search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    மறியலில் ஈடுபட்ட பெண்கள் உள்பட 100 பேர் கைது
    X

    மறியலில் ஈடுபட்ட பெண்கள் உள்பட 100 பேர் கைது

    • சேலம் கலெக்டர் அலுவலகம் முன்பு இன்று ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
    • தொடர்ந்து பணிபுரிந்தால் பணி நிரந்தரம் செய்ய வேண்டும். ரூ.21,000-க்கு குறையாமல் ஊதியம் வழங்க வேண்டும்.

    சேலம்:

    அகில இந்திய தொழிற்சங்க பேராயம், சேலம் மாவட்ட குழுவைச் சேர்ந்தவர்கள் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி சேலம் கலெக்டர் அலுவலகம் முன்பு இன்று ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். ஆர்ப்பாட்டத்திற்கு முன்னாள் எம்.எல்.ஏ பெரியசாமி தலைமை தாங்கினார்.

    அப்போது, தொடர்ந்து பணிபுரிந்தால் பணி நிரந்தரம் செய்ய வேண்டும். ரூ.21,000-க்கு குறையாமல் ஊதியம் வழங்க வேண்டும். ரூ.6,000-க்கு குறையாத ஓய்வூதியம் வழங்க வேண்டும். தொழிலாளர் விரோத கொள்கைகளையும், 4 சட்டத் தொகுப்புகளையும் கைவிட வேண்டும் என ஒன்றிய அரசை வலியுறுத்தி, கலெக்டர் அலுவலகம் எதிரில் சாலையில் அமர்ந்து திடீரென மறியல் செய்தனர்.

    இதையடுத்து போராட்டத்தில் ஈடுபட்ட முன்னாள் எம்.எல்.ஏ பெரியசாமி, இந்திய கம்யூனிஸ்டு கட்சி சேலம் மாவட்ட செயலாளர் மோகன், சி.பி.ஐ மாநில குழு ராமன், ஏ.ஐ.டி.யு.சி மாவட்ட பொதுச் செயலாளர் முருகன், கவிதா, மனோன்மணி உள்பட 100-க்கும் மேற்பட்டோர் கைது செய்யப்பட்டனர்.

    Next Story
    ×