு பயிருக்கு சொட்டு நீர் பாசனம் அமைத்துத் தரக் கோருதல், வறட்சி நிவாரணம் வழங்கக் கோருதல், பண்ணைக்குட்டை அமைத்துத் தரக் கோருதல் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகள் தொடர்பாக, கலெக்டரிடம் விவசாயிகள் கோரிக்கை மனு கொடுத்தனர்.

  கூட்டத்தில் விவசாயிகள் எடுத்துரைத்த கோரிக்கைகள் மீது சம்பந்தப்பட்ட பகுதிகளில் மேற்கொள்ளப்பட்டு வரும் பணிகள் தொடர்பாக துறை சார்ந்த அலுவலர்கள் புள்ளி விபரங்களுடன் எடுத்துரைத்தனர். சிவகங்கை மாவட்டத்தில் உள்ள நீர் நிலையிலுள்ள ஆக்கிரமிப்புக்களை உடனடியாக அகற்றி பயன்பாட்டிற்கு கொண்டு வரவும், விவசாய நிலங்களை விலங்குகள் சேதப்படுத்தாமல் பாதுகாக்கவும், தேவை யான நிலங்களில் தடுப்ப ணைகள் ஏற்படுத்தி நிலத்தடி நீர் மட்டத்தை பாதுகாக்கவும், குறிப்பாக நீர்நிலைகளில் கருவேல் மரங்கள் அகற்றுதல் போன்ற விவசாயிகளின் கோரிக்கைகள் தொடர்பாக, மாவட்ட நிர்வாகத்தின் சார்பில் மேற்கொள்ளப்பட்டு வரும் நடவடிக்கைகள் குறித்து எடுத்துரைக்கப்பட்டது.

  16 விவசாயிகளுக்கு அரசின் நலத்திட்ட உதவிகளான வேளாண் இடு பொருட்கள், பண்ணைக்கருவிகளை கலெக்டர் மதுசூதன்ரெட்டி வழங்கினார். விவசாயி களுக்கு பயனுள்ள வகை யில் உழவர் இதழையும் கலெக்டர் வெளியிட்டார். அதனை விவசாயிகள் பெற்றுக் கொண்டனர்.

  இந்த கூட்டத்தில் மாவட்ட வருவாய் அலுவலர் மணிவண்ணன், கூட்டுறவுச் சங்கங்களின் இணைப்பதிவாளர் கோ.ஜினு, மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கியின் மேலாண்மை இயக்குநர் ரவிச்சந்திரன், வருவாய் கோட்டாட்சியர்கள் சுகிதா (சிவகங்கை), பால்துரை (தேவகோட்டை), வேளாண்மைத்துறை இணை இயக்குநர் தனபாலன், தோட்டக்கலைத்துறை துணை இயக்குநர் அழகுமலை மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

  Next Story
  ×