என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    வாகன ஓட்டிகளுக்கு குறும்படம் மூலம் விழிப்புணர்வு
    X

    மேட்டுப்பட்டி சுங்கச்சாவடி அருகே வாகனங்களுக்கு போலீசார் ஒளிரும் எச்சரிக்கை பட்டைகள் ஒட்டிய போது எடுத்த படம்.

    வாகன ஓட்டிகளுக்கு குறும்படம் மூலம் விழிப்புணர்வு

    • வாகன ஓட்டுனர்களுக்கு சாலை விதிகள் மற்றும் பாதுகாப்பு குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தும் பணியில், வாழப்பாடி போலீஸ் துணை சூப்பிரண்டு ஹரிசங்கரி தலைமையிலான போலீசார் முழுவீச்சில் ஈடுபட்டு வருகின்றனர்.
    • வாழப்பாடி இன்ஸ்பெக்டர் உமாசங்கர் தலைமையிலான போலீசார், தலைக்கவசம் அணியாமல் இருசக்கர வாகனம் ஓட்டியவர்களுக்கு அபராதம் விதித்து அனுப்பி வைத்தனர்.

    வாழப்பாடி:

    சேலம் மாவட்டம் வாழப்பாடி காவல் உட்கோட்டத்தில், சாலை விபத்து மற்றும் உயிர் பலி ஏற்படுவதை தடுக்கும் நோக்கில், வாகன ஓட்டுனர்களுக்கு சாலை விதிகள் மற்றும் பாதுகாப்பு குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தும் பணியில், வாழப்பாடி போலீஸ் துணை சூப்பிரண்டு ஹரிசங்கரி தலைமையிலான போலீசார் முழுவீச்சில் ஈடுபட்டு வருகின்றனர்.

    வாழப்பாடியில், பிரதான கடலூர் சாலையில், நேற்றி

    ரவு தலைக்கவசம் அணியா மல் இரு சக்கர வாகனத்தை ஓட்டிச் சென்றவர்களை வாழப்பாடி அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி வளா கத்திற்கு அழைத்துச் சென்ற போலீசார், தலைக்கவசம் அணியாமலும், மது அருந்தி விட்டும் வாகனங்களை ஓட்டுவதால், விபத்து மற்றும் உயிர்பலி ஏற்படுவது குறித்தும், இதனால் பல குடும்பங்கள் பாதிக்கப்படுவது குறித்தும்,

    டிஜிட்டல் திரையில் குறும்படம் காண்பித்து விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.

    வாழப்பாடி இன்ஸ்பெக்டர் உமாசங்கர் தலைமையிலான போலீசார், தலைக்கவசம் அணியாமல் இருசக்கர வாகனம் ஓட்டியவர்களுக்கு அபராதம் விதித்து அனுப்பி வைத்தனர்.

    முன்னதாக, மேட்டுப்பட்டி சுங்கச்சாவடி அருகே வாகனங்களின் முகப்பு விளக்குகளுக்கு, ஒளிச்சி தறலை கட்டுப்படுத்தும் கருப்பு நிற வில்லைகள் மற்றும்

    வாகனங்களின் பின்புறங்களில் ஒளிரும் எச்சரிக்கை பட்டைகளும் காவல்துறை சார்பில் ஓட்டப்பட்டது.

    Next Story
    ×