என் மலர்
சேலம்
- இரண்டு அடுக்கு பஸ் நிலையத்திற்குள் சென்று மாடிபடிகள் வழியாக ஏறி, ஒவ்வொரு தளமாக நடந்து சென்று என்ன? என்ன வசதிகள் செய்யப்பட்டுள்ளது என்பதை பார்வையிட்டார்.
- ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் கீழ் நவீன வசதிகளுடன் ஈரடுக்கு பஸ் நிலையம் கட்ட ரூ.92 கோடியே 13 லட்சம் ஒதுக்கீடு செய்யப்பட்டது.
சேலம்:
கள ஆய்வில் முதலமைச்சர் திட்டத்தின்கீழ் சேலம், தர்மபுரி, கிருஷ்ணகிரி மற்றும் நாமக்கல் ஆகிய 4 மாவட்டங்களில் வளர்ச்சி பணிகள் மேற்கொள்ள இன்று காலையில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சேலம் வந்தார்.
அவர் ஓமலூர் தாலுகா அலுவலகத்தில் ஆய்வை முடித்துவிட்டு, ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் கீழ் நடைபெற்று வரும் சேலம் பழைய பஸ் நிலையத்தில் பிரமாண்டமாக கட்டப்பட்டுள்ள இரண்டு அடுக்கு பஸ் நிலையம், வணிக வளாகம், நேரு கலையரங்கம் ஆகியவற்றை பார்வையிட்டார்.
தொடர்ந்து இரண்டு அடுக்கு பஸ் நிலையத்திற்குள் சென்று மாடிபடிகள் வழியாக ஏறி, ஒவ்வொரு தளமாக நடந்து சென்று என்ன? என்ன வசதிகள் செய்யப்பட்டுள்ளது என்பதை பார்வையிட்டார். தூண்கள் மற்றும் ஜன்னல்கள், மேற்கூரை உள்ளிட்டவை எவ்வாறு கட்டப்பட்டு இருக்கிறது என்பதையும் பார்வையிட்டார்.
இது தொடர்பாக முதலமைச்சரிடம் அதிகாரிகள் விளக்கி கூறினர்.
அப்போது பஸ் நிலையத்தில் மேலும் என்ன? என்ன? பணிகள் செய்யப்பட உள்ளன?, அவை எப்போது முடியும் என அதிகாரிகளிடம் கேட்டறிந்தார். இதையடுத்து இரண்டு அடுக்கு பஸ் நிலைய பணிகள் முழுவதும் முழுமையாக செய்து முடித்து மக்கள் பயன்பாட்டிற்கு விரைவில் விடவேண்டும் என அதிகாரிகளுக்கு மு.க.ஸ்டாலின் அறிவுறுத்தினார்.
ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் கீழ் நவீன வசதிகளுடன் ஈரடுக்கு பஸ் நிலையம் கட்ட ரூ.92 கோடியே 13 லட்சம் ஒதுக்கீடு செய்யப்பட்டது. இதற்கான பணியை கடந்த 2018-ம் ஆண்டு டிசம்பர் மாதம் தொடங்கி வைக்கப்பட்டது.
இதையடுத்து பழைய பஸ்நிலையம் பகுதி முழுவதும் இடிக்கப்பட்டு ஈரடுக்கு பஸ் நிலையம் பிரமாண்டமாக கட்டப்பட்டுள்ளது.
ஈரடுக்கு பஸ் நிலைய பணிகள் 95 சதவீதத்துக்கு மேல் முடிவடைந்து விட்டது. இங்கு தரை மற்றும் முதல் தளத்தில் பஸ்கள் நிறுத்துவதற்கான அனைத்து வசதியும் ஏற்படுத்தப்பட்டுள்ளது.
தற்போது வெளிப்புற பகுதிகளில் பெயிண்ட் அடிக்கு பணி, மேல் மாடியில் ஓட்டல் வசதியும் அமைக்கப்பட்டு வருகின்றன.
- மக்களிடமிருந்து வரப்பெறும் கோரிக்கைகளுக்கு உடனடியாக தீர்வு காண வேண்டும் என அதிகாரிகளுக்கு அறிவுரை வழங்கினார்.
- பட்டா மாறுதல் தொடர்பாக ராஜம்மாள், கோமதி என்ற மாற்றுத்திறனாளிடம் கோரிக்கைகளை கேட்டு அறிந்து அதை உடனடியாக நிறைவேற்ற அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார்.
சேலம்:
கள ஆய்வில் முதலமைச்சர் திட்டத்தின்கீழ் சேலம், தர்மபுரி, கிருஷ்ணகிரி மற்றும் நாமக்கல் ஆகிய 4 மாவட்டங்களில் வளர்ச்சி பணிகள் மேற்கொள்ள இன்று காலையில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சேலம் வந்தார். அவர் ஓமலூர் தாலுகா அலுவலகத்துக்கு சென்று திடீர் ஆய்வு மேற்கொண்டார். அப்போது அங்கு கூடியிருந்த பொதுமக்களிடம் இருந்து மனுக்கள் வாங்கினார். மேலும் அவர்களின் குறைகளை கேட்டறிந்தார். அப்போது மக்களிடமிருந்து வரப்பெறும் கோரிக்கைகளுக்கு உடனடியாக தீர்வு காண வேண்டும் என அதிகாரிகளுக்கு அறிவுரை வழங்கினார்.
தாலுகா அலுவலகத்தில் சமூக பாதுகாப்பு திட்டத்தின் கீழ் மேற்கொள்ளப்பட்டு வரும் திட்டங்கள் குறித்தும், வட்ட வழங்கல் துறையின் சார்பில் உள்ள கடைகள், பொருட்கள் விநியோகம் குறித்து கேட்டறிந்தார். குறிப்பாக முதியோர், விதவை உதவித்தொகை குறித்தும் கேட்டறிந்தார்.
பட்டா மாறுதல் தொடர்பாக ராஜம்மாள், கோமதி என்ற மாற்றுத்திறனாளிடம் கோரிக்கைகளை கேட்டு அறிந்து அதை உடனடியாக நிறைவேற்ற அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார்.
வட்டாட்சியர், தனி வட்டாட்சியர் உள்ளிட்ட அலுவலர்களிடம் அலுவல் செயல்பாடுகள் குறித்து முதலமைச்சர் கேட்டறிந்தார். அரசின் சமூக நலத்திட்டங்கள் ஓமலூர் வட்டத்தில் எத்தனை மக்களுக்கு சென்று சேர்ந்துள்ளது என்பது குறித்தும் கேட்டறிந்தார்.
- ஒகேனக்கல் காவிரியில் நீர்வரத்து விநாடிக்கு 2 ஆயிரம் கன அடியாக உள்ளது.
- மேட்டூர் அணையின் நீர்மட்டம் 103.86 அடியாக உள்ளது.
மேட்டூர்:
கர்நாடக அணைகளில் இருந்து தண்ணீர் திறக்கப்படாததாலும், காவிரி நீர்ப்பிடிப்பு பகுதிகளில் மழை இல்லாததாலும், ஒகேனக்கல் மற்றும் மேட்டூர் அணைக்கான நீர்வரத்து குறைந்துள்ளது.
ஒகேனக்கல் காவிரியில் நீர்வரத்து விநாடிக்கு 2 ஆயிரம் கன அடியாக உள்ளது. அதேசமயம் மேட்டூர் அணைக்கு நேற்று விநாடிக்கு 1,605 கன அடியாக இருந்த நீர்வரத்து, இன்று காலை நிலவரப்படி விநாடிக்கு 1,466 கன அடியாக சரிந்துள்ளது.
அணையில் இருந்து குடிநீர் தேவைக்காக விநாடிக்கு ஆயிரம் கனஅடி வீதம் தண்ணீர் திறக்கப்பட்டு வருகிறது. அணையின் நீர்மட்டம் 103.86 அடியாக உள்ளது.
- திருமணிமுத்தாறு நதியின் புனிதம் போற்றும் வகையில் இந்த நதிக்கு மகா ஆரத்தி விழா நடத்த ஆன்மீக அமைப்புகள் திட்ட மிட்டுள்ளன.
- ஏற்காடு மலையில் திருமணத்தாறு பயந்துவிடும் இடமான வசம்பாடி அருவி யில் அன்று காலை 8 மணிக்கு மகா ஆரத்தி நடக்கிறது.
சேலம்:
சேலம் திருமணிமுத்தாறு நதியின் புனிதம் போற்றும் வகையில் இந்த நதிக்கு மகா ஆரத்தி விழா நடத்த ஆன்மீக அமைப்புகள் திட்ட மிட்டுள்ளன. இதையடுத்து வருகிற 19-ம் தேதி (ஞாயிற்றுக்கிழமை) காலை 8 மணி முதல் மாலை 7 மணி வரை மகா ஆரத்தி தரிசனம் உள்ளிட்ட பல்வேறு நிகழ்வுகள் நடக்கின்றன.
ஏற்காடு மலையில் திருமணத்தாறு பயந்துவிடும் இடமான வசம்பாடி அருவி யில் அன்று காலை 8 மணிக்கு மகா ஆரத்தி நடக்கிறது. தொடர்ந்து துறவிகளோடு சென்று திருமணிமுத்தாறு ஆற்றங்கரைகளில் உள்ள சேலம் சுகவனேஸ்வரர் கோவில், உத்தமசோழபுரம் கோவில் கரபுரநாதர் கோவில், பில்லூர் ஸ்ரீ வீரட்டீஸ்வரர் கோவில், மாவுரெட்டி பீமேஸ்வரர் கோவில், நஞ்சை இடையாறு திருவேலீஸ்வரர் கோவில் ஆகிய 5 சிவாலயங்களில் தரிசனம் செய்யப்படுகிறது.
பின்பு மாலை 7 மணிக்கு சேலம் சுகவனேஸ்வரர் கோவில் முன்பு உள்ள பஞ்சாட்சர கணபதி கோவில் அருகில் திருமணிமுத்தாறு நதியில் மகா ஆரத்தி நடை பெறுகிறது. இந்த மகா ஆரத்தி திருவிழாவை சிறப்பாக நடத்துவது தொடர்பான ஆலோசனை கூட்டம் சேலம் சுகவனேஸ்வரர் கோவில் அருகில் உள்ள ஏ.வி .ஆர். கல்யாண மண்டபத்தில் இன்று(செவ்வாய்க்கிழமை) மாலை 6 மணிக்கு நடைபெறுகிறது.
இதில் தெய்வீக தமிழ் சங்கம் அறக்கட்டளை, அகில பாரத சன்னியாசிகள் சங்கம் மற்றும் ஆன்மிக, இலக்கிய, சமூக அமைப்புகள், அறக்கட்டளையினர், சமூக ஆர்வலர்கள், பக்தர்கள் பங்கேற்கின்றனர்.
- சீனிவாசன் (வயது 55). இவர் கொண்டலாம்பட்டியில் டெக்ஸ்டைல் பேப்ரிக்ஸ் என்ற நிறுவனத்தை நடத்தி வருகிறார்.
- ஸ்ரேயா நிறுவனம் ஆகியோர் ஜவுளி வாங்கிக்கொண்டு, அதற்கு உண்டான தொகை ரூ.13,43,789 இதுவரை திருப்பி தரவில்லை.
சேலம்:
சேலம் அருகே கொண்ட லாம்பட்டி முன்சீப் தோட்டம் கள்ளிக்கோட்டை மெயின்ரோடு பகுதியைச் சேர்ந்தவர் சீனிவாசன் (வயது 55). இவர் கொண்டலாம்பட்டியில் டெக்ஸ்டைல் பேப்ரிக்ஸ் என்ற நிறுவனத்தை நடத்தி வருகிறார்.
இவரிடம் கடந்த 2016 முதல் சேலம் குகை புலிக்குத்தி தெருவில் எக்ஸ்போர்ட் நிறுவனம் நடத்தி வரும் விவேக்நாத் (34), சந்திரபோஸ் யாதவ் (33), பொன்னம்மாப்பேட்டை தாண்டவன் நகர் பகுதியை சேர்ந்த மோகன் (62) மற்றும் ஸ்ரேயா நிறுவனம் ஆகியோர் ஜவுளி வாங்கிக்கொண்டு, அதற்கு உண்டான தொகை ரூ.13,43,789 இதுவரை திருப்பி தரவில்லை.
இதுகுறித்து சேலம் மாநகர மத்திய குற்றப்பிரிவு போலீசில் சீனிவாசன் புகார் செய்தார். அதன் பேரில் போலீசார் 4 பேர் மீது வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
- மணிகண்டன் (வயது 31). கூலித் தொழிலாளி. இவருக்கும், அதே தெருவில் வசித்து வரும் பரமசிவம் (30) என்பவருக்கும் தகராறு ஏற்பட்டு வந்ததாக கூறப்படுகிறது.
- முன் விரோதத்தை மனதில் வைத்து கொண்டு பரமசிவம் மணிகண்டனின் ஸ்கூட்டரை பெட்ரோல் ஊற்றி எரித்து விட்டதாக கூறப்படுகிறது.
அன்னதானப்பட்டி:
சேலம் நெத்திமேடு, கேபி கரடு தென்புறம், காந்தி நகர் பகுதியைச் சேர்ந்தவர் மணிகண்டன் (வயது 31). கூலித் தொழிலாளி. இவருக்கும், அதே தெருவில் வசித்து வரும் பரமசிவம் (30) என்பவருக்கும் தகராறு ஏற்பட்டு வந்ததாக கூறப்படுகிறது.
இந்த நிலையில் ஏற்கனவே இருந்த முன் விரோதத்தை மனதில் வைத்து கொண்டு பரமசிவம் மணிகண்டனின் ஸ்கூட்டரை பெட்ரோல் ஊற்றி எரித்து விட்டதாக கூறப்படுகிறது. இதில் வண்டி எரிந்து சேதமடைந்தது.
இது குறித்து மணிகண்டன் அளித்த புகாரின் பேரில் வழக்குப் பதிவு செய்த அன்னதானப்பட்டி இன்ஸ்பெக்டர் சந்திரகலா மற்றும் போலீசார் பரமசிவத்தை நேற்று கைது செய்தனர்.
- வெள்ளிப் பட்டறை தொழிலாளி. இவர் வியாபாரம் விஷயமாக தாதகாப்பட்டி உழவர் சந்தை அருகே நடந்து சென்று கொண்டிருந்தார்.
- அங்கு வந்த ஒருவர் பாலாஜியை திடீரென வழிமறித்து, கத்தியைக் காட்டி மிரட்டி, தாக்கி, அவரிடமிருந்து ரூ.5 ஆயிரத்தை பறித்தார்.
அன்னதானப்பட்டி:
சேலம் லைன்மேடு, சென்றாயன் தெரு பகுதியைச் சேர்ந்தவர் பாலாஜி (வயது 21). வெள்ளிப் பட்டறை தொழிலாளி. இவர் வியாபாரம் விஷயமாக தாதகாப்பட்டி உழவர் சந்தை அருகே நடந்து சென்று கொண்டிருந்தார்.
அப்போது அங்கு வந்த ஒருவர் பாலாஜியை திடீரென வழிமறித்து, கத்தியைக் காட்டி மிரட்டி, தாக்கி, அவரிடமிருந்து ரூ.5 ஆயிரத்தை பறித்தார். இத பார்த்த அப்பகுதியினர் அவரை பிடிக்க முயன்றனர். பிடிக்க வந்த அருகில் இருந்த நபர்களை தாக்கி விட்டு அங்கிருந்து தப்பி ஓடினார்.
இது குறித்த புகாரின் பேரில் அன்னதானப்பட்டி போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தினர். அதில் வழிப்பறியில் ஈடுபட்ட, அன்னதானப்பட்டி வள்ளுவர் நகர் எஸ்என்எஸ் திருமண மண்டபம் மேல் வீதியைச் சேர்ந்த ஸ்ரீநாத் (22) என தெரியவந்தது. அவரை போலீசார் கைது செய்தனர். அவரிடமிருந்து பணம் , கத்தி பறிமுதல் செய்யப்பட்டது.
- சேலம் பழைய பஸ் நிலையம் அருகே வ.ஊ.சி. பூ மார்க்கெட் உள்ளது. இந்த மார்க்கெட்டுக்கு மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து பலவகையான பூக்கள் விற்பனைக்கு கொண்டு வரப்படுகிறது.
- காதல் ஜோடிகள் தங்கள் காதலன் காதலிக்கு அன்பை வெளிப்படுத்துவதற்கு அடையாளமாக ரோஜா பூக்கள் பரிசளிப்பது வழக்கம் ஆகும்.
அன்னதானப்பட்டி:
சேலம் பழைய பஸ் நிலையம் அருகே வ.ஊ.சி. பூ மார்க்கெட் உள்ளது. இந்த மார்க்கெட்டுக்கு கன்னங்குறிச்சி, ஓமலூர், மேச்சேரி, மேட்டூர், பனமரத்துப்பட்டி உள்ளிட்ட மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து பலவகையான பூக்கள் விற்பனைக்கு கொண்டு வரப்படுகிறது.
இன்று உலகம் முழுவதும் காதலர் தினம் கொண்டாடப்பட்டு வருகிறது. இதையொட்டி காதல் ஜோடிகள் தங்கள் காதலன் காதலிக்கு அன்பை வெளிப்படுத்துவதற்கு அடையாளமாக ரோஜா பூக்கள் பரிசளிப்பது வழக்கம் ஆகும். இதனால் இன்று அதிகாலை முதலே 3 ஸ்டார், 5 ஸ்டார், 7 ஸ்டார், சென்ட் ரோஸ், பன்னீர் ரோஸ், மூக்குத்தி ரோஸ் உள்ளிட்ட பல்வேறு விதமான ரோஜா பூக்கள் சேலம் பூ மார்க்கெட்டில் விற்பனைக்கு குவிக்கப்பட்டு விற்பனை விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.
ஒரு கிலோ ரோஜா ரூ.120 முதல் ரூ.200 வரை என ரகத்தைப் பொறுத்து விற்பனை செய்யப்பட்டு வருகிறது. சேலம் வ.ஊ.சி. பூ மார்க்கெட்டில் இன்றைய பூக்களின் விலை நிலவரம் ( 1 கிலோ கணக்கில் ) வருமாறு : மல்லிகை - ரூ.1200, முல்லை - ரூ.1200, ஜாதி மல்லி - ரூ.1000, காக்கட்டான் - ரூ.500, கலர் காக்கட்டான் - ரூ.500, மலை காக்கட்டான் - ரூ.400, சி.நந்தியா வட்டம் - ரூ.150, சம்பங்கி - ரூ.40, சாதா சம்பங்கி - ரூ.60, அரளி - ரூ.160, வெள்ளை அரளி - ரூ.160, மஞ்சள் அரளி - ரூ.160, செவ்வரளி - ரூ.200, ஐ.செவ்வரளி - ரூ.180, நந்தியா வட்டம் - ரூ.80, என்கிற விலையில் விற்பனை செய்யப்பட்டு வருகிறது.
- திருமணிமுத்தாறு ராஜ வாய்க்கால் 40 ஆண்டுகளுக்கு மேலாக தூர்வாராத நிலையில் உள்ளது.
- இதனை தூர்வாரி ஆக்கிரமிப்புகளை அகற்றி, கரையை அகலப்படுத்திட வேண்டும். மேலும் விவசாய நிலங்களில் மழைநீர் தேங்காமல் தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.
சேலம்:
தமிழ்நாடு இயற்கை விவசாயிகள் முன்னேற்ற சங்கத்தின் மாநில தலைவர் தங்கராஜ் தலைமையில் விவசாயிகள் கலெக்டர் அலுவலகத்தில் மனு கொடுத்தனர். அதில் கூறியிருப்பதாவது:-
திருமணிமுத்தாறு ராஜ வாய்க்கால் 40 ஆண்டுகளுக்கு மேலாக தூர்வாராத நிலையில் உள்ளது. எனவே இதனை தூர்வாரி ஆக்கிரமிப்புகளை அகற்றி, கரையை அகலப்படுத்திட வேண்டும். மேலும் விவசாய நிலங்களில் மழைநீர் தேங்காமல் தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.
காவிரி டெல்டாவில் பருவம் மாறி வரலாறு காணாத அளவு பெருமழை பெய்து அறுவடைக்கு தயாராக இருந்த சம்பா நெற்கதிர்கள் முற்றிலும் அழிந்துவிட்டது.
தமிழக அரசு மூலம் ஹெக்டர் ஒன்றுக்கு ரூ.20 ஆயிரம், உடனடியாக பேரிடர் நிவாரணம் நிதியில் இருந்து வழங்கப்படும் என அறிவிப்பு வந்துள்ளது. செலவு அதிகரித்துள்ளதால் ஏக்கர் ஒன்றுக்கு ரூ.25 ஆயிரம் வழங்க தமிழக முதல்-அமைச்சர் மறுபரிசீலனை செய்து விவசாயிகளுக்கு உதவிட வேண்டும். இவ்வாறு அதில் அவர்கள் தெரிவித்துள்ளனர்.
- பிப்ரவரி மாதம் 14-ந்தேதி உலகம் முழுவதும் காதலர் தினம் கொண்டாடப்பட்டு வருகிறது.
- அந்த வகையில் இன்று காதலர் தினத்தை முன்னிட்டு சேலம் மாவட்டத்தில் பூங்காக்கள் உள்ளிட்ட பொழுதுபோக்கு அம்சங்கள் உள்ள இடங்களுக்கு ஏராளமான காதல் ஜோடியினர் குவிந்தனர்.
சேலம்:
ஒவ்வொரு ஆண்டும் பிப்ரவரி மாதம் 14-ந்தேதி உலகம் முழுவதும் காதலர் தினம் கொண்டாடப்பட்டு வருகிறது. இந்த நாளில் காதலர்கள் தங்களது அன்பை வெளிப்படுத்தும் வகையில் காதலிகளுக்கு ரோஜா மலர்கள், மலர் செடிகள், நவநாகரிக உடைகள், அணிகலன்கள் ஆகியவற்றை பரிசு பொருட்களாக கொடுத்து அன்பை பரிமாறிக்கொள்வது வழக்கம்.
அந்த வகையில் இன்று காதலர் தினத்தை முன்னிட்டு சேலம் மாவட்டத்தில் பூங்காக்கள் உள்ளிட்ட பொழுதுபோக்கு அம்சங்கள் உள்ள இடங்களுக்கு ஏராளமான காதல் ஜோடியினர் குவிந்தனர். அவர்கள் அங்கு காதலர் தின வாழ்த்துக்களை தெரிவித்து தங்களது அன்பை ஒருவருக்கு ஒருவர் பரிமாறிக்கொண்டனர்.
சேலம் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளை சேர்ந்த காதல் ஜோடிகள் சேலம், ஏற்காடு, மேட்டூர் பகுதி பூங்காக்களில் குவிந்தனர். அவர்களில் சில காதல் ஜோடியினர் முத்தமிட்டு தங்களது அன்பை பரிமாறிக்கொண்டனர்.
சிலர் தங்களது காதலிக்கு ரோஜா மலர்களை கொடுத்து மகிழ்ந்தனர். சில காதலர்கள் பேசுவதற்கு வசதியாக செல்போன்களை பரிசளித்தும் அன்பை பரிமாறிக்கொண்டனர்.
காதலித்து திருமணம் செய்த ஜோடிகளும் பூங்காக்களுக்கு வந்து மலரும் நினைவுகளை ஒருவருக்கு ஒருவர் பகிர்ந்து கொண்டனர். ஏற்காடு மலைப்பாதையிலும் ஆங்காங்கே காதலர்கள் தடுப்பு சுவர்களில் அமர்ந்து பேசிக்கொண்டிருந்தனர்.
ஏற்காட்டில் படகுதுறை, அண்ணா பூங்கா, லேடீஸ் சீட், ரோஜா கார்டன், சேர்வராயன் மலைக்கோவில் உள்ளிட்ட பகுதிகளில் காதல் ஜோடியினர் உலா வந்து காதலர் தினத்தை கொண்டாடினர். ஏரியில் படகு சவாரி செய்தும் மகிழ்ந்தனர்.
சேலம் குரும்பப்பட்டி வன உயிரியல் பூங்காவிற்கு ஏராளமான காதல் ஜோடியினர் மோட்டார் சைக்கிளில் வந்தனர். பிறகு அவர்கள் பூங்காவிற்குள் சென்று பேசிக்கொண்டிருந்தனர். சில காதல் ஜோடிகள் சேலம் மாநகரில் உள்ள கோவிலுக்கு சென்று வழிபட்டனர்.
மேட்டூர் பூங்காவுக்கு காதலர்கள் ஜோடி, ஜோடியாக நேற்று காலை முதலே வந்த வண்ணம் இருந்தனர். பின்னர் அவர்கள் பூங்காவில் அமர்ந்து பேசிக்கொண்டிருந்தனர். மேலும் பூங்காக்களில் போலீசார் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டனர். பூங்காக்களில் அத்துமீறிய காதலர்களுக்கு போலீசார் எச்சரிக்கை விடுத்தனர்.
காதலர் தினத்தை முன்னிட்டு ஏற்காடு அடிவாரத்திலும் பல இடங்களில் காதலர்கள் அமர்ந்து பொழுதை கழித்தனர். ஏற்காடு மலைக்கு சில கல்லூரி மாணவ-மானவிகள் ஜோடியாக செல்ல முயன்றனர். அவர்களை போலீசார் தடுத்து நிறுத்தி எச்சரித்து திருப்பி அனுப்பினர். தொடர்ந்து போலீசார் சோதனை மற்றும் கண்காணிப்பு பணிகளில் ஈடுபட்டனர். அதே சமயம் காதலித்து திருமணம் செய்து கொண்டவர்களும் வந்திருந்து தங்கள் மலரும் நினைவுகளை பகிர்ந்து கொண்டனர்.
- கோபமடைந்த சரத்குமார், பிரியங்காவின் தந்தை தங்கவேல், தம்பி நந்தகுமார் ஆகியோர் பார்த்திபனை கத்தியால் குத்தி கொலை செய்தனர்.
- பார்த்திபன் கொலை வழக்கு தொடர்பாக தங்கவேல் மற்றும் சரத்குமார், நந்தகுமார் ஆகியோர் கைது செய்யப்பட்டனர்.
சேலம்:
சேலம் மாவட்டம் சங்ககிரியைச் சேர்ந்தவர் தங்கவேல் (வயது 45), கூலி தொழிலாளி. இவரது மகள் பிரியங்கா. மகன் நந்தகுமார். பிரியங்கா சங்ககிரி அருகே உள்ள ஓட்டலில் பணியாற்றி வந்தார். பின்னர் பிரியங்காவிற்கு சரத்குமார் என்பவருடன் திருமணம் செய்து வைக்கப்பட்டு அவர்கள் தனியே வசித்து வந்தனர்.
இதனிடையே தேனி மாவட்டத்தைச் சேர்ந்த வாலிபர் பார்த்திபன் (வயது 35) என்பவர் சங்ககிரி அருகே உள்ள கிரானைட் கம்பெனி ஒன்றில் வேலை பார்த்து வந்தார். இவர் ஓட்டலுக்கு சென்றபோது இளம் பெண் பிரியங்காவிற்கும், பார்த்திபனுக்கும் பழக்கம் ஏற்பட்டது.
இதை அறிந்த பிரியங்காவின் கணவர் சரத்குமார் பார்த்திபனை கண்டித்தார். இந்த நிலையில் கடந்த 2020-ம் ஆண்டு பார்த்திபன் குடிபோதையில் பிரியங்காவின் வீட்டுக்கு சென்று அவரிடம் தகராறு செய்தார்.
இதில் கோபமடைந்த சரத்குமார், பிரியங்காவின் தந்தை தங்கவேல், தம்பி நந்தகுமார் ஆகியோர் பார்த்திபனை கத்தியால் குத்தி கொலை செய்தனர். இந்த கொலை சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. பார்த்திபன் கொலை வழக்கு தொடர்பாக தங்கவேல் மற்றும் சரத்குமார், நந்தகுமார் ஆகியோர் கைது செய்யப்பட்டனர்.
இந்த வழக்கு விசாரணை சேலம் முதலாவது மாவட்ட கூடுதல் அமர்வு நீதிமன்றத்தில் நடந்து வந்தது. வழக்கை அரசு வக்கீல் துரைராஜ் வாதிட்டு நடத்தினார். வழக்கை விசாரித்த நீதிபதி ஜெகநாதன் இன்று தீர்ப்பு கூறினார். அதன்படி குற்றம் சாட்டப்பட்ட தங்கவேல், சரத்குமார், நந்தகுமார் ஆகிய 3 பேருக்கும் ஆயுள் தண்டனையும், தலா ரூ.5 ஆயிரத்து 500 அபராதமும் விதித்து உத்தரவிட்டார்.
- பாலாஜி (வயது 21). வெள்ளிப்பட்டறை தொழிலாளி. இவர் வியாபாரம் விஷயமாக தாதகாப்பட்டி உழவர் சந்தை அருகே நடந்து சென்று கொண்டிருந்தார்.
- அப்போது அங்கு வந்த ஒருவர் பாலாஜியை திடீரென வழிமறித்து, கத்தியைக் காட்டி மிரட்டி, தாக்கி, அவரிடமிருந்து ரூ.5 ஆயிரத்தை பறித்தார்.
அன்னதானப்பட்டி:
சேலம் லைன்மேடு, சென்றாயன் தெரு பகுதியைச் சேர்ந்தவர் பாலாஜி (வயது 21). வெள்ளிப் பட்டறை தொழிலாளி. இவர் வியாபாரம் விஷயமாக தாதகாப்பட்டி உழவர் சந்தை அருகே நடந்து சென்று கொண்டிருந்தார்.
அப்போது அங்கு வந்த ஒருவர் பாலாஜியை திடீரென வழிமறித்து, கத்தியைக் காட்டி மிரட்டி, தாக்கி, அவரிடமிருந்து ரூ.5 ஆயிரத்தை பறித்தார். இத பார்த்த அப்பகுதியினர் அவரை பிடிக்க முயன்றனர். பிடிக்க வந்த அருகில் இருந்த நபர்களை தாக்கி விட்டு அங்கிருந்து தப்பி ஓடினார்.
இது குறித்த புகாரின் பேரில் அன்னதானப்பட்டி போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தினர். அதில் வழிப்பறியில் ஈடுபட்ட, அன்னதானப்பட்டி வள்ளுவர் நகர் எஸ்என்எஸ் திருமண மண்டபம் மேல் வீதியைச் சேர்ந்த ஸ்ரீநாத் (22) என தெரியவந்தது. அவரை போலீசார் கைது செய்தனர். அவரிடமிருந்து பணம் , கத்தி பறிமுதல் செய்யப்பட்டது.






