என் மலர்
உள்ளூர் செய்திகள்

வெற்றிலை கொடிக்காலுக்குள் தவறி விழுந்த முதியவர் சாவு
- கடந்த 11-ந் தேதி இந்த கொடிக்காலில் வேலை செய்து கொண்டு இருந்தார்.
- அப்போது, நிலை தடுமாறிய முருகேசன் கொடிக்காலில் உள்ள கிடங்குக்குள் தவறி விழுந்தார்.
பரமத்தி வேலூர்:
நாமக்கல் மாவட்டம் பரமத்தி வேலூரை சேர்ந்தவர் முருகேசன் (வயது 60). பரமத்தி வேலூரில் இருந்து அனிச்சம்பாளையம் செல்லும் சாலையில் இவருக்கு சொந்தமான வெற்றிலை கொடிக்கால் உள்ளது. கடந்த 11-ந் தேதி இந்த கொடிக்காலில் வேலை செய்து கொண்டு இருந்தார். அப்போது, நிலை தடுமாறிய முருகேசன் கொடிக்காலில் உள்ள கிடங்குக்குள் தவறி விழுந்தார். இதில் அவருக்கு பலத்த காயம் ஏற்பட்டு, அங்கிருந்து எழுந்துசெல்ல முடியாமல் கிடங்கிற்குள் உள்ள தண்ணீருக்குள் கிடந்துள்ளார்.
இந்த நிலையில், வெகு நேரம் ஆகியும் முருகேசன் வீட்டுக்கு வராததால் வெற்றிலை கொடிக்காலுக்கு சென்று பார்த்த உறவினர்கள், அங்கு உயிருக்கு போராடிய முருகேசனை மீட்டு பரமத்தி வேலூர் அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். பின்னர் மேல் சிகிச்சைக்காக நாமக்கல் அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்த நிலையில், சிகிச்சை பலனின்றி முருகேசன் உயிரிழந்தார். இதுகுறித்து பரமத்தி வேலூர் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.






