என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "rose flower sale"

    • சேலம் பழைய பஸ் நிலையம் அருகே வ.ஊ.சி. பூ மார்க்கெட் உள்ளது. இந்த மார்க்கெட்டுக்கு மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து பலவகையான பூக்கள் விற்பனைக்கு கொண்டு வரப்படுகிறது.
    • காதல் ஜோடிகள் தங்கள் காதலன் காதலிக்கு அன்பை வெளிப்படுத்துவதற்கு அடையாளமாக ரோஜா பூக்கள் பரிசளிப்பது வழக்கம் ஆகும்.

    அன்னதானப்பட்டி:

    சேலம் பழைய பஸ் நிலையம் அருகே வ.ஊ.சி. பூ மார்க்கெட் உள்ளது. இந்த மார்க்கெட்டுக்கு கன்னங்குறிச்சி, ஓமலூர், மேச்சேரி, மேட்டூர், பனமரத்துப்பட்டி உள்ளிட்ட மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து பலவகையான பூக்கள் விற்பனைக்கு கொண்டு வரப்படுகிறது.

    இன்று உலகம் முழுவதும் காதலர் தினம் கொண்டாடப்பட்டு வருகிறது. இதையொட்டி காதல் ஜோடிகள் தங்கள் காதலன் காதலிக்கு அன்பை வெளிப்படுத்துவதற்கு அடையாளமாக ரோஜா பூக்கள் பரிசளிப்பது வழக்கம் ஆகும். இதனால் இன்று அதிகாலை முதலே 3 ஸ்டார், 5 ஸ்டார், 7 ஸ்டார், சென்ட் ரோஸ், பன்னீர் ரோஸ், மூக்குத்தி ரோஸ் உள்ளிட்ட பல்வேறு விதமான ரோஜா பூக்கள் சேலம் பூ மார்க்கெட்டில் விற்பனைக்கு குவிக்கப்பட்டு விற்பனை விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.

    ஒரு கிலோ ரோஜா ரூ.120 முதல் ரூ.200 வரை என ரகத்தைப் பொறுத்து விற்பனை செய்யப்பட்டு வருகிறது. சேலம் வ.ஊ.சி. பூ மார்க்கெட்டில் இன்றைய பூக்களின் விலை நிலவரம் ( 1 கிலோ கணக்கில் ) வருமாறு : மல்லிகை - ரூ.1200, முல்லை - ரூ.1200, ஜாதி மல்லி - ரூ.1000, காக்கட்டான் - ரூ.500, கலர் காக்கட்டான் - ரூ.500, மலை காக்கட்டான் - ரூ.400, சி.நந்தியா வட்டம் - ரூ.150, சம்பங்கி - ரூ.40, சாதா சம்பங்கி - ரூ.60, அரளி - ரூ.160, வெள்ளை அரளி - ரூ.160, மஞ்சள் அரளி - ரூ.160, செவ்வரளி - ரூ.200, ஐ.செவ்வரளி - ரூ.180, நந்தியா வட்டம் - ரூ.80, என்கிற விலையில் விற்பனை செய்யப்பட்டு வருகிறது.

    ×