என் மலர்
சேலம்
- அணையில் கடல்போல் தண்ணீர் தேங்கி நிற்கிறது.
- விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்து உள்ளனர்.
மேட்டூர்:
கர்நாடகாவில் இந்தாண்டு பெய்த பலத்த மழை காரணமாக அங்குள்ள அணைகள் நிரம்பி உபரிநீர் தமிழகத்துக்கு காவிரி ஆற்றில் திறக்கப்பட்டது. அதிகபட்சமாக 1.25 லட்சம் கனஅடி வரை தண்ணீர் திறக்கப்பட்டதால் காவிரி ஆறு வெள்ளக்காடாக மாறியது. இதன் காரணமாக மேட்டூர் அணை இந்தாண்டில் முதல் முறையாக கடந்த ஜூன் மாதம் 29-ந் தேதி நிரம்பியது.
பின்னர் நீர்வரத்து குறைவதும், அதிகரிப்பதுமாக இருந்தது. மழையின் காரணமாக உபரிநீர் அதிகரித்ததால் மேட்டூர் அணை கடந்த ஜூலை மாதம் 5-ந்தேதி 2-வது முறையாக நிரம்பியது. பின்னர் ஜூலை 20-ந்தேதி 3-வது முறையாக நிரம்பியது. தொடர்ந்து ஜூலை மாதம் 25-ந் தேதி 4-வது முறையாக நிரம்பியது. பின்னர் கடந்த ஆகஸ்ட் மாதம் 20-ந்தேதி மேட்டூர் அணை 5-வது முறையாக நிரம்பியது. தொடர்ந்து செப்டம்பர் 2-ந்தேதி 6-வது முறையாக மேட்டூர் அணை நிரம்பியது.
பின்னர் நீர்பிடிப்பு பகுதிகளில் மழை குறைந்ததால் நீர்வரத்து குறைந்து காணப்பட்டது. நீர்வரத்தை விட மேட்டூர் அணையில் இருந்து காவிரி டெல்டா பாசனம் மற்றும் கிழக்கு, மேற்கு கால்வாய் பாசனத்துக்கு தண்ணீர் அதிகளவில் திறக்கப்பட்டதால் அணையின் நீர்மட்டம் 111 அடியாக குறைந்தது.
இதற்கிடையே காவிரி நீர்பிடிப்பு பகுதிகளில் வடகிழக்கு பருவமழை தீவிரம் அடைந்துள்ளதால் கடந்த சில நாட்களாக மேட்டூர் அணைக்கு நீர்வரத்து அதிகரித்து காணப்படுகிறது. அதேநேரம் காவிரி டெல்டா மாவட்டங்களில் மழை பெய்து வருவதால் அங்கு தண்ணீர் தேவை குறைந்தது. இதனால் அணைக்கு வரும் தண்ணீரை விட குறைந்த அளவில் பாசனத்துக்கு தண்ணீர் திறக்கப்பட்டது. இதன் காரணமாக மேட்டூர் அணை நீர்மட்டம் மெதுவாக உயர்ந்து வந்தது.
இந்த நிலையில் நீர்வரத்து அதிகரிப்பின் காரணமாக மேட்டூர் அணை நடப்பாண்டில் 7-வது முறையாக நேற்று மதியம் 2 மணியளவில் நிரம்பியது. இதனால் அணையில் கடல்போல் தண்ணீர் தேங்கி நிற்கிறது.
இன்று காலை நிலவரப்படி மேட்டூர் அணைக்கு வினாடிக்கு 30ஆயிரத்து 500 கனஅடி தண்ணீர் வந்து கொண்டிருந்தது. தற்போது அணையில் இருந்து நீர்மின் நிலையம் மற்றும் சுரங்க மின்நிலையம் வழியாக வினாடிக்கு 22ஆயிரம் கனஅடியும், 16 கண் மதகு வழியாக வினாடிக்கு 7700 கனஅடி தண்ணீரும் திறக்கப்பட்டு வருகிறது. மேலும் கிழக்கு, மேற்கு கால்வாய் பாசனத்துக்கு வினாடிக்கு 500 கனஅடி தண்ணீர் திறக்கப்பட்டு வருகிறது. அணையில் தற்போது 93.47 டி.எம்.சி. தண்ணீர் இருப்பு உள்ளது.

மேட்டூர் அணை கட்டி 92 ஆண்டுகள் ஆகிறது. இந்த 92 ஆண்டுகால வரலாற்றில் இதுவரை ஒரே ஆண்டில் அணையின் நீர்மட்டம் 7 முறை நிரம்பியது இந்த ஆண்டுதான் என்பது குறிப்பிடத்தக்கது. இதனால் மேட்டூர் அணை வரலாற்று சாதனை படைத்து உள்ளது. இதனால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்து உள்ளனர்.
- அணையில் இருந்து காவிரி டெல்டா பாசனத்துக்கு வினாடிக்கு 1000 கனஅடி தண்ணீர் திறக்கப்பட்டு வருகிறது.
- தற்போது அணையில் 91.88 டி.எம்.சி. தண்ணீர் இருப்பு உள்ளது.
மேட்டூர்:
காவிரி நீர்ப்பிடிப்பு பகுதிகளில் பெய்த மழையின் காரணமாக கர்நாடக அணைகளில் இருந்து உபரிநீர் அதிகளவில் காவிரி ஆற்றில் தமிழகத்துக்கு திறக்கப்பட்டது. இதன் காரணமாக இந்தாண்டில் மேட்டூர் அணை 6 முறை நிரம்பியது.
இதற்கிடையே மழை குறைந்ததால் அணைக்கு வரும் தண்ணீரும் குறைந்து காணப்பட்டது. அணைக்கு வரும் நீர்வரத்தை விட காவிரி டெல்டா பாசனம் மற்றும் கிழக்கு, மேற்கு கால்வாய் பாசனத்துக்கு தண்ணீர் அதிகளவில் திறக்கப்பட்டதால் மேட்டூர் அணை நீர்மட்டம் குறைந்து 111 அடியானது.
தற்போது வடகிழக்கு பருவமழை தொடங்கியதால் கடந்த சில நாட்களாக நீரவரத்து அதிகரித்து மேட்டூர் அணையின் நீர்மட்டம் மீண்டும் உயர்ந்து வருகிறது.
இன்று காலை நிலவரப்படி அணையின் நீர்மட்டம் 119 அடியை எட்டியது. அணைக்கு நேற்று வினாடிக்கு 9 ஆயிரத்து 26 கனஅடி தண்ணீர் வந்து கொண்டு இருந்த நிலையில் அது இன்று காலை முதல் வினாடிக்கு 10 ஆயிரத்து 374 கனஅடியாக அதிகரித்து காணப்பட்டது. அணையில் இருந்து காவிரி டெல்டா பாசனத்துக்கு வினாடிக்கு 1000 கனஅடி தண்ணீர் திறக்கப்பட்டு வருகிறது. கிழக்கு, மேற்கு கால்வாய் பாசனத்துக்கு வினாடிக்கு 500 கனஅடி தண்ணீரும் வெளியேற்றப்பட்டு வருகிறது. தற்போது அணையில் 91.88 டி.எம்.சி. தண்ணீர் இருப்பு உள்ளது.
- இன்று காலை நிலவரப்படி அணையின் நீர்மட்டம் 117.73 அடியாக இருந்தது.
- மழை நின்றதால் அணைக்கு வரும் தண்ணீரின் அளவும் குறைந்து வருகிறது.
மேட்டூர்:
காவிரி நீர்ப்பிடிப்பு பகுதிகளில் பெய்து வரும் மழையின் காரணமாக கடந்த சில நாட்களாக மேட்டூர் அணைக்கு நீர்வரத்து அதிகரித்து காணப்பட்டது. இதன் காரணமாக அணையின் நீர்மட்டமும் வேகமாக உயர்ந்து வந்தது.
இந்த நிலையில் மழை நின்றதால் அணைக்கு வரும் தண்ணீரின் அளவும் குறைந்து வருகிறது. இன்று காலை நிலவரப்படி அணையின் நீர்மட்டம் 117.73 அடியாக இருந்தது. அணைக்கு நேற்று வினாடிக்கு 23 ஆயிரத்து 648 கனஅடி தண்ணீர் வந்து கொண்டு இருந்த நிலையில் அது இன்று காலை முதல் வினாடிக்கு 17 ஆயிரத்து 584 கனஅடியாக குறைந்து வந்து கொண்டு இருந்தது.
அணையில் இருந்து காவிரி டெல்டா பாசனத்துக்கு வினாடிக்கு 12ஆயிரம் கனஅடியாக திறந்து விடப்பட்ட தண்ணீர் தற்போது வினாடிக்கு 10 ஆயிரம் கனஅடியாக குறைக்கப்பட்டது. மேலும் கிழக்கு, மேற்கு கால்வாய் பாசனத்துக்கு தொடர்ந்து வினாடிக்கு 500 கனஅடி தண்ணீர் திறக்கப்பட்டு வருகிறது. தற்போது அணையில் 89.89 டி.எம்.சி. தண்ணீர் இருப்பு உள்ளது.
- காவிரி நீர்ப்பிடிப்பு பகுதிகளில் பெய்த மழையின் காரணமாக கடந்த சில நாட்களாக மேட்டூர் அணைக்கு நீர்வரத்து அதிகரித்து காணப்படுகிறது.
- அணையில் தற்போது 89.47 டி.எம்.சி. தண்ணீர் இருப்பு உள்ளது.
மேட்டூர்:
மேட்டூர் அணைக்கு வந்த நீர்வரத்தை விட அதிகளவில் பாசனத்துக்கு தண்ணீர் திறந்து விடப்பட்டு வந்ததால் அணையின் நீர்மட்டம் 111 அடியாக குறைந்து காணப்பட்டது.
இந்த நிலையில் கர்நாடகாவில் உள்ள காவிரி நீர்ப்பிடிப்பு பகுதிகளில் பெய்த மழையின் காரணமாக கடந்த சில நாட்களாக மேட்டூர் அணைக்கு நீர்வரத்து அதிகரித்து காணப்படுகிறது. இதன் காரணமாக அணையின் நீர்மட்டமும் உயர்ந்து காணப்படுகிறது. இன்று காலை நிலவரப்படி அணையின் நீர்மட்டம் 117.46 அடியாக உயர்ந்து காணப்பட்டது. அணைக்கு நேற்று வினாடிக்கு 42 ஆயிரத்து 167 கனஅடி தண்ணீர் வந்து கொண்டு இருந்த நிலையில் அது இன்று காலை வினாடிக்கு 23 ஆயிரத்து 648 கனஅடியாக குறைந்து காணப்பட்டது.
அணையில் இருந்து காவிரி டெல்டா பாசனத்துக்கு வினாடிக்கு 12 ஆயிரம் கனஅடியும், கிழக்கு, மேற்கு கால்வாய் பாசனத்துக்கு வினாடிக்கு 500 கனஅடி தண்ணீரும் வெளியேற்றப்பட்டு வருகிறது. அணையில் தற்போது 89.47 டி.எம்.சி. தண்ணீர் இருப்பு உள்ளது.
- சேலம் விமான நிலையத்தில் இருந்து சென்னை, ஐதராபாத், பெங்களூரு ஆகிய நகரங்களுக்கு பயணிகள் விமான சேவை இயக்கப்பட்டு வருகிறது.
- ஏற்கனவே உள்ள நேரத்தின்படி ஐதராபாத் மற்றும் பெங்களூரு நகரங்களுக்கு வழக்கம் போல விமானங்கள் இயக்கப்படும்.
சேலம்:
சேலம் விமான நிலையத்தில் இருந்து சென்னை, ஐதராபாத் , பெங்களூரு ஆகிய நகரங்களுக்கு பயணிகள் விமான சேவை இயக்கப்பட்டு வருகிறது. வருகிற 26-ந்தேதி முதல் குளிர்கால அட்டவணைபடி விமானங்களை இயக்க உள்ளனர்.
அதில் ஏற்கனவே உள்ள நேரத்தின்படி ஐதராபாத் மற்றும் பெங்களூரு நகரங்களுக்கு வழக்கம் போல விமானங்கள் இயக்கப்படும். சேலம்-சென்னை விமான நேரம் மட்டும் மாற்றப்பட்டுள்ளது. அதன்படி வருகிற 26-ந் தேதி முதல் மதியம் 2.40 மணிக்கு சென்னையில் இருந்து புறப்பட்டு 3.20 மணிக்கு சேலம் வந்தடையும். மீண்டும் 3.40 மணிக்கு சேலத்தில் இருந்து புறப்பட்டு 4.55 மணிக்கு சென்னை சென்றடையும். இந்த தகவலை இண்டிகோ விமான நிறுவனம் தெரிவித்துள்ளது. தற்போது வரை சேலத்தில் இருந்து மாலை 5 மணிக்கு விமானம் புறப்பட்டு சென்னைக்கு செல்கிறது.
- தலைவாசலை அடுத்த நத்தக்கரையில் 2 மணி நேரத்திற்கும் மேலாக கன மழை கொட்டியது.
- பள்ளி, கல்லூரி செல்லும் மாணவ-மாணவிகள் மற்றும் தொழிலாளர்கள் கடும் குளிரால் அவதிப்பட்டனர்.
சேலம்:
சேலம் மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக மழை பெய்து வருகிறது. அதன் தொடர்ச்சியாக மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் நேற்றும் கனமழை கொட்டியது.
குறிப்பாக தலைவாசலை அடுத்த நத்தக்கரையில் 2 மணி நேரத்திற்கும் மேலாக கன மழை கொட்டியது. இந்த மழையால் சாலைகள், ஓடைகளில் தண்ணீர் பெருக்கெடுத்து ஒடியது. வயல்வெளிகள் மற்றும் தாழ்வான பகுதிகளில் தண்ணீர் தேங்கி வெள்ளக்காடாக காட்சி அளித்தது.
இதே போல வீரகனூர், ஏற்காடு உள்பட மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் கன மழை கொட்டியது. ஏற்காட்டில் நேற்று மாலை தொடங்கிய மழை நள்ளிரவு வரை சாரல் மழையாக பெய்தது. மழையை தொடர்ந்து ஏற்காட்டில் கடும் குளிர் மற்றும் பனி மூட்டம் நிலவி வருகிறது. இதனால் காலை நேரத்தில் பள்ளி, கல்லூரி செல்லும் மாணவ-மாணவிகள் மற்றும் தொழிலாளர்கள் கடும் குளிரால் அவதிப்பட்டனர்.
சேலம் மாநகரில் நேற்றிரவு 10 மணியளவில் தொடங்கிய மழை தூறலுடன் நின்று விட்டது. மழையை தொடர்ந்து மாவட்டம் முழுவதும் குளிர்ந்த காற்று வீசியது.
- காலை 9 மணி முதல் மதியம் 2 மணி வரை மின்தடை செய்யப்படும்.
- வெள்ளக்கல்பட்டி, பாரதி நகர், சீனிவாச நகர், ரெட்டியூர்,
சேலம்:
கருப்பூர் துணை மின் நிலையத்தில் பராமரிப்பு பணிகள் நடைபெறுவதால் நாளை (14-ந் தேதி) காலை 9 மணி முதல் மதியம் 2 மணி வரை கருப்பூர், கரும்பாலை, தேக்கம்பட்டி, செங்கரடு, மேட்டுபதி, புதூர், சங்கீதப்பட்டி, வெள்ளாளப்பட்டி, காமலாபுரம், எட்டிகுட்டப்பட்டி, கருத்தானூர், சக்கரசெட்டிபட்டி, செக்காரப்பட்டி, புளியம்பட்டி, நாராயணம்பாளையம், குள்ளமநாயக்கன்பட்டி,
ஆணைகவுண்டம்பட்டி, ஹவுசிங் போர்டு, மாங்குப்பை, சாமிநாயக்கன்பட்டி, செல்லப்பிள்ளை குட்டை, வெத்தலைக்காரனூர், கோட்டகவுண்டம்பட்டி, பாகல்பட்டி, மாமாங்கம், சூரமங்கலம், ஜங்ஷன், புதிய பஸ் நிலையம், 5 ரோடு, குரங்குசாவடி, நரசோதிப்பட்டி, வெள்ளக்கல்பட்டி, பாரதி நகர், சீனிவாச நகர், ரெட்டியூர், கே.எஸ்.வி. நகர், சிவாய நகர் மேற்கு பகுதி மற்றும சொர்ணபுரி ரவுண்டானா ஆகிய பகுதிகளில் மின் விநியோகம் இருக்காது என செயற்பொறியாளர் ராஜவேலு தெரிவித்துள்ளார்.
- ஸ்ரீ சென்றாய பெருமாள் திருக்கோயிலில் சுவாமி தரிசனம் செய்தார்.
- எடப்பாடி பழனிசாமிக்கு பரிவட்டம் கட்டி முதல் மரியாதை வழங்கப்பட்டது.
தமிழகத்தில் சட்டமன்ற தேர்தல் அடுத்த ஆண்டு நடைபெறும் நிலையில், அதிமுக சார்பில் மக்களை காப்போம் தமிழகத்தை மீட்போம் என்கிற பிரசார பயணத்தை அக்கட்சியின் பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி நடத்தி வருகிறார்.
இந்நிலையில், சேலம் மாவட்டம் எடப்பாடி சட்டமன்றத் தொகுதிக்கு உட்பட்ட நங்கவள்ளி ஒன்றியத்தில் உள்ள ஸ்ரீ சென்றாய பெருமாள் திருக்கோயிலில் சுவாமி தரிசனம் செய்தார். அவருக்கு பரிவட்டம் கட்டி முதல் மரியாதை வழங்கப்பட்டது. பின்னர், இபிஎஸ் பொதுமக்களுக்கு அன்னதானம் வழங்கினார்.
தொடர்ந்து, சூரப்பள்ளி அருகே, நொரச்சிவளவு பகுதியில் உள்ள ஸ்ரீ காளியம்மன் திருக்கோயிலில் சுவாமி தரிசனம் செய்தார். அப்போது, எடப்பாடி பழனிசாமிக்கு பரிவட்டம் கட்டி முதல் மரியாதை வழங்கப்பட்டது.
இந்நிகழ்வில், அதிமுக நிர்வாகிகள் பலர் கலந்துக் கொண்டனர்.
- அணைக்கு நீர்வரத்து வினாடிக்கு 59 ஆயிரத்து 123 கனஅடியாக அதிகரித்து காணப்படுகிறது.
- தற்போது அணையில் 85.99 டி.எம்.சி. தண்ணீர் இருப்பு உள்ளது.
மேட்டூர்:
கர்நாடகாவில் உள்ள காவிரி நீர்ப்பிடிப்பு பகுதிகளில் பெய்யும் மழையை பொறுத்து மேட்டூர் அணைக்கு நீர்வரத்து அதிகரித்தும், குறைந்தும் வந்து கொண்டு இருக்கிறது. இந்த நிலையில் தென்மேற்கு பருவமழை முன்கூட்டிய பெய்ய தொடங்கியதால் கர்நாடகாவில் உள்ள அணைகளுக்கு நீர்வரத்து அதிகரித்து அணைகள் நிரம்பியது. இதையடுத்து உபரிநீர் தமிழகத்துக்கு காவிரி ஆற்றில் திறந்து விடப்பட்டது. இதன் காரணமாக மேட்டூர் அணை இந்தாண்டில் 6-முறை நிரம்பியது.
இதற்கிடையே நீர்ப்பிடிப்பு பகுதிகளில் மழை நின்றதால் அணைக்கு நீர்வரத்தும் குறைந்தது. ஆனாலும் நீர்வரத்தை விட அதிகளவில் காவிரி டெல்டா பாசனம் மற்றும் கிழக்கு, மேற்கு கால்வாய் பாசனத்துக்கு தண்ணீர் திறந்து விடப்பட்டு வந்ததால் அணையின் நீர்மட்டம் 111 அடியாக குறைந்து காணப்பட்டது.
இந்த நிலையில் கர்நாடகாவில் தற்போது மீண்டும் மழை தீவிரம் அடைந்து உள்ளதால் அங்குள்ள அணைகளுக்கு நீர்வரத்து அதிகரித்து உபரிநீர் அப்படியே தமிழகத்துக்கு வெளியேற்றப்பட்டு வருகிறது. இதன் காரணமாக நேற்று காலை முதல் மேட்டூர் அணைக்கு நீர்வரத்து அதிகரித்து வருகிறது.
இன்று காலை மேட்டூர் அணையின் நீர்மட்டம் 115.18 அடியாக உயர்ந்து காணப்பட்டது. அணைக்கு நீர்வரத்து வினாடிக்கு 59 ஆயிரத்து 123 கனஅடியாக அதிகரித்து காணப்படுகிறது. அணையில் இருந்து காவிரி டெல்டா பாசனத்துக்கு வினாடிக்கு 12 ஆயிரம் கனஅடி தண்ணீரும், கிழக்கு, மேற்கு கால்வாய் பாசனத்துக்கு வினாடிக்கு 500 கனஅடி தண்ணீரும் வெளியேற்றப்பட்டு வருகிறது. அணைக்கு வரும் தண்ணீரை விட குறைந்த அளவிலேயே தண்ணீர் வெளியேற்றப்பட்டு வருவதால் மேட்டூர் அணையின் நீர்மட்டம் வேகமாக உயர்ந்து வருகிறது. கடந்த 2 நாட்களில் மட்டும் அணையின் நீர்மட்டம் 4 அடி உயர்ந்து உள்ளது குறிப்பிடத்தக்கது. தற்போது அணையில் 85.99 டி.எம்.சி. தண்ணீர் இருப்பு உள்ளது.
- கர்நாடகாவில் மீண்டும் மழை பெய்து வருவதால் மேட்டூர் அணைக்கு இன்று காலை முதல் நீர்வரத்து அதிகரித்து காணப்படுகிறது.
- தற்போது மேட்டூர் அணையில் 81.98 டி.எம்.சி.தண்ணீர் இருப்பு உள்ளது.
மேட்டூர்:
கர்நாடகாவில் உள்ள காவிரி நீர்ப்பிடிப்பு பகுதிகளில் பெய்த மழையின் காரணமாக அங்குள்ள அணைகள் வேகமாக நிரம்பியது.
இதையடுத்து உபரிநீர் தமிழக காவிரி ஆற்றில் அதிகளவில் திறக்கப்பட்டு வந்தது. இதன் காரணமாக இந்தாண்டில் மேட்டூர் அணை 6 முறை நிரம்பியது.
இதன் காரணமாக மேட்டூர் அணையில் இருந்து 16 கண் மதகு வழியாக உபரிநீர் திறக்கப்பட்டு காவிரி ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. இதற்கிடையே நீர்ப்பிடிப்பு பகுதிகளில் மழை குறைந்ததால் அணைக்கு நீர்வரத்தும் குறைந்து காணப்பட்டது.
அணைக்கு வரும் நீர்வரத்து குறைந்தாலும் அணையில் இருந்து காவிரி டெல்டா பாசனத்துக்கு தொடர்ந்து அதிகளவில் தண்ணீர் திறக்கப்பட்டு வருகிறது. இதன் காரணமாக மேட்டூர் அணையின் நீர்மட்டம் 111 அடியாக குறைந்தது.
இதற்கிடையே தற்போது கர்நாடகாவில் மீண்டும் மழை பெய்து வருவதால் மேட்டூர் அணைக்கு இன்று காலை முதல் நீர்வரத்து அதிகரித்து காணப்படுகிறது. நேற்று வினாடிக்கு 6 ஆயிரத்து 33 கனஅடி தண்ணீர் வந்து கொண்டு இருந்த நிலையில் அது இன்று வினாடிக்கு 29 ஆயிரத்து 540 கனஅடியாக அதிகரித்து காணப்படுகிறது.
இதன் காரணமாக மேட்டூர் அணையின் நீர்மட்டம் 112.48 அடியாக உயர்ந்து காணப்பட்டது. அணையில் இருந்து காவிரி டெல்டா பாசனத்துக்கு வினாடிக்கு 12 ஆயிரம் கனஅடியும், கிழக்கு,மேற்கு கால்வாய் பாசனத்துக்கு வினாடிக்கு 500 கனஅடி தண்ணீரும் திறந்து விடப்பட்டு வருகிறது. தற்போது அணையில் 81.98 டி.எம்.சி.தண்ணீர் இருப்பு உள்ளது.
- காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மின்தடை செய்யப்படும்
- அரியாம்பாளையம், தப்பகுட்டை, பெருமாகவுண்டம்பட்டி, காந்தி நகர்
சேலம்:
சேலம் மாவட்டம் வேம்படிதாளம் துணைமின் நிலையத்தில் பராமரிப்பு பணிகள் மேற்ெகாள்வதால் நாளை (7-ந் தேதி) காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை இளம்பிள்ளை, சித்தர்கோவில், இடங்கணசாலை, கே.கே.நகர், வேம்படிதாளம்,
காக்காபாளையம், மகுடஞ்சாவடி, சீரகாபாடி, பொதியன் காடு, கோத்துப்பாலிக்காடு, அரியாம்பாளையம், தப்பகுட்டை, பெருமாகவுண்டம்பட்டி, காந்தி நகர் ஆகிய பகுதிகளில் மின்சாரம் நிறுத்தப்படும் என செயற்பொறியாளர் அன்பரசன் தெரிவித்துள்ளார்.
- தமிழகத்தின் தென்மேற்கு பருவமழை ஜூன் மாதம் 1-ந் தேதி தொடங்கி கடந்த 30-ந் தேதியுடன் நிறைவு பெற்றது.
- சேலம் மாவட்டத்தில் தென்மேற்கு பருவமழையின் இயல்பான அளவு 406.4 மி.மீ. ஆகும்.
சேலம்:
சேலம் மாவட்டத்தில் விவசாயம் முக்கிய தொழிலாக உள்ளதால் 70 சதவீத மக்கள் விவசாயத்தை நம்பியே உள்ளனர். இங்கு மேட்டூர் அணை இருந்தாலும் நேரடி பாசனம் குறைந்த அளவிலேயே உள்ளது. தற்போது சரபங்கா நீரேற்று திட்டம் மூலம் சேலம் மேற்கு மாவட்ட பகுதிகளில் ஒரு பகுதி பாசன வசதி பெற்றுள்ளது. ஆனாலும் ஓமலூர், காடையாம்பட்டி மற்றும் சேலம் மாவட்டத்தின் கிழக்கு பகுதிகளுக்கு மேட்டூர் அணை தண்ணீர் செல்லாததால் இந்த பகுதிகள் வானம் பார்த்த பூமியாகவே உள்ளது.
இந்தநிலையில் தமிழகத்தின் தென்மேற்கு பருவமழை ஜூன் மாதம் 1-ந் தேதி தொடங்கி கடந்த 30-ந் தேதியுடன் நிறைவு பெற்றது. விரைவில் வடகிழக்கு பருவமழை தொடங்க உள்ளதால் அதனை எதிர்பார்த்து விவசாயிகள் உள்ளனர்.
சேலம் மாவட்டத்தில் தென்மேற்கு பருவமழையின் இயல்பான அளவு 406.4 மி.மீ. ஆகும். ஆனால் நடப்பாண்டில் 339.2 மி.மீ. மழையே பதிவாகி உள்ளது. இது வழக்கத்தை விட 67.2 மி.மீ. குறைவாகும். இதனால் நடப்பாண்டில் வழக்கத்தை விட 17 சதவீதம் தென்மேற்கு பருவமழை குறைந்துள்ளது குறிப்பிடத்தக்கது.
இதனால் நீர் நிலைகளில் வழக்கத்தை விட குறைந்த அளவே தண்ணீர் இருப்பு உள்ளதாக விவசாயிகள் தெரிவித்தனர். ஆனாலும் விரைவில் வடகிழக்கு பருவமழை தொடங்கும் என்பதால் அந்த மழை கூடுதலாக பெய்து தங்களுக்கு கை கொடுக்கும் என்ற நம்பிக்கையில் விவசாயிகள் உள்ளனர்.






