என் மலர்
உள்ளூர் செய்திகள்

கொள்ளை நடந்த வீடு
வீட்டின் பூட்டை உடைத்து 7 பவுன் நகை கொள்ளை
- பூபதி(வயது 43). இவர் சிவில் என்ஜினீயராக பணியாற்றி வருகிறார் இவரது மனைவி கோமதி.இவர்களுக்கு துர்ஷ்யந்த் (14), தன்ஷிகா ஆகிய 2 குழந்தைகள் உள்ளனர்.
- உள்ளே சென்று பார்த்தபோது அங்கு பீரோவில் வைக்கப்பட்ட 7 பவுன் வெள்ளிப் பொருட்கள் உள்பட தங்க நகை சுமார் ரூ.5 லட்சம் மதிப்புள்ள பொருட்கள் திருட்டு போனது தெரியவந்தது.
காடையாம்பட்டி:
சேலம் மாவட்டம் தீவட்டிப்பட்டி டி.வி.சி. நகர் பகுதியில் வசித்து வருபவர் பூபதி(வயது 43). இவர் சிவில் என்ஜினீயராக பணியாற்றி வருகிறார் இவரது மனைவி கோமதி.இவர்களுக்கு துர்ஷ்யந்த் (14), தன்ஷிகா ஆகிய 2 குழந்தைகள் உள்ளனர்.
கடந்த 2 தினங்களுக்கு முன்பு பூபதி குடும்பத்துடன் ஈரோடு சென்றார். திரும்பி வந்து பார்த்தபோது வீட்டின் பூட்டு உடைக்கப்பட்டு கதவு திறந்து கிடந்தது. உள்ளே சென்று பார்த்தபோது அங்கு பீரோவில் வைக்கப்பட்ட 7 பவுன் வெள்ளிப் பொருட்கள் உள்பட தங்க நகை சுமார் ரூ.5 லட்சம் மதிப்புள்ள பொருட்கள் திருட்டு போனது தெரியவந்தது.
நள்ளிரவு வீட்டுக்கு வந்த மர்ம நபர்கள் வீட்டின் கேட்டை உடைத்து கொள்ளையில் ஈடுபட்டுள்ளனர். இது சம்பந்தமாக அவர் தீவட்டிப்பட்டி போலீசில் புகார் செய்தார். போலீசார் வழக்கு பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.






