என் மலர்
சேலம்
- கருப்பூரை அடுத்த உள்ள டால்மியா போர்டு அருகே மொபட்டில் சென்றார்.
- அப்பொழுது அந்தவழியாக வந்த லாரியும், மொபட்டும் மோதிக்கொண்டன.
கருப்பூர்:
சேலம் சூரமங்கலம் அருகே உள்ள சுந்தர் நகர், மல்லமூப்பம்பட்டி, பகுதி சேர்ந்தவர் ஆஞ்சநேயர் (வயது 73). இவர் கருப்பூரை அடுத்த உள்ள டால்மியா போர்டு அருகே மொபட்டில் சென்றார்.அப்பொழுது அந்தவழியாக வந்த லாரியும், மொபட்டும் மோதிக்கொண்டன. இதில் ஆஞ்சநேயர் தலை மீது லாரி ஏறியது. இதனால் சம்பவ இடத்தில் துடிதுடித்து பலியானார்.
இந்த விபத்து குறித்து தகவல் அறிந்த கருப்பூர் இன்ஸ்பெக்டர் தமிழரசி மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக சேலம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
விபத்தை ஏற்படுத்தி விட்டு தப்பி ஓடிய லாரி டிரைவர் மீது போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.
- ஏற்காட்டில் வட்டார மருத்துவ அலுவலர் தாம்சன் அறிவுறுத்தல்படி, கர்ப்பிணிகள், குழந்தைகளுக்கு அரசு ஆஸ்பத்திரியில் தடுப்பூசி போட வலியுறுத்தியும், போலி மருத்துவர்கள் குறித்தும், பொதுமக்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்தினார்.
- முன்னதாக தடுப்பூசி குறித்து விழிப்புணர்வு சுவ ரொட்டிகளை பஸ்களில் ஒட்டினார்.
ஏற்காடு:
சேலம் மாவட்டம் ஏற்காட்டில் வட்டார மருத்துவ அலுவலர் தாம்சன் அறிவுறுத்தல்படி, வட்டார சுகாதார மேற்பார்வையாளர் செல்வகுமார், கர்ப்பி
ணிகள், குழந்தைகளுக்கு அரசு ஆஸ்பத்திரியில் தடுப்பூசி போட வலியுறுத்தியும், போலி மருத்துவர்கள் குறித்தும், பொதுமக்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்தினார்.
இதன் ஒரு பகுதியாக பஸ்களில் ஏறி, அதில் பயணம் செய்த பொதுமக்களிடம் சுகாதாரம், குழந்தைகளுக்கு செலுத்தபட வேண்டிய தடுப்பூசிகள், கர்ப்பிணி களுக்கான மருத்துவம் போன்றவை குறித்து எடுத்துக்கூறினார்.
அவர் மேலும் பேசும்போது, ஏற்காட்டில் உள்ள மலை கிராமங்களில் வசிக்கும் மக்களை ஏமாற்றும் விதமாக போலி மருத்துவர்கள் வலம் வருவதாகவும், அவர்களிடம் யாரும் மருத்துவம் பார்க்க வேண்டாம் என்றும், அரசு ஆஸ்பத்திரியில் அனைத்து வசதிகளும் உள்ளதால், அரசு ஆஸ்பத்திரிகளுக்கு சென்று மருத்துவம் பார்க்க வலியுறுத்தியும் விழிப்புணர்வு ஏற்படுத்தினார். முன்னதாக தடுப்பூசி குறித்து விழிப்புணர்வு சுவ ரொட்டிகளை பஸ்களில் ஒட்டினார்.
- வளர்ச்சி திட்ட பணிகள் மற்றும் அரசு அலுவலகங்களை முதலமைச்சர் திடீர் ஆய்வு மேற்கொள்வார் என எதிர்பார்க்கப்படுகிறது.
- முதலமைச்சர் வருகையை முன்னிட்டு சேலம் மாவட்டம் முழுவதும் முன்னெச்சரிக்கை ஏற்பாடுகள் தீவிரமாக நடந்து வருகின்றன.
சேலம்:
தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மண்டல வாரியாக மாவட்டங்களில் செயல்படுத்தப்படும் அரசு திட்டங்களின் தற்போதைய நிலை குறித்து நேரில் ஆய்வு செய்வதற்காக கள ஆய்வில் முதல்வர் என்ற திட்டத்தை தொடங்கினார்.
முதலாவதாக வேலூர் மண்டலத்துக்கு உட்பட்ட வேலூர், ராணிப்பேட்டை, திருப்பத்தூர், திருவண்ணாமலை மாவட்டங்களில் நடந்து வரும் பணிகள் குறித்து ஆய்வு செய்தார். அப்போது 4 மாவட்ட போலீஸ் சூப்பிரண்டுகள் உடன் சட்டம் ஒழுங்கு குறித்து ஆலோசனை நடத்தினார்.
அமைச்சர்கள் மற்றும் அதிகாரிகள் 4 மாவட்டங்களிலும் நேரில் ஆய்வு மேற்கொண்டனர். அவர்கள் அளித்த அறிக்கை அடிப்படையில் மறுநாள் 4 மாவட்ட கலெக்டர்களுடன் முதலமைச்சர் ஆலோசனை நடத்தினார். அனைத்து திட்டங்களையும் விரைவாக செயல்படுத்த அறிவுறுத்தினார்.
இதைத்தொடர்ந்து 2-வது பயணமாக சேலம் மண்டலத்திற்கு உட்பட்ட ஆய்வு கூட்டம் நாளை 15-ந் தேதி மற்றும் நாளை மறுநாள் 16-ந் தேதி, சேலம் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் நடைபெறுகிறது. இதில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கலந்து கொள்கிறார். இதற்காக நாளை காலை சென்னையில் இருந்து விமானம் மூலம் சேலம் வரும் முதல்வர் மு.க.ஸ்டாலின் சிறிது நேரம் ஓய்வு எடுக்கிறார்.
மாலையில் சேலம் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் நடக்கும் சட்டம் ஒழுங்கு ஆய்வு கூட்டத்தில் கலந்து கொண்டு 4 மாவட்ட கலெக்டர்கள், சேலம் மாநகர போலீஸ் கமிஷனர் நஜ்மல் ஹோடா மற்றும் 4 மாவட்ட போலீஸ் சூப்பிரண்டுகள் மற்றும் காவல் துறை அதிகாரிகளுடன் ஆலோசனை மேற்கொள்கிறார்.
அன்று இரவு சேலத்தில் தங்கும் முதல்வர், நாளை மறுநாள் சேலம் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் நடக்கும் அரசு துறை அலுவலர்களுடனான ஆய்வுக் கூட்டத்தை நடத்துகிறார். இதில் சேலம், நாமக்கல், தர்மபுரி, மற்றும் கிருஷ்ணகிரி மாவட்ட கலெக்டர்கள் மற்றும் பல்வேறு துறை அதிகாரிகள் கலந்து கொள்கின்றனர். இதில் மாவட்டத்தில் நடைபெறும் வளர்ச்சிப் பணிகள் மற்றும் இனிவரும் நாட்களில் செய்ய வேண்டிய திட்டங்கள் குறித்தும் விரிவாக ஆலோசனை மேற்கொள்ளப்பட உள்ளது.
இதற்கிடையே மாவட்டத்தில் நடந்து வரும் வளர்ச்சி திட்ட பணிகள் மற்றும் அரசு அலுவலகங்களை முதலமைச்சர் திடீர் ஆய்வு மேற்கொள்வார் என எதிர்பார்க்கப்படுகிறது. இதனால் அனைத்து துறையினரும் விழிப்பாக இருக்கும்படி அறிவுறுத்தப்பட்டு உள்ளது.
முதலமைச்சர் வருகையை முன்னிட்டு சேலம் மாவட்டம் முழுவதும் முன்னெச்சரிக்கை ஏற்பாடுகள் தீவிரமாக நடந்து வருகின்றன. குறிப்பாக கூட்டம் நடைபெறும் சேலம் மாவட்ட கலெக்டர் அலுவலகம் மற்றும் கட்டிடங்கள் புதுப்பிக்கப்பட்டு வருகிறது. மேலும் தீவிர பாதுகாப்பு ஏற்பாடுகளும் மேற்கொள்ளப்பட்டுள்ளன.
முதலமைச்சர் வருகையையொட்டி பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்து மாநகர போலீஸ் கமிஷனர் நஜ்மல் ஹோடா நேற்று கலெக்டர் அலுவலகத்தில் ஆய்வு செய்தார். அப்போது பாதுகாப்பு வழங்குவது குறித்து துணை கமிஷனர் மாடசாமி, லாவண்யா ஆகியோருடன் ஆலோசனை நடத்தினார்.
மாநகர போலீசாரின் கட்டுப்பாட்டுக்குள் கலெக்டர் அலுவலகம் இன்று காலை முதல் கொண்டு வரப்பட்டுள்ளது. அங்கு பணியாற்றும் அதிகாரிகள், அலுவலர்கள் தவிர பிற நபர்களை உள்ளே அனுமதிக்காமல் தீவிர சோதனை மேற்கொள்ளவும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
முதலமைச்சரின் பாதுகாப்பு பிரிவு போலீசார் அவர்களது கட்டுப்பாட்டுக்குள் கலெக்டர் அலுவலகத்தை இன்று மாலை முதல் கொண்டு வருகிறார்கள். மேலும் முதலமைச்சர் மாநகரில் உள்ள போலீஸ் நிலையம் சென்று ஆய்வு செய்யலாம் என்று கூறப்படுகிறது. இதனால் போலீஸ் நிலையங்களும் தூய்மைப்படுத்தி அனைத்து விதத்திலும் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளன.
முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வருகையை ஒட்டி அவர் செல்லும் பாதைகளில் 1500-க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட உள்ளனர்.
- திருப்பூர் மாவட்டம் தொழில்நகரமாக இருப்பதால் லட்சக்கணக்கான தொழிலாளர்கள் வசித்து வருகிறார்கள்.
- முறைகேடாக செயல்படும் கிளீனிக் மற்றும் மருந்தகங்கள் குறித்து சுகாதாரத்துறை அதிகாரிகள் தொடர்ச்சியாக சோதனை நடத்தி வருகின்றனர்.
திருப்பூர்:
திருப்பூர் மாவட்டம் தொழில்நகரமாக இருப்பதால் லட்சக்கணக்கான தொழிலாளர்கள் வசித்து வருகிறார்கள். இதில் தமிழகத்தை சேர்ந்த தொழிலாளர்கள் மட்டுமின்றி, வடமாநிலங்களை சேர்ந்த தொழிலாளர்களும் வேலை செய்து வருகிறார்கள். மக்கள் நெருக்கம் அதிகமாக இருப்பதால் திருப்பூர் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் மருந்தகங்கள் மற்றும் கிளீனிக்குகளை பலர் தொடங்கி வருகிறார்கள்.
இந்த கிளீனிக் மற்றும் மருந்தகங்கள் அமைக்க சுகாதாரத்துறை அதிகாரிகளிடம் அனுமதி பெற்று பலரும் அமைத்து வருகிறார்கள். அரசு வழிமுறைகளின் படி சிகிச்சை மற்றும் மருந்துகள் வழங்கப்பட வேண்டும் என அறிவுறுத்தப்படுகிறது. ஆனால் தொழிலாளர்கள் அதிகளவு இருப்பதால், அவர்களின் அறியாமையை பயன்படுத்தி சிலர் போலியாக மருந்தகங்கள் மற்றும் கிளீனிக்குகள் போன்றவற்றை தொடங்குகிறார்கள். இதில் சிகிச்சை அளிக்கிற டாக்டர்கள் போலியாக இருக்கிறார்கள்.
இதனால் திருப்பூர் மாவட்டத்தில் முறைகேடாக செயல்படும் கிளீனிக் மற்றும் மருந்தகங்கள் குறித்து சுகாதாரத்துறை அதிகாரிகள் தொடர்ச்சியாக சோதனை நடத்தி வருகின்றனர். இந்த ஆய்வின் போது முறைகேடாக செயல்படும் கிளீனிக் மற்றும் மருந்தகங்களுக்கு சீல் வைக்கப்படுகிறது. இதுபோல் போலி டாக்டர்களும் கைது செய்யப்பட்டு வருகிறார்கள். இதற்கிடையே தற்போது இந்த சம்பவங்களை மேலும் கட்டுப்படுத்தும் வகையில் சுகாதாரத்துறை சார்பில், கடும் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது. போலி டாக்டர்களை கைது செய்ய கமிட்டி ஒன்று அமைக்கப்பட்டுள்ளது.
இது குறித்து திருப்பூர் மாவட்ட சுகாதாரப்பணிகள் இணை இயக்குனர் கனகராணி கூறியதாவது:-
திருப்பூர் மாவட்டத்தில் தொழிலாளர்களை குறித்து வைத்து இதுபோன்று பலர் போலியாக மருந்து, மாத்திரைகளை வழங்கி வருகிறார்கள். இதற்காக உரிய படிப்பு தகுதி இல்லாதவர்கள் டாக்டர்களாக செயல்படுகிறார்கள். மேலும், மருந்தகங்கள், கிளீனிக்குகள் போன்றவற்றை முறைகேடாக தொடங்கி வருகிறார்கள். இதனை கண்டுபிடித்து நடவடிக்கை மேற்கொண்டு வருகிறோம். கடந்த 3 மாதத்தில் மட்டும் போலியாக செயல்பட்ட 5 மருந்தகங்கள் மற்றும் 5 கிளீனிக்குகளுக்கு சீல் வைக்கப்பட்டுள்ளன. போலி டாக்டர்களும் கைது செய்யப்பட்டுள்ளனர்.
இந்நிலையில் மாவட்டம் முழுவதும் போலி டாக்டர்களை கண்டறிந்து கைது செய்ய, போலி டாக்டர் ஒழிப்பு கமிட்டி ஒன்று அமைக்கப்பட்டுள்ளது. இதில் 13 பேர் உள்ளனர். இந்த கமிட்டியினர் மாவட்டம் முழுவதும் ஒவ்வொரு பகுதியாக ஆய்வு பணிகளை தொடர்ந்து மேற்கொண்டு வருகிறார்கள். விரைவில் திருப்பூர் மாவட்டம் போலி மருந்தகம், போலி கிளினிக் இல்லாத மாவட்டமாக மாற்றப்படும். போலி டாக்டர்கள் அனைவரும் கைது செய்யப்படுவார்கள்.
இவ்வாறு அவர் கூறினார்.
- மேட்டூர் அணையில் இருந்து குடிநீர் தேவைக்காக, விநாடிக்கு ஆயிரம் கன அடி தண்ணீர் திறக்கப்படுகிறது.
- நேற்று 103.83 அடியாக இருந்த நீர்மட்டம், இன்று காலை 103.85 அடியாக உயர்ந்து உள்ளது.
மேட்டூர்:
காவிரி நீர்ப்பிடிப்பு பகுதிகளில் மழை இல்லாததால், ஓகேனக்கல் மற்றும் மேட்டூர் அணைக்கான நீர்வரத்து குறைவாக உள்ளது.
ஒகேனக்கல் காவிரியில் வரும் நீரின் அளவு, விநாடிக்கு 2 ஆயிரம் கன அடியாக நீடிக்கிறது. அதேசமயம் மேட்டூர் அணைக்கு நேற்று விநாடிக்கு 1616 கன அடியாக இருந்த நீர்வரத்து, இன்று காலை நிலவரப்படி விநாடிக்கு 1605 கன அடியாக குறைந்தது.
அணையில் இருந்து குடிநீர் தேவைக்காக, விநாடிக்கு ஆயிரம் கன அடி தண்ணீர் திறக்கப்படுகிறது. நேற்று 103.83 அடியாக இருந்த நீர்மட்டம், இன்று காலை 103.85 அடியாக உயர்ந்து உள்ளது.
- இந்தியாவில் மகாராஷ்டிரா மாநிலத்தில் சீட்லெஸ் திராட்சை அதிகளவில் சாகுபடி செய்யப்படுகின்றன.
- இந்த பகுதியில் அறுவடை செய்யப்படும் திராட்சை இந்தியா முழுவதும் பல்வேறு மாநிலங்களுக்கு அனுப்பப்படுகிறது.
சேலம்:
இந்தியாவில் மகாராஷ்டிரா மாநிலம் சாங்கிலி, ஜர்த், மிர்சேஜ், பண்டரிபூர், சோலாப்பூர், கோலாப்பூர், மணிராஜா உள்ளிட்ட பகுதிகளில் சீட்லெஸ் திராட்சை அதிகளவில் சாகுபடி செய்யப்படுகின்றன. இந்த பகுதியில் அறுவடை செய்யப்படும் திராட்சை இந்தியா முழுவதும் பல்வேறு மாநிலங்களுக்கு அனுப்பப்படுகிறது. தற்போது மகாராஷ்டிராவில் சீட்லெஸ் திராட்சை அமோக விளைச்சலை தந்துள்ளது. இதையடுத்து சேலம் மார்க்கெட்டுக்கு சீட்லெஸ் திராட்சையின் வரத்து அதிகரித்துள்ளது.
இதுகுறித்து, சேலம் கடைவீதி பழ வியாபாரிகள் கூறுகையில், மகாராஷ்டிரா மாநிலத்தில் சுமார் 200 கிலோமீட்டர் சுற்றளவில் சீட்லெஸ் திராட்சை சாகுபடி நடக்கிறது. அங்கிருந்து இந்தியா முழுவதும் பல்வேறு மாநிலங்களுக்கு சீட்லெஸ் திராட்சை விற்பனைக்கு அனுப்பப்படுகிறது. கடந்த ஒரு மாதமாக மகாராஷ்டிரவில் இருந்து சேலம் மார்க்கெட்டுக்கு சீட்லெஸ் திராட்சை வரத்து அதிகரித்துள்ளது. சீசன் தொடக்கத்தில் 10 டன்னாக இருந்தது.
இவை அதிகரித்து, நேற்யை நிலவரப்படி நாள் ஒன்றுக்கு 30 டன் சீட்லெஸ் திராட்சை விற்பனைக்கு வந்து கொண்டிருக்கின்றன. இன்னும் 1½ மாதத்திற்கு சீட்லெஸ் திராட்சையின் வரத்து இருக்கும், சில்லரையில் ஒரு கிலோ ரூ.50 முதல் ரூ.60 வரை விற்பனை செய்து வருகின்றனர்.
- காவேரிப்பட்டி சுற்றியுள்ள கிராமங்களில் ஆயிரத்துக்கும் மேற்பட்ட ஏக்கரில் விவசாயிகள், நெல் சாகுபடி செய்திருந்தனர்.
- இங்கு கூலி ஆட்கள் பற்றாக்குறை காரணமாக எந்திரம் மூலம் அறுவடை செய்யப்பட்டது.
எடப்பாடி:
சேலம் மாவட்டம், இடைப்பாடி சுற்றியுள்ள பூலாம்பட்டி, கூடக்கல், குப்பனூர், காசிகாடு, வளையசெட்டியூர், காட்டுவளவு, மூலப்பாறை, நெடுங்குளம், கோனேரிப்பட்டி, செட்டிப்பட்டி, தேவூர், மயிலம்பட்டி, குள்ளம்பட்டி, மூலப்பாதை, காவேரிப்பட்டி சுற்றியுள்ள கிராமங்களில் ஆயிரத்துக்கும் மேற்பட்ட ஏக்கரில் விவசாயிகள், நெல் சாகுபடி செய்திருந்தனர். இங்கு கூலி ஆட்கள் பற்றாக்குறை காரணமாக எந்திரம் மூலம் அறுவடை செய்யப்பட்டது. அறுவடை பணிகள் நிறைவடைந்த நிலையில், வைக்கோலை கால்நடை தீவனத்திற்காகவும், காளான் வளர்ப்பிற்காக விற்பனை செய்யும் பணியில், விவசாயிகள் ஈடுபட்டுள்ளனர். சில வியாபாரிகள் விவசாயிகளிடம் மொத்தமாக வைக்கோலை வாங்கி வெளி மாவட்டங்களுக்கு விற்பனைக்கு அனுப்பி வருகின்றனர்.
இப்பகுதியில் எந்திரம் மூலம் உருளையாக காட்டப்பட்ட, ஒரு கட்டு வைக்கோல் ரூ.100 முதல் ரூ.150 வரை விற்பனை செய்யப்படுகிறது.
- அரசு வேலை கேட்டு விண்ணப்பித்தபோது குட்டு அம்பலமானது.
- அதிர்ச்சி அடைந்த தாலுகா அதிகாரிகள் போலியாக வாரிசு சான்றிதழ் தயார் செய்தது குறித்து மாநகராட்சிக்கு தெரிவித்தனர்.
சேலம்:
சேலம் மாநகராட்சி 21-வது வார்டில் தூய்மை பணியாளராக உமா என்ற பெண் வேலை பார்த்து வந்தார்.
இவரது வாரிசு என கூறி, மேட்டூர் அருகே உள்ள பொட்டனேரியை சேர்ந்த பரமேஸ்வரன் என்பவர் அரசு வேலை கேட்டு மாநகராட்சியில் விண்ணப்பித்துள்ளார்.
அவர் சமர்ப்பித்த வாரிசு சான்றிதழின் உண்மை தன்மை அறிய சேலம் மேற்கு தாலுகாவுக்கு பரிந்துரைக்கப்பட்டது. அதன்படி அந்த சான்றிதழை ஆய்வுக்கு உட்படுத்தியதில், ஆன்லைனில் பெறப்பட்டது போல போலியாக வாரிசு சான்றிதழ் தயார் செய்யப்பட்டது உறுதியானது. இதனால் அதிர்ச்சி அடைந்த தாலுகா அதிகாரிகள் இது குறித்து மாநகராட்சிக்கு தெரிவித்தனர்.
மேலும் பரமேஸ்வரன் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி சேலம் மேற்கு தாசில்தார் அருள்பிரகாஷ், சூரமங்கலம் போலீஸ் நிலையத்தில் புகார் கொடுத்தார்.
அதன்பேரில் பரமேஸ்வரன் மீது போலி ஆவணத்தை உண்மை ஆவணமாக தாக்கல் செய்தது, அதை உண்மை ஆவணம் என நம்ப வைத்தது, மோசடி ஆகிய பிரிவுகளில் குற்றப்பரிவு இன்ஸ்பெக்டர் கந்தவேல், வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றார்.
- மேட்டூர் அணையில் இருந்து குடிநீர் தேவைக்காக, விநாடிக்கு ஆயிரம் கனஅடி தண்ணீர் திறக்கப்படுகிறது.
- நேற்று 103.81 அடியாக இருந்த அணையின் நீர்மட்டம், இன்று காலை 103.83 அடியாக உயர்ந்தது.
மேட்டூர்:
காவிரி நீர்ப்பிடிப்பு பகுதிகளில் பெய்யும் மழையை பொறுத்து, ஒகேனக்கல் மற்றும் மேட்டூர் அணைக்கான நீர்வரத்து அதிகரிப்பதும் குறைவதுமாக இருந்து வருகிறது.
ஒகேனக்கல் காவிரியில் வரும் நீரின் அளவு, விநாடிக்கு 2 ஆயிரம் கன அடியாக நீடிக்கிறது. அதே சமயம், மேட்டூர் அணைக்கு நேற்று விநாடிக்கு 1,466 கன அடியாக இருந்த நீர்வரத்து, இன்று காலை நிலவரப்படி விநாடிக்கு 1,616 கன அடியாக அதிகரித்து உள்ளது.
அணையில் இருந்து குடிநீர் தேவைக்காக, விநாடிக்கு ஆயிரம் கனஅடி தண்ணீர் திறக்கப்படுகிறது. நேற்று 103.81 அடியாக இருந்த அணையின் நீர்மட்டம், இன்று காலை 103.83 அடியாக உயர்ந்தது.
- கெங்–க–வல்லி அருகே கூட–மலை பகு–தி–யில் உள்ள ஒரு அரசு மேல்–நி–லைப்–பள்–ளி–யில் 16 வய–து–டைய மாணவி ஒரு–வர் பிளஸ்-2 படித்து வரு–கி–றார்.
- இவ–ருக்கு உடல்–நிலை சரி–யில்–லா–ததால் கடந்த 8-ந் தேதி மாத்–திரை சாப்–பி–டு–மாறு பெற்–றோர் தெரி–வித்–த–னர்.
சேலம்:
கெங்–க–வல்லி அருகே கூட–மலை பகு–தி–யில் உள்ள ஒரு அரசு மேல்–நி–லைப்–பள்–ளி–யில் 16 வய–து–டைய மாணவி ஒரு–வர் பிளஸ்-2 படித்து வரு–கி–றார். இவ–ருக்கு உடல்–நிலை சரி–யில்–லா–ததால் கடந்த 8-ந் தேதி மாத்–திரை சாப்–பி–டு–மாறு பெற்–றோர் தெரி–வித்–த–னர். ஆனால் அவர் சாப்–பி–டா–த–தால், பெற்–றோர் திட்டி உள்–ள–னர். இதில் மன வேதனை அடைந்த மாணவி வீட்–டில் இருந்த எறும்பு மருந்தை (விஷம்) குடித்து விட்டு 9-ந் தேதி அன்று பள்–ளிக்கு சென்–றுள்–ளார். அங்கு மயக்–கம் அடைந்–த மாண–வியை கூட–மலை அரசு ஆரம்ப சுகா–தார நிலை–யத்–தில் சேர்த்–த–னர். முத–லு–தவி சிகிச்சை அளிக்–கப்–பட்டு, மேல் சிகிச்–சைக்–காக ஆத்–தூர் அரசு ஆஸ்–பத்–தி–ரி–யில் சேர்த்–த–னர். அங்கு அவ–ருக்கு தீவிர சிகிச்சை அளிக்–கப்–பட்டு வரு–கிறது. இது–கு–றித்து கெங்–க–வல்லி போலீ–சார் விசா–ரணை நடத்தி வரு–கி–றார்–கள்.
- இன்று காலை சேலம் டவுன் மகளிர் போலீஸ் நிலையம் வந்தார். அப்போது திடீரென போலீஸ் நிலையம் முன்பு அமர்ந்து தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டார்.
- கடந்த 26-ந் தேதி தனது மகளை ஒரு வாலிபர் கடத்திச் சென்று தொந்தரவு கொடுத்ததாக போலீஸ் நிலை யத்தில புகார் அளித்தேன்.
சேலம்:
சேலம் களரம்பட்டி மெயின் ரோடு பகுதியைச் சேர்ந்தவர் பிரபாகரன். இவர் இன்று காலை சேலம் டவுன் மகளிர் போலீஸ் நிலையம் வந்தார். அப்போது திடீரென போலீஸ் நிலையம் முன்பு அமர்ந்து தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டார். அப்போது அவரிடம் போலீசார் விசாரணை நடத்தினர்.
விசாரணையில் அவர் கூறும் போது:-
கடந்த 26-ந் தேதி தனது மகளை ஒரு வாலிபர் கடத்திச் சென்று தொந்தரவு கொடுத்ததாக போலீஸ் நிலை யத்தில புகார் அளித்தேன். இதையடுத்து போலீசார் வாலிபரை பிடித்து விசாரித்து நடவடிக்கை எடுத்தனர். ஆனால் கைது நடவடிக்கை எடுக்கவில்லை. அவரை விட்டு விட்டனர்.
இதனிடையே தனது மகள் தூக்க மாத்திரை சாப்பிட்டு தற்கொலை முயன்றார். தற்போது ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வருகிறார். இதற்கு காரணமான வாலிபர் மீது நடவடிக்கை எடுத்து கைது செய்ய வேண்டும். இவ்வாறு அவர் கண்ணீர் மல்க கூறினார்.
- கடந்த 10-ந் ேததி குருமூர்த்தி வீராணம் ஏரியில் பிணமாக மீட்கப்பட்டார்.
- இதையடுத்து அன்னதானப்பட்டி போலீசார், குருமூர்த்தியின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக சேலம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
சேலம்:
சேலம் தாதகாப்பட்டி திருஞானம் நகர் பகுதியை சேர்ந்தவர் குருமூர்த்தி (வயது 37). மருந்து விற்பனை பிரதிநிதியாக வேலை பார்க்கும் இவருக்கு கடந்த 5 ஆண்டுகளுக்கு முன்பு கவுரி (30) என்ற பெண்ணுடன் திருமணமாகி பிரணவ், ரித்திகா ஆகிய 2 குழந்தைகள் உள்ளன.
இந்த நிலையில் கடந்த 10-ந்ேததி குருமூர்த்தி வீராணம் ஏரியில் பிணமாக மீட்கப்பட்டார். இதையடுத்து அன்னதானப்பட்டி போலீசார், குருமூர்த்தியின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக சேலம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தியதில் குருமூர்த்தி எப்படி இறந்தார்? என தகவல் தெரியவந்துள்ளது. சமீபத்தில் புதிதாக வீடு கட்டி இருப்பதும் அதற்காக சில நபர்களிடம் பணம் கடன் வாங்கியுள்ளார். அதை கட்ட முடியாமல் கடும் மன உளைச்சலில் தனது மனைவியிடம் புலம்பி வந்தார். இதனால் சம்பவத்தன்று குருமூர்த்தி மது போதையில் மோட்டார்சைக்கிளை ஓட்டிக்கொண்டு நேராக ஏரியில் பாய்ந்து தற்கொலை செய்து இருப்பது தெரிய வந்துள்ளது. அவர் ஓட்டி வந்த மோட்டார்சைக்கிளை பல்வேறு இடங்களில் தேடினர்.
மேலும் வீராணம் ஏரியில்
தீயணைப்பு வீரர்கள், அப்ப குதி பொதுமக்கள் இறங்கி தேடினர். அப்போது மோட்டர்சைக்கிள் ஆழமான
பகுதியில் கிடந்தது. இதை
யடுத்து அந்த மோட்டார்சை க்கிளை மீட்டு போலீசாரிடம் ஒப்படைத்தனர்.






