என் மலர்tooltip icon

    சேலம்

    • ரெயில்வே தண்டவாளத்தில் ஆண் பிணம் கிடைப்பதாக சேலம் ரெயில்வே போலீசாருக்கு தகவல்
    • போலீசார் விரைந்து சென்று உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனை

    சேலம்:

    சேலம் மாவட்டம் மேச்சேரி ரெயில் நிலை யத்திற்கும் ஓமலூர் ரெயில் நிலையத்திற்கும் இடையே ரெயில்வே தண்டவாளத்தில் ஆண் பிணம் கிடைப்பதாக சேலம் ரெயில்வே போலீசாருக்கு தகவல் கிடைத்தது. போலீசார் விரைந்து சென்று உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு சேலம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். பிணமாக கிடந்தவர் புளூ, மெருன் கலர் டீ சர்ட் மற்றும் பச்சை கலர் சட்டை, காபி ,சிவப்பு கலர் கலந்த கட்டம் போட்ட லுங்கியும் அணிந்தி ருந்தார். அவர் யார்? எந்த ஊரைச் சேர்ந்த வர்? என்பது குறித்து ஒரு விசாரித்து வருகின்றனர். அவர் ரெயிலில் அடிபட்டு இறந்தாரா? அல்லது யாரும் கொலை செய்து தண்ட வாளத்தில் வீசி சென்றவரா? என போலீசார் விசாரித்து வருகிறார்கள்.

    • சில நபர்கள் சரக்கு ஆட்டோவில் கர்நாடகா மாநிலத்திற்கு கடத்தல்
    • உணவு கடத்தல் தடுப்பு பிரிவு போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று விசாரணை

    அன்னதானப்பட்டி:

    சேலம் கருங்கல்பட்டி சுற்று வட்டாரப் பகுதிகளில் சிலர் குறைந்த விலைக்கு ரேஷன் அரிசியை வாங்கி வீட்டில் பதுக்கி வைத்து வெளி மாவட்டங்கள் மற்றும் மாநிலங்களுக்கு கடத்தி விற்பனை செய்து வந்ததாக கூறப்படுகிறது. இந்த நிலையில் நேற்று இரவு சில நபர்கள் சரக்கு ஆட்டோவில் கர்நாடகா மாநிலத்திற்கு கடத்துவதற்காக ரேஷன் அரிசி மூட்டைகளை ஏற்றிக் கொண்டிருந்தனர்.

    இது குறித்த தகவலின் பேரில், உணவு கடத்தல் தடுப்பு பிரிவு போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று விசாரணை நடத்தினர். இதையடுத்து ரேஷன் அரிசி வீட்டில் பதுக்கி வைத்து, கடத்தலில் ஈடுபட்ட கருங்கல் பட்டி பாண்டுரங்கன் கோவில் தெரு பகுதியைச் சேர்ந்த பாலு ( வயது 21), அவருக்கு உதவி செய்த அம்மாப்பேட்டை தாதம்பட்டி பகுதியைச் சேர்ந்த அஜீத் (21) ஆகிய இருவரையும் கைது செய்தனர். 1250 கிலோ அரிசி மூட்டைகள், ஆட்டோ பறிமுதல் செய்யப்பட்டன.

    • பல்வேறு பகுதிகளில் இருந்து டன் கணக்கில் பூக்கள் விற்ப னைக்கு கொண்டு வரப்படு கின்றன.
    • அனைத்து கோவில்களிலும் சிறப்பு மலர் அலங்காரம்

    அன்னதானப்பட்டி:

    சேலம் பூ மார்க்கெட்டுக்கு மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து டன் கணக்கில் பூக்கள் விற்ப னைக்கு கொண்டு வரப்படு கின்றன. அதே போல் சேலத்தில் இருந்து வெளி மாவட்டங்கள் மற்றும் வெளி மாநிலங்களுக்கு பூக்கள் விற்பனைக்கு அனுப்பி வைக்கப்படுகின்றன.

    நாளை ஆங்கிலப் புத்தாண்டு பிறப்பை யொட்டி பொதுமக்கள், பெண்கள் இன்று அதி காலை முதலே சேலம் மார்க்கெட்டுக்கு வந்து பூக்கள் வாங்கிச் சென்று வருகின்றனர். அனைத்து கோவில்களிலும் சிறப்பு மலர் அலங்காரம் செய்யப்பட்டு சாமிக்கு விசேஷ பூஜைகள் நடை பெறும். விற்பனை அதிகரிப்பால் வியாபாரிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.இதன் காரணமாக பூக்கள் தேவை அதிகரித்து உள்ளதால், குண்டு மல்லிகை உள்ளிட்ட பூக்களின் விலை சற்று அதிகரித்துள்ளது. கடந்த சில நாட்களாக கிலோ ரூ.800- ரூ.1000- க்கு விற்ற குண்டு மல்லிகை இன்று ரூ. - 1400 க்கு விற்றது. ரூ1000- க்கு விற்ற முல்லை ரூ.1400- க்கு விற்கப்படுகிறது.மற்ற ரக பூக்களில் ஒரு சில விலை உயர்ந்தும், , சில ரகங்கள் அதே விலையிலும் விற்கப்பட்டு வருகிறது.

    சேலம் வ.ஊ.சி. பூ மார்க்கெட்டில் இன்றைய (31.12.22) பூக்களின் விலை நிலவரம் (1 கிலோ கணக்கில்) : குண்டு மல்லிகை - ரூ.1400, முல்லை - ரூ.1400, ஜாதி மல்லி - ரூ.900, காக்கட்டான் - ரூ.450, கலர் காக்கட்டான் - ரூ.450, மலை காக்கட்டான் - ரூ.240, சி.நந்தியா வட்டம் - ரூ.100, சம்பங்கி - ரூ.60, சாதா சம்பங்கி - ரூ.60, அரளி - ரூ.160, வெள்ளை அரளி - ரூ.160, மஞ்சள் அரளி - ரூ.160, செவ்வரளி - ரூ.200, ஐ.செவ்வரளி - ரூ.200, நந்தியா வட்டம் - ரூ.100 என்கிற விலையில் விற்பனை செய்யப்பட்டு வருகிறது.

    • சங்ககிரி அரசு மருத்துவமனை மற்றும் விவேகானந்தா மகளிர் செவிலியர் கல்லூரி மாணவிகள் இணைந்து எய்ட்ஸ் விழிப்புணர்வு பேரணி நடத்தினர்.
    • இப்பேரணியானது சங்ககிரி பழைய பஸ் ஸ்டாண்டில் தொடங்கி புதிய இடைப்பாடி சாலை வழியாக சென்று சங்ககிரி அரசு மருத்துவமனையில் நிறைவு பெற்றது.

    சங்ககிரி:

    சேலம் மாவட்டம் சங்ககிரியில் உலக எய்ட்ஸ் தினத்தை முன்னிட்டு, சேலம் மாவட்ட அரவாணிகள் தாய் விழுதுகள் அறக்கட்டளை, சங்ககிரி அரசு மருத்துவமனை மற்றும் விவேகானந்தா மகளிர் செவிலியர் கல்லூரி மாணவிகள் இணைந்து எய்ட்ஸ் விழிப்புணர்வு பேரணி நடத்தினர்.

    இப்பேரணியை சங்ககிரி பேரூராட்சி தலைவர் மணிமொழி தலைமை வகித்து தொடங்கி வைத்தார். இப்பேரணியானது சங்ககிரி பழைய பஸ் ஸ்டாண்டில் தொடங்கி புதிய இடைப்பாடி சாலை வழியாக சென்று சங்ககிரி அரசு மருத்துவமனையில் நிறைவு பெற்றது. அரசு மருத்துவமனையில் தலைமை மருத்துவர் திருமா வளவன் முன்னிலையில் சமப்படுத்துதல் என்ற

    உறுதிமொழி எடுக்கப்பட்டது. தொடர்ந்து சங்ககிரி வைகுந்தம் சுங்கச்சாவடியில் எய்ட்ஸ் குறித்த விழிப்புணர்வு பிரசுரங்கள் அடங்கிய ஸ்டால் நிறுவப்பட்டு வாகன ஓட்டிகள், பொதுமக்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது.

    இந்த நிகழ்ச்சியில், சங்ககிரி பேரூராட்சி செயல் அலுவலர் சுலைமான்சேட், பேரூராட்சி மன்றத் துணைத் தலைவர் அருண்பிரபு, சங்ககிரி பேரூர் தி.மு.க செயலாளர் முருகன், சங்ககிரி அரசு மருத்துவமனை நம்பிக்கை மைய ஆலோசகர் கோபால், ஆய்வுகள் நுட்பனர் சீனிவாசன், பேரூராட்சி சுகாதார ஆய்வாளர் செல்வகுமார், பேரூர் துணை செயலாளர் ரமேஷ், கல்லூரி மாணவிகள், சேலம் மாவட்ட அரவாணிகள் தாய் விழுது அறக்கட்டளை திட்ட மேலாளர் மரியாள், களப்பணியாளர்கள் சசிரேகா, திவ்யா உட்பட பலர் பங்கேற்றனர்.

    • விழாவிற்கு சேலம் மட்டு மின்றி வெளி மாவட்டங்களில் இருந்து ஏராளமான பக்தர்கள் வருவார்கள்
    • பக்தர்கள் சிறப்பு நுழைவுக் கட்டணமாக ஒரு நபருக்கு ரூ.25

    சேலம்:

    சேலம் கோட்டை பெருமாள் கோவிலில் வைகுண்ட ஏகாதசி விழா கடந்த 22-ந் தேதி தொடங்கியது. தொடர்ந்து அடுத்த மாதம் 13-ந் தேதி வரை விழா நடைபெறுகிறது.

    முக்கிய நிகழ்வான சொர்க்க வாசல் திறப்பு நாளை மறுநாள்(திங்கட்கிழமை) நடக்கிறது. அன்று அதிகாலை 5 மணிக்கு சொர்க்க வாசல் திறக்கப்படுகிறது. அன்று மூலவர் அழகிரிநாதர், தாயார், கருடாழ்வார், ஆஞ்சநேயர், ஆண்டாள், விஷ்ணு துர்க்கை ஆகிய சாமிகளுக்கு தங்க கவசம் சாத்துபடி செய்து சிறப்பு பூஜைகள் நடத் தப்படுகிறது.நாளை வரை பகல் பத்து உற்சவமும், 2-ந் தேதி முதல் 13-ந் தேதி வரை ராப்பத்து உற்சவமும் நடை பெறுகிறது.விழாவிற்கு சேலம் மட்டு மின்றி வெளி மாவட்டங்களில் இருந்து ஏராளமான பக்தர்கள் வருவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதனால் பக்தர்கள் நெரிச–லைக் கட்டுப்படுத்தி, அனைவரும் சாமி தரிசனம் செய்யும் வகையில் ஏற்பாடு செய்யப்பட்டு வருகிறது.இதனிடையே, சொர்க்கவாசல் திறப்பு நாளன்று, காலை 7மணி முதல் இரவு 9மணி வரை தரிசிக்க விரும்பும் பக்தர்கள் சிறப்பு நுழைவுக் கட்டணமாக ஒரு நபருக்கு ரூ.25-யை இணையதளம் மூலம் செலுத்த இந்து சமய அறநிலையத்துறை ஏற்பாடு செய்தது. இதனால் பலர் ஆன்லைனில் முன் பதிவு செய்து வருகிறார்கள் முன் பதிவு செய்ய கோட்டை பெருமாள் கோவிலிலும் சிறப்பு வசதி செய்யப்பட்டு உள்ளது.

    சிறப்பு தரிசனத்துக்கு கட்டணம் செலுத்தி முன்பதிவு செய்த பக்தர்கள், குண்டு போடும் தெரு (வெங்கடசாமி தெரு) வழியாக கோவிலுக்கு வருவதற்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.சொர்க்கவாசல் திறப்பு நாளன்று ஒருநாள் மட்டும் பொதுதரிசனம் மற்றும் இலவச தரிசனம் செய்ய விரும்பும் பக்தர்கள் பழைய புத்தக கடை வீதி, ஹபீப் தெரு, வழியாக கோவிலுக்கு வருவதற்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.சொர்க்கவாசல் திறப்பை முன்னிட்டு, முக்கிய பிரமுகர்களுக்கான பேட்ஜ் மற்றும் பாஸ் வழங்கப்படாது எனவும், சொர்க்கவாசல் 2-ந் தேதி திறக்கப்பட்டு, ஜனவரி 12-ந் தேதி வரை திறந்திருக்கும் என்றும் கோவில் நிர்வாகம் சார்பில் அறிவிக்கப்பட்டுள்ளது. பக்தர்கள் கூட்ட நெரிசலின்றி தரிசனம் செய்ய தடுப்பு கட்டைகள் அமைக்கபப்ட்டு உள்ளது. போலீசாரும் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு உள்ளனர்.

    • மேட்டூர் அணைக்கு நேற்று முன்தினம் வினாடிக்கு 5,643 கன அடியாக இருந்த நீர்வரத்து, நேற்று காலை வினாடிக்கு 5,067 கன அடியாக சரிந்தது.
    • நீர்வரத்து இன்று காலை மேலும் சரிந்து வினாடிக்கு 4,012 கனஅடியாக தண்ணீர் வந்து கொண்டு இருக்கிறது.

    மேட்டூர்:

    காவிரி நீர்ப்பிடிப்பு பகுதிகளில் மழை இல்லாததால், ஒகேனக்கல் காவிரியில் 6,500 கன அடியாக இருந்த நீர்வரத்து, நேற்று காலை 6,000 கன அடியாக சரிந்துள்ளது. அதே சமயம், மேட்டூர் அணைக்கு நேற்று முன்தினம் வினாடிக்கு 5,643 கன அடியாக இருந்த நீர்வரத்து, நேற்று காலை வினாடிக்கு 5,067 கன அடியாக சரிந்தது. இன்று காலை மேலும் சரிந்து வினாடிக்கு 4,012 கனஅடியாக தண்ணீர் வந்து கொண்டு இருக்கிறது.

    அணையில் இருந்து டெல்டா பாசனத்திற்கு நேற்று முன்தினம் முதல் விநாடிக்கு 12,400 ஆயிரம் கனஅடி வீதம் தண்ணீர் திறக்கப்படுகிறது. தண்ணீர் திறப்பு அதிகரிக்கப்பட்டு உள்ளதால், அணையின் நீர்மட்டம், இன்று காலை 119.26 கன அடியாக சரிந்தது.

    • மங்கலம் போலீசார் மற்றும் ஊராட்சி ஒன்றிய ஆணையாளர்கள் விஜயலட்சுமி, ரவிசந்திரன் ஆகியோர் பொதுமக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர்.
    • பொதுமக்கள் கலைந்து செல்ல மறுப்பு தெரிவித்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.

    தாரமங்கலம்:

    சேலம் மாவட்டம் தாரமங்கலம் அருகிலுள்ள ராமிரெட்டிபட்டி கிராமம் ஆயாமரம் பகுதியை சேர்ந்தவர் சின்னத்தம்பி (வயது 54). இவரது விவசாய நிலத்திற்கு அருகில் அரசுக்கு சொந்தமான 2 சென்ட் நிலம் உள்ளது.

    இந்த நிலத்தில் தற்போது ஊராட்சி ஒன்றிய ஆணையாளரின் உத்தரவின் பேரில் பொதுமக்கள் தேவைக்காக குடிநீர் தொட்டி அமைக்கும் பணி நடைபெற்று வருகிறது.

    இந்த நிலையில் அந்த இடத்தில் குடிநீர் தொட்டி அமைக்க கூடாது என்று கூறி சின்னத்தம்பி குடும்பத்தினர் கம்பி அமைத்து விட்டனர். இதற்கு எதிர்ப்பு தெரிவித்து, அப்பகுதியை சேர்ந்த பொதுமக்கள் 100-க்கும் மேற்பட்டோர் ஒன்று திரண்டு வந்து நேற்று தாரமங்கலத்தில் இருந்து ஜலகண்டபுரம் செல்லும் சாலையில் ஆயாமரம் பகுதியில் அமர்ந்து மறியல் போராட்டத்தில் ஈடுப்பட்டனர்.

    அப்போது இதுபற்றி தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்தார்.

    மங்கலம் போலீசார் மற்றும் ஊராட்சி ஒன்றிய ஆணையாளர்கள் விஜயலட்சுமி, ரவிசந்திரன் ஆகியோர் பொதுமக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். பின்னர் பொதுமக்கள் கலைந்து செல்ல மறுப்பு தெரிவித்து போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் மறியலில் ஈடுபட்ட 45 பேரை போலீசார் கைது செய்து தாரமங்கலத்தில் உள்ள திருமண மண்டபத்தில் அடைத்தனர்.

    அதனை தொடர்ந்து அரசுக்கு சொந்தமான நிலத்தை ஆக்கிரமித்து கம்பி வேலி அமைத்ததால் ஆணையாளர் விஜயலட்சுமி கொடுத்த புகாரின் பேரில் சின்னத்தம்பி,விஜயா, கார்த்தி, குருநாதசாமி, பெரியம்மாள், ராஜி, தங்கவேல்,சரோஜா ஆகியோர் மீது வழக்கு பதிவு செய்து போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

    • போலீஸ் ஸ்டேஷனில் டி.எஸ்.பி. ஆரோக்கியராஜ் நேற்று வருடாந்திர ஆய்வு மேற்கொண்டார்.
    • அதனைத் தொடர்ந்து போலீஸ் ஸ்டேஷன் வளாகத்தில் மரக்கன்றுகளை நட்டார்.

    சங்ககிரி:

    சேலம் மாவட்டம் சங்ககிரி போலீஸ் ஸ்டேஷனில் டி.எஸ்.பி. ஆரோக்கியராஜ் நேற்று வருடாந்திர ஆய்வு மேற்கொண்டார். அப்போது அவர், நிலுவை வழக்குகள் விபரம், வழக்கு பதிவேடு, விபத்து உள்ளிட்ட வழக்குகள் தொடர்பாக பல்வேறு ஆவணங்களை ஆய்வு செய்தார்.

    மேலும், நிலுவையில் உள்ள வழக்குகளை விரைந்து முடிக்க உத்தர விட்டார். அதனைத் தொடர்ந்து போலீஸ் ஸ்டேஷன் வளாகத்தில் மரக்கன்றுகளை நட்டார். இந்த ஆய்வின்போது இன்ஸ்பெக்டர் தேவி, எஸ்.ஐ. சுதாகரன் மற்றும் போலீசார் உடன் இருந்தனர்.

    • தாரமங்கலம் ஊராட்சி ஒன்றிய குழு கூட்டம் நேற்று கூட்ட அரங்கில் நடைபெற்றது.
    • கூட்டத்தில் பேசிய ஒன்றியக்குழு துணைத்தலைவர் சீனிவாசன் துட்டம்பட்டி ஊராட்சியில் 1 ஏக்கர் பரப்பளவில் வனத்துறை சார்பில் மரகத பூஞ்சோலை அமைக்க அனுமதி வழங்கியதற்கு பாராட்டு தெரிவித்து பேசினார்.

    தாரமங்கலம்:

    தாரமங்கலம் ஊராட்சி ஒன்றிய குழு கூட்டம் நேற்று கூட்ட அரங்கில் நடைபெற்றது. கூட்டத்திற்கு ஒன்றியக்குழு தலைவர் சுமதிபாபு தலைமை தாங்கினார். ஆணை யாளர்கள் விஜயலட்சுமி, ரவிச்சந்திரன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். முன்னதாக கூட்டத்தில் பேசிய ஒன்றியக்குழு துணைத்தலைவர் சீனிவாசன் துட்டம்பட்டி ஊராட்சியில் 1 ஏக்கர் பரப்பளவில் வனத்துறை சார்பில் மரகத பூஞ்சோலை அமைக்க அனுமதி வழங்கியதற்கு பாராட்டு தெரிவித்து பேசினார்.

    அதனை தொடர்ந்து பேசிய தலைவர் சுமதிபாபு, பல்வேறு ஊராட்சிகளில் ஊரக வேலைவாய்ப்பு திட்டத்தில் முறைகேடாக பயனாளிகள் பட்டியல் சேர்க்கபட்டு பணி நடை பெறுவதாக குற்றம் சாட்டி னார். அதற்கு பதில் அளித்து பேசிய ஆணையாளர் ரவிச்சந்திரன் ஊராக வேலை திட்டத்தில் பயனாளிகள் சேர்க்கை குறித்து கண்டறியபட்டால் சம்பந்தபட்ட ஊராட்சி நிவாகத்தின் மீதும், பணித்தள பொறுப்பாளர் மீதும் உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்று கூறினார்.

    தொடர்ந்து பேசிய தலைவர் சுமதிபாபு, துறை சார்ந்த அதிகாரிகள் பெரும்பாலானோர் கூட்டத்திற்கு வருவது இல்லை. இதனால் துறை சார்ந்த விளக்கம் கேட்டு பணிகளை மேற்கொள்ள முடியவில்லை என்றும், அனைவரும் ஒன்றிய குழு கூட்டத்திற்கு தவறா மல் கலந்து கொள்ள வேண்டும் என்றும் கூறினார்.

    தொடர்ந்து கூட்டதில் சேலம் மேற்கு சட்ட மன்ற உறுப்பினர் கோரிக்கை யின் படி தாரமங்கலம் ஊராட்சி யில் உள்ள அழகுசமுத்திரம், கருக்கல்வாடி, கோண கப்பாடி ஆகிய ஊரட்சி களை பிரித்து ஓமலூர் ஒன்றியத்தில் உள்ள 8 ஊரட்சிகளை பிரித்து முத்துநாயக்கன்பட்டியை தலைமை இடமாக கொண்டு புதிய ஒன்றியம் அமைக்க கோரிக்கை வைக்கப்பட்டது. இதற்கு அனுமதி கூடாது என்று ஊராட்சி கவுன்சி லர்கள் எதிர்ப்பு தெரிவித்ததால் தீர்மானம் நிராக ரிக்கப்பட்டது.

    • தமிழகத்தில் மெல்ல மெல்ல கொரோனா தொற்று அதிகரித்து வருகிறது. இதன் காரணமாக அனைவரும் முகக்கவசம் அணிய வேண்டும் என அரசு அறிவுறுத்தியுள்ளது.
    • சேலம் ஓமலூர் அரசு மருத்துவமனையில் முக கவசம் பற்றாகுறையாக உள்ளது. இதுகுறித்து அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

    ஓமலூர்:

    சேலம் மாவட்டம் ஓமலூரில் அரசு மருத்துவ மனை செயல்பட்டு வருகிறது. இங்கு ஓமலூர், காடையாம்பட்டி தாலுகா வில் உள்ள ஓமலூர் காடையாம்பட்டி கருப்பூர் ஆகிய பேரூராட்சிகளைச் சேர்ந்த பொதுமக்களும் தாரமங்கலம் நகராட்சி பகுதியைச் சேர்ந்த பொது மக்களும் மற்றும் அதனை சுற்றியுள்ள 67 ஊராட்சிகளை சேர்ந்த பொதுமக்கள் என ஒரு நாளைக்கு ஆயிரக்கணக்கானோர் வந்து சிகிச்சை பெற்று செல்கின்றனர்.

    இங்கு பிரசவம், அறுவை சிகிச்சை, பொது மருத்துவம், குழந்தைகள் மருத்துவம் உள்ளிட்ட அனைத்து விதமான சிகிச்சையும் அளிக்கப்பட்டு வருகிறது. இதற்காக 30-க்கும் மேற்பட்ட மருத்துவர்கள், 50-க்கும் மேற்பட்ட செவிலியர்கள் மற்றும் பணியாளர்கள் பணியாற்றி வருகின்றனர்.

    தற்போது தமிழகத்தில் மெல்ல மெல்ல கொரோனா தொற்று அதிகரித்து வருகிறது. இதன் காரணமாக அனைவரும் முகக்கவசம் அணிய வேண்டும் என அரசு அறிவுறுத்தியுள்ளது.

    இந்த நிலையில் ஓமலூர் அரசு மருத்துவமனையில் மருத்துவர்கள், செவிலியர்கள் மற்றும் பணியாளர்கள் பயன்படுத்துவதற்கு முக கவசம் இருப்பு இல்லை என கூறப்படுகிறது. இதன் காரணமாக ஓமலூர் அரசு மருத்துவமனையில் பணியாற்றும் ஊழியர்கள் தனியார் மருந்து கடைகளில் விலைக்கு வாங்கி பயன்படுத்தும் அவலம் நீடித்து வருகிறது.

    இதனால் ஒரு சில பணியாளர்கள் முககவசம் அணியாமலேயே பணி யாற்றி வருகின்றனர். எனவே உடனடியாக மருத்துவமனை நிர்வாகம் மருத்துவர்கள் செவிலியர் மற்றும் பணியாளர்களுக்கு அவ்வப்போது முகக்க வசங்களை வழங்க வேண்டும் என சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

    • சேலம் மாவட்டம் சங்ககிரில் இருந்து பவானி செல்லும் சாலையில், சாமியார் தோட்டத்தில் இருந்து கவுண்டனுார் வரை, ரூ.5.1 கோடி மதிப்பில் சாலை விரிவாக்கப்பணி, தடுப்புச்சுவர் கட்டுதல், வடிகால் கட்டுதல், குழாய் பாலம் அகலப்படுத்துதல் உள்ளிட்ட பணிகள் நடைபெற்று வருகிறது.
    • மகுடஞ்சா வடியில் இருந்து இடைப்பாடி வழியாக குமாரபாளையம் வரை ரூ.6.81 கோடி மதிப்பில், இருவழிச் சாலை அகலப்படுத்துதல், மேம்படுத்தும் பணிகளும் நடக்கிறது.

    சங்ககிரி:

    மாநில நெடுஞ்சாலைத் துறையின் சார்பில், சேலம் மாவட்டம் சங்ககிரில் இருந்து பவானி செல்லும் சாலையில், சாமியார் தோட்டத்தில் இருந்து கவுண்டனுார் வரை, ரூ.5.1 கோடி மதிப்பில் சாலை விரிவாக்கப்பணி, தடுப்புச்சுவர் கட்டுதல், வடிகால் கட்டுதல், குழாய் பாலம் அகலப்படுத்துதல் உள்ளிட்ட பணிகள் நடைபெற்று வருகிறது.

    அதேபோல், மகுடஞ்சா வடியில் இருந்து இடைப்பாடி வழியாக குமாரபாளையம் வரை ரூ.6.81 கோடி மதிப்பில், இருவழிச் சாலை அகலப்படுத்துதல், மேம்படுத்தும் பணிகளும் நடக்கிறது. மேலும், ஆலத்தூர்ரெட்டி பாளை யத்தில் இருந்து தேவூர் செல்லும் சாலையில் ரூ.71 லட்சத்தில் பாலம் கட்டும் பணி நடைபெற்று வருகிறது.

    இப்பணிகளை நேற்று, நெடுஞ்சாலைத்துறை கட்டுமானம் மற்றும் பராமரிப்பு, சேலம் கண்கா ணிப்பு பொறியாளர் பன்னீர்செல்வம் ஆய்வு செய்தார். அப்போது, அவர் சாலையோரம் இடையூறாக உள்ள மரங்களை உடனே அகற்றி பணியை விரைந்து முடிக்க அதிகாரிகளுக்கு அறிவுறுத்தினார்.

    இந்த ஆய்வின்போது, இடைப்பாடி நெடுஞ்சா

    லைத்துறை கோட்டப்பொ றியாளர் சண்முகசுந்தரம், சங்ககிரி உதவி கோட்டப்பொறியாளர் வரதராஜன் ஆகியோர் உடனிருந்தனர்.

    • சீனாவில் இருந்து சேலம் வந்த மகுடஞ்சாவடியைச் சேர்ந்த ஜவுளி வியாபாரிக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டது.
    • கொரோனாவால் பாதிக்கப்பட்ட ஜவுளி வியாபாரியை கண்காணிப்பதற்காக மகுடஞ்சாவடியில் சுகாதாரத்துறையினர் முகாமிட்டுள்ளனர்.

    மகுடஞ்சாவடி:

    சீனாவில் பி.எப்.7 என்ற புதிய வகை கொரோனா வேகமாக பரவி வருகிறது. இதனால் நமது நாட்டிலும் அந்த வகை தொற்று பரவுவதை தடுக்க தீவிர நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

    இந்த நிலையில் சீனாவில் இருந்து சிங்கப்பூர் வழியாக கோவைக்கு விமானத்தில் வந்த சேலம் மாவட்டம் மகுடஞ்சாவடியை சேர்ந்த ஜவுளி வியாபாரிக்கு கொரோனா இருப்பது உறுதி செய்யப்பட்டது.

    அவருக்கு இருப்பது புதிய வகை கொரோனாவா? என்பது குறித்து கண்டறிய சளிமாதிரிகள் மரபணு சோதனைக்காக சென்னையில் உள்ள மாநில சுகாதார ஆய்வகத்துக்கு அனுப்பப்பட்டுள்ளது.

    இதையடுத்து அந்த ஜவுளி வியாபாரி, மகுடஞ்சாவடியில் உள்ள அவரது வீட்டில் தனிமைப்படுத்திக்கொண்டார். அவரை சுகாதாரத்துறை அதிகாரிகள் தொடர்ந்து கண்காணித்து வருகிறார்கள். மேலும், அவரது குடும்ப உறுப்பினர்கள் யாருக்கும் நோய் தொற்று அறிகுறி இல்லை. எனினும் அவர்கள் அனைவரும் மருத்துவ கண்காணிப்பில் உள்ளனர்.

    மகுடஞ்சாவடி அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தை சேர்ந்த மருத்துவக்குழுவினர் கொரோனா பாதித்த ஜவுளி வியாபாரியை காலை மற்றும் மாலை இருவேளையும் தொடர்ந்து கண்காணித்து வருகின்றனர். இதுதவிர, அந்த நபரின் வீடு மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் நோய் தொற்று அறிகுறியுடன் யாரேனும் வசிக்கிறார்களா? என்பது குறித்து கணக்கெடுப்பு நடத்தப்படுகிறது.

    எனவே, அப்பகுதி முழுவதும் கிருமி நாசினி தெளித்து நோய் தடுப்பு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது. மகுடஞ்சாவடி பகுதியில் நோய் தடுப்பு நடவடிக்கை குறித்து ஒலிப்பெருக்கி மூலம் பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டு வருவதாக மாவட்ட கலெக்டர் கார்மேகம் தெரிவித்துள்ளார்.தொடர்ந்து மகுடஞ்சாவடி பகுதியில் கண்கா ணிப்பு பணிகள் தீவிரப்படுத்தப்பட்டுஉள்ளது. சுகாதார, மருத்துவ துறை யினர் மகுடஞ்சாவடியில் முகாமிட்டுள்ளனர்.

    ×