என் மலர்
சேலம்
- பல நூறு ஆண்டுகள் பழமையான சென்றாய பெருமாள் கோவில். இந்து சமய அறநிலைய துறைக்கு சொந்தமான இக்கோவிலில் வருடா வருடம் வைகுண்ட ஏகாதசி கொண்டாடுவது வழக்கம்.
- அதன்படி இந்த ஆண்டு வைகுண்ட ஏகாதசி விழா நடைபெற்றது.
ஓமலூர்:
சேலம் மாவட்டம் ஓமலூர் அருகே உள்ள
பாகல்பட்டியில் அமைந்துள்ளது பல நூறு ஆண்டுகள் பழமையான சென்றாய பெருமாள் கோவில். இந்து சமய அறநிலைய துறைக்கு சொந்தமான இக்கோவிலில் வருடா வருடம் வைகுண்ட ஏகாதசி கொண்டாடுவது வழக்கம்.
அதன்படி இந்த ஆண்டு வைகுண்ட ஏகாதசி விழா நடைபெற்றது. நேற்று சுவாமி திருக்கல்யாண உற்சவ வைபவம் நடை பெற்றது . இதில் சென்றாய பெருமாள் சமேத லட்சுமி அம்மாள் மற்றும் துளசி அம்மாள் கல்யாண வைப வம் நடைபெற்றது. இதில் ஸ்ரீ சென்றாய பெரு மாள் சுவாமி மாப்பிள்ளை கோலத்திலும் மற்றும் ஸ்ரீ லட்சுமியம்மாள் ஸ்ரீ துளசி அம்மாள் மண மகள் கோலத்திலும் அலங்க ரிக்கப்பட்டு திருமாங்கல்யம் கட்டப்பட்டு மாலை மாற்றப்பட்டு சிறப்பு பூஜை கள் செய்யப்பட்டது.
இதில் ஓமலூர் சுற்று வட்டார பகுதியை சேர்ந்த நூற்றுக்கணக்கான பொது மக்கள் கலந்து கொண்டு திருக்கல்யாணத்தை கண்டுக்களித்தனர். தொடர்ந்து சுவாமிக்கு சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு சிறப்பு பூஜைகள் செய்யப்பட்டது. இதில் நூற்றுக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டனர்.
இதைத் தொடர்ந்து இன்று காலை 4.30 மணிக்கு
பரமபத வாசல் எனப்படும் சொர்க்கவாசல் திறக்கப்பட்டு பாகல்பட்டி ஸ்ரீ சென்றாய பெருமாள் பக்தர்களுக்கு காட்சி தந்தார். இதில் நூற்றுக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டனர்.
இதே போன்று தொளசம்பட்டி சென்றாய பெருமாள் கோவிலிலும், ஓமலூர் கோட்டை பெருமாள் கோவிலில் சொர்க்கவாசல் திறக்கப்பட்டது. ஓமலூர் சுற்றுவட்டார பகுதியைச் சேர்ந்த பல்வேறு பெருமாள் கோவில் சொர்க்கவாசல் திறக்கப்பட்டது. இதில் ஆயி ரக்கணக்கான பொதுமக்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனர்.
- மேட்டூர் அணைக்கு நேற்று காலை விநாடிக்கு 4,081 கன அடியாக இருந்த நீர்வரத்து, இன்று காலை 3,942 கன அடியாக சரிந்தது.
- மேட்டூர் அணைக்கு வரும் தண்ணீரை காட்டிலும், திறப்பு அதிகமாக இருப்பதால் நீர்மட்டம் சரிந்து வருகிறது.
சேலம்:
காவிரி நீர்ப்பிடிப்பு பகுதிகளில் மழை இல்லாததால் தர்மபுரி மாவட்டம் ஒகேனக்கல் காவிரியில், நீர்வரத்து விநாடிக்கு 6,000 கனஅடியாக நீடிக்கிறது.
அதே சமயம், மேட்டூர் அணைக்கு நேற்று காலை விநாடிக்கு 4,081 கன அடியாக இருந்த நீர்வரத்து, இன்று காலை 3,942 கன அடியாக சரிந்தது.
மேட்டூர் அணையில் இருந்து காவிரி டெல்டா பாசனத்திற்காக விநாடிக்கு 12,000 கன அடி தண்ணீர் காவிலி ஆற்றிலும், கிழக்கு, மேற்கு கால்வாய் பாசனத்திற்காக விநாடிக்கு 400 கன அடியும் தண்ணீர் கால்வாயிலும் திறக்கப்பட்டு வருகிறது.
அணைக்கு வரும் தண்ணீரை காட்டிலும், திறப்பு அதிகமாக இருப்பதால் நீர்மட்டம் சரிந்து வருகிறது. நேற்று 118.79 அடியாக இருந்த நீர்மட்டம், இன்று காலை 8 மணிக்கு 118.31 அடியாக சரிந்தது.
- ஒகேனக்கல் காவிரியில் நீர்வரத்து விநாடிக்கு 6,000 கன அடியாக நீடிக்கிறது.
- மேட்டூர் அணைக்கு விநாடிக்கு 5,067 கன அடியாக இருந்த நீர்வரத்து, நேற்று காலை 4012 கனஅடியாக சரிந்தது.
மேட்டூர்:
காவிரி நீர்ப்பிடிப்பு பகுதிகளில் மழை இல்லாததால், ஒகேனக்கல் மற்றும் மேட்டூர் அணைக்கான நீர்வரத்து குறைந்து உள்ளது.
ஒகேனக்கல் காவிரியில் இன்று நீர்வரத்து விநாடிக்கு 6,000 கன அடியாக நீடிக்கிறது.
அதே சமயம், மேட்டூர் அணைக்கு விநாடிக்கு 5,067 கன அடியாக இருந்த நீர்வரத்து, நேற்று காலை 4012 கனஅடியாக சரிந்தது.
இன்று காலை நீர்வரத்து சற்று அதிகரித்து விநாடிக்கு 4081 கன அடி தண்ணீர் அணைக்கு வந்து கொண்டிருக்கிறது.
அணையில் இருந்து டெல்டா பாசனத்திற்கு 12000 கன அடியும், கிழக்கு மேற்கு கால்வாய் பாசனத்திற்கு 400 கன அடியும் தண்ணீர் திறந்து விடப்பட்டுள்ளன. நீர் வரத்தை காட்டிலும், நீர் திறப்பு அதிகமாக இருப்பதால், அணையின் நீர்மட்டம் தொடர்ந்து சரிந்து வருகிறது. நேற்று 119.26 அடியாக இருந்த நீர்மட்டம், இன்று 118.79 அடியாக சரிந்துள்ளது.
- வேளாண்மை துறை அலுலவர்கள் மற்றும் கூட்டுறவுத் துறை அலுவலர்கள் அடங்கிய வட்டார அளவிலான கொள்முதல் குழு அமைக்கப்பட்டுள்ளது.
- மேலும் கரும்பு கொள்முதல் தொடர்பான விபரங்கள் உரிய படிவத்தில் பெறப்பட்டு கரும்பு கொள்முதலுக்கான உரிய தொகை விவசாயிகளின் வங்கி கணக்கில் நேரடி யாக செலுத்தப்படும்.
சேலம்:
சேலம் மாவட்ட கலெக்டர் கார்மேகம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவித்துள்ளதாவது;-
தமிழர் திருநாளாம் தைப்பொங்கல் சிறப்பாக கொண்டாடும் வகையில் அரிசி குடும்ப அட்டைதாரர்கள் மற்றும் இலங்கைத் தமிழர் மறு வாழ்வு முகாம்களில் வசிக்கும் குடும்பங்களுக்கும் பொங்கல் பரிசுடன் முழுக் கரும்பும் சேர்த்து
வழங்கப்படும் என
முதலமைச்சர் அறிவித்துள்ளார்.
இதன்படி சேலம் மாவட்டத்தில் 10,73,514 அரிசி பெறும் குடும்ப அட்டைதாரர்கள் மற்றும் 939 இலங்கை தமிழர் மறுவாழ்வு முகாம்களில் வசிக்கும் குடும்பங்களுக்கும் ஆக மொத்தம் 10,74,453 குடும்பங்களுக்கு பொங்கல் பரிசு வழங்கப்பட உள்ளது.
இப்பொங்கல் பரிசு வழங்குவதற்காக 10,74,453 முழு கரும்பு சேலம் மாவட்டத்தில் உள்ள விவசாயிகளிடமிருந்து கொள்முதல் செய்திடும் வகையில் வேளாண்மை துறை அலுலவர்கள் மற்றும் கூட்டுறவுத் துறை அலுவலர்கள் அடங்கிய வட்டார அளவிலான கொள்முதல் குழு அமைக்கப்பட்டுள்ளது. இக்குழுவில் உள்ள அலுவ லர்களால் அரசாணையில் தெரிவிக்கப்பட்டுள்ள வழிகாட்டு நெறிமுறை களின்படி கரும்பின் தரம், உயரம் ஆகியவற்றை வேளாண்மை துறை அலுவலர்களால் சரிபார்க்கப்பட்டு விவ சாயி களிடமிருந்து நேரடியாக கரும்பு கொள்முதல் செய்யப்பட உள்ளது.
மேலும் கரும்பு கொள்முதல் தொடர்பான விபரங்கள் உரிய படிவத்தில் பெறப்பட்டு கரும்பு கொள்முதலுக்கான உரிய தொகை விவசாயிகளின் வங்கி கணக்கில் நேரடி யாக செலுத்தப்படும். எனவே, பொங்கல் பரிசு தொகுப்புடன் வழங்கக்கூடிய கரும்பு கொள்முதல் தொடர்பாக இடைத்தரகர்களையோ, இதர நபர்களையோ நம்ப வேண்டாம் என விவசாயிகள் கேட்டுக்கொள்ளப்படு கிறார்கள்.
சேலம் மாவட்டத்தில் பன்னீர் கரும்பு அதிகள
வில் சாகுபடி செய்யப்பட்டுள்ளதால், இதர மாவட்ட அலுவ லர்களும் சேலம் மாவட்டத்தில் கரும்பு கொள்முதல் செய்யலாம். எனவே விவசாயிகள் தங்களிடம் கொள்முதல் செய்ய வரும் அலுவலர்கள் குறித்த முழுமையான விவரம் மற்றும் எந்த
மாவட்டத்திற்கு தங்களிட மிருந்து கரும்பு கொள்முதல் செய்யப்படுகிறது போன்ற விவரங்களை அறிந்து கொள்ளவேண்டும். இது தொடர்பாக உதவி மைய தொலைபேசி எண்.0427-2415784 மற்றும் 7338721707 என்ற எண்களில் தொடர்பு கொள்ளலாம். இவ்வாறு கலெக்டர் கார்மேகம் தெரிவித்துள்ளார்.
- இன்று அதிகாலை அப்பகுதி மக்கள் இந்த ஏரிக்கு குளிக்க சென்றனர்.
- 40 வயது மதிக்கத்தக்க ஆண் ஒருவர் பிணமாக மிதப்பதை கண்டு பூலாம்பட்டி போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர்.
எடப்பாடி:
சேலம் மாவட்டம் எடப்பாடி அருகே உள்ளது வெள்ளரி வெள்ளி கிராமம். இங்கு எடப்பாடி-கோனேரிப்பட்டி பிரதான சாலையை ஒட்டி பெரிய அளவிலான ஏரி அமைந்துள்ளது.
இன்று அதிகாலை அப்பகுதி மக்கள் இந்த ஏரிக்கு குளிக்க சென்றனர். அங்கு கரையோரம் தண்ணீரில் சுமார் 40 வயது மதிக்கத்தக்க ஆண் ஒருவர் பிணமாக மிதப்பதை கண்டு பூலாம்பட்டி போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர்.
ஈரோட்டை சேர்ந்தவர்
இதையடுத்து பூலாம்பட்டி போலீசார் மற்றும் எடப்பாடி தீயணைப்புத் துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து ஏரியில் பிணமாக மிதந்தவர் உடலை மீட்டு விசாரணை மேற்கொண்டனர்.
விசாரணையில், அவர் ஈரோடு மாவட்டம் வெள்ளிதிருப்பூரைச் சேர்ந்த சரவணன் (வயது 45), என்பதும், அவர் கடந்த வெள்ளிக்கிழமை அன்று வெள்ளரிவெள்ளி பகுதியில் உள்ள தனது மாமனார் வீட்டிற்கு விருந்தாளியாக வந்து விட்டு, மீண்டும் தனது சொந்த ஊருக்கு செல்வதாக கூறி விட்டு சென்ற அவர் ஏரியில் சடலமாக மிதந்ததும் தெரிய வந்தது.
வழக்குப்பதிவு
விருந்தாளியாக வந்த நபர் ஏரியில் பிணமாக மிதந்தது எப்படி? என பூலாம்பட்டி போலீசார், வழக்கு பதிவு செய்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
ஊருக்கு வந்த விருந்தாளி மர்மமான முறையில் இறந்த சம்பவம் அந்த பகுதி மக்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
- சேலம் மாவட்ட போலீஸ் சூப்பி ரண்டாக மாவட்ட காவல் அலுவலகத்தில் பொறுப்பேற்றுக் கொண்டார்.
- சேலம் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டாக பணியாற்றிய ஸ்ரீ அபிநவ், கடந்த சில தினங்களுக்கு முன்பு தெலுங்கானா மாநிலம் ஐதராபாத் போலீஸ் அகடாமிக்கு மாறுதல் செய்யப்பட்டார்.
சேலம்:
சேலம் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டாக பணியாற்றிய ஸ்ரீ அபிநவ், கடந்த சில தினங்களுக்கு முன்பு தெலுங்கானா மாநிலம் ஐதராபாத் போலீஸ் அகடாமிக்கு மாறுதல் செய்யப்பட்டார்.
இந்த நிலையில் சென்னை வண்டலூர் போலீஸ் அகடாமி துணை இயக்குனராக பணியாற்றிய டாக்டர் சிவகுமார் சேலம் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டாக நியமிக்கப்பட்டார்.
அதைத்தொடர்ந்து இன்று காலை சேலம் மாவட்ட போலீஸ் சூப்பி ரண்டாக மாவட்ட காவல் அலுவலகத்தில் பொறுப்பேற்றுக் கொண்டார். இவருக்கு ஏடிஎஸ்பிக்கள் செல்ல பாண்டியன், கென்னடி, ராஜ காளீஸ்வரன்,மாவட்டத்தில் உள்ள டிஎஸ்பிக்கள், இன்ஸ்பெக்டர்கள்,நேரில் வந்து வாழ்த்து தெரிவித்த னர். அதைத்தொடர்ந்து போலீஸ் சூப்பிரண்டு டாக்டர் சிவகுமார் மாவட்டத்திலுள்ள தனிப்பிரிவு போலீசார் உடன் ஆலோசனை நடத்தினார்.
பின்னர் அவர் நிருபர்களிடம் கூறியதாவது:- பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான குற்ற நடவடிக்கையில் ஈடுபடுபவர் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும், தமிழக அரசால் தடை செய்யப்பட்ட லாட்டரி, குட்கா, கள்ளச்சாராயம், விற்பவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும்,ரவுடிகள் ஒடுக்கப்படுவார்கள்,குற்றப் பின்னணி கொண்ட ரவுடிகள் கண்காணிக்கப்ப டுவார்கள்,காவல் நிலையங்களுக்கு வரும் ஏழைகள் தரும் மனுக்கள் மீது உரிய நடவடிக்கை எடுத்து நிவர்த்தி செய்ய நடவடிக்கை எடுக்கப்படும்.
மேலும் குற்றவாளி களுடன் கைகோர்க்கும் காவலர்கள் யாராக இருந்தாலும் அவர்கள் மீது மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும். இவ்வாறு அவர் கூறினார்.
- தாரமங்கலம் நகராட்சி 18-வது வார்டு முத்து முனியப்பன் கோவில் தெருவில் வசிக்கும் நெசவு தோழிலாளிக்கு அரிவாள் வெட்டு.
- இவர்களுக்கு ஒரு மகன் உள்ள நிலையில் சந்தான கோபால் சரியாக வேலைக்கு செல்லாமல் வீட்டில் மனைவியுடன் அடிக்கடி தகராறு செய்து வந்துள்ளார்.
தாரமங்கலம்:
தாரமங்கலம் நகராட்சி 18-வது வார்டு முத்து முனியப்பன் கோவில் தெருவில் வசிக்கும் நெசவு தோழிலாளி கங்காதரன் (வயது30). இவருடைய தங்கையை தாரமங்கலம் சக்கரை விநாயகர் கோவில்
பகுதியை சேர்ந்த சந்தான கோபால் (38) என்பவருக்கு கடந்த 6 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் செய்து
வைத்துள்ளனர். இவர்களுக்கு ஒரு மகன் உள்ள நிலையில் சந்தான கோபால் சரியாக வேலைக்கு செல்லாமல் வீட்டில் மனைவியுடன் அடிக்கடி தகராறு செய்து வந்துள்ளார்.
மேலும் பணம் வாங்கி வரச்சொல்லியும் தொந்தரவு செய்து வந்துள்ளார். கங்காதரன் இதனை கண்டித்து வந்த தால் ஆத்திரம் அடைந்த சந்தானகோபால் நேற்று மதியம் கங்காதரன் வீட்டிற்கு சென்று தகாத வார்த்தையால் பேசி, பின்னர் தான் மறைத்து வைத்து இருந்த அரிவாளை எடுத்து கங்காதரன் வெட்டி யுள்ளார்.
கங்காதரன் அங்கி ருந்து தப்பி ஓடிய போது அவரை தொடர்ந்து விரட்டி சென்று வெட்டியுள்ளார். அக்கம் பக்கத்தினர் ஓடி வரவே சந்தானகோபால் அங்கிருந்து ஓடிவிட்டார். பின்னர் உறவினர்கள் மீட்டு ஓமலூர் அரசு மருத்துவ மனையில் அனுமதிக்கபட்டு முதல் உதவி சிகிச்சை அளித்து பின்னர் மேல் சிகிச்சைக்காக சேலம் அரசு மருத்துவ மனைக்கு அனுப்பி வைத்துள்ளனர். இதுபற்றி கங்காதரனிடம் வாக்கு மூலம் பெற்று தாரமங்கலம் போலீசார் சந்தானகோபாலை கைது செய்து சிறையில் அடைத்தனர்.
குடும்ப தகராறில் மைத்துனரை அரிவா ளால் வெட்டிய சம்பவம்
தாரமங்கலம் பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
- கொரோனா காலத்தில் ஒப்பந்த அடிப்படையில் செவிலியர்கள் 31 மாதங்கள் பணிபுரிந்து வந்தனர்.
- நேற்றுடன் அவர்களை எந்த முன் அறிவிப்பின்றி பணிநீக்கம் செய்து உள்ளனர்.
சேலம்:
சேலம் அரசு ஆஸ்பத்திரிகளில் கொரோனா காலத்தில் ஒப்பந்த அடிப்படையில் செவிலியர்கள் 31 மாதங்கள் பணிபுரிந்து வந்தனர். நேற்றுடன் அவர்களை எந்த முன் அறிவிப்பின்றி பணிநீக்கம் செய்து உள்ளனர்.ஒப்பந்த காலத்தில் 6 மாத காலம் ஊதியம் வழங்காமல் உள்ளது. அதை உடனே வழங்க வேண்டும்.முறையாக எம்.ஆர்.பி தகுதி தேர்வின் அடிப்படையில் பணியமர்த்திய ஒப்பந்த செவிலியர்களை பணிநிரந்தம் செய்ய வேண்டும். இது தொடர்பான தேர்தல் வாக்குறுதியை நிறைவேற்ற வேண்டும். உள்பட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி இன்று காலை சேலம் கலெக்டர் அலுவலகத்தில் ஒப்பந்த செவிலியர்கள் 50-க்கும் மேற்பட்டோர் போராட்டத்தில் ஈடுபட்டனர். இது குறித்து தகவல் அறிந்து டவுன் போலீசார் மற்றும் அதிகாரிகள் சம்பவ இடத்திற்கு வந்து அவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். அவர்களை அங்கிருந்து வெளியேற்றினர். பின்னர் அவர்கள் கலெக்டர் அலுவலகம் அருகில் நாட்டாண்மை கட்டிடம் முன்பு ரோட்டில் உட்கார்ந்து போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். தொடர்ந்து அவர்களிடம் அதிகாரிகள் பேச்சுவார்த்தை நடத்தி வருகின்றனர். போராட்டத்திற்கு உரிய அனுமதி பெற வேண்டும் . இல்லை யென்றால் உங்களை கைது செய்வோம் என போலீசார் தெரி வித்தனர். எங்களுக்கு பணி பாதுகாப்பு கிடைக்கும் வரை இந்தப் போராட்ட த்தில் ஈடுபடுவோம் செவிலிய ர்கள் கூறினார்கள். இந்த சம்பவத்தால் அந்தப் பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.
- புத்தாண்டு கொண்டாட்டத்தின்போது நண்பர்களுடன் மது அருந்திய வாலிபர் பலியான சம்பவம் குடும்பத்தினர் மத்தியில் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.
- ஏற்காடு போலீஸ் இன்ஸ்பெக்டர் செந்தில் ராஜமோகன் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகிறார்.
ஏற்காடு:
சேலம் மாவட்டம் மல்லூர் வேங்காம்பட்டியை சேர்ந்தவர் அண்ணாமலை. இவருடைய மகன் சந்தோஷ் (வயது 23). இவர், பிரசித்தி பெற்ற சுற்றுலா தலமான ஏற்காட்டுக்கு நேற்று மாலையில் புத்தாண்டை கொண்டாட நண்பர்கள் 9 பேருடன் வந்தார். அங்கு அவரும் மற்றும் நண்பர்கள் சேர்ந்து தனியார் தங்கும் விடுதியில் அறை எடுத்து தங்கி புத்தாண்டை கொண்டாடும் வகையில் ஏற்பாடுகள் செய்தனர். நள்ளிரவில் கொண்டாடுவதற்காக அறையில் அசைவ உணவுகள், மது பாட்டில்கள் வாங்கி வைத்திருந்தனர்.
தொடர்ந்து நள்ளிரவில் அவர்கள் அனைவரும் கேக் வெட்டி புத்தாண்டை கொண்டாட தொடங்கினர். அப்போது மது விருந்து நடைபெற்றது. அப்போது சந்தோஷ் மது குடித்ததாக கூறப்படுகிறது. தொடர்ந்து அசைவ உணவுகள் சாப்பிட்டனர். அப்போது சந்தோஷ் திடீரென மூச்சு திணறல் ஏற்பட்டு மயங்கி விழுந்தார்.
உடனே அவரை நண்பர்கள் ஏற்காட்டில் உள்ள அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். அங்கு அவரை பரிசோதித்த டாக்டர்கள் அவர் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர். இந்த சம்பவம் குறித்து ஏற்காடு போலீஸ் இன்ஸ்பெக்டர் செந்தில் ராஜமோகன் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகிறார்.
விசாரணையில், சந்தோஷ் நேற்று முதல் முறையாக மது குடித்த போது, உடலுக்கு ஒத்துக்கொள்ளாத நிலையில் மூச்சு திணறல் ஏற்பட்டு புத்தாண்டு கொண்டாட்டத்தில் இறந்தது தெரியவந்தது. இறந்த சந்தோஷூக்கு மனைவியும், ஒரு குழந்தையும் உள்ளனர்.
ஏற்காட்டில் புத்தாண்டு கொண்டாட்டத்தின்போது, நண்பர்களுடன் மது அருந்திய வாலிபர் பலியான சம்பவம் குடும்பத்தினர் மத்தியில் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.
- சேலத்தில் புகையிலை பொருட்கள் கடத்திய 2 பேர் கைது செய்யபப்ட்டனர்.
- அவர்களிடம் இருந்து ரூ.1.50 லட்சம் மதிப்பிலான புகையிலை பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டன.
சேலம்:
மைசூரில் இருந்து மயிலாடுதுறை செல்லும் விரைவு ரெயில் நேற்று நள்ளிரவு தருமபுரி அருகே வந்தது. அப்போது ரெயில்வே போலீசார் கண்காணிப்பில் ஈடுபட்டனர். அதில் புதுக்கோட்டை யைச் சேர்ந்த மொய்தீன் மற்றும் அப்துல் சலாம் ஆகியோர் சந்தேகப் படும் வகையில் 5 பைகளை வைத்திருந்தனர்.
ரெயில்வே போலீசார் கைபைகளை சோதனை செய்த போது அதில் பான்பராக் மற்றும் குட்கா ,புகையிலை பொருட்கள் இருந்தது. இதையடுத்து புதுக்கோட்டையைச் சேர்ந்த மொய்தீன் மற்றும் அப்துல் சலாம் ஆகிய 2 பேரையும் போலீசார் கைது செய்தனர்.
அவர்களிடம் இருந்து ரூ.1.50 லட்சம் மதிப்பிலான புகையிலை பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டன. சேலம் ஜங்ஷன் ரெயில்வே போலீ சார் இதுபற்றி விசாரணை நடத்தி வருகின்றனர்.
- சேலம் பள்ளப்பட்டியில் நாய் துரத்தியதை தட்டிக்கேட்ட மூதாட்டி தாக்கப்பட்டார்.
- இது தொடர்பாக 8 பேர் மீது போலீசார் வழக்கு பதிவு செய்தனர்.
சேலம்:
சேலம் பள்ளப்பட்டி அங்கம்மாள் காலனி அருகே உள்ள சின்னேரி வயக்காடு பாரதியார் தெருவை சேர்ந்தவர் சோலையப்பன். இவரது மனைவி மாதேஸ்வரி (வயது 67). இவரது பேரன் சச்சின், தெருவில் விளையாடிக் கொண்டிருந்தான். அப்போது அங்கிருந்த ஒரு நாய், சச்சினை துரத்தி கடிக்க துரத்தியது. இதனால் பயந்து போன சச்சின் தலை தெறிக்க ஓடினான்.
இதைக் கண்ட அவரது பாட்டி மாதேஸ்வரி, அவரது வீட்டுக்கு அருகில் வசிக்கும் கோவிந்தராஜ் மனைவி கனகா (31) என்பவரிடம், உங்கள் வீட்டு நாய் ஏன் என் பேரனை துரத்துகிறது. அதை கட்டி வைக்க மாட்டீர்களா என்று தட்டி கேட்டுள்ளார். இதில் ஆத்திரம் அடைந்த கனகா, கோவிந்தராஜன் ஆகியோர் மாதேஸ்வரியை தாக்கி உள்ளனர்.
இதில் காயமடைந்த அவர், சேலம் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். இதுகுறித்த புகாரின் பேரில் பள்ளப்பட்டி போலீசார் விசாரணை நடத்தினர். இந்த நிலையில் கனகா மற்றும் கோவிந்தராஜ் ஆகியோரை மாதேஸ்வரியின் உறவினர்கள் தாக்கியதாக கொடுத்த புகார் பேரிலும், 8 பேர் மீது வழக்கு பதிவு செய்து போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
- அயோத்தியபட்டினத்தை அடுத்த முட்டை கடை பகுதியில் மாதேஸ்வரன் என்பவரின் குடிசை வீடு உள்ளது. இந்த வீட்டில் நேற்று திடீரென தீ விபத்து ஏற்பட்டது.
- இதுபற்றி உடனடியாக செவ்வாய்பேட்டை தீயணைப்புத் துறையின ருக்கு தகவல் தெரிவித்து தீயணைப்புத்துறை விரைந்து வந்து தீயை கட்டுக்குள் கொண்டு வந்தனர்.
சேலம்:
சேலம் மாவட்டம் அயோத்தியபட்டினத்தை அடுத்த முட்டை கடை பகுதியில் மாதேஸ்வரன் என்பவரின் குடிசை வீடு உள்ளது. இந்த வீட்டில் நேற்று திடீரென தீ விபத்து ஏற்பட்டது. இதுபற்றி உடனடியாக செவ்வாய்பேட்டை தீயணைப்புத் துறையின ருக்கு தகவல் தெரிவித்து தீயணைப்புத்துறை விரைந்து வந்து தீயை கட்டுக்குள் கொண்டு வந்தனர். மேலும் வீடு மற்றும் வீட்டிலிருந்த பொருட்கள் முழுவதும் எரிந்து நாசமடைந்தது வீட்டிலிருந்த சிலிண்டரை உடனடியாக அப்புறப்படுத்தியதால் பெரும் விபத்து தவிர்க்கப்பட்டது. மேலும் வீட்டில் வைக்கப்பட்டுள்ள ரூ.50 ஆயிரம் மற்றும் குடும்ப அட்டை மற்றும் வாக்காளர் அடையாள அட்டை, ஆதார் கார்டு உள்ளிட்ட பொருட்களும் தீயில் எரிந்து நாசம் ஆயின. இதை குறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.






