search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    நகை, பணம் பறித்த வழக்குகளில் 2 பவுன் நகைகள் மீட்பு
    X

    நகை, பணம் பறித்த வழக்குகளில் 2 பவுன் நகைகள் மீட்பு

    • உறவினரை பார்க்க தனது மொபட்டில் தாதகாப்பட்டியில் இருந்து நெத்திமேடு நோக்கி சென்று கொண்டிருந்தார்.
    • திருமண மண்டபம் அருகே அவரிடம் இருந்து மர்ம நபர் நகைகள், பணம் பறித்துக் கொண்டு தப்பிச் சென்று விட்டார்.

    அன்னதானப்பட்டி:

    சேலம் தாதகாப்பட்டி கேட், நெசவாளர் காலனி பகுதியைச் சேர்ந்த 28 வயது இளம்பெண் கடந்த 5- ந் தேதி உறவினரை பார்க்க தனது மொபட்டில் தாதகாப்பட்டியில் இருந்து நெத்திமேடு நோக்கி சென்று கொண்டிருந்தார். அப்போது அன்னதானப்பட்டி எஸ்என்எஸ் திருமண மண்டபம் அருகே அவரிடம் இருந்து மர்ம நபர் நகைகள், பணம் பறித்துக் கொண்டு தப்பிச் சென்று விட்டார்.

    இது குறித்த புகாரின் பேரில் வழக்குப் பதிவு செய்த அன்னதானப்பட்டி குற்றப் பிரிவு இன்ஸ்பெக்டர் ராமகிருஷ்ணன் மற்றும் போலீசார் விசாரணை நடத்தி சேலம் அம்மாப்பேட்டை, அல்லிக்குட்டை, சத்தி யமூர்த்தி நகர் பகுதியைச் சேர்ந்தவர் சரவணன் (வயது 45) என்பவரை கைது செய்தனர்.

    சர்க்கரை வியாபாரி யான இவர் மீது ஏற்கனவே

    இரும்பாலை, கொண்ட

    லாம்பட்டி, அன்னதா னப்பட்டி போலீஸ் நிலை யங்களில், தனியாக செல்லும்

    காதல் ஜோடி மற்றும் இளம்பெண்களை பின் தொடர்ந்து சென்று, ரகசி யமாக படம் பிடித்து, அவர்களை மிரட்டி நகைகள், பணம் பறித்த வழக்குகள் உள்ளன என்பது குறிப்பிடத்தக்கது. இவர் மீது மேலும் 3 பெண்கள் அளித்த புகாரின் பேரில் அன்னதானப்பட்டி போலீசார் வழக்குப் பதிவு செய்தனர்.

    இவர் தொடர்ந்து குற்றச் செயல்களில் ஈடுபட்டு வந்ததால் குண்டர் சட்டத்தில் கைது செய்யப்பட்டு சேலம் மத்திய சிறையில் அடைக்கப்பட்டார்.

    இதனைத் தொடர்ந்து பெண்களிடம் நகைகள், பணம் பறித்த வழக்கு தொடர்பாக சிறையில் உள்ள அவரை அன்ன தானப்பட்டி போலீசார் காவலில் எடுத்து விசா ரணை செய்ய கோர்ட்டில் மனுத்தாக்கல் செய்தனர். இதனை ஏற்று நீதிபதி, அவரை ஒரு நாள் காவலில் வைத்து விசாரிக்க அனுமதி அளித்தார். அதன்படி சரவணனிடம் இளம்பெண்கள் பாலியல் புகார்கள், வழிப்பறி தொடர்பாக விசாரித்தனர்.இதனையடுத்து அவரிடம் இருந்து 2 பவுன் நகைகள் மீட்கப்பட்டது. தொடர்ந்து போலீசார் அவரை சிறையில் அடைத்தனர்.

    Next Story
    ×