என் மலர்
சேலம்
- மேட்டூர் அணைக்கு வரும் நீரின் அளவை விட, திறப்பு அதிகமாக இருப்பதால் நீர்மட்டம் தொடர்ந்து சரிந்து வருகிறது.
- நேற்று 105.54 அடியாக இருந்த நீர்மட்டம், இன்று 105.07அடியாக சரிந்தது.
மேட்டூர்:
கர்நாடக அணைகளில் இருந்து தண்ணீர் திறக்கப்படாததாலும், காவிரியின் நீர்பிடிப்பு பகுதிகளில் மழை இல்லாததாலும், ஒகேனக்கல் மற்றும் மேட்டூர் அணைக்கு நீர்வரத்து படிப்படியாக குறைந்து வருகிறது.
ஒகேனக்கல் காவிரியில் வரும் நீரின் அளவு விநாடிக்கு 2 ஆயிரம் கனஅடியாக நீடிக்கிறது. மேட்டூர் அணைக்கு நேற்று விநாடிக்கு 819 கனஅடியாக இருந்த நீர்வரத்து, இன்று காலை நிலவரப்படி விநாடிக்கு 815 கன அடியாக சரிந்தது.
அணையில் இருந்து காவிரி டெல்டா பாசனத்திற்காக 8 ஆயிரம் கனஅடி வீதம் தண்ணீர் திறக்கப்பட்டு வருகிறது.
அணைக்கு வரும் நீரின் அளவை விட, திறப்பு அதிகமாக இருப்பதால் நீர்மட்டம் தொடர்ந்து சரிந்து வருகிறது. நேற்று 105.54 அடியாக இருந்த நீர்மட்டம், இன்று 105.07அடியாக சரிந்தது.
- கைது செய்யப்பட்ட சுரேந்திரன், பா.ஜ.க.வில் இருந்து வந்த நிலையில் பல்வேறு மோசடியில் ஈடுபட்டதால் அவரை கட்சியிலிருந்து கடந்த சில மாதங்களுக்கு முன்பு நீக்கினர்.
- தற்போதும் பா.ஜ.க.வின் முக்கிய பிரமுகர் பெயரை சொல்லி மிரட்டி, மோசடியில் ஈடுபட்டு வருவதாகவும் போலீசாருக்கு புகார்கள் வந்துள்ளன.
சேலம்:
சேலத்தை அடுத்த தாசநாயக்கன்பட்டி எஸ்.கே சிட்டி பகுதியை சேர்ந்தவர் கதிர்ராஜ் (வயது 52). ஜவுளி தொழில் செய்து வருகிறார். இவர் மல்லூர் அருகே உள்ள நிலவாரப்படியில் புதிதாக வீடு கட்டி வருகிறார்.
இந்த வீட்டை கட்டிக் கொடுக்க, நாழிக்கல்பட்டியைச் சேர்ந்த சுரேந்திரன் (33) என்பவருடன் சதுர அடிக்கு ரூ.2,200 என கடந்த 2019-ம் ஆண்டு டிசம்பர் மாதம் ஒப்பந்தம் செய்து கொண்டார். அந்த ஒப்பந்தத்தின்படி வீடு கட்டுவதற்காக ஒரு கோடியே 61 லட்சத்து 54 ஆயிரத்து 347 ரூபாயை சுரேந்தினிடம், கதிர்ராஜ் கொடுத்தார்.
இந்த பணத்தை பெற்றுக்கொண்ட சுரேந்திரன், புதிதாக வீடு கட்டி கொடுக்காமல் நிலவரப்பட்டியில் தனது மனைவி தீபா பெயரில் வீடு கட்டிக்கொண்டார். இதையடுத்து தனது பணத்தை வாங்கிக்கொண்டு ஏமாற்றி விட்டதாக கதிர்ராஜ் மல்லூர் போலீசில் புகார் கொடுத்தார்.
போலீசார் விசாரணை நடத்தி, சுரேந்திரன் அவரது மனைவி தீபா ஆகியோர் மீது மோசடி வழக்கு பதிவு செய்தனர். ரூ.1 கோடிக்கு மேல் மோசடி நடந்திருப்பதால் இவ்வழக்கை மாவட்ட குற்றப்பிரிவு போலீஸ் விசாரணை நடத்த, மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு உத்தரவிட்டார். இதையடுத்து மாவட்ட குற்றப்பிரிவு டி.எஸ்.பி இளமுருகன் தலைமையிலான போலீசார் விசாரணை நடத்தி, கடந்த மாதம் 14-ந் தேதி கதிர்ராஜிடம் வீடு கட்டி தருவதாக ரூ.1.61 கோடி மோசடி செய்ததாக சுரேந்திரன், தீபா மீது மோசடி வழக்கு பதிவு செய்தனர்.
தொடர்ந்து 2 பேரையும் குற்றப்பிரிவு போலீசார் தேடி வந்தனர். இந்த நிலையில் நேற்று டி.எஸ்.பி இளமுருகன், எஸ்.ஐ சந்திரன் தலைமையிலான போலீசார் சுரேந்திரனை கைது செய்தனர். பின்னர் அவரை சேலம் கோர்ட்டில் ஆஜர்படுத்தி சேலம் மத்திய சிறையில் அடைத்தனர். தொடர்ந்து அவரது மனைவி தீபாவை போலீசார் தேடி வருகிறார்கள்.
கைது செய்யப்பட்ட சுரேந்திரன், பா.ஜ.க.வில் இருந்து வந்த நிலையில் பல்வேறு மோசடியில் ஈடுபட்டதால் அவரை கட்சியிலிருந்து கடந்த சில மாதங்களுக்கு முன்பு நீக்கினர். தற்போதும் பா.ஜ.க.வின் முக்கிய பிரமுகர் பெயரை சொல்லி மிரட்டி, மோசடியில் ஈடுபட்டு வருவதாகவும் போலீசாருக்கு புகார்கள் வந்துள்ளன. இது குறித்தும் போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
- அ.தி.மு.க. ஆட்சி காலத்தில் இந்துக்கள் மற்றும் இந்துக்கள் உடமைகளும், கோவில்களும் பாதுகாக்கப்பட்டது.
- இப்பொழுது தி.மு.க. ஆட்சியில் பாதுகாப்பு இல்லாத சூழல் நிலவுதால், அ.தி.மு.க.விற்கு ஆதரவு தெரிவித்துள்ளதாக நிர்வாகிகள் கூறினர்.
சேலம்:
ஈரோடு கிழக்கு தொகுதி இடைதேர்தலில் அ.தி.மு.க.வுக்கு பாரத இந்து பரிவார் ஆதரவு தெரிவித்து உள்ளது. இந்தஅமைப்பின் தேசிய தலைவர் ராஜன் தலைமையில் நிர்வாகிகள் சேலம் நெடுஞ்சாலைநகரில் உள்ள அ.தி.மு.க. இடைக்கால பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமியை நேரில் வந்து சந்தித்து ஆதரவு தெரிவித்தனர்.
அப்போது அவர்கள் கூறுகையில், அ.தி.மு.க. ஆட்சி காலத்தில் இந்துக்கள் மற்றும் இந்துக்கள் உடமைகளும், கோவில்களும் பாதுகாக்கப்பட்டது. ஆனால் இப்பொழுது தி.மு.க. ஆட்சியில் பாதுகாப்பு இல்லாத சூழல் நிலவுதால், அ.தி.மு.க.விற்கு ஆதரவு தெரிவித்துள்ளோம் என்றனர். அப்போது திருவண்ணாமலை கலசபாக்கம் முன்னாள் எம்.எல்.ஏ. பன்னீர்செல்வம் உடன் இருந்தார்.
இதேபோல் மனித உரிமைகள் கழகமும் அ.தி.மு.க.வுக்கு ஆதரவு தெரிவித்துள்ளது. அதன் நிறுவனத் தலைவர் சுரேஷ் கண்ணன் மற்றும் பொருளாளர் ராதாகிருஷ்ணன் உள்ளிட்ட நிர்வாகிகள் நெடுஞ்சாலை நகர் இல்லத்தில் உள்ள எடப்பாடி பழனிசாமியை சந்தித்து ஆதரவு தெரிவித்தனர்.
தொடர்ந்து சுரேஷ் கண்ணன் நிருபர்களிடம் கூறுகையில், பொய்யான வாக்குறுதியை கூறி தி.மு.க. ஆட்சியைப் பிடித்ததால் பொதுமக்கள் கடும் அவதிப்பட்டு வருகிறார்கள். இதனால் எடப்பாடியார் கரத்தை வலுப்படுத்தும் வகையில் நாங்கள் அவருக்கு ஆதரவு தெரிவித்துள்ளோம். அ.தி.மு.க. வேட்பாளர் வெற்றிக்கு பிரசாரத்திலும் ஈடுபடுவோம் என்றார்.
- நேற்று முன்தினம் வேலை முடிந்து கடையை பூட்டி விட்டு சென்று விட்டார்.
- பூட்டை உடைத்து புகுந்த திருடர்கள் அங்கிருந்த ரூ.4 ஆயிரம் பணம், 2 கட்டிங் சேவிங் மெஷின்கள் ஆகியவற்றை திருடிச் சென்று விட்டனர்.
அன்னதானப்பட்டி:
சேலம் சீலநாயக்கன்பட்டி ஆத்தூர் பைபாஸ் ரோடு பகுதியைச் சேர்ந்தவர் ராமசாமி (வயது 60). இவர் அங்கு உள்ள காம்ப்ளக்ஸ்சில் பேக்கரி வைத்து நடத்தி வருகிறார். நேற்று முன்தினம் வேலை முடிந்து கடையை பூட்டி விட்டு சென்று விட்டார். நேற்று காலை வழக்கம் போல திறக்க வந்த போது, கடையின் பூட்டு உடைக்கப்பட்டு இருந்ததைக் கண்டு அதிர்ச்சி அடைந்தார்.
தொடர்ந்து உள்ளே சென்று பார்த்த போது பொருட்கள் ஆங்காங்கே சிதறிக் கிடந்தன. அங்கு கல்லா பெட்டியில் இருந்த ரூ.7 ஆயிரம் பணம், ரூ.6 ஆயிரம் மதிப்புள்ள சிகரெட் பாக்கெட்டுகள், ரூ.2 ஆயிரம் மதிப்புள்ள தின்பண்ட பொட்டலங்கள் ஆகியவற்றை மர்ம நபர்கள் திருடிச் சென்றது தெரியவந்தது.
இதேபோல் பேக்கரியின் மேல் பகுதியில் கணேசன் (45) என்பவர் சலூன் கடை வைத்துள்ளார். அங்கும் பூட்டை உடைத்து புகுந்த திருடர்கள் அங்கிருந்த ரூ.4 ஆயிரம் பணம், 2 கட்டிங் சேவிங் மெஷின்கள் ஆகியவற்றை திருடிச் சென்று விட்டனர்.
இதேபோல் சேலம் சீலநாயக்கன்பட்டி இ.பி.காலனி பகுதியைச் சேர்ந்தவர் கோபாலகிருஷ்ணன் ( வயது 44). இவர் சீலநாயக்கன்பட்டி ஆத்தூர் பைபாஸ் சாலையில் காஞ்சி நகர் பகுதியில் உள்ள ஒரு காம்ப்ளக்சில் லாரி ஆபீஸ் வைத்து நடத்தி வருகிறார். கடந்த 21-ந் தேதி இவரது அலுவலகத்தை பூட்டி விட்டு சென்றார். இந்நிலையில், அலுவலகத்தின் பூட்டு உடைக்கப்பட்டு கிடப்பதாக நேற்று கோபால கிருஷ்ணனுக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து அங்கு வந்து பார்த்தபோது, அலுவலகத்தில் இருந்த ரூ.10 ஆயிரம் ரொக்கத்தை மர்ம நபர்கள் கொள்ளையடித்து சென்றது தெரியவந்தது.
இது குறித்த புகாரின் பேரில் அன்னதானப்பட்டி போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தினர்.
மேலும் அப்பகுதியில் உள்ள சிசிடிவி கண்காணிப்பு கேமரா பதிவுகளை கைப்பற்றி ஆய்வு செய்தனர். அதில் சில நபர்கள் கடைகளில் பொருட்களை திருடிக் கொண்டு மோட்டார் சைக்கிளில் வேகமாக தப்பிச் செல்லும் காட்சிகள் பதிவாகி உள்ளது. அதன் அடிப்படையில் போலீஸ் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
- சேலம் கலெக்டர் அலுவலகம் முன்பு இன்று ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
- தொடர்ந்து பணிபுரிந்தால் பணி நிரந்தரம் செய்ய வேண்டும். ரூ.21,000-க்கு குறையாமல் ஊதியம் வழங்க வேண்டும்.
சேலம்:
அகில இந்திய தொழிற்சங்க பேராயம், சேலம் மாவட்ட குழுவைச் சேர்ந்தவர்கள் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி சேலம் கலெக்டர் அலுவலகம் முன்பு இன்று ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். ஆர்ப்பாட்டத்திற்கு முன்னாள் எம்.எல்.ஏ பெரியசாமி தலைமை தாங்கினார்.
அப்போது, தொடர்ந்து பணிபுரிந்தால் பணி நிரந்தரம் செய்ய வேண்டும். ரூ.21,000-க்கு குறையாமல் ஊதியம் வழங்க வேண்டும். ரூ.6,000-க்கு குறையாத ஓய்வூதியம் வழங்க வேண்டும். தொழிலாளர் விரோத கொள்கைகளையும், 4 சட்டத் தொகுப்புகளையும் கைவிட வேண்டும் என ஒன்றிய அரசை வலியுறுத்தி, கலெக்டர் அலுவலகம் எதிரில் சாலையில் அமர்ந்து திடீரென மறியல் செய்தனர்.
இதையடுத்து போராட்டத்தில் ஈடுபட்ட முன்னாள் எம்.எல்.ஏ பெரியசாமி, இந்திய கம்யூனிஸ்டு கட்சி சேலம் மாவட்ட செயலாளர் மோகன், சி.பி.ஐ மாநில குழு ராமன், ஏ.ஐ.டி.யு.சி மாவட்ட பொதுச் செயலாளர் முருகன், கவிதா, மனோன்மணி உள்பட 100-க்கும் மேற்பட்டோர் கைது செய்யப்பட்டனர்.
- சேர்வராயன் தெற்கு வனச்சரகத்திற்கு உட்பட்ட எரிமலை காப்புக்காடு பகுதியில் நேற்று வனச்சரகர் பரசுராமமூர்த்தி தலைமையில் வனவர் ஆறுமுகம் மற்றும் வன ஊழியர்கள் ரோந்து சென்றனர்.
- மாது (வயது 52) , கூலி தொழிலாளி என்பது தெரியவந்தது. அவரிடம் இருந்து 2 வலைகளை பறிமுதல் செய்தனர்.
சேலம்:
சேலம் மாவட்டம் சேர்வராயன் தெற்கு வனச்சரகத்திற்கு உட்பட்ட எரிமலை காப்புக்காடு பகுதியில் நேற்று வனச்சரகர் பரசுராமமூர்த்தி தலைமையில் வனவர் ஆறுமுகம் மற்றும் வன ஊழியர்கள் ரோந்து சென்றனர்.
அங்கு முயல் உள்ளிட்ட வன விலங்குகளை வேட்டையாட ஒருவர் வலைவிரித்திருந்தார். அதிகாரிகளை பார்த்ததும் அவர் தப்பி ஓட முயன்றார். அவரை அதிகாரிகள் மடக்கி பிடித்தனர்.
கைது- ரூ.25 ஆயிரம் அபராதம்
விசாரணையில், அவர் காடையாம்பட்டி தாலுகா செத்தப்பாளையத்தை சேர்ந்த மாது (வயது 52) , கூலி தொழிலாளி என்பது தெரியவந்தது. அவரிடம் இருந்து 2 வலைகளை பறிமுதல் செய்தனர்.
தொடர்ந்து, மாது மீது வன உயிரின பாதுகாப்பு சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்து, அவரை கைது செய்து, சேலம் மாவட்ட வன அலுவலர் கஷ்யப் சாஷாங் ரவி முன்பு ஆஜர்படுத்தினர். இதையடுத்து வன அலுவலர், அவருக்கு ரூ. 25 ஆயிரம் அபராதம் விதித்தார்.
அந்த அபராத தொகையை மாதுவிடம் இருந்து வனத்துறையினர் வசூலித்தனர்.
- ஊட்டச்சத்து குறைபாடு காரணமாக நோய் எதிர்ப்பு சக்தி குறைந்தால், காசநோய் பாதிப்பு ஏற்பட வாய்ப்பு உள்ளது.
- சேலம் மாவட்டத்திற்கு கடந்த ஆண்டு ஜூலை மாதம் 1-ந்தேதி ஒரு நடமாடும் டிஜிட்டல் எக்ஸ்ரே வாகனமும் மற்றும் 16-ந்தேதி ஒரு நடமாடும் டிஜிட்டல் எக்ஸ்ரே வாகனமும் வழங்கப்பட்டது.
சேலம்:
ஊட்டச்சத்து குறைபாடு காரணமாக நோய் எதிர்ப்பு சக்தி குறைந்தால், காசநோய் பாதிப்பு ஏற்பட வாய்ப்பு உள்ளது. இதனை கண்டறிய மாநிலம் முழுவதும் கடந்த ஆண்டு ஜூலை மாதம் 23 மாவட்டங்களுக்கு நடமாடும் எக்ஸ்ரே வாகனங்களை தமிழக அரசு வழங்கியது.
2 வாகனங்கள்
சேலம் மாவட்டத்திற்கு கடந்த ஆண்டு ஜூலை மாதம் 1-ந்தேதி ஒரு நடமாடும் டிஜிட்டல் எக்ஸ்ரே வாகனமும் மற்றும் 16-ந்தேதி ஒரு நடமாடும் டிஜிட்டல் எக்ஸ்ரே வாகனமும் வழங்கப்பட்டது.
இந்த 2 நடமாடும் எக்ஸ்ரே வாகனம் மூலம் 20 வட்டாரங்களிலும் பாதிப்பு உள்ள பகுதிகளில் முகாம்கள் நடத்தப்பட்டு பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டது. குறிப்பாக கடந்த 6 மாதங்களில் 151 கிராமங்களில் காசநோய் அறிகுறிகள் கண்டறியும் முகாம்கள் நடத்தப்பட்டுள்ளன. இதில் 81 ஆயிரத்து 556 பேருக்கு காசநோய் அறிகுறிகள் உள்ளதா? என பரிசோதிக்கப்பட்டது. இதில் தற்போது வரை 7 ஆயிரம் பேருக்கு சளி, ரத்த பரிசோதனை முடிவுகள் அறிவிக்கப்பட்டுள்ளது. காசநோய் பாதிப்பு உள்ளவர்களுக்கு தொடர் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
அரசு ரூ.500 வழங்குகிறது
இது குறித்து அதிகாரிகள் கூறுகையில், சேலம் மாவட்டத்தில் அரசு மற்றும் தனியார் ஆஸ்பத்திரிகளில் சிகிச்சை பெறும் நோயாளிகளுக்கு மத்திய அரசின் நிகேஷ் போசன் யோஜனா திட்டத்தின் கீழ் ஊட்டச்சத்து உதவியாக மாதந்தோறும் ரூ.500 சிகிச்சை காலம் முடியும் வரை நோயாளிகளின் வங்கிக் கணக்கில் செலுத்தப்பட்டு வருகிறது. வருகிற 2025-ம் ஆண்டிற்குள் காசநோய் இல்லாத தமிழ்நாட்டை உருவாக்க பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது என்றனர்.
சேலம் மாவட்டத்தில் கடந்த ஆண்டு 87 சதவீதம் பேருக்கு காசநோய் பாதிப்பு கண்டறிந்து சிகிச்சைகள் அளிக்கப்பட்டு, தமிழக அளவில் சேலம் மாவட்டம் 4-வது இடம் பிடித்தது குறிப்பிடத்தக்கது.
- அம்ரித் பாரத் ரெயில் நிலைய திட்டத்தில் தமிழகத்தில் உள்ள 60 ெரயில் நிலையங்களை மேம்படுத்த தெற்கு ரெயில்வே முடிவு செய்துள்ளது.
- இந்த திட்டத்தில் சேலம் கோட்டத்தில் உள்ள சேலம் சந்திப்பு ரெயில் நிலையம் மேம்படுத்தப்பட உள்ளது.
சேலம்:
அம்ரித் பாரத் ரெயில் நிலைய திட்டத்தில் தமிழகத்தில் உள்ள 60 ெரயில் நிலையங்களை மேம்படுத்த தெற்கு ரெயில்வே முடிவு செய்துள்ளது. இந்த திட்டத்தில் சேலம் கோட்டத்தில் உள்ள சேலம் சந்திப்பு ரெயில் நிலையம் மேம்படுத்தப்பட உள்ளது.
சின்னசேலம்
மேலும் சேலம் கோட்–டத்தில் உள்ள நாமக்கல், ஈரோடு, திருப்பூர், மேட்டுப்பாளையம், கோவை வடக்கு, போத்தனூர், ஊட்டி, குன்னூர், கரூர், ெபாம்மிடி, சின்னசேலம், திருப்பத்தூர், சாமல்பட்டி, மொரப்பூர் ஆகிய 14 ரெயில் நிலையங்களும் சேலம் சந்திப்புடன் இணைந்து மேம்படுத்தப்படும் என ரெயில்வே அதிகாரிகள் தெரிவித்தனர்.
- நேற்று முன்தினம் இரவு திருப்பதி- எர்ணாகுளம் எக்ஸ்பிரஸ் ரெயிலில் ஊர் திரும்பினர்.
- சோமநாதன் தான் பயணித்த எஸ்.3 முன்பதிவு பெட்டியில் திடீரென மயங்கி விழுந்தார்.
சேலம்:
கேரளா மாநிலம் கொச்சி அருகே மட்டாஞ்சேரியை சேர்ந்தவர் சோமநாதன் (வயது 68). இவர் தனது மகன் சதீஷ் (30) மற்றும் குடும்பத்தினருடன் திருப்பதிக்கு சென்றார். இவர்கள் நேற்று முன்தினம் இரவு திருப்பதி- எர்ணாகுளம் எக்ஸ்பிரஸ் ரெயிலில் ஊர் திரும்பினர்.
மயங்கி விழுந்தார்.
ரெயில் சேலம் அருகே வந்தபோது, சோமநாதன் தான் பயணித்த எஸ்.3 முன்பதிவு பெட்டியில் திடீரென மயங்கி விழுந்தார். அவரின் உறவினர்கள் இது குறித்து டிக்கெட் பரிசோதகரிடம் தகவல் தெரிவித்தனர்.
இதையடுத்து ரெயில் சேலம் ஜங்சன் ரெயில் நிலையத்துக்கு வந்ததும் டாக்டர்கள், சோமநாதனை பரிசோதித்து பார்த்தனர். அவர், மாரடைப்பால் இறந்தது தெரியவந்தது. அவரது உடலை பார்த்து உறவினர்கள் கதறி அழுதனர். சோமநாதன் உடல், கேரளாவில் உள்ள அவரது சொந்த ஊருக்கு எடுத்துச் செல்லப்பட்டது.
வழக்குப்பதிவு
இது குறித்து சேலம் ஜங்சன் ரெயில் நிலைய போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
- பெருமாள் (வயது 50) இவர் ஒரு தனியார் கொரியர் நிறு வனத்தில் வேலை செய்து வருகிறார்.
- பெருமாளின் இளையமகன் உன்னி கிருஷ்ணன் (16) நெருப்பில் தவறி விழுந்தார்.
தாரமங்கலம்:
தாரமங்கலம் அருகிலுள்ள புதூர் காடம்பட்டி பகுதியைசேர்ந்தவர் பெருமாள் (வயது 50) இவர் ஒரு தனியார் கொரியர் நிறு வனத்தில் வேலை செய்து வருகிறார். இவருடைய மனைவி ஜானகி மற்றும் 2 மகன்களும் புதூர் காடம்பட்டியில் உள்ள குமார் என்பவரின் செங்கல் சூளையில் வேலை செய்து வந்தனர்.
இந்நிலையில் கடந்த 15-ந்தேதி இரவு சூளையில் வேலை செய்து கொண்டு இருந்தபோது பெருமாளின் இளையமகன் உன்னி கிருஷ்ணன் (16) நெருப்பில் தவறி விழுந்தார். அவரை
மீட்டு சேலம் அரசு மருத்து மனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர்.
தீவிர சிகிச்சையில் இருந்த உன்னிகிருஷ்ணன் நேற்று சிகிச்சை இறந்தார். இதுபற்றி பெருமாள் கொடுத்த புகாரின் பேரில் தாரமங்கலம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
- கன்னங்குறிச்சி பகுதியை சேர்ந்த மகபூப் அலி (47) என்பவர் வெங்கடேஷிடம் கத்தியை காட்டி மிரட்டி 2 பவுன் செயின் மற்றும் பணம் ஆகியவற்றை பறித்துக்கொண்டார்.
- இந்த வழக்கு விசாரணை சேலம் ஒருங்கிணைந்த நீதிமன்றத்தில் நடந்து வந்தது.
சேலம்:
சேலம் சூரமங்கலத்தை சேர்ந்தவர் முருகன். இவருடைய மகன் வெங்கடேஷ் (வயது 35). வெள்ளி பட்டறை தொழிலாளி.
வழிப்பறி
இவர் கடந்த 2019-ம் ஆணடு நவம்பர் மாதம் 7-ந்தேதி சூரமங்கலம் தரைப்பாலத்தில் நடந்து சென்றார்.
அங்கு வந்த கன்னங்குறிச்சி பகுதியை சேர்ந்த மகபூப் அலி (47) என்பவர் வெங்கடேஷிடம் கத்தியை காட்டி மிரட்டி 2 பவுன் செயின் மற்றும் பணம் ஆகியவற்றை பறித்துக்கொண்டார். இது குறித்து வழக்குப்பதிவு செய்த அப்போதைய சூரமங்கலம் போலீஸ் நிலைய இன்ஸ்பெக்டர் செந்தில்குமார், மகபூப் அலியை கைது செய்தார்.
7 ஆண்டு ஜெயில்
இந்த வழக்கு விசாரணை சேலம் ஒருங்கிணைந்த நீதிமன்றத்தில் நடந்து வந்தது. சேலம் தலைமை குற்றவியல் நீதிபதி கிறிஸ்டல் பபிதா நேற்று இந்த வழக்குக்கான தீர்ப்பை வழங்கினார். அதில் மகபூப் அலிக்கு 7 ஆண்டு சிறை தண்டனைவும், ரூ.2000 அபராதமும் விதித்து தீர்ப்பளித்தார்.
- வாகன ஓட்டுனர்களுக்கு சாலை விதிகள் மற்றும் பாதுகாப்பு குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தும் பணியில், வாழப்பாடி போலீஸ் துணை சூப்பிரண்டு ஹரிசங்கரி தலைமையிலான போலீசார் முழுவீச்சில் ஈடுபட்டு வருகின்றனர்.
- வாழப்பாடி இன்ஸ்பெக்டர் உமாசங்கர் தலைமையிலான போலீசார், தலைக்கவசம் அணியாமல் இருசக்கர வாகனம் ஓட்டியவர்களுக்கு அபராதம் விதித்து அனுப்பி வைத்தனர்.
வாழப்பாடி:
சேலம் மாவட்டம் வாழப்பாடி காவல் உட்கோட்டத்தில், சாலை விபத்து மற்றும் உயிர் பலி ஏற்படுவதை தடுக்கும் நோக்கில், வாகன ஓட்டுனர்களுக்கு சாலை விதிகள் மற்றும் பாதுகாப்பு குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தும் பணியில், வாழப்பாடி போலீஸ் துணை சூப்பிரண்டு ஹரிசங்கரி தலைமையிலான போலீசார் முழுவீச்சில் ஈடுபட்டு வருகின்றனர்.
வாழப்பாடியில், பிரதான கடலூர் சாலையில், நேற்றி
ரவு தலைக்கவசம் அணியா மல் இரு சக்கர வாகனத்தை ஓட்டிச் சென்றவர்களை வாழப்பாடி அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி வளா கத்திற்கு அழைத்துச் சென்ற போலீசார், தலைக்கவசம் அணியாமலும், மது அருந்தி விட்டும் வாகனங்களை ஓட்டுவதால், விபத்து மற்றும் உயிர்பலி ஏற்படுவது குறித்தும், இதனால் பல குடும்பங்கள் பாதிக்கப்படுவது குறித்தும்,
டிஜிட்டல் திரையில் குறும்படம் காண்பித்து விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.
வாழப்பாடி இன்ஸ்பெக்டர் உமாசங்கர் தலைமையிலான போலீசார், தலைக்கவசம் அணியாமல் இருசக்கர வாகனம் ஓட்டியவர்களுக்கு அபராதம் விதித்து அனுப்பி வைத்தனர்.
முன்னதாக, மேட்டுப்பட்டி சுங்கச்சாவடி அருகே வாகனங்களின் முகப்பு விளக்குகளுக்கு, ஒளிச்சி தறலை கட்டுப்படுத்தும் கருப்பு நிற வில்லைகள் மற்றும்
வாகனங்களின் பின்புறங்களில் ஒளிரும் எச்சரிக்கை பட்டைகளும் காவல்துறை சார்பில் ஓட்டப்பட்டது.






