என் மலர்
உள்ளூர் செய்திகள்

மனு கொடுக்க வந்த பெருமாள், குழந்தை அம்மாள்.
நிலத்தை எழுதி வாங்கிக்கொண்டுவயதான பெற்றோரை தவிக்கவிட்ட மகன்கள்
- இருவரும் தள்ளாத வயதில் இன்று காலை சேலம் கலெக்டர் அலுவலகத்துக்கு வந்தனர்.
- பயிர் கடன் லோன் வாங்குகிறோம் என கூறி எங்களை ஏமாற்றி சொத்துக்களை எழுதி வாங்கி கொண்டார்கள்.
சேலம்:
சேலம் மாவட்டம் டேனீஸ்பேட்டை அருகே உள்ள காடையாம்பட்டி பகுதியைச் சேர்ந்தவர் பெருமாள்(வயது 88). இவரது மனைவி குழந்தை அம்மாள். இவர்கள் இருவரும் தள்ளாத வயதில் இன்று காலை சேலம் கலெக்டர் அலுவலகத்துக்கு வந்தனர். அங்கு கலெக்டர் கார்மேத்திடம் கண்னீர் மல்க ஒரு மனு கொடுத்தனர். அதில் அவர்கள் கூறியிருப்பதாவது:-
எங்களுக்கு 5 மகன்களும், 3 மகள்களும் உள்ளனர். நாங்கள் சுயமாக சம்பாதித்த சொத்துக்களை எனது மகன்கள் காளியப்பன், தங்கராஜ் முருகன் ஆகியோர் பயிர் கடன் லோன் வாங்குகிறோம் என கூறி எங்களை ஏமாற்றி சொத்துக்களை எழுதி வாங்கி கொண்டார்கள். இதுபற்றி கேட்டதற்கு எங்களை மிரட்டுகிறார்கள். இதனால் 7 வருடங்களாக எங்களுடைய சாப்பாட்டிற்கு வழியில்லாமல் தவிக்கிறோம். இதுபற்றி ஏற்கனவே மேட்டூர் ஆர்.டி.ஓ.விடம் மனு கொடுத்தோம். இதனிடையே நாங்கள் தானசெட்டில்மெண்ட் ரத்து செய்ய சென்றதை தெரிந்து கொண்டு அவர்கள் 3 பேரும் அவர்களுடைய மனைவியின் பெயரில் பத்திரத்தை மாற்றிக்கொண்டார்கள். எனவே எங்களை ஏமாற்றி எனது 3 மகன்களும் எழுதிக்கொண்ட தானசெட்டில்மெண்ட் பத்திரத்தை ரத்து செய்து எங்களுடைய சொத்தைமீட்டு எங்களுக்கே மாற்றி தருமாறும் கேட்டுக்கொள்கிறோம்.
இவ்வாறு அவர்கள் கூறியுள்ளனர்.






