என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    முயல்வேட்டைக்கு வலைவிரித்தகூலி தொழிலாளி கைது
    X

    முயல்வேட்டைக்கு வலைவிரித்தகூலி தொழிலாளி கைது

    • சேர்வராயன் தெற்கு வனச்சரகத்திற்கு உட்பட்ட எரிமலை காப்புக்காடு பகுதியில் நேற்று வனச்சரகர் பரசுராமமூர்த்தி தலைமையில் வனவர் ஆறுமுகம் மற்றும் வன ஊழியர்கள் ரோந்து சென்றனர்.
    • மாது (வயது 52) , கூலி தொழிலாளி என்பது தெரியவந்தது. அவரிடம் இருந்து 2 வலைகளை பறிமுதல் செய்தனர்.

    சேலம்:

    சேலம் மாவட்டம் சேர்வராயன் தெற்கு வனச்சரகத்திற்கு உட்பட்ட எரிமலை காப்புக்காடு பகுதியில் நேற்று வனச்சரகர் பரசுராமமூர்த்தி தலைமையில் வனவர் ஆறுமுகம் மற்றும் வன ஊழியர்கள் ரோந்து சென்றனர்.

    அங்கு முயல் உள்ளிட்ட வன விலங்குகளை வேட்டையாட ஒருவர் வலைவிரித்திருந்தார். அதிகாரிகளை பார்த்ததும் அவர் தப்பி ஓட முயன்றார். அவரை அதிகாரிகள் மடக்கி பிடித்தனர்.

    கைது- ரூ.25 ஆயிரம் அபராதம்

    விசாரணையில், அவர் காடையாம்பட்டி தாலுகா செத்தப்பாளையத்தை சேர்ந்த மாது (வயது 52) , கூலி தொழிலாளி என்பது தெரியவந்தது. அவரிடம் இருந்து 2 வலைகளை பறிமுதல் செய்தனர்.

    தொடர்ந்து, மாது மீது வன உயிரின பாதுகாப்பு சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்து, அவரை கைது செய்து, சேலம் மாவட்ட வன அலுவலர் கஷ்யப் சாஷாங் ரவி முன்பு ஆஜர்படுத்தினர். இதையடுத்து வன அலுவலர், அவருக்கு ரூ. 25 ஆயிரம் அபராதம் விதித்தார்.

    அந்த அபராத தொகையை மாதுவிடம் இருந்து வனத்துறையினர் வசூலித்தனர்.

    Next Story
    ×