அன்னதானப்பட்டியில் கிடப்பில் போடப்பட்ட தார்சாலைப்பணி

அன்னதானப்பட்டியில் தார்சாலை அமைப்பதற்காக பணிகள் தொடங்கின. கிடப்பில் போடப்பட்ட முழுமையடையாத தார் சாலையால் போக்குவரத்து பாதிக்கப்பட்டு உள்ளது.
சாலை சரிசெய்யப்படாமல் கற்கள் பெயர்ந்து காணப்படுகிறது.
சாலை சரிசெய்யப்படாமல் கற்கள் பெயர்ந்து காணப்படுகிறது.
Published on

சேலம்:

சேலம் - சங்ககிரி மெயின் ரோடு, அன்னதானப்பட்டியில் தார்சாலை அமைப்பதற்காக பணிகள் தொடங்கின. சாலையில் கற்கள் கொட்டப்பட்டு சரிசெய்யப்பட்டது. ஆனால் அதன்பின் பணிகள் நடக்கவில்லை. கிடப்பில் போடப்பட்ட முழுமையடையாத தார் சாலையால் போக்குவரத்து பாதிக்கப்பட்டு உள்ளது.

போக்குவரத்து மிகுந்த காலை மற்றும் மாலை வேளைகளில் எதிரில் உள்ள வாகனங்கள் தெரியாத அளவுக்கு புழுதியை கிளப்புகிறது. தை பிறந்தும் விலகாத பனி படர்ந்தது போல புழுதி பறப்பதால் சாலையில் செல்வோரும், அக்கம்பக்கம் கடைகள் வைத்திருப்பவர்களும் கடுமையாக பாதிக்கபப்டுகிறார்கள்.

புழுதியால் நோயாளிகளும் அவதிக்குள்ளாகின்றனர்.எனவே இந்த சாலையை போர்க்கால அடிப்படையில் சரிசெய்யவேண்டும் என்கின்றனர் மக்கள்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com