என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    சேலத்தில் கந்து வட்டி கொடுமையால் கணவன்-மனைவி தற்கொலை
    X

    சேலத்தில் கந்து வட்டி கொடுமையால் கணவன்-மனைவி தற்கொலை

    • கந்துவட்டி கொடுமையால் கணவன்-மனைவி விஷம் குடித்து தற்கொலை செய்த சம்பவம், அந்தப் பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
    • போலீசார் கைப்பற்றி தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    சேலம்:

    சேலம் அழகாபுரம் பெரியபுதூர் பகுதியை சேர்ந்தவர் ராஜேந்திரன் (வயது 66). இவரது மனைவி சாந்தி (55). இவருக்கு ராமகவுண்டர், ராமவேல் என்ற மகன்களும், தமிழரசி என்ற மகளும் உள்ளனர். இவர்கள் அனைவருக்கும் திருமணமாகி விட்டது. மகன்கள் இருவரும் மாடியிலும், பெற்றோர் வீட்டின் கீழ் தளத்திலும் வசித்து வருகின்றனர்.

    இன்று காலை ராமவேல் கீழே இறங்கி வந்தபோது, பெற்றோர் வீடு திறந்து இருந்தது. உள்ளே சென்று பார்த்த போது ராஜேந்திரன், சாந்தி ஆகியோர் இறந்து கிடந்தனர். இதை பார்த்து அதிர்ச்சியடைந்த ராமவேல், அழகாபுரம் போலீசுக்கு தகவல் தெரிவித்தார். அதன்பேரில் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று, 2 பேரின் உடலை மீட்டு சேலம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்து விசாரணை நடத்தினர்.

    விசாரணையில், ராஜேந்திரன் பூர்வீகமாக வசித்து வந்த வீட்டை, அதே பகுதியை சேர்ந்த நடேசன் என்பவரிடம் 5 வருடத்திற்கு முன்பு பத்திரம் அடமானம் வைத்து ரூ.19 லட்சம் வாங்கியதாக கூறப்படுகிறது. அதற்கு வட்டியும் கொடுக்கவில்லை என தெரிகிறது. இதையடுத்து நடேசன் வட்டியும், அசலும் சேர்த்து ரூ.40 லட்சம் கொடுக்க வேண்டும். இல்லையென்றால் வீட்டை எழுதி கொடுக்க வேண்டும என அடிக்கடி தொந்தரவு செய்துள்ளார்.

    இதனால் ராஜேந்திரன் அருகில் உள்ள அசோக் என்பவரிடம் வீட்டை விற்று விட்டு உங்களுக்கு கடனை கொடுத்து விடுகிறேன் என்று கூறியுள்ளார். இந்நிலையில், நடேசன் நேற்று மீண்டும் பணம் கேட்டதால் மனமுடைந்த ராஜேந்தின், சாந்தி ஆகியோர் பூச்சி மருந்தை வாங்கி வந்து, தண்ணீரில் கலந்து தற்கொலை செய்து கொண்டது தெரியவந்துள்ளது.

    இந்நிலையில் கணவன்-மனைவி இறந்து கிடந்த இடத்தில் ஒரு கடிதம் கிடந்தது. அதில், எங்கள் சாவுக்கு காரணம் நடேசன், அவரது குடும்பத்தினர் என்றும், கந்துவட்டி கொடுமை குறித்தும் உருக்கமாக எழுதியிருந்தது. அதை போலீசார் கைப்பற்றி தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    கந்துவட்டி கொடுமையால் கணவன்-மனைவி விஷம் குடித்து தற்கொலை செய்த சம்பவம், அந்தப் பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

    Next Story
    ×