search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    மகளிர் சுய உதவி குழுக்களுக்கு ரூ.101.51 கோடி கடன், நலத்திட்ட உதவிகள்
    X

     தமிழக அரசு சார்பில் மகளிர் சுய உதவி குழுக்களுக்கு கடன் மற்றும் நலத்திட்ட உதவிகள் வழங்கும் நிகழ்ச்சி தொங்கும் பூங்காவில் நடந்தது. இதில் மாவட்ட கலெக்டர் கார்மேகம் பங்கேற்று மகளிர் குழுக்களுக்கு கடன் உதவிகளை வழங்கினார். அருகில் ராஜேந்திரன் எம்எல்ஏ, மாநகராட்சி ஆணையாளர் கிறிஸ்துராஜ், திமுக கிழக்கு மாவட்ட செயலாளர் எஸ். ஆர். சிவலிங்கம், மேற்கு மாவட்ட செயலாளர் டி .எம் செல்வகணபதி மற்றும் அரசு அதிகாரிகள் உள்ளனர்.

    மகளிர் சுய உதவி குழுக்களுக்கு ரூ.101.51 கோடி கடன், நலத்திட்ட உதவிகள்

    • தமிழக முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் காணொளி காட்சி வாயிலாக மகளிர் சுய உதவி குழுக்களுக்கு வங்கி கடன்கள் மற்றும் நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா சேலம் தொங்கும் பூங்காவில் நடந்தது.
    • 35 மகளிர் சுய உதவி குழுக்களுக்கு ரூ.153.40 லட்சம் இணை மானியம் வழங்குதலும் என மொத்தம் 1,602 மகளிர் சுய உதவி குவழுக்களுக்கு ரூ.100 கோடியே 51 லட்சத்தி 70 ஆயிரம் செலவில் கடன் உதவி மற்றும் நலத்திட்ட உதவிகளும் வழங்கப்பட்டது.

    சேலம்:

    தமிழக முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் காணொளி காட்சி வாயிலாக மகளிர் சுய உதவி குழுக்களுக்கு வங்கி கடன்கள் மற்றும் நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா சேலம் தொங்கும் பூங்காவில் நடந்தது. நிகழ்ச்சிக்கு மாவட்ட கலெக்டர் கார்மேகம் தலைமை தாங்கினார்.

    விழாவில் 987 ஊரக பகுதியில் உள்ள மகளிர் உதவி குழுக்களுக்கு ரூ.7452.39 லட்சம் வங்கிக் கடன் உதவியும், 14 ஊராட்சி அளவிலான கூட்டமைப்புகளுக்கு ரூ.648.10 லட்சம் கடன்களையும், 295 ஊரக பகுதியில் உள்ள மகளிர் சுய உதவி குழுக்களுக்கு ரூ.442.5 லட்சம் சமுதாய முதலீட்டு நிதி வழங்குதலும், 40 மகளிர் உற்பத்தியாளர் குழுக்களுக்கு ரூ.80 லட்சம் தொடக்க நிதியும், 221 நகர்ப்புற மகளிர் சுய உதவி குழுக்களுக்கு ரூ.1492.71 லட்சம் வங்கி கடன் உதவியும், 10 நகர்ப்புற மகளிர் சுய உதவி குழுக்களுக்கு ரூ.1 லட்சம் சுழல் நிதி வழங்குதலும், வாழ்ந்து காட்டுவோம் திட்ட 35 மகளிர் சுய உதவி குழுக்களுக்கு ரூ.153.40 லட்சம் இணை மானியம் வழங்குதலும் என மொத்தம் 1,602 மகளிர் சுய உதவி குவழுக்களுக்கு ரூ.100 கோடியே 51 லட்சத்தி 70 ஆயிரம் செலவில் கடன் உதவி மற்றும் நலத்திட்ட உதவிகளும் வழங்கப்பட்டது.

    இந்த நிகழ்ச்சியில் கலெக்டர் கார்மேகம் மேயர் ராமச்சந்திரன், ராஜேந்திரன் எம்.எல்.ஏ ஆணையாளர் கிறிஸ்துராஜ் ஆகியோர் கலந்து கொண்டு கடன் உதவிகளை வழங்கினர். அப்போது மாவட்ட செயலாளர்கள் டி.எம்.செல்வ கணபதி, எஸ்.ஆர்.சிவலிங்கம் உள்பட பலர் உடன் இருந்தனர்.

    Next Story
    ×