என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    மாமனார் வீட்டுக்கு விருந்தாளியாக வந்த தொழிலாளி மர்ம சாவு
    X

    தொழிலாளி உடலை ஏரியில் இருந்து தீயணைப்பு துறையினர் மீட்கும் காட்சி. 

    மாமனார் வீட்டுக்கு விருந்தாளியாக வந்த தொழிலாளி மர்ம சாவு

    • இன்று அதிகாலை அப்பகுதி மக்கள் இந்த ஏரிக்கு குளிக்க சென்றனர்.
    • 40 வயது மதிக்கத்தக்க ஆண் ஒருவர் பிணமாக மிதப்பதை கண்டு பூலாம்பட்டி போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர்.

    எடப்பாடி:

    சேலம் மாவட்டம் எடப்பாடி அருகே உள்ளது வெள்ளரி வெள்ளி கிராமம். இங்கு எடப்பாடி-கோனேரிப்பட்டி பிரதான சாலையை ஒட்டி பெரிய அளவிலான ஏரி அமைந்துள்ளது.

    இன்று அதிகாலை அப்பகுதி மக்கள் இந்த ஏரிக்கு குளிக்க சென்றனர். அங்கு கரையோரம் தண்ணீரில் சுமார் 40 வயது மதிக்கத்தக்க ஆண் ஒருவர் பிணமாக மிதப்பதை கண்டு பூலாம்பட்டி போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர்.

    ஈரோட்டை சேர்ந்தவர்

    இதையடுத்து பூலாம்பட்டி போலீசார் மற்றும் எடப்பாடி தீயணைப்புத் துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து ஏரியில் பிணமாக மிதந்தவர் உடலை மீட்டு விசாரணை மேற்கொண்டனர்.

    விசாரணையில், அவர் ஈரோடு மாவட்டம் வெள்ளிதிருப்பூரைச் சேர்ந்த சரவணன் (வயது 45), என்பதும், அவர் கடந்த வெள்ளிக்கிழமை அன்று வெள்ளரிவெள்ளி பகுதியில் உள்ள தனது மாமனார் வீட்டிற்கு விருந்தாளியாக வந்து விட்டு, மீண்டும் தனது சொந்த ஊருக்கு செல்வதாக கூறி விட்டு சென்ற அவர் ஏரியில் சடலமாக மிதந்ததும் தெரிய வந்தது.

    வழக்குப்பதிவு

    விருந்தாளியாக வந்த நபர் ஏரியில் பிணமாக மிதந்தது எப்படி? என பூலாம்பட்டி போலீசார், வழக்கு பதிவு செய்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

    ஊருக்கு வந்த விருந்தாளி மர்மமான முறையில் இறந்த சம்பவம் அந்த பகுதி மக்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

    Next Story
    ×