என் மலர்tooltip icon

    சேலம்

    • விவசாய நிலத்திற்கு அருகில் அரசுக்கு சொந்த மான 2 சென்ட் நிலம் உள்ளது.
    • பொது மக்கள் தேவைக்காக குடிநீர் தொட்டி அமைக்கும் பணி நடைபெற்று வருகிறது.

    தாரமங்கலம்:

    சேலம் மாவட்டம் தாரமங்கலம் அருகிலுள்ள ராமிரெட்டிபட்டி கிராமம் ஆயாமரம் பகுதியை சேர்ந்த வர் சின்னத்தம்பி (வயது 54). இவரது விவசாய நிலத்திற்கு அருகில் அரசுக்கு சொந்த மான 2 சென்ட் நிலம் உள்ளது.

    இந்த நிலத்தில் தற்போது ஊராட்சி ஒன்றிய ஆணையாளரின் உத்தரவின் பேரில் பொது மக்கள் தேவைக்காக குடிநீர் தொட்டி அமைக்கும் பணி நடைபெற்று வருகிறது.

    இந்த நிலையில் அந்த இடத்தில் குடிநீர் தொட்டி அமைக்க கூடாது என்று கூறி சின்னத்தம்பி குடும்பத்தி னர் கம்பி அமைத்து விட்டனர். இதற்கு எதிர்ப்பு தெரிவித்து, அப்பகுதியை சேர்ந்த பொதுமக்கள் 100-க்கும் மேற்பட்டோர் ஒன்று திரண்டு வந்து நேற்று தாரமங்கலத்தில் இருந்து ஜலகண்டபுரம் செல்லும் சாலையில் ஆயாமரம் பகுதியில் அமர்ந்து மறியல் போராட்டத்தில் ஈடுப்பட்டனர்.

    அப்போது இதுபற்றி தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த தார மங்கலம் போலீசார் மற்றும் ஊராட்சி ஒன்றிய ஆணை யாளர்கள் விஜயலட்சுமி, ரவிசந்திரன் ஆகியோர் பொதுமக்களிடம் பேச்சு வார்த்தை நடத்தினர்.பின்னர் பொதுமக்கள் கலைந்து செல்ல மறுப்பு தெரிவித்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.இதனால் மறியலில் ஈடுபட்ட 45 பேரை போலீசார் கைது செய்து தாரமங்கலத்தில் உள்ள திருமண மண்டபத்தில் அடைத்தனர்.

    அதனை தொடர்ந்து அரசுக்கு சொந்தமான நிலத்தை ஆக்கிரமித்து கம்பி வேலி அமைத்ததால் ஆணையாளர் விஜயலட்சுமி கொடுத்த புகாரின் பேரில் சின்னத்தம்பி,விஜயா, கார்த்தி,குருநாதசாமி, பெரியம்மாள்,ராஜி, தங்கவேல்,சரோஜா ஆகியோர் மீது வழக்கு பதிவு செய்து போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

    • கடந்த 22 நாட்களாக 120 அடியாக இருந்த மேட்டூர் அணை நீர்மட்டம், இன்று காலை 119. 7 3 அடியாக சரிந்தது.
    • இனி வரும் நாட்களில் நீர்வரத்து மேலும் சரியும் பட்சத்தில் அணை நீர்மட்டம் வேகமாக சரிய வாய்ப்புள்ளது.

    மேட்டூர்:

    காவிரி நீர்ப்பிடிப்பு பகுதிகளில் மழை குறைந்ததால் மேட்டூர் அணைக்கு நீர்வரத்து படிப்படியாக சரிந்து வருகிறது. நேற்று வினாடிக்கு 5,400 கன அடியாக இருந்த நீர்வரத்து, இன்று காலை மேலும் சரிந்து வினாடிக்கு 5,067 கன அடியாக வந்து கொண்டிருக்கிறது.

    அணையில் இருந்து காவிரியில் 12,000 கன அடி தண்ணீரும், கால்வாயில் 400 கன அடி தண்ணீரும் என மொத்தம் 12,400 கன அடி தண்ணீர் திறந்து விடப்பட்டு உள்ளது. அணைக்கு வரும் தண்ணீரை விட அணையில் இருந்து கூடுதல் தண்ணீர் திறந்து விடப்படுவதால் அணை நீர்மட்டம் மீண்டும் சரிய தொடங்கியுள்ளது.

    கடந்த 22 நாட்களாக 120 அடியாக இருந்த மேட்டூர் அணை நீர்மட்டம், இன்று காலை 119. 7 3 அடியாக சரிந்தது. இனி வரும் நாட்களில் நீர்வரத்து மேலும் சரியும் பட்சத்தில் அணை நீர்மட்டம் வேகமாக சரிய வாய்ப்புள்ளது.

    • தி.மு.க அரசு பொறுப்பேற்றதும் போக்குவரத்து கழக ஊழியர்கள், ஓய்வூதியர்கள் உட்பட அனைவருக்கும் அவர்களது கோரிக்கைகள் நிறைவேற்றப்படும் என வாக்குறுதி அளித்தது. ஆனால் தற்போது வரை ஒய்வூதிய பண பலன் உட்பட பஞ்சப்படி என எந்த கோரிக்கையும் நிறைவேற்றப்படவில்லை. இதனால் போக்குவரத்து கழக ஓய்வூதியர்கள் கடும் அதிருப்தியில் உள்ளனர்.
    • இதை அடுத்து ஆத்திரமடைந்த போக்குவரத்து ஓய்வூதியர்கள் இன்று காலை சேலம் ராமகிருஷ்ணா ரோட்டில் உள்ள தலைமை அலுவலகம் முன்பு சுமார் 700-க்கும் மேற்பட்டோர் திரண்டனர்.

    சேலம்:

    சேலம் கோட்ட போக்குவரத்து கழக ஓய்வூதியர்கள், ஓய்வூதிய பலன் கிடைக்கவில்லை என்று கூறி கடந்த சில ஆண்டுகளாக போராடி வருகிறார்கள். ஆனால் இதுவரை அவர்களுக்கு ஓய்வூதிய பலன் கிடைக்கவில்லை.

    தி.மு.க அரசு பொறுப்பேற்றதும் போக்குவரத்து கழக ஊழியர்கள், ஓய்வூதியர்கள் உட்பட அனைவருக்கும் அவர்களது கோரிக்கைகள் நிறைவேற்றப்படும் என வாக்குறுதி அளித்தது. ஆனால் தற்போது வரை ஒய்வூதிய பண பலன் உட்பட பஞ்சப்படி என எந்த கோரிக்கையும் நிறைவேற்றப்படவில்லை. இதனால் போக்குவரத்து கழக ஓய்வூதியர்கள் கடும் அதிருப்தியில் உள்ளனர்.

    இதை அடுத்து ஆத்திரமடைந்த போக்குவரத்து ஓய்வூதியர்கள் இன்று காலை சேலம் ராமகிருஷ்ணா ரோட்டில் உள்ள தலைமை அலுவலகம் முன்பு சுமார் 700-க்கும் மேற்பட்டோர் திரண்டனர். இதையடுத்து சாலையில் அமர்ந்து அவர்கள் தங்களுக்கு ஓய்வூதிய பலன்கள் கிடைக்க வேண்டும் என்று தமிழக அரசை கேட்டு கண்டன கோஷங்கள் எழுப்பினர். இதனால் அங்கு பெரும் பரபரப்பு நிலவியது.

    சுமார் அரை மணி நேரத்துக்கு மேலாக நடந்த போராட்டத்தில் நீண்ட தூரம் வாகனங்கள் அணிவகுத்து நின்றன. இதை அடுத்து போக்குவரத்து மாற்றி விடப்பட்டது. இதை அடுத்து மறியல் போராட்டத்தில் ஈடுபட்ட 600 பேரை போலீசார் கைது செய்தனர். இவர்கள் அண்ணாபூங்கா அருகே உள்ள 2 திருமண மண்டபத்தில் அடைக்கப்பட்டு உள்ளனர்.

    இதுகுறித்து போக்குவரத்து ஊழியர்கள் கூறுகையில், போக்குவரத்து கழக ஓய்வு ஊதியர்களுக்கு 7 ஆண்டுகளாக எந்த பலனும் கிடைக்காதால் நாங்கள் வறுமையில் வாடி வருகிறோம். எனவே எங்கள் கோரிக்கைகள் நிறைவேற்றபடவில்லை எனில் விரைவில் குடும்பத்துடன் டெப்போ முன்பு அமர்ந்து போராட்டத்தில் ஈடுபடுவோம்.

    எந்த அரசு வந்தாலும், அரசு ஊழியர்கள் கோரிக்கைகள் நிறைவேற்றப்படுகிறது. ஆனால் போக்குவரத்து கழக ஊழியர்களுக்கும், ஓய்வூதியர்களுக்கும் எந்த கோரிக்கைகளும் நிறைவேற்றப்படவில்லை. இதனை நிறைவேற்றும் வரை எங்கள் போராட்டம் தொடரும் என்றனர்.

    • செவ்வாய்பேட்டை லீபஜார் ரோட்டில், பழைய வணிக வளாகம் அருகே தனது மோட்டார் சைக்கிளில் சென்று கொண்டிருந்தார்.
    • அப்போது அங்கு வந்த சில நபர்கள் மதிவாணனை திடீரென வழிமறித்து, கத்தியைக் காட்டி மிரட்டி, தாக்கி, அவரிடமிருந்து 3 பவுன் செயின், 1 பவுன் மோதிரம், ரூ.5500 ஆகியவற்றை பறித்துக் கொண்டு அங்கிருந்து தப்பி ஓடி விட்டனர்.

    அன்னதானப்பட்டி:

    சேலம் செவ்வாய்பேட்டை, சந்தைப்பேட்டை மெயின் ரோடு பகுதியைச் சேர்ந்தவர் மதிவாணன் (வயது 55). சேகோ பேக்டரி உரிமையாளர்.

    இவர் நேற்று செவ்வாய்பேட்டை லீபஜார் ரோட்டில், பழைய வணிக வளாகம் அருகே தனது மோட்டார் சைக்கிளில் சென்று கொண்டிருந்தார். அப்போது அங்கு வந்த சில நபர்கள் மதிவாணனை திடீரென வழிமறித்து, கத்தியைக் காட்டி மிரட்டி, தாக்கி, அவரிடமிருந்து 3 பவுன் செயின், 1 பவுன் மோதிரம், ரூ.5500 ஆகியவற்றை பறித்துக் கொண்டு அங்கிருந்து தப்பி ஓடி விட்டனர்.

    இது குறித்த புகாரின் பேரில் அன்னதானப்பட்டி இன்ஸ்பெக்டர் சந்திரகலா மற்றும் போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தினர். அதில் வழிப்பறியில் ஈடுபட்ட, பொன்னம்மாப்பேட்டை பகுதியைச் சேர்ந்த குட்டி என்கிற பக்ருதீன் ( 45), அம்மாப்பேட்டை பகுதியைச் சேர்ந்த சதாம் உசேன் (30) ஆகிய இருவரையும் கைது செய்தனர். அவர்களிடமிருந்து செயின், மோதிரம், பணம் பறிமுதல் செய்யப்பட்டது. இதையடுத்து கோர்ட்டில் ஆஜர்படுத்தி அவர்களை சேலம் மத்திய சிறையில் அடைத்தனர்.  

    • நாள் ஒன்றுக்கு ரூ.80 கோடி முதல் ரூ.90 கோடி வரை மதுபானங்கள் விற்பனை ஆகிறது.
    • ஒவ்வொரு ஆண்டும் ஆங்கில புத்தாண்டு, பொங்கல், தீபாவளி பண்டிகையின்போது டாஸ்மாக் கடைகளில் விற்பனை அதிகரிக்கும்.

    சேலம்:

    தமிழக முழுவதும் 5000க்கும் மேற்பட்ட டாஸ்மாக் கடைகள் உள்ளன. இந்த கடைகளில் நாள் ஒன்றுக்கு ரூ.80 கோடி முதல் ரூ.90 கோடி வரை மதுபானங்கள் விற்பனை ஆகிறது. ஒவ்வொரு ஆண்டும் ஆங்கில புத்தாண்டு, பொங்கல், தீபாவளி பண்டிகையின்போது டாஸ்மாக் கடைகளில் விற்பனை அதிகரிக்கும். அதற்கு ஏற்ப டாஸ்மாக் கடைகளில் கூடுதலாக சரக்குகள் விற்பனைக்கு குவிக்கப்படும்.

    வருகிற ஞாயிற்றுக்கி–ழமை ஆங்கில புத்தாண்டு கொண்டாடப்பட உள்ளது. ஆங்கில புத்தாண்டு முதல் நாளில் டாஸ்மாக் கடைகளில் மதுபானங்களின் விற்பனை அதிகரிக்கும். இதையடுத்து டாஸ்மாக் கடைகளில் மதுபானங்கள் கூடுதலாக குவிக்கப்பட்டுள்ளது.

    சேலம் மாவட்டத்தில் 220 டாஸ்மாக் கடைகள் உள்ளன. இந்த கடைகளில் நாள் ஒன்றுக்கு ரூ.3 கோடி முதல் ரூ.4 கோடி வரை மதுபானங்கள் விற்பனை நடைபெறும். வரும் ஞாயிற்றுக்கிழமை ஆங்கில புத்தாண்டு ஒட்டி மதுபானங்கள் விற்பனை அதிகரிக்கும் என்பதால் கடந்த 2 நாட்களாக டாஸ்மாக் கடைகளில் கூடுதலாக 30 சதவீதம் மதுபானங்கள் குவிக்கப்பட்டு வருகிறது.

    ஆங்கில புத்தாண்டை தொடர்ந்து பொங்கல் பண்டிகை வருகிறது .பொங்கல் பண்டிகையின் போது 3 நாட்கள் மதுபானங்கள் விற்பனை களைகட்டும். இதையொட்டி–யும் அதிக அளவில் டாஸ்மாக் கடைகளில் இருப்பு வைக்கப்பட்டு வருகிறது.

    • தடை செய்யப்பட்ட லாட்டரி விற்பனை, கஞ்சா குட்கா மற்றும் போதை பொருட்கள் விற்பனை, ரேஷன் அரிசி கடத்துவோர், விபசார தொழிலில் ஈடுபடுபவர் மீதும் குண்டர் சட்டம் பாய்கிறது.
    • 175 பேர் குண்டர் தடுப்பு சட்டத்தில் கைது செய்யப்பட்டனர்.

    சேலம்:

    சேலம் மாநகரில் தொடர் குற்றங்களில் ஈடுபடுபவர் மீது குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.

    வழிப்பறியில் ஈடுபடு–வோர், தடை செய்யப்பட்ட லாட்டரி விற்பனை, கஞ்சா குட்கா மற்றும் போதை பொருட்கள் விற்பனை, ரேஷன் அரிசி கடத்துவோர், விபசார தொழிலில் ஈடுபடுபவர் மீதும் குண்டர் சட்டம் பாய்கிறது.

    இந்த சட்டத்தின் கீழ் கைது செய்யப்படுபவர்கள் ஓராண்டிற்கு சிறையில் இருந்து வெளியே வர முடியாது.

    தமிழக சிறைகளில் 1000-க்கும் மேற்பட்டோர் குண்டாசில் கைதாகி சிறையில் உள்ளனர்.

    சேலம் மாநகர போலீஸ் கமிஷனர் நஜ்மல் ஹோதா உத்தரவின் பேரில் இந்த ஆண்டு 175 பேர் குண்டர் தடுப்பு சட்டத்தில் கைது செய்யப்பட்டனர்.

    இவர்களில் 80 பேர் ரவுடிகள், 16 பேர் கஞ்சா மற்றும் புகையிலை பொருட்கள் விற்பனை செய்தவர்கள், 51 பேர் வழிப்பறி மற்றும் குற்றச்செயலில் ஈடுபட்டவர்கள்.

    கடந்த ஆண்டில் 129 பேர் குண்டாசில் கைது செய்யப்பட்டு இருந்தனர். கடந்த ஆண்டு காட்டிலும் இந்த ஆண்டு கூடுதலாக 46 பேர் குண்டர் சட்டத்தில் கைது செய்யப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

    • சேலம் மாவட்டம் மகுடஞ்சாவடி யூனியனுக்கு உட்பட்ட தப்பகுட்டை கருப்ப கவுண்டனூர் பகுதியில் கடந்த 13 வருடங்களாக சீனாவில் ஜவுளி வியாபாரம் செய்து வருகிறார்.
    • நேற்று அதிகாலை தப்பக்குட்டை யில் உள்ள தனது வீட்டிற்கு வந்தார். இதனிடையே நாகராஜுக்கு கொரோனா பரிசோதனை முடிவு பாசிட்டிவ் என வந்தது.

    மகுடஞ்சாவடி:

    சேலம் மாவட்டம் மகுடஞ்சாவடி யூனியனுக்கு உட்பட்ட தப்பகுட்டை கருப்ப கவுண்டனூர் பகுதியைச் சேர்ந்தவர் நாகராஜ் வயது( 37 ). இவர் கடந்த 13 வருடங்களாக சீனாவில் ஜவுளி வியாபாரம் செய்து வருகிறார்.

    நேற்று முந்தினம் இவர் சொந்த ஊரான தப்பகுட்டை வருவதற்காக சீனாவில் இருந்து தனது மனைவி நாக மலர்விழி(30) மற்றும் மகன், மகளுடன் புறப்பட்டு வந்தார். கோவை விமான நிலையத்தில் வந்து இறங்கிய போது அவருக்கு கொரோனா பரிசோதனை செய்யப்பட்டது.

    பின்னர் நேற்று அதிகாலை தப்பக்குட்டை யில் உள்ள தனது வீட்டிற்கு வந்தார். இதனிடையே நாகராஜுக்கு கொரோனா பரிசோதனை முடிவு பாசிட்டிவ் என வந்தது. இதை தொடர்ந்து அவருக்கு எந்த வகையான கொரோனா பாதிப்பு என்பதை ஆய்வு செய்வதற்காக சென்னைக்கு அனுப்பி வைக்கப்பட்டது.

    இதை தொடர்ந்து மகுடஞ்சாவடி ஆரம்ப சுகாதார நிலைய மருத்துவர் முத்துசாமி தலைமையில் மருத்துவக்குழுவினர் தப்பக்குட்டைக்கு விரைந்தனர். அங்கு நாகராஜ் மற்றும் அவரது வீட்டினரை தனிமையில் இருக்க அறிவுரை வழங்கினர். இதயடுத்து நாகராஜ் தனிமைப்படுத்தப்பட்டார். மேலும் அவருடன் அவரது தந்தை கிருஷ்ணராஜ்(65), தாயார் சரோஜா(55) ஆகியோரும் வீட்டில் தனிமைப்படுத்தப்பட்டு உள்ளனர். மேலும் மகுடஞ்சாவடி ஆரம்ப சுகாதார நிலைய அலுவலர்கள் கண்காணித்து வருகின்றனர்.

    • தமிழக முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் காணொளி காட்சி வாயிலாக மகளிர் சுய உதவி குழுக்களுக்கு வங்கி கடன்கள் மற்றும் நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா சேலம் தொங்கும் பூங்காவில் நடந்தது.
    • 35 மகளிர் சுய உதவி குழுக்களுக்கு ரூ.153.40 லட்சம் இணை மானியம் வழங்குதலும் என மொத்தம் 1,602 மகளிர் சுய உதவி குவழுக்களுக்கு ரூ.100 கோடியே 51 லட்சத்தி 70 ஆயிரம் செலவில் கடன் உதவி மற்றும் நலத்திட்ட உதவிகளும் வழங்கப்பட்டது.

    சேலம்:

    தமிழக முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் காணொளி காட்சி வாயிலாக மகளிர் சுய உதவி குழுக்களுக்கு வங்கி கடன்கள் மற்றும் நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா சேலம் தொங்கும் பூங்காவில் நடந்தது. நிகழ்ச்சிக்கு மாவட்ட கலெக்டர் கார்மேகம் தலைமை தாங்கினார்.

    விழாவில் 987 ஊரக பகுதியில் உள்ள மகளிர் உதவி குழுக்களுக்கு ரூ.7452.39 லட்சம் வங்கிக் கடன் உதவியும், 14 ஊராட்சி அளவிலான கூட்டமைப்புகளுக்கு ரூ.648.10 லட்சம் கடன்களையும், 295 ஊரக பகுதியில் உள்ள மகளிர் சுய உதவி குழுக்களுக்கு ரூ.442.5 லட்சம் சமுதாய முதலீட்டு நிதி வழங்குதலும், 40 மகளிர் உற்பத்தியாளர் குழுக்களுக்கு ரூ.80 லட்சம் தொடக்க நிதியும், 221 நகர்ப்புற மகளிர் சுய உதவி குழுக்களுக்கு ரூ.1492.71 லட்சம் வங்கி கடன் உதவியும், 10 நகர்ப்புற மகளிர் சுய உதவி குழுக்களுக்கு ரூ.1 லட்சம் சுழல் நிதி வழங்குதலும், வாழ்ந்து காட்டுவோம் திட்ட 35 மகளிர் சுய உதவி குழுக்களுக்கு ரூ.153.40 லட்சம் இணை மானியம் வழங்குதலும் என மொத்தம் 1,602 மகளிர் சுய உதவி குவழுக்களுக்கு ரூ.100 கோடியே 51 லட்சத்தி 70 ஆயிரம் செலவில் கடன் உதவி மற்றும் நலத்திட்ட உதவிகளும் வழங்கப்பட்டது.

    இந்த நிகழ்ச்சியில் கலெக்டர் கார்மேகம் மேயர் ராமச்சந்திரன், ராஜேந்திரன் எம்.எல்.ஏ ஆணையாளர் கிறிஸ்துராஜ் ஆகியோர் கலந்து கொண்டு கடன் உதவிகளை வழங்கினர். அப்போது மாவட்ட செயலாளர்கள் டி.எம்.செல்வ கணபதி, எஸ்.ஆர்.சிவலிங்கம் உள்பட பலர் உடன் இருந்தனர்.

    • பெத்தநாய்க்கன்பாளையம் வட்டாரம் ஏத்தாப்பூரில் அமைந்துள்ள ஒருங்கி–ணைந்த வேளாண்மை விரிவாக்க மையத்தில் வேளாண்மை குறித்த கருத்தரங்கு நடந்தது.
    • தோட்டக்–கலை பயிர்களைப் பற்றியும், தோட்டக்கலை துறையின் நிர்வாக அமைப்பைப் பற்றியும், அதன்கீழ் செயல்ப டுத்தப்படும் பல்வேறு வகையான திட்டங்களைப் பற்றியும் விளக்கி கூறினார்கள்.

    ஆத்தூர்:

    சேலம் மாவட்டம் பெத்தநாய்க்கன்பாளையம் வட்டாரம் ஏத்தாப்பூரில் அமைந்துள்ள ஒருங்கி–ணைந்த வேளாண்மை விரிவாக்க மையத்தில் திருச்சி மகளிர் தோட்டக்கலை கல்லூரி இறுதியாண்டு மாணவிகள் திவ்யா, ஜீவிதா, கீர்த்திகா, கீர்த்திகா, லலிதா ஸ்ரீ, மாரீஸ்வரி, மௌனிகா, ரோகிணி, அம்கோது ஐஸ்வர்யா ஆகியோர் தங்களது ஊரக தோட்டக்கலைப் பணி அனுபவ பயிற்சியை

    தொடங்கினர்.முதற்கட்ட மாக, தோட்டக்கலை உதவி இயக்குநர் கோதைநாயகி மற்றும் தோட்டக்கலை அலுவலர் ஜான்சி ஆகியோரை சந்தித்து கலந்துரையாடினர்.

    இதில் பெத்தநாய்க்கன்–பாளையம் வட்டாரத்தை சுற்றியுள்ள பகுதிகளில் பயிரிடப்படும் தோட்டக்–கலை பயிர்களைப் பற்றியும், தோட்டக்கலை துறையின் நிர்வாக அமைப்பைப் பற்றியும், அதன்கீழ் செயல்ப டுத்தப்படும் பல்வேறு வகையான திட்டங்களைப் பற்றியும் விளக்கி கூறினார்கள். மேலும் ஒருங்கிணைந்த பூச்சி நோய்க் கட்டுப்பாடுகளை பற்றி விளக்கிக் கூறி அதனை விவசாயகளிடம் கூறி விழிப்புணர்வு ஏற்படுத்துமாறு மாணவி–களிடம் அறிவுறுத்தினர்.

    • சேலம் அம்மாபேட்டை சாமிநாதபுரம் பகுதியில் பழைய இரும்பு பொருட்களை வாங்கி வியாபாரம் செய்து வந்தார்.
    • இந்த நிலையில் கடந்த 26-ந் தேதி, கணேசன் சாமிநாதபுரம் பகுதியில் மயங்கி கிடந்தார். போலீசார் சேலம் அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சை சேர்த்தனர். இன்று அதிகாலை கணேசன் பரிதாபமாக இறந்தார்.

    சேலம்:

    சேலம் அம்மாபேட்டை ராஜ கணபதி நகரை சேர்ந்தவர் கணேசன். இவர் மனைவி மற்றும் குழந்தைகளை பிரிந்து சேலம் பள்ளப்பட்டி பகுதியில் தனியாக வசித்து வந்தார். மேலும் பழைய இரும்பு பொருட்களை வாங்கி வியாபாரம் செய்து வந்தார்.இந்த நிலையில் கடந்த 26-ந் தேதி, கணேசன் சாமிநாதபுரம் பகுதியில் மயங்கி கிடந்தார். இதனை பார்த்து அந்த பகுதியினர் பள்ளப்பட்டி போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். உடனே அங்கு விரைந்து சென்ற போலீசார் அவரை மீட்டு சேலம் அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சை சேர்த்தனர். அங்கு தீவிர சிகிச்சை அளித்தும் பலன் இன்றி இன்று அதிகாலை கணேசன் பரிதாபமாக இறந்தார். இது குறித்து பள்ளப்பட்டி போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    • பூபதி(வயது 43). இவர் சிவில் என்ஜினீயராக பணியாற்றி வருகிறார் இவரது மனைவி கோமதி.இவர்களுக்கு துர்ஷ்யந்த் (14), தன்ஷிகா ஆகிய 2 குழந்தைகள் உள்ளனர்.
    • உள்ளே சென்று பார்த்தபோது அங்கு பீரோவில் வைக்கப்பட்ட 7 பவுன் வெள்ளிப் பொருட்கள் உள்பட தங்க நகை சுமார் ரூ.5 லட்சம் மதிப்புள்ள பொருட்கள் திருட்டு போனது தெரியவந்தது.

    காடையாம்பட்டி:

    சேலம் மாவட்டம் தீவட்டிப்பட்டி டி.வி.சி. நகர் பகுதியில் வசித்து வருபவர் பூபதி(வயது 43). இவர் சிவில் என்ஜினீயராக பணியாற்றி வருகிறார் இவரது மனைவி கோமதி.இவர்களுக்கு துர்ஷ்யந்த் (14), தன்ஷிகா ஆகிய 2 குழந்தைகள் உள்ளனர்.

    கடந்த 2 தினங்களுக்கு முன்பு பூபதி குடும்பத்துடன் ஈரோடு சென்றார். திரும்பி வந்து பார்த்தபோது வீட்டின் பூட்டு உடைக்கப்பட்டு கதவு திறந்து கிடந்தது. உள்ளே சென்று பார்த்தபோது அங்கு பீரோவில் வைக்கப்பட்ட 7 பவுன் வெள்ளிப் பொருட்கள் உள்பட தங்க நகை சுமார் ரூ.5 லட்சம் மதிப்புள்ள பொருட்கள் திருட்டு போனது தெரியவந்தது.

    நள்ளிரவு வீட்டுக்கு வந்த மர்ம நபர்கள் வீட்டின் கேட்டை உடைத்து கொள்ளையில் ஈடுபட்டுள்ளனர். இது சம்பந்தமாக அவர் தீவட்டிப்பட்டி போலீசில் புகார் செய்தார். போலீசார் வழக்கு பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • கிருஷ்ண கவுண்டர் - சீரங்கம்மாள் தம்பதி சென்றாயனூர் மாரியம்மன் கோவில் பகுதியில் ஓட்டு வீட்டில் தனியாக வசித்து வந்தனர்.
    • மனைவி இறந்ததால், கடந்த 2 நாட்களாக கிருஷ்ண கவுண்டர் மனவேதனையில் இருந்தார்.

    சங்ககிரி:

    சேலம் மாவட்டம், தேவூர் அருகே சென்றாயனூர் பகுதியை சேர்ந்தவர் கிருஷ்ண கவுண்டர் (வயது 72), விவசாயி. இவரது மனைவி சீரங்கம்மாள். தம்பதியினர்க்கு தனலட்சுமி, அலமேலு ஆகிய 2 மகள்கள் உள்ளனர். இருவருக்கும் திருமணம் ஆகிவிட்டது. இதனால் கிருஷ்ண கவுண்டர் - சீரங்கம்மாள் தம்பதி சென்றாயனூர் மாரியம்மன் கோவில் பகுதியில் ஓட்டு வீட்டில் தனியாக வசித்து வந்தனர்.

    இந்நிலையில் கடந்த 24-ந் தேதி காலை சீரங்கம்மாள் (70) உயிர் இழந்தார். மனைவி இறந்ததால், கடந்த 2 நாட்களாக கிருஷ்ண கவுண்டர் மனவேதனையில் இருந்தார். இந்த நிலையில் நேற்று காலை திடீரென மனைவியை நினைத்து அழுத கிருஷ்ண கவுண்டர், மூச்சு அடைத்து இறந்து போனார். இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியது.

    ×