என் மலர்
சேலம்
- கந்துவட்டி கொடுமையால் கணவன்-மனைவி விஷம் குடித்து தற்கொலை செய்த சம்பவம், அந்தப் பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
- போலீசார் கைப்பற்றி தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
சேலம்:
சேலம் அழகாபுரம் பெரியபுதூர் பகுதியை சேர்ந்தவர் ராஜேந்திரன் (வயது 66). இவரது மனைவி சாந்தி (55). இவருக்கு ராமகவுண்டர், ராமவேல் என்ற மகன்களும், தமிழரசி என்ற மகளும் உள்ளனர். இவர்கள் அனைவருக்கும் திருமணமாகி விட்டது. மகன்கள் இருவரும் மாடியிலும், பெற்றோர் வீட்டின் கீழ் தளத்திலும் வசித்து வருகின்றனர்.
இன்று காலை ராமவேல் கீழே இறங்கி வந்தபோது, பெற்றோர் வீடு திறந்து இருந்தது. உள்ளே சென்று பார்த்த போது ராஜேந்திரன், சாந்தி ஆகியோர் இறந்து கிடந்தனர். இதை பார்த்து அதிர்ச்சியடைந்த ராமவேல், அழகாபுரம் போலீசுக்கு தகவல் தெரிவித்தார். அதன்பேரில் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று, 2 பேரின் உடலை மீட்டு சேலம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்து விசாரணை நடத்தினர்.
விசாரணையில், ராஜேந்திரன் பூர்வீகமாக வசித்து வந்த வீட்டை, அதே பகுதியை சேர்ந்த நடேசன் என்பவரிடம் 5 வருடத்திற்கு முன்பு பத்திரம் அடமானம் வைத்து ரூ.19 லட்சம் வாங்கியதாக கூறப்படுகிறது. அதற்கு வட்டியும் கொடுக்கவில்லை என தெரிகிறது. இதையடுத்து நடேசன் வட்டியும், அசலும் சேர்த்து ரூ.40 லட்சம் கொடுக்க வேண்டும். இல்லையென்றால் வீட்டை எழுதி கொடுக்க வேண்டும என அடிக்கடி தொந்தரவு செய்துள்ளார்.
இதனால் ராஜேந்திரன் அருகில் உள்ள அசோக் என்பவரிடம் வீட்டை விற்று விட்டு உங்களுக்கு கடனை கொடுத்து விடுகிறேன் என்று கூறியுள்ளார். இந்நிலையில், நடேசன் நேற்று மீண்டும் பணம் கேட்டதால் மனமுடைந்த ராஜேந்தின், சாந்தி ஆகியோர் பூச்சி மருந்தை வாங்கி வந்து, தண்ணீரில் கலந்து தற்கொலை செய்து கொண்டது தெரியவந்துள்ளது.
இந்நிலையில் கணவன்-மனைவி இறந்து கிடந்த இடத்தில் ஒரு கடிதம் கிடந்தது. அதில், எங்கள் சாவுக்கு காரணம் நடேசன், அவரது குடும்பத்தினர் என்றும், கந்துவட்டி கொடுமை குறித்தும் உருக்கமாக எழுதியிருந்தது. அதை போலீசார் கைப்பற்றி தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
கந்துவட்டி கொடுமையால் கணவன்-மனைவி விஷம் குடித்து தற்கொலை செய்த சம்பவம், அந்தப் பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
- விஜயபாஸ்கரனையும் அவரது தம்பி கவுரிசங்கரனையும் மிரட்டி ரூ.15 லட்சம் பணம் கொடுத்தால்தான் விடுவோம்.
- ஓமலூர் அருகே கருப்பூர் சுங்கசாவடி அருகே 2 பேரையும் இறக்கிவிட்டு அதே காரில் தப்பி சென்று விட்டனர்.
சேலம் மாவட்டம், குகை பகுதியை சேர்ந்தவர் விஜயபாஸ்கரன் (வயது45). இவரது தம்பி கவுரிசங்கரன் (42). இவர்கள் 2 பேரும் ரியல் எஸ்டேட் தொழில் செய்து வருகின்றனர்.
இந்நிலையில் கிருஷ்ணகிரி மாவட்டம், பாகலூர் பகுதியில் குறைந்த விலைக்கு நிலம் உள்ளதாகவும், நேரில் வந்து பேசி முடித்து கொள்ளலாம் என்று சக்தி (ஏ) சத்தியராஜ் என்பவர் அழைத்துள்ளார்.
இதையடுத்து விஜயபாஸ்கரனும் அவரது தம்பியும் காரில் புறப்பட்டு கிருஷ்ணகிரி சென்றுள்ளனர். அங்கு சக்தி, தனது கூட்டாளிகளான செல்வகுமார், பன்னீர்செல்வம் ஆகியோருடன் காத்திருந்துள்ளனர். பின்னர் அங்கிருந்து நிலத்தை பார்க்க போகலாம் என்று கூறி புறப்பட்டுள்ளனர்.
அப்போது செல்லும் வழியிலேயே சக்தி யாருக்கோ செல்போன் மூலம் பேசி வர சொல்லியுள்ளார். இதையடுத்து 2 கார்கள் மற்றும் மோட்டார் சைக்கிளில் சுமார் 10 பேர் கொண்ட கும்பல் வந்து காரை மறித்துள்ளனர்.
அந்த கும்பலுடன் சக்தியும் சேர்ந்து விஜயபாஸ்கரனையும் அவரது தம்பி கவுரிசங்கரனையும் மிரட்டி ரூ.15 லட்சம் பணம் கொடுத்தால்தான் விடுவோம். இல்லையென்றால் கொலை செய்து விடுவோம் என்று மிரட்டியுள்ளனர்.
பின்னர் விஜயபாஸ்கரன், கவுரிசங்கரன் அணிந்திருந்த ரூ.60 ஆயிரம் மதிப்பிலான தங்க சங்கிலிகள், ரூ.8 ஆயிரம் பணம் முதலியவற்றை பறித்து கொண்டு வெற்று பத்திரத்தில் 2 பேரிடமும் கையெழுத்து வாங்கியுள்ளனர்.
பின்னர் விஜயபாஸ்கரன் வந்த காரிலேயே அவர்களை சேலம் நோக்கி அழைத்து வந்த சக்தி உள்ளிட்ட கும்பல் ஓமலூர் அருகே கருப்பூர் சுங்கசாவடி அருகே 2 பேரையும் இறக்கிவிட்டு அதே காரில் தப்பி சென்று விட்டனர்.
இந்த சம்பவம் குறித்து சேலம் போலீசில் விஜயபாஸ்கரன் புகார் செய்தார். இந்த புகார் பாகலூர் போலீசாருக்கு மாற்றப்பட்டது. அந்த புகாரின் பேரில் சக்தி உள்ளிட்ட கும்பல் மீது வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.
- மேட்டூர் அணைக்கு வரும் தண்ணீரை விட அணையில் இருந்து கூடுதல் தண்ணீர் திறந்து விடப்படுவதால் அணை நீர்மட்டம் வேகமாக சரிந்து வருகிறது.
- நேற்று 106.02 அடியாக இருந்த மேட்டூர் அணை நீர்மட்டம், இன்று 105.54 அடியாக சரிந்தது.
மேட்டூர்:
கர்நாடகா மற்றும் தமிழக காவிரி நீர் பிடிப்பு பகுதிகளில் மழை குறைந்ததால், மேட்டூர் அணைக்கு நீர்வரத்து படிப்படியாக சரிந்து வருகிறது.
நேற்று வினாடிக்கு 847 கன அடியாக இருந்த நீர்வரத்து, இன்று காலை நிலவரப்படி வினாடிக்கு 819 கன அடியாக சரிந்தது. அணையிலிருந்து டெல்டா பாசனத்திற்காக வினாடிக்கு 8 ஆயிரம் கன அடி தண்ணீர் திறந்து விடப்படுகிறது.
அணைக்கு வரும் தண்ணீரை விட அணையில் இருந்து கூடுதல் தண்ணீர் திறந்து விடப்படுவதால் அணை நீர்மட்டம் வேகமாக சரிந்து வருகிறது. நேற்று 106.02 அடியாக இருந்த மேட்டூர் அணை நீர்மட்டம், இன்று 105.54 அடியாக சரிந்தது.
- உறவினரை பார்க்க தனது மொபட்டில் தாதகாப்பட்டியில் இருந்து நெத்திமேடு நோக்கி சென்று கொண்டிருந்தார்.
- திருமண மண்டபம் அருகே அவரிடம் இருந்து மர்ம நபர் நகைகள், பணம் பறித்துக் கொண்டு தப்பிச் சென்று விட்டார்.
அன்னதானப்பட்டி:
சேலம் தாதகாப்பட்டி கேட், நெசவாளர் காலனி பகுதியைச் சேர்ந்த 28 வயது இளம்பெண் கடந்த 5- ந் தேதி உறவினரை பார்க்க தனது மொபட்டில் தாதகாப்பட்டியில் இருந்து நெத்திமேடு நோக்கி சென்று கொண்டிருந்தார். அப்போது அன்னதானப்பட்டி எஸ்என்எஸ் திருமண மண்டபம் அருகே அவரிடம் இருந்து மர்ம நபர் நகைகள், பணம் பறித்துக் கொண்டு தப்பிச் சென்று விட்டார்.
இது குறித்த புகாரின் பேரில் வழக்குப் பதிவு செய்த அன்னதானப்பட்டி குற்றப் பிரிவு இன்ஸ்பெக்டர் ராமகிருஷ்ணன் மற்றும் போலீசார் விசாரணை நடத்தி சேலம் அம்மாப்பேட்டை, அல்லிக்குட்டை, சத்தி யமூர்த்தி நகர் பகுதியைச் சேர்ந்தவர் சரவணன் (வயது 45) என்பவரை கைது செய்தனர்.
சர்க்கரை வியாபாரி யான இவர் மீது ஏற்கனவே
இரும்பாலை, கொண்ட
லாம்பட்டி, அன்னதா னப்பட்டி போலீஸ் நிலை யங்களில், தனியாக செல்லும்
காதல் ஜோடி மற்றும் இளம்பெண்களை பின் தொடர்ந்து சென்று, ரகசி யமாக படம் பிடித்து, அவர்களை மிரட்டி நகைகள், பணம் பறித்த வழக்குகள் உள்ளன என்பது குறிப்பிடத்தக்கது. இவர் மீது மேலும் 3 பெண்கள் அளித்த புகாரின் பேரில் அன்னதானப்பட்டி போலீசார் வழக்குப் பதிவு செய்தனர்.
இவர் தொடர்ந்து குற்றச் செயல்களில் ஈடுபட்டு வந்ததால் குண்டர் சட்டத்தில் கைது செய்யப்பட்டு சேலம் மத்திய சிறையில் அடைக்கப்பட்டார்.
இதனைத் தொடர்ந்து பெண்களிடம் நகைகள், பணம் பறித்த வழக்கு தொடர்பாக சிறையில் உள்ள அவரை அன்ன தானப்பட்டி போலீசார் காவலில் எடுத்து விசா ரணை செய்ய கோர்ட்டில் மனுத்தாக்கல் செய்தனர். இதனை ஏற்று நீதிபதி, அவரை ஒரு நாள் காவலில் வைத்து விசாரிக்க அனுமதி அளித்தார். அதன்படி சரவணனிடம் இளம்பெண்கள் பாலியல் புகார்கள், வழிப்பறி தொடர்பாக விசாரித்தனர்.இதனையடுத்து அவரிடம் இருந்து 2 பவுன் நகைகள் மீட்கப்பட்டது. தொடர்ந்து போலீசார் அவரை சிறையில் அடைத்தனர்.
- அன்னதானப்பட்டியில் தார்சாலை அமைப்பதற்காக பணிகள் தொடங்கின.
- கிடப்பில் போடப்பட்ட முழுமையடையாத தார் சாலையால் போக்குவரத்து பாதிக்கப்பட்டு உள்ளது.
சேலம்:
சேலம் - சங்ககிரி மெயின் ரோடு, அன்னதானப்பட்டியில் தார்சாலை அமைப்பதற்காக பணிகள் தொடங்கின. சாலையில் கற்கள் கொட்டப்பட்டு சரிசெய்யப்பட்டது. ஆனால் அதன்பின் பணிகள் நடக்கவில்லை. கிடப்பில் போடப்பட்ட முழுமையடையாத தார் சாலையால் போக்குவரத்து பாதிக்கப்பட்டு உள்ளது.
போக்குவரத்து மிகுந்த காலை மற்றும் மாலை வேளைகளில் எதிரில் உள்ள வாகனங்கள் தெரியாத அளவுக்கு புழுதியை கிளப்புகிறது. தை பிறந்தும் விலகாத பனி படர்ந்தது போல புழுதி பறப்பதால் சாலையில் செல்வோரும், அக்கம்பக்கம் கடைகள் வைத்திருப்பவர்களும் கடுமையாக பாதிக்கபப்டுகிறார்கள்.
புழுதியால் நோயாளிகளும் அவதிக்குள்ளாகின்றனர்.எனவே இந்த சாலையை போர்க்கால அடிப்படையில் சரிசெய்யவேண்டும் என்கின்றனர் மக்கள்.
- இருவரும் தள்ளாத வயதில் இன்று காலை சேலம் கலெக்டர் அலுவலகத்துக்கு வந்தனர்.
- பயிர் கடன் லோன் வாங்குகிறோம் என கூறி எங்களை ஏமாற்றி சொத்துக்களை எழுதி வாங்கி கொண்டார்கள்.
சேலம்:
சேலம் மாவட்டம் டேனீஸ்பேட்டை அருகே உள்ள காடையாம்பட்டி பகுதியைச் சேர்ந்தவர் பெருமாள்(வயது 88). இவரது மனைவி குழந்தை அம்மாள். இவர்கள் இருவரும் தள்ளாத வயதில் இன்று காலை சேலம் கலெக்டர் அலுவலகத்துக்கு வந்தனர். அங்கு கலெக்டர் கார்மேத்திடம் கண்னீர் மல்க ஒரு மனு கொடுத்தனர். அதில் அவர்கள் கூறியிருப்பதாவது:-
எங்களுக்கு 5 மகன்களும், 3 மகள்களும் உள்ளனர். நாங்கள் சுயமாக சம்பாதித்த சொத்துக்களை எனது மகன்கள் காளியப்பன், தங்கராஜ் முருகன் ஆகியோர் பயிர் கடன் லோன் வாங்குகிறோம் என கூறி எங்களை ஏமாற்றி சொத்துக்களை எழுதி வாங்கி கொண்டார்கள். இதுபற்றி கேட்டதற்கு எங்களை மிரட்டுகிறார்கள். இதனால் 7 வருடங்களாக எங்களுடைய சாப்பாட்டிற்கு வழியில்லாமல் தவிக்கிறோம். இதுபற்றி ஏற்கனவே மேட்டூர் ஆர்.டி.ஓ.விடம் மனு கொடுத்தோம். இதனிடையே நாங்கள் தானசெட்டில்மெண்ட் ரத்து செய்ய சென்றதை தெரிந்து கொண்டு அவர்கள் 3 பேரும் அவர்களுடைய மனைவியின் பெயரில் பத்திரத்தை மாற்றிக்கொண்டார்கள். எனவே எங்களை ஏமாற்றி எனது 3 மகன்களும் எழுதிக்கொண்ட தானசெட்டில்மெண்ட் பத்திரத்தை ரத்து செய்து எங்களுடைய சொத்தைமீட்டு எங்களுக்கே மாற்றி தருமாறும் கேட்டுக்கொள்கிறோம்.
இவ்வாறு அவர்கள் கூறியுள்ளனர்.
- சேலம் கருப்பூர் அருகே உள்ள வெள்ளக்கல்பட்டி ஊராட்சி சீனிவாசா நகர் பகுதியில் நள்ளிரவில் மின்விசிறியில் தூக்கிட்டு பெண் தற்கொலை செய்து கொண்டார்.
- உடல் கூறு ஆய்வுக்காக சேலம் மோகன் குமாரமங்கலம் மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
கருப்பூர்:
சேலம் கருப்பூர் அருகே உள்ள வெள்ளக்கல்பட்டி ஊராட்சி சீனிவாசா நகர் பகுதியை சேர்ந்தவர் கோவிந்தராஜ், இவர் எலக்ட்ரீசியன் ஆக பணியாற்றி வருகிறார். இவரது மனைவி கீர்த்தனா( வயது 34). இவர் உடல் நலம் பாதிக்கப்பட்டு அவதிப்பட்டு வந்தார்.
இந்த நிலையில் நள்ளிரவில் மின்விசிறியில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். இது குறித்து தகவல் அறிந்த கருப்பூர் போலீசார் சம்பவ இடத்தில் விருந்து சென்று உடலை கைப்பற்றி உடல் கூறு ஆய்வுக்காக சேலம் மோகன் குமாரமங்கலம் மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இறந்து போன கீர்த்தனாவிற்கு ஒரு மகளும், ஒரு மகனும் உள்ளனர்.
- சேலம் மாவட்டம் கல்வராயன் மலைப்பகுதியில் ஏராளமான கிராமங்களில், பழங்கால மனிதர்கள் பயன்படுத்திய புதிய கற்கால கருவிகளை சேகரித்து கோயில்களில் வைத்து பாதுகாத்து மக்கள் இன்றளவும் வழிபட்டு வருகின்றனர்.
- இதை தொடர்ந்து 6 ஆயிரம் ஆண்டு பழமையான புதிய கற்கால கருவிகளும் இருப்பதை தற்போது கண்டறிந்துள்ளனர்.
வாழப்பாடி:
சேலம் மாவட்டம் கல்வராயன்மலை சேம்பூர், அத்திரிப்பட்டி, கிராங்காடு, குன்னுார் மற்றும் அருநுாற்றுமலை பள்ளிக்காடு, சிறுமலை உள்ளிட்ட கிராமங்களில் 6 ஆயிரம் ஆண்டுகளுக்கு மேல் பழமையானதாக கருதப்படும் புதிய கற்கால கருவிகளும், இறந்தவர்களின் நினைவாக அமைக்கப்படும் ஈமச்சின்னங்களான கற்திட்டைகள் மற்றும் கற்குவைகளும் இன்றளவும் காணப்படுவதை, சேலம் வரலாற்று ஆய்வு மையத்தினர் 3 ஆண்டுகளுக்கு முன் கண்டறிந்தனர்.
இதனைத்தொடர்ந்து சேலம் வரலாற்று ஆய்வு மையத்தை சேர்ந்த ஆறகளூர் வெங்கடேசன், மருத்துவர் பொன்னம்பலம், ஜீவநாராயணன் ஆகியோர் கொண்ட குழுவினர் கல்வராயன் மலை கிராமங்களில் களஆய்வு மேற்கொண்டனர்.
இதில், மண்ணூர் கிராமத்தில் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி அருகிலுள்ள ராமர் கோயிலில், தீபமேற்றும் கல் தூணுக்கு அடியிலும், கோவிலின் முகப்பிலுள்ள சிறிய குடிலுக்குள் வைக்கப்பட்டுள்ள ஒரு அடி உயர ஆஞ்சநேயர் உலோக சிலைக்கு அருகிலும், பழங்கால மக்கள் பயன்படுத்திய, 6 ஆயிரம் ஆண்டு பழமையான புதிய கற்கால கருவிகளும் இருப்பதை தற்போது கண்டறிந்துள்ளனர்.
இந்த கிராமத்தில் விநாயகர் கோவில் அருகே படிக்க முடியாத அளவிற்கு எழுத்துக்கள் அழிந்த நிலையிலுள்ள கல்வெட்டு இருப்பதையும், மொரசம்பட்டி மாரியம்மன் கோயில் முன்பு, முதுமக்களின் நினைவுச்சின்னமாக கருதப்படும் குத்துக்கல் இருப்பதையும், தாழ்வெள்ளம் கிராமத்தில், களக்காம்பாடி சாலையோரத்திலுள்ள பழமையான விநாயகர் கோயிலில் , கைக்கோடாரி வகையை சேர்ந்த புதிய கற்கால கருவிகளை பாதுகாத்து கிராம மக்கள் வழிபட்டு வருவதையும் கண்டறிந்துள்ளனர்.
இதுகுறித்து சேலம் வரலாற்று ஆய்வு மையத்தினர் கூறியதாவது:
'பழங்கால மனிதர்கள் வேட்டையாடுவதற்கு கற்களாலான கருவிகளையே பயன்படுத்தினார்கள். ஒழுங்கற்ற கற்கருவிகளை தேய்த்து வளவளப்பாக்கி பயன்படுத்திய காலம், புதிய கற்காலம் எனவும், அந்த காலகட்டத்தில் மனிதர்கள் பயன்படுத்திய கருவிகளை புதிய கற்காலக் கருவிகள் எனவும் வரலாற்று அறிஞர்கள் குறிப்பிடுகின்றனர்.
சேலம் மாவட்டம் கல்வராயன் மலைப்பகுதியில் ஏராளமான கிராமங்களில், பழங்கால மனிதர்கள் பயன்படுத்திய புதிய கற்கால கருவிகளை சேகரித்து கோயில்களில் வைத்து பாதுகாத்து மக்கள் இன்றளவும் வழிபட்டு வருகின்றனர்.
ஒருபுறம் கூராகவும் மற்றொறுபுறம் தட்டை யாகவும் உள்ள இந்த புதிய கற்கால கருவிகள், சிறிய கைக்கோடாரி வகையை சேர்ந்ததாகும். கூரான முனை இரையை குத்திக் கிழிக்கவும், தட்டையான பகுதி வெட்டவும் பயன்படுத்தப்பட்டு இருக்கலாம்.
இவ்வாறு அவர்கள் கூறினர்.
- சென்னை மேல கோட்டையூர் விளையாட்டு பல்கலைக்கழகத்தில் மாநில அளவிலான 18-வது சீனியர் பாரா அத்லெட்டிக் சாம்பியன்ஷிப் போட்டி நடைபெற்றது.
- இந்த போட்டியில் தமிழ்நாடு முழுவதும் இருந்து 3000-க்கும் மேற்பட்ட மாற்றுத் திறனாளிகள் கலந்து கொண்டனர்.
சேலம்:
தமிழ்நாடு பாரா ஒலிம்பிக் விளையாட்டு சங்கம் சார்பில் சென்னை மேல கோட்டையூர் விளையாட்டு பல்கலைக்கழகத்தில் மாநில அளவிலான 18-வது சீனியர் பாரா அத்லெட்டிக் சாம்பியன்ஷிப் போட்டி நடைபெற்றது. இந்த போட்டியில் தமிழ்நாடு முழுவதும் இருந்து 3000-க்கும் மேற்பட்ட மாற்றுத் திறனாளிகள் கலந்து கொண்டனர். இதில் சேலம் மாவட்டத்தைச் சார்ந்த அலெக்சாண்டர், கௌதமன், பிரபாகரன் ஆகியோர் போட்டியில் கலந்து கொண்டு பதக்கமும் பாராட்டு சான்றிதழும் பெற்றனர். இவர்கள் தேசிய அளவில், புனேவில் நடைபெறும் போட்டியில் பங்கேற்பதற்காக உதவி கேட்டு சேலம் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் மனு அளிதனர்.
- முத்திரை மற்றும் மறுமுத்திரையிடப்படாமல் பயன்படுத்திய மின்னணு தராசுகள் மற்றும் மேஜை தராசுகள் ஆகியவற்றை பறிமுதல் செய்து அபராதம் விதித்தனர்.
- முத்திரை மற்றும் மறு முத்திரையிடாமல் பயன்படுத்தினால் ரூ.5000 முதல் ரூ.25 ஆயிரம் வரை அபராதம் விதிக்கப்படும்.
சங்ககிரி:
நாமக்கல் மாவட்ட தொழிலாளர் உதவி ஆணையர் (அமலாக்கம்) திருநந்தன் தலைமையில், சங்ககிரி தொழிலாளர் உதவி ஆய்வாளர் முருகேசன், திருச்செங்கோடு தொழிலாளர் உதவி ஆய்வாளர் அருண்குமார் மற்றும் போலீசார் கொண்ட குழுவினர், சங்ககிரி நகர் பகுதிகளில் உள்ள இறைச்சி, மீன் மற்றும் பழக்கடைகளில் ஆய்வு மேற்கொண்டனர்.
அப்போது, முத்திரை மற்றும் மறுமுத்திரையிடப்படாமல் பயன்படுத்திய மின்னணு தராசுகள் மற்றும் மேஜை தராசுகள் ஆகியவற்றை பறிமுதல் செய்து அபராதம் விதித்தனர். இதுகுறித்து தொழிலாளர் உதவி ஆணையர்(அமலாக்கம்) திருநந்தன் கூறுகையில், எடை அளவுகளை முத்திரை மற்றும் மறு முத்திரையிடாமல் பயன்படுத்தினால் ரூ.5000 முதல் ரூ.25 ஆயிரம் வரை அபராதம் விதிக்கப்படும்.
இதுவரை முத்திரையிடாமல் எடையளவுகளை பயன்படுத்தி வரும் வணிகர்கள், தங்களது எடையளவுகளை முத்திரை ஆய்வாளர் அலுவலகத்திற்குச் சென்று முத்தரையிட்டுக் கொள்ள வேண்டும். மேலும், கடைகளில் மறு முத்திரைச் சான்றிதழ் நன்றாக தெரியும்படி வைக்க வேண்டும் என்றார்.
- பண்டிகை காலங்களில் பொதுமக்களின் வசதிக்காக கூடுதல் சிறப்பு பஸ்கள் இயக்கப்படுவது வழக்கம்.
- சேலம் கோட்டத்தில் சிறப்பு பஸ்கள் இயக்கப்பட்ட தில் 8 நாட்களில் 1.11 கோடி பேர் பயணம் செய்துள்ளனர்.
சேலம்:
சேலம் கோட்டத்திற்கு உட்பட்ட சேலம், தர்மபுரி, நாமக்கல், கிருஷ்ணகிரி மாவட்டங்களில் 1900 பஸ்கள் இயக்கப்படுகிறது. பண்டிகை காலங்களில் பொதுமக்களின் வசதிக்காக கூடுதல் சிறப்பு பஸ்கள் இயக்கப்படுவது வழக்கம்.
அதன்படி பொங்கல் பண்டிகையொட்டி சேலம் கோட்டத்தில் இருந்து சென்னை, பெங்களூரு, மதுரை, கோவை, கடலூர், வேலூர், திருச்சி உள்பட பல இடங்களுக்கு 500 சிறப்பு பஸ்கள் கடந்த 12-ந் தேதி முதல் 19-ந் தேதி வரை இயக்கப்பட்டது.
சேலம் கோட்டத்தில் சிறப்பு பஸ்கள் இயக்கப்பட்ட தில் 8 நாட்களில் 1.11 கோடி
பேர் பயணம் செய்துள்ள தாகவும், 2 கோடி கூடுதல் வருமானம் கிடைத்து உள்ளதாகவும் அதிகாரிகள் தெரிவித்தனர்.
- சேலத்தில் இருந்து டவுன் பஸ்சில் ஏறி சின்னத்திருப்பதியில் இறங்கினார்.
- அப்போது தான் கழுத்தில் அணிந்து இருந்த 4½ பவுன் நகையை காணவில்லை.
சேலம்:
தர்மபுரி மாவட்டம் பாப்பிரெட்டிப்பட்டி பகுதியைச் சேர்ந்தவர் கோவிந்தம்மாள் (வயது 70). இவர், சின்னத்திருப்பதி எம்.ஜி.ஆர். நகரில் தன்னுடைய அண்ணன் வெங்கட்ராமன் வீட்டிற்கு வந்தார். சேலத்தில் இருந்து டவுன் பஸ்சில் ஏறி சின்னத்திருப்பதியில் இறங்கினார். அப்போது தான் கழுத்தில் அணிந்து இருந்த 4½ பவுன் நகையை காணவில்லை. ஓடும் பஸ்சில் கோவிந்தம்மாளிடம் யாரோ மர்மநபர், நகையை திருடியது தெரிய வந்தது. இதுகுறித்த புகாரின் பேரில் கன்னங்குறிச்சி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர்.






