search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    மாவட்ட சேர்மன் இல்ல திருமண வரவேற்பு விழா
    X

    கிடாக்களை சீர்வரிசையாக கொண்டுவந்த கிராம மக்கள்.

    மாவட்ட சேர்மன் இல்ல திருமண வரவேற்பு விழா

    • சிங்கம்புணரி எஸ்.புதூர் ஒன்றியத்தில் மாவட்ட சேர்மன் இல்ல திருமண வரவேற்பு விழா நடந்தது.
    • சீர் கொண்டு வந்த அனைவரையும் பொன்மணி பாஸ்கரன் குடும்பத்தினர் நன்றி கூறி வரவேற்றனர்.

    நெற்குப்பை

    சிவகங்கை மாவட்டம் சிங்கம்புணரி தாலுகா எஸ்.புதூர் ஒன்றியம் பொன்னடபட்டி கிராமத்தை சேர்ந்தவர் பொன்மணி பாஸ்கரன். இவர் அ.தி.மு.க.வில் கடந்த 25 ஆண்டுகளுக்கு முன் தன்னை இணைத்துக் கொண்டார்.

    கட்சி பணியோடு சென்னை போன்ற பெருநகரங்களில் பல்வேறு தொழில்களில் முனைப்பு காட்டும் தொழிலதிபராக வலம் வருகிறார். இவர் ஈட்டும் வருமானத்தை கட்சி பணிக்கு அப்பாற்பட்டு கோவில் கட்டுதல், கல்விக்கூடங்கள் கட்டிக்கொடுத்தல், ஏழை-எளிய மக்களுக்கு திருமண உதவி செய்தல் போன்ற பல்வேறு அறப்பணிகளில் முழுமையாக அர்ப்பணிக்கும் மனிதராகவும் இருந்து வருகிறார்.

    கொரோனா நேரத்தில் தனது உயிரையும் பொருட்படுத்தாமல் இந்த பகுதி மக்களின் ஒவ்வொ ருவரின் வீடுகளுக்கு நேரடியாக சென்று அரிசி, பருப்பு, காய்கறி உள்ளிட்ட பல்வேறு உதவிகளை செய்து அவர்களின் மனதில் குறுகிய காலத்தில் இடம் பிடித்தார்.

    இவரின் இத்தகைய செயல் இந்த பகுதி மக்கள் மத்தியில் மட்டுமல்லாமல் கட்சி மேலிடத்தியிலும் நன்மதிப்பை பெற்றது. கடந்த 10 ஆண்டுகளுக்குள் பொன்மணி பாஸ்கரன் மெல்ல மெல்ல அசுர வளர்ச்சி அடைந்து அ.தி.மு.க. கிளை செயலாளர், மாவட்ட கவுன்சிலர் போன்ற பதவிகளை வகித்து தற்போது சிவகங்கை மாவட்ட ஊராட்சி குழு தலைவராகவும், மாவட்ட பேரவை துணைச் செயலா ளராகவும்பதவி வகித்து வருகிறார்.

    இவருக்கு மகன் மற்றும் மகள் உள்ளனர். கடந்த 12-ந் தேதி சென்னையில் உள்ள திருமண மகாலில் மகள் ஹரிப்பிரியா-ஜெயக்குமார் ஆகியோரது திருமணம் நடந்தது. அதனுடைய வரவேற்பு விழாவை, தான் பிறந்த ஊரில் வைக்கும் வகையில் இந்த பகுதியில் உள்ள அனைத்து மக்களுக்கும் அழைப்பிதழ் வழங்கினார்.

    அதற்காக பிரமா ண்டமாக ஏற்பாடுகள் சிவகங்கை மாவட்டம் குன்னத்தூரில் அருகே உள்ள ஓ.வி.எம். கார்டனில் நடந்தது.

    வரவேற்பு விழாவில் முன்னாள் முதல் -அமைச்சர் எடப்பாடி பழனிசாமி உள்ளிட்ட முன்னாள் அமைச்சர்கள், அ.தி.மு.க. நிர்வாகிகள், தொழிலதிபர்கள் என திரளானோர் பங்கேற்றனர்.

    திருமண வரவேற்பு விழாவை சிறப்பிக்கும் வகையில் எஸ்.புதூர் ஒன்றியத்துக்கு உட்பட்ட கிராமமக்கள் சார்பில் சீர் செய்யும் விழா நடத்தினர். சுமார் 504 ஆட்டுக்கிடாக்கள், ஆளுயுர குத்துவிளக்கு, தாமிர பானை, சேலை, காய்கறி, பழங்கள் உள்ளிட்ட சீர்வரிசை பொருட்களை குன்னத்தூர் கண்மாய் கரை சாலை நெடுகிலும் மேளதாளம் முழங்க, பட்டாசு வெடித்து, ஆட்டம் பாட்டத்துடன் திருமண வரவேற்பு பந்தலுக்கு கொண்டு வந்தனர்.

    சீர் கொண்டு வந்த அனைவரையும் பொன்மணி பாஸ்கரன் குடும்பத்தினர் நன்றி கூறி வரவேற்றனர்.

    விழாக்கோலம் போல் ஆயிரக்கணக்கான ஆண்கள், பெண்கள் சீர் எடுத்து வந்தது காண்போர் மத்தியில் ஆனந்தத்தையும், பரவசத்தையும் ஏற்படுத்தியது.

    Next Story
    ×