என் மலர்
உள்ளூர் செய்திகள்

தொழிலாளியிடம் பணம் பறித்தவர் கைது
- வெள்ளிப் பட்டறை தொழிலாளி. இவர் வியாபாரம் விஷயமாக தாதகாப்பட்டி உழவர் சந்தை அருகே நடந்து சென்று கொண்டிருந்தார்.
- அங்கு வந்த ஒருவர் பாலாஜியை திடீரென வழிமறித்து, கத்தியைக் காட்டி மிரட்டி, தாக்கி, அவரிடமிருந்து ரூ.5 ஆயிரத்தை பறித்தார்.
அன்னதானப்பட்டி:
சேலம் லைன்மேடு, சென்றாயன் தெரு பகுதியைச் சேர்ந்தவர் பாலாஜி (வயது 21). வெள்ளிப் பட்டறை தொழிலாளி. இவர் வியாபாரம் விஷயமாக தாதகாப்பட்டி உழவர் சந்தை அருகே நடந்து சென்று கொண்டிருந்தார்.
அப்போது அங்கு வந்த ஒருவர் பாலாஜியை திடீரென வழிமறித்து, கத்தியைக் காட்டி மிரட்டி, தாக்கி, அவரிடமிருந்து ரூ.5 ஆயிரத்தை பறித்தார். இத பார்த்த அப்பகுதியினர் அவரை பிடிக்க முயன்றனர். பிடிக்க வந்த அருகில் இருந்த நபர்களை தாக்கி விட்டு அங்கிருந்து தப்பி ஓடினார்.
இது குறித்த புகாரின் பேரில் அன்னதானப்பட்டி போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தினர். அதில் வழிப்பறியில் ஈடுபட்ட, அன்னதானப்பட்டி வள்ளுவர் நகர் எஸ்என்எஸ் திருமண மண்டபம் மேல் வீதியைச் சேர்ந்த ஸ்ரீநாத் (22) என தெரியவந்தது. அவரை போலீசார் கைது செய்தனர். அவரிடமிருந்து பணம் , கத்தி பறிமுதல் செய்யப்பட்டது.






