என் மலர்
நீங்கள் தேடியது "டி.எஸ்.பி ஆய்வு"
- போலீஸ் ஸ்டேஷனில் டி.எஸ்.பி. ஆரோக்கியராஜ் நேற்று வருடாந்திர ஆய்வு மேற்கொண்டார்.
- அதனைத் தொடர்ந்து போலீஸ் ஸ்டேஷன் வளாகத்தில் மரக்கன்றுகளை நட்டார்.
சங்ககிரி:
சேலம் மாவட்டம் சங்ககிரி போலீஸ் ஸ்டேஷனில் டி.எஸ்.பி. ஆரோக்கியராஜ் நேற்று வருடாந்திர ஆய்வு மேற்கொண்டார். அப்போது அவர், நிலுவை வழக்குகள் விபரம், வழக்கு பதிவேடு, விபத்து உள்ளிட்ட வழக்குகள் தொடர்பாக பல்வேறு ஆவணங்களை ஆய்வு செய்தார்.
மேலும், நிலுவையில் உள்ள வழக்குகளை விரைந்து முடிக்க உத்தர விட்டார். அதனைத் தொடர்ந்து போலீஸ் ஸ்டேஷன் வளாகத்தில் மரக்கன்றுகளை நட்டார். இந்த ஆய்வின்போது இன்ஸ்பெக்டர் தேவி, எஸ்.ஐ. சுதாகரன் மற்றும் போலீசார் உடன் இருந்தனர்.






