என் மலர்
உள்ளூர் செய்திகள்

மேட்டூர் அணை நீர்மட்டம் சரிவு
- மேட்டூர் அணைக்கு நேற்று முன்தினம் வினாடிக்கு 5,643 கன அடியாக இருந்த நீர்வரத்து, நேற்று காலை வினாடிக்கு 5,067 கன அடியாக சரிந்தது.
- நீர்வரத்து இன்று காலை மேலும் சரிந்து வினாடிக்கு 4,012 கனஅடியாக தண்ணீர் வந்து கொண்டு இருக்கிறது.
மேட்டூர்:
காவிரி நீர்ப்பிடிப்பு பகுதிகளில் மழை இல்லாததால், ஒகேனக்கல் காவிரியில் 6,500 கன அடியாக இருந்த நீர்வரத்து, நேற்று காலை 6,000 கன அடியாக சரிந்துள்ளது. அதே சமயம், மேட்டூர் அணைக்கு நேற்று முன்தினம் வினாடிக்கு 5,643 கன அடியாக இருந்த நீர்வரத்து, நேற்று காலை வினாடிக்கு 5,067 கன அடியாக சரிந்தது. இன்று காலை மேலும் சரிந்து வினாடிக்கு 4,012 கனஅடியாக தண்ணீர் வந்து கொண்டு இருக்கிறது.
அணையில் இருந்து டெல்டா பாசனத்திற்கு நேற்று முன்தினம் முதல் விநாடிக்கு 12,400 ஆயிரம் கனஅடி வீதம் தண்ணீர் திறக்கப்படுகிறது. தண்ணீர் திறப்பு அதிகரிக்கப்பட்டு உள்ளதால், அணையின் நீர்மட்டம், இன்று காலை 119.26 கன அடியாக சரிந்தது.
Next Story






