என் மலர்
உள்ளூர் செய்திகள்

தளிகை அருகே மோட்டார் சைக்கிள் மோதி முதியவர் சாவு
- கடந்த 14-ந் தேதி அன்று காலை தொட்டிபாளை–யத்திலிருந்து நறுவலூர் செல்வதற்காக சுங்கக்காரன்பட்டி-நறுவலூர் சாலையில் தனது மோட்டார் சைக்கிளில் வந்து கொண்டிருந்தார்.
- அப்போது எதிரே அதிவேக–மாக வந்த மோட்டார்– சைக்கிள் சென்னப்பன் மீது மோதியது.
பரமத்திவேலூர்:
நாமக்கல் மாவட்டம் தளிகை அருகே தொட்டி–பாளையம் பகுதியை சேர்ந்தவர் சென்னப்பன் (வயது 58). இவர் கடந்த 14-ந் தேதி அன்று காலை தொட்டிபாளை–யத்திலிருந்து நறுவலூர் செல்வதற்காக சுங்கக்காரன்பட்டி-நறுவலூர் சாலையில் தனது மோட்டார் சைக்கிளில் வந்து கொண்டிருந்தார். அப்போது எதிரே அதிவேகமாக வந்த மோட்டார் சைக்கிள் சென்னப்பன் மீது மோதியது. இதில் சென்னப்பன் நிலைதடுமாறி மோட்டார ்சைக்கிளுடன் சாலையில் கீழே விழுந்தார். இதில் அவருக்கு பலத்த காயம் ஏற்பட்டது.
இதை பார்த்த அக்கம்–பக்கத்தினர் ஓடி வந்து ஆம்புலன்ஸ் வரவழைக்–கப்பட்டு நாமக்கல் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு சென்னப்பனுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு மேல் சிகிச்சைக்காக சேலம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது.
இந்நிலையில் சிகிச்சை பலனின்றி சென்னப்பன் உயிரிழந்தார். இது குறித்து வேலகவுண்டன்பட்டி போலீசில் புகார் செய்தனர். புகாரின் பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.






