என் மலர்
உள்ளூர் செய்திகள்

மாற்றுத்திறனாளிகள் மனு கொடுக்க வந்த போது எடுத்தபடம்.
தேசிய அளவிலான போட்டியில் பங்கேற்க உதவி கேட்டு மாற்றுத்திறனாளிகள் மனு
- சென்னை மேல கோட்டையூர் விளையாட்டு பல்கலைக்கழகத்தில் மாநில அளவிலான 18-வது சீனியர் பாரா அத்லெட்டிக் சாம்பியன்ஷிப் போட்டி நடைபெற்றது.
- இந்த போட்டியில் தமிழ்நாடு முழுவதும் இருந்து 3000-க்கும் மேற்பட்ட மாற்றுத் திறனாளிகள் கலந்து கொண்டனர்.
சேலம்:
தமிழ்நாடு பாரா ஒலிம்பிக் விளையாட்டு சங்கம் சார்பில் சென்னை மேல கோட்டையூர் விளையாட்டு பல்கலைக்கழகத்தில் மாநில அளவிலான 18-வது சீனியர் பாரா அத்லெட்டிக் சாம்பியன்ஷிப் போட்டி நடைபெற்றது. இந்த போட்டியில் தமிழ்நாடு முழுவதும் இருந்து 3000-க்கும் மேற்பட்ட மாற்றுத் திறனாளிகள் கலந்து கொண்டனர். இதில் சேலம் மாவட்டத்தைச் சார்ந்த அலெக்சாண்டர், கௌதமன், பிரபாகரன் ஆகியோர் போட்டியில் கலந்து கொண்டு பதக்கமும் பாராட்டு சான்றிதழும் பெற்றனர். இவர்கள் தேசிய அளவில், புனேவில் நடைபெறும் போட்டியில் பங்கேற்பதற்காக உதவி கேட்டு சேலம் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் மனு அளிதனர்.
Next Story






