என் மலர்
நீங்கள் தேடியது "old man dies முதியவர் சாவு"
- ஒரு தனியாருக்கு சொந்தமான ஆயில் கடையில் கடந்த 40 வருடங்களாக வேலை பார்த்து வந்தார்.
- அரூர் மேட்டில் உள்ள தேவேந்திரர் தெரு அருகில் உள்ள பழைய கிணற்றில் அருணாசலம் இறந்த நிலையில் தண்ணீரில் பிணமாக மிதந்தார்.
பரமத்தி வேலூர்:
நாமக்கல் மாவட்டம் என்.கொசவம்பட்டி கனபதி நகரை சேர்ந்தவர் அருணாசலம் (வயது 65). இவர் அப்பகுதியில் உள்ள ெரயில்வே மேம்பாலம் அருகில் துறையூர் செல்லும் சாலையில் உள்ள ஒரு தனியாருக்கு சொந்தமான ஆயில் கடையில் கடந்த 40 வருடங்களாக வேலை பார்த்து வந்தார்.
மோகனூர் அருகே அரூர் மேட்டில் உள்ள பொன்னர் சங்கர் கோவிலில் 48- வது மண்டல பூஜை திருவிழாவிற்கு செல்லப்பன் என்பவருடன் கடந்த 30 -ம் தேதி பொன்னர் சங்கர் கோவில் திருவிழாவுக்கு சென்றுள்ளார் . அதன் பிறகு அருணாசலம் வீடு திரும்பவில்லை. இது குறித்து அருணாசலத்தின் மகன் பழனிச்சாமி செல்லப்பன் வீட்டுக்கு சென்று விசாரித்த போது அருணாசலம் சாப்பிட்டுவிட்டு வீட்டுக்கு செல்வதாக என்னிடம் கூறி சென்றதாக தெரிவித்துள்ளார். இதையடுத்து அருணாசலத்தை பல்வேறு இடங்களில் தேடினர்.
அரூர் மேட்டில் உள்ள தேவேந்திரர் தெரு அருகில் உள்ள பழைய கிணற்றில் அருணாசலம் இறந்த நிலையில் தண்ணீரில் பிணமாக மிதந்தார். அவர் மது குடித்து போதையில் தவறி விழுந்ததாக கூறப்படுகிறது.
இது குறித்து மோகனூர் போலீஸ் சப்- இன்ஸ்பெக்டர் துர்க்கைசாமி வழக்கு பதிவு செய்து உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக நாமக்கல் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து தீவிர விசாரணை நடத்தி வருகிறார்.
- கடந்த 11-ந் தேதி இந்த கொடிக்காலில் வேலை செய்து கொண்டு இருந்தார்.
- அப்போது, நிலை தடுமாறிய முருகேசன் கொடிக்காலில் உள்ள கிடங்குக்குள் தவறி விழுந்தார்.
பரமத்தி வேலூர்:
நாமக்கல் மாவட்டம் பரமத்தி வேலூரை சேர்ந்தவர் முருகேசன் (வயது 60). பரமத்தி வேலூரில் இருந்து அனிச்சம்பாளையம் செல்லும் சாலையில் இவருக்கு சொந்தமான வெற்றிலை கொடிக்கால் உள்ளது. கடந்த 11-ந் தேதி இந்த கொடிக்காலில் வேலை செய்து கொண்டு இருந்தார். அப்போது, நிலை தடுமாறிய முருகேசன் கொடிக்காலில் உள்ள கிடங்குக்குள் தவறி விழுந்தார். இதில் அவருக்கு பலத்த காயம் ஏற்பட்டு, அங்கிருந்து எழுந்துசெல்ல முடியாமல் கிடங்கிற்குள் உள்ள தண்ணீருக்குள் கிடந்துள்ளார்.
இந்த நிலையில், வெகு நேரம் ஆகியும் முருகேசன் வீட்டுக்கு வராததால் வெற்றிலை கொடிக்காலுக்கு சென்று பார்த்த உறவினர்கள், அங்கு உயிருக்கு போராடிய முருகேசனை மீட்டு பரமத்தி வேலூர் அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். பின்னர் மேல் சிகிச்சைக்காக நாமக்கல் அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்த நிலையில், சிகிச்சை பலனின்றி முருகேசன் உயிரிழந்தார். இதுகுறித்து பரமத்தி வேலூர் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
- 70 வயது மதிக்கத்தக்க முதியவர் ஒருவர் சாலையோரத்தில் மயங்கிய நிலையில் விழுந்து கிடந்தார்.
- இதனைப் பார்த்த அருகில் இருந்தவர்கள் அவரை மீட்டு சிகிச்சைக்காக 108 ஆம்புலன்ஸ் மூலமாக சேலம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.
அன்னதானப்பட்டி:
சேலம் அன்னதானப்பட்டி, புது திருச்சி கிளை ரோடு பகுதியில், சில தினங்களுக்கு முன்பு, 70 வயது மதிக்கத்தக்க முதியவர் ஒருவர் சாலையோரத்தில் மயங்கிய நிலையில் விழுந்து கிடந்தார். இதனைப் பார்த்த அருகில் இருந்தவர்கள் அவரை மீட்டு சிகிச்சைக்காக 108 ஆம்புலன்ஸ் மூலமாக சேலம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது. ஆனால் நேற்று சிகிச்சைப் பலனின்றி அவர் பரிதாபமாக உயிரிழந்தார். அவர் யார்?, எந்த ஊரைச் சேர்ந்தவர்? என்ற விவரங்கள் ஏதும் தெரியவில்லை. இது குறித்து அன்னதானப்பட்டி போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
- ஓடங்காடு விநாயகர் கோவில் அருகே பூனை ஒன்று குறுக்கே பாய்ந்து மொபட்டில் விழுந்தது.
- இதனால் மெபட்டியில் பிரேக் பிடிக்க முயன்றபோது முதியவர் நிலை தடுமாறி கீழே விழுந்தார்.
தாரமங்கலம்:
தாரமங்கலம் பாட்டப்பன் கோவில் தெரு பகுதியை சேர்ந்தவர் தங்கவேல் (வயது 75). இவர் கடந்த 14- ந்தேதி தனது உறவினருக்கு சொந்தமான மொபட்டை எடுத்துக் கொண்டு சொந்த வேலையாக கோணகப்பாடி சென்றபோது ஓடங்காடு விநாயகர் கோவில் அருகே பூனை ஒன்று குறுக்கே பாய்ந்து மொபட்டில் விழுந்தது. இதனால் மெபட்டியில் பிரேக் பிடிக்க முயன்றபோது முதியவர் நிலை தடுமாறி கீழே விழுந்தார்.
அப்போது அக்கம்பக்கத்தினர் கீழே விழுந்தவரை மீட்டு சிகிச்சைக்காக சேலம் அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். இந்நிலையில் சிகிச்சை பலனின்றி நேற்று காலை தங்கவேல் பரிதாபமாக இறந்தார்.
இதுபற்றி தங்கவேலின் மகன் ராஜா கொடுத்த புகாரின் பேரில் தாரமங்கலம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
- கடந்த 14-ந் தேதி அன்று காலை தொட்டிபாளை–யத்திலிருந்து நறுவலூர் செல்வதற்காக சுங்கக்காரன்பட்டி-நறுவலூர் சாலையில் தனது மோட்டார் சைக்கிளில் வந்து கொண்டிருந்தார்.
- அப்போது எதிரே அதிவேக–மாக வந்த மோட்டார்– சைக்கிள் சென்னப்பன் மீது மோதியது.
பரமத்திவேலூர்:
நாமக்கல் மாவட்டம் தளிகை அருகே தொட்டி–பாளையம் பகுதியை சேர்ந்தவர் சென்னப்பன் (வயது 58). இவர் கடந்த 14-ந் தேதி அன்று காலை தொட்டிபாளை–யத்திலிருந்து நறுவலூர் செல்வதற்காக சுங்கக்காரன்பட்டி-நறுவலூர் சாலையில் தனது மோட்டார் சைக்கிளில் வந்து கொண்டிருந்தார். அப்போது எதிரே அதிவேகமாக வந்த மோட்டார் சைக்கிள் சென்னப்பன் மீது மோதியது. இதில் சென்னப்பன் நிலைதடுமாறி மோட்டார ்சைக்கிளுடன் சாலையில் கீழே விழுந்தார். இதில் அவருக்கு பலத்த காயம் ஏற்பட்டது.
இதை பார்த்த அக்கம்–பக்கத்தினர் ஓடி வந்து ஆம்புலன்ஸ் வரவழைக்–கப்பட்டு நாமக்கல் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு சென்னப்பனுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு மேல் சிகிச்சைக்காக சேலம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது.
இந்நிலையில் சிகிச்சை பலனின்றி சென்னப்பன் உயிரிழந்தார். இது குறித்து வேலகவுண்டன்பட்டி போலீசில் புகார் செய்தனர். புகாரின் பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
- ஓவியம்பாளையம் செல்லும் பிரிவு சாலை அருகே 75 வயது மதிக்கத்தக்க ஆண் ஒருவர் மயங்கிய நிலையில் கிடந்துள்ளார்.
- அவரை அப்பகுதியினர் மீட்டு நாமக்கல் அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர்.
நாமக்கல்:
நாமக்கல் மாவட்டம் பரமத்தி வேலூர் தாலுகா பரமத்தியில் நாமக்கல் -கரூர் தேசிய நெடுஞ்சாலையில் ஓவியம்பாளையம் செல்லும் பிரிவு சாலை அருகே 75 வயது மதிக்கத்தக்க ஆண் ஒருவர் மயங்கிய நிலையில் கிடந்துள்ளார். அவரை அப்பகுதியினர் மீட்டு நாமக்கல் அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது. இந்நிலையில் சிகிச்சை பலனின்றி முதியவர் உயிரிழந்தார். இது குறித்து நாமக்கல் அரசு மருத்துவமனை நிர்வாகம் பரமத்தி போலீசருக்கு தகவல் தெரிவித்தனர். அதன் அடிப்படையில் பரமத்தி போலீசார் வழக்கு பதிவு செய்து, உயிரிழந்த முதியவர் யார்? எந்த ஊரை சேர்ந்தவர் என்பது குறித்து தீவிரமாக விசாரணை நடத்தி வருகின்றனர்.
- நேற்று முன்தினம் இரவு திருப்பதி- எர்ணாகுளம் எக்ஸ்பிரஸ் ரெயிலில் ஊர் திரும்பினர்.
- சோமநாதன் தான் பயணித்த எஸ்.3 முன்பதிவு பெட்டியில் திடீரென மயங்கி விழுந்தார்.
சேலம்:
கேரளா மாநிலம் கொச்சி அருகே மட்டாஞ்சேரியை சேர்ந்தவர் சோமநாதன் (வயது 68). இவர் தனது மகன் சதீஷ் (30) மற்றும் குடும்பத்தினருடன் திருப்பதிக்கு சென்றார். இவர்கள் நேற்று முன்தினம் இரவு திருப்பதி- எர்ணாகுளம் எக்ஸ்பிரஸ் ரெயிலில் ஊர் திரும்பினர்.
மயங்கி விழுந்தார்.
ரெயில் சேலம் அருகே வந்தபோது, சோமநாதன் தான் பயணித்த எஸ்.3 முன்பதிவு பெட்டியில் திடீரென மயங்கி விழுந்தார். அவரின் உறவினர்கள் இது குறித்து டிக்கெட் பரிசோதகரிடம் தகவல் தெரிவித்தனர்.
இதையடுத்து ரெயில் சேலம் ஜங்சன் ரெயில் நிலையத்துக்கு வந்ததும் டாக்டர்கள், சோமநாதனை பரிசோதித்து பார்த்தனர். அவர், மாரடைப்பால் இறந்தது தெரியவந்தது. அவரது உடலை பார்த்து உறவினர்கள் கதறி அழுதனர். சோமநாதன் உடல், கேரளாவில் உள்ள அவரது சொந்த ஊருக்கு எடுத்துச் செல்லப்பட்டது.
வழக்குப்பதிவு
இது குறித்து சேலம் ஜங்சன் ரெயில் நிலைய போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.






