ஜெயலலிதா படத்துக்கு அ.தி.மு.க.வினர் மரியாதை

காரைக்குடியில் ஜெயலலிதா படத்துக்கு அ.தி.மு.க.வினர் மரியாதை செலுத்தினர். உச்சநீதிமன்றம் பொதுக்குழுவைத்தான் செல்லும் என்று தீர்ப்பில் குறிப்பிட்டுள்ளது.
ஜெயலலிதா படத்துக்கு மாவட்ட செயலாளர் அசோகன் தலைமையில் ஓ.பன்னீர்செல்வம் ஆதரவாளர்கள் மலர்தூவி மரியாதை செலுத்தினர்.
ஜெயலலிதா படத்துக்கு மாவட்ட செயலாளர் அசோகன் தலைமையில் ஓ.பன்னீர்செல்வம் ஆதரவாளர்கள் மலர்தூவி மரியாதை செலுத்தினர்.
Published on

காரைக்குடி

சிவகங்கை மாவட்டம் காரைக்குடியில் முன்னாள் முதல்-அமைச்சர் ஜெயலலிதாவின் 75-வது பிறந்தநாளை முன்னிட்டு ஐந்து விளக்கு எம்.ஜி.ஆர். சிலை அருகே ஜெயலலிதாவின் உருவப்படத்திற்கு ஓ. பன்னீர்செல்வம் ஆதரவாளர்கள் மாவட்ட செயலாளர் அசோகன் தலைமையில் மலர்த்தூவி மரியாதை செலுத்தினர்.

இதில் கலந்துகொண்ட கொள்கை பரப்பு செயலாளர் மருது அழகுராஜ் பேசும்ேபாது, உச்சநீதிமன்றம் பொதுக்குழுவைத்தான் செல்லும் என்று தீர்ப்பில் குறிப்பிட்டுள்ளது. ஒருங்கிணைப்பாளர் பதவிகள் பற்றியோ, பொதுக்குழுவின் தீர்மானங்கள் பற்றியோ சிவில் கோர்ட்டில் நடந்துவரும் வழக்கில் பார்த்துக்கொள்ளலாம் என்றுதான் தீர்ப்பு வழஙகியுள்ளது. இவ்வளவு நாள் மலர்பாதையில் நடந்து சென்ற ஓ. பன்னீர்செல்வம் இனி சிங்கப்பாதையில் செல்வார் என்று தெரிவித்தார்.

இந்த நிகழ்ச்சியில் காரைக்குடி நகர செயலாளர் பாலா, மாநில இளைஞரணி துணை செயலாளர் திருஞானம், சாக்கோட்டை மேற்கு ஒன்றிய செயலாலர் மாத்தூர் பாண்டி, வழக்கறிஞர் பிரிவு இணை செயலாளர் ராமநாதன், மாவட்ட பாசறை செயலாளர் அங்குராஜ், அம்மா பேரவை ரவி, நகர துணை செயலாளர் கணேசன், நகர பொருளாளர் சதீஷ்குமார், சிறுபான்மை பிரிவு சகுபர் ஜாவித், சேக், மாவட்ட ஐ.டி. விங்க் இணை செயலாளர் கார்த்தீஸ்வரன், மகளிரணி காளீஸ்வரி, ரேவதி, ராமாமிர்தம், மாலதி, பத்மா, தேவி உமையாள், இளைஞரணி பாலமுருகன், பாசறை கார்த்திக் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

X

Maalai Malar
www.maalaimalar.com