என் மலர்
சேலம்
- ஆத்தூர் பஸ் நிலைய பகுதியில் புறநகர் காவல் நிலையத்தில் குடும்ப பிரச்சனை காரணமாக மண்ணெண்ணையை தலையில் ஊற்றிக் கொண்டு தற்கொலை செய்து கொள்ளப் போவதாக தெரிவித்தார்.
- இதையடுத்து போலீசார் அவரை பிடித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
ஆத்தூர்:
சேலம் மாவட்டம் ஆத்தூர் பஸ் நிலைய பகுதியில் புறநகர் காவல் நிலையம் உள்ளது. இந்த காவல் நிலையம் அருகில் பழ வியாபாரம் செய்து வருபவர் மகேஸ்வரி. இவரது கணவர் மண்டைக்கட்டு ( வயது 40). இவர்களுக்கு ஒரு மகன் உள்ளார்.
இந்நிலையில் மகேஸ்வரிக்கும் மண்டைக்கட்டுக்கும் கடந்த சில நாட்களாக குடும்ப பிரச்சனை இருந்து வந்ததாக கூறப்படுகிறது. இந்நிலையில் பஸ் நிலையப் பகுதியில் பழ வியாபராம் செய்து வந்த மனைவி மகேஸ்வரியிடம், மண்டைக்கட்டுக்கும் இடையே வாக்குவாதம் நடைபெற்றது. அப்போது மண்டைக்கட்டு கையில் வைத்திருந்த மண்ணெண்ணையை தலையில் ஊற்றிக் கொண்டு தற்கொலை செய்து கொள்ளப் போவதாக தெரிவித்தார்.
இதை பார்த்து பஸ் நிலையப் பகுதியில் இருந்த பயணிகள் அலறியடித்து ஓடினர். உடனடியாக போலீஸ் நிலையத்தில் இருந்த போலீசார், அங்கு வந்து அவரை அழைத்துச் செல்ல முயன்றனர். ஆனால் மண்டைக்கட்டு தான் அணிந்திருந்த சட்டையை கழற்றி, பஸ் நிலையப் பகுதியிலேயே தீ வைத்து எரித்து, பின்னர் சிகரெட்டை கையில் வைத்துக் கொண்டு பஸ் நிலையப் பகுதியில் உலா வந்தார். இதையடுத்து போலீசார் அவரை பிடித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
இந்த சம்பவத்தால் பஸ் நிலைய பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.
- ஒவ்வொரு கலெக்டர்களும் தங்களது மாவட்டத்தில் மேற்கொள்ளப்பட்டு வரும் வளர்ச்சி திட்ட பணிகள் குறித்து முதலமைச்சரிடம் தெரிவித்தனர்.
- சமூக நலம் மற்றும் சத்துணவுத் திட்ட துறை மூலம் மேற்கொள்ளப்பட்டு வரும் நிதியுதவி திட்டங்கள் மூலம் எத்தனை பேர் பயனடைந்துள்ளார்கள் என்பது பற்றி புள்ளி விபரங்களுடன் தெரிவித்தனர்.
சேலம்:
தமிழகத்தில் கள ஆய்வில் முதலமைச்சர் என்ற திட்டத்தை தொடங்கி வைத்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மாவட்டங்களுக்கு நேரடியாக சென்று வளர்ச்சி திட்டங்கள் குறித்து ஆய்வு செய்து வருகிறார்.
அதன்படி முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் 2 நாட்கள் சேலத்தில் தங்கியிருந்து சேலம் மண்டலத்திற்கு உட்பட்ட சேலம், நாமக்கல், தருமபுரி, கிருஷ்ணகிரி மாவட்டங்களின் வளர்ச்சி திட்டங்கள் குறித்து ஆய்வு செய்வதற்காக தனி விமானம் மூலம் நேற்று காலையில் சேலம் காமலாபுரம் விமானம் நிலையம் வந்தார். அங்கு அவருக்கு மாவட்ட நிர்வாகம் சார்பாக உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது.
இதையடுத்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், ஓமலூர் தாலுகா அலுவலகத்தில் ஆய்வு செய்தார். பின்னர் அவர் மக்களை சந்தித்து பேசினார். தொடர்ந்து சாலையோரம் நின்ற மாணவ-மாணவிகளை சந்தித்து பேசினார். பின்னர் சேலம் பழைய பஸ் நிலைய வளாகத்தில் ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் கீழ் புதிதாக கட்டப்பட்டு வரும் ஈரடுக்கு பஸ் நிலைய கட்டுமான பணிகளை பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
தொடர்ந்து சேலம் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் 4 மாவட்டங்களை சேர்ந்த தொழில் துறை மற்றும் விவசாய சங்க பிரதிநிதிகள், மகளிர் சுய உதவிக்குழுவினர் மற்றும் நான் முதல்வன் திட்டத்தின் கீழ் பயன்பெற்று வரும் கல்லூரி மாணவ-மாணவிகளுடன் முதலமைச்சர் கலந்துரையாடினார்.
இதையடுத்து சேலம், நாமக்கல், தர்மபுரி, கிருஷ்ணகிரி ஆகிய மாவட்டங்களை உள்ளடக்கிய சேலம் மண்டல அளவிலான கள ஆய்வு கூட்டத்தில் சட்டம் ஒழுங்கு நிலை குறித்து மாவட்ட கலெக்டர்கள், போலீஸ் உயர் அதிகாரிகளுடன் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆய்வுக்கூட்டம் நடத்தினார்.
அதனை தொடர்ந்து நேற்று இரவு தருமபுரி மாவட்டத்தில் கள ஆய்வு மேற்கொண்ட முதலமைச்சர் நள்ளிரவு 1 மணி அளவில் சேலம் திரும்பினார். பின்னர் சேலம் அஸ்தம்பட்டியில் உள்ள பொதுப்பணிதுறைக்கு சொந்தமான விருந்தினர் மாளிகையில் தங்கி ஓய்வு எடுத்தார்.
தொடர்ந்து, 2-வது நாளாக இன்று காலையில் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் அங்கிருந்து புறப்பட்டு 4 மாவட்ட வளர்ச்சி திட்டப்பணிகள் குறித்து ஆய்வு செய்வதற்காக சேலம் மாவட்ட கலெக்டர் அலுவலத்திற்கு வந்தார்.
காலை கூட்டம் தொடங்கியது. இந்த கூட்டத்தில் கலெக்டர்கள் கார்மேகம் (சேலம்), ஸ்ரேயா பி.சிங் (நாமக்கல்), தீபக் ஜேக்கப் (கிருஷ்ணகிரி), சாந்தி (தருமபுரி) மற்றும் மாவட்ட வருவாய் அலுவலர்கள் மற்றும் அனைத்து அரசு துறை அலுவலர்கள் கலந்து கொண்டனர். அவர்களுடன் முதலமைச்சர் ஆலோசனை நடத்தினார்.
அப்போது ஒவ்வொரு கலெக்டர்களும் தங்களது மாவட்டத்தில் மேற்கொள்ளப்பட்டு வரும் வளர்ச்சி திட்ட பணிகள் குறித்து முதலமைச்சரிடம் தெரிவித்தனர்.
அப்போது விவசாயிகள், மாணவர்கள், வேலைவாய்ப்பில்லாதவர்கள், பணிபுரிபவர்கள், சமூகத்தின் அடித்தட்டு மக்கள், தொழில்முனைவோர் மற்றும் தொழிற்சாலை ஆகியோருக்கு வழங்கப்பட்டுள்ள தமிழக அரசின் சேவைகள் பற்றியும், சாதிச்சான்றிதழ், பிறப்பு சான்றிதழ், இறப்பு சான்றிதழ், வாரிசுச் சான்றிதழ், வருமான சான்றிதழ், நில உடமைகளில் உரிய திருத்தம் மற்றும் பல்வேறு உரிமங்கள் சீராக வழங்கி வருவது பற்றியும் தெரிவித்தனர். சமூக நலம் மற்றும் சத்துணவுத் திட்ட துறை மூலம் மேற்கொள்ளப்பட்டு வரும் நிதியுதவி திட்டங்கள் மூலம் எத்தனை பேர் பயனடைந்துள்ளார்கள் என்பது பற்றி புள்ளி விபரங்களுடன் தெரிவித்தனர்.
அரசின் கொள்கைகளும், நோக்கங்களும் மக்களிடம் சென்றடைய அரசு அலுவலர்கள் சிறப்பாக செயல்படுகின்றனர். இதன் மூலம் விவசாயம் சார்ந்த தொழிலகங்களின் மூலப்பொருள்கள் கிடைப்பது உறுதிசெய்யப்படுவதுடன், ஊரக மக்களுக்கு வேலைவாய்ப்பு வசதிகள் கிடைக்கப்பெறுகிறது. விவசாய உற்பத்தியை உயர்த்த வேண்டி பல வளர்ச்சி திட்டங்களை செயல்படுத்தப்படுகிறது என தெரிவித்தனர்.
இதனை கேட்டறிந்த முதலமைச்சர், 4 மாவட்டங்களிலும் தமிழக அரசு பல கோடி ரூபாய் மதிப்பில் திட்டங்களை தீட்டி செயல்படுத்தி வருகிறது. இந்த திட்டங்களை சிறப்பாக கொண்டு சேர்க்கும் அரசு அலுவலர்களுக்கு பாராட்டுக்கள் தெரிவித்துக்கொள்கிறேன். அனைவருக்கும் அரசின் திட்டங்கள் தொடர்ந்து சென்று சேர செயலாற்ற வேண்டும். வளர்ச்சித் திட்டங்களை செயல்படுத்துவதில் உள்ள தடைகளை நீக்கி விரைந்து திட்டங்களை செயல்படுத்த வேண்டும் என முதலமைச்சர் அறிவுறுத்தினார்.
இதையடுத்து முதலமைச்சர், 4 மாவட்டங்களிலும் தற்போது முடிவுற்ற திட்டப்பணிகளை திறந்து வைத்தார். மேலும் புதிதாக பல்வேறு வளர்ச்சி பணிகளை தொடங்கி வைத்தார்.
இந்த கூட்டத்தில் தலைமை செயலாளர் இறையன்பு, முதலமைச்சரின் முதன்மை செயலாளர் உதயசந்திரன், நகராட்சி நிர்வாகத்துறை அமைச்சர் கே.என். நேரு, வேளாண்மை துறை அமைச்சர் பன்னீர்செல்வம், இளைஞர்நலன் மற்றும் விளையாட்டு துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின், வனத்துறை அமைச்சர் மதிவேந்தன், சிறு தொழில் அமைச்சர் காந்தி, உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
- அனைத்து மாணவர்களுக்கும் பாரபட்சம் இன்றி உணவு வழங்க வேண்டும்
- உணவு வழங்குவது தொடர்பான கையேடுகளை முறையாக பராமரிக்க வேண்டும்.
சேலம்:
சேலம் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் 2-வது நாளாக இன்று சேலம் மண்டலத்திற்கு உட்பட்ட கள ஆய்வு கூட்டம் நடைபெற்று வருகிறது.
இந்த கள ஆய்வில் பங்கேற்பதற்காக இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டு துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் வருகை புரிந்தார். அப்போது திடீரென அரசு பள்ளிகளில் காலை சிற்றுண்டி திட்டத்தை ஆய்வு மேற்கொண்டார். சேலம் மணியனூர் மற்றும் நெத்திமேடு பகுதியில் உள்ள மாநகராட்சி தொடக்க பள்ளியில் ஆய்வு மேற்கொண்ட உதயநிதி ஸ்டாலின் சமையல் செய்யும் இடத்தை பார்வையிட்டார். பின்னர் குழந்தைகளிடம் தங்களுடைய குறைகள் குறித்து கேட்டறிந்தார்.
இதனைத் தொடர்ந்து அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் நிருபர்களிடம் கூறியதாவது:-
தமிழக அரசின் மிக உன்னதமான காலை சிற்றுண்டி திட்டத்தின் கீழ் குழந்தைகளுக்கு சிற்றுண்டிகள் எவ்வாறு வழங்கப்படுகின்றன என்பது குறித்து ஆய்வு மேற்கொண்டேன். இதில் குழந்தைகள் ஒரு சில குறைகளை தெரிவித்தனர். இதுகுறித்து உரிய நடவடிக்கை எடுக்கப்படும்.
காலை சிற்றுண்டி திட்டம் தொடங்கியதற்கு காரணமே குழந்தைகள் பள்ளிக்கு வர வேண்டும் என்ற நோக்கத்தில் தொடங்கப்பட்டது. தற்போது குழந்தைகள் அதிக அளவில் பள்ளிக்கு வருகின்றனர். காலை சிற்றுண்டி உணவு தரமானதாக உள்ளது. குழந்தைகள் விரும்பி சாப்பிடுகின்றனர்.
காலை சிற்றுண்டியில் ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு உணவு வகை வழங்கப்படுகிறது. இதனால் மாணவர்கள் சீக்கிரம் வருகை புரிகின்றனர். நன்கு படிக்கின்றனர்.
அனைத்து மாணவர்களுக்கும் பாரபட்சம் இன்றி உணவு வழங்க வேண்டும், உணவு வழங்குவது தொடர்பான கையேடுகளை முறையாக பராமரிக்க வேண்டும், கழிவறைகளை தூய்மையாக வைத்துக் கொள்ள வேண்டும் போன்ற அறிவுரைகளை ஆசிரியர்களுக்கும், பணியாளர்களுக்கும் தெரிவித்துள்ளேன்.
இவ்வாறு அவர் கூறினார்.
- ஒகேனக்கல் காவிரியில் நீர்வரத்து விநாடிக்கு 2 ஆயிரம் கனஅடியாக நீடிக்கிறது.
- மேட்டூர் அணைக்கு நேற்று விநாடிக்கு 1,466 கன அடியாக இருந்த நீர்வரத்து, இன்று காலை நிலவரப்படி விநாடிக்கு 1,142 கன அடியாக சரிந்தது.
மேட்டூர்:
கர்நாடக அணைகளில் இருந்து தண்ணீர் திறக்கப்படாததாலும், காவிரி நீர்ப்பிடிப்பு பகுதிகளில் மழை இல்லாததாலும், ஒகேனக்கல் மற்றும் மேட்டூர் அணைக்கான நீர்வரத்து குறைந்துள்ளது.
ஒகேனக்கல் காவிரியில் நீர்வரத்து விநாடிக்கு 2 ஆயிரம் கனஅடியாக நீடிக்கிறது. அதேசமயம் மேட்டூர் அணைக்கு நேற்று விநாடிக்கு 1,466 கன அடியாக இருந்த நீர்வரத்து, இன்று காலை நிலவரப்படி விநாடிக்கு 1,142 கன அடியாக சரிந்தது.
அணையில் இருந்து குடிநீர் தேவைக்காக விநாடிக்கு ஆயிரம் கனஅடி வீதம் தண்ணீர் திறக்கப்பட்டு வருகிறது. அணையின் நீர்மட்டம் 103.85 அடியாக உள்ளது.
- நான் முதல்வன் திட்டத்தின் கீழ் பயன்பெற்று வரும் கல்லூரி மாணவ-மாணவிகளை சந்தித்து உரையாடினார்.
- பள்ளி குழந்தைகளுக்கான காலை உணவு திட்டத்தை முதலமைச்சர் நாளை ஆய்வு செய்கிறார்
சேலம்:
தமிழகத்தில் கள ஆய்வில் முதல்-அமைச்சர் என்ற திட்டத்தை தொடங்கி வைத்து முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் மாவட்டங்களுக்கு நேரடியாக சென்று வளர்ச்சி திட்டங்கள் குறித்து ஆய்வு செய்து வருகிறார்.
அதன்படி சேலம் மண்டலத்திற்குட்பட்ட ஆய்வு கூட்டம் இன்றும், நாளையும் சேலம் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் நடக்கிறது.
இதற்காக முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று காலை சென்னையிலிருந்து தனி விமானம் மூலம் சேலம் காமலாபுரம் விமான நிலையத்திற்கு வந்தார் . அங்கு அவருக்கு மாவட்ட நிர்வாகம் சார்பாக கலெக்டர் கார்மேகம் தலைமையில் உயர் அதிகாரிகள், அலுவலர்கள் உற்சாக வரவேற்பு அளித்தனர்.
தொடர்ந்து முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் கார் மூலம் அஸ்தம்பட்டியில் உள்ள ஆய்வு மாளிகைக்கு வந்து ஓய்வெடுத்தார். இன்று மாலை சேலம் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் சேலம், நாமக்கல், தருமபுரி, கிருஷ்ணகிரி ஆகிய 4 மாவட்ட விவசாயிகள், தாட்கோ திட்ட பயனாளிகளுடன் கலந்துரையாடினார்.
இதனைத் தொடர்ந்து, நான் முதல்வன் திட்டத்தின் கீழ் பயன்பெற்று வரும் கல்லூரி மாணவ-மாணவிகளை சந்தித்து உரையாடினார்.

பின்னர் கலெக்டர் அலுவலக 4-வது தளத்தில் நடக்கும் சட்டம் ஒழுங்கு தொடர்பான ஆய்வுக் கூட்டத்தில் கலந்து கொண்டு சேலம், நாமக்கல், தர்மபுரி, கிருஷ்ணகிரி ஆகிய 4 மாவட்ட கலெக்டர்கள், சேலம் மாநகர போலீஸ் கமிஷனர், சரக டி.ஐ.ஜி, 4 மாவட்ட போலீஸ் சூப்பிரண்டுகள் மற்றும் போலீஸ் அதிகாரிகளுடன் ஆலோசனையில் ஈடுபட்டார். இந்த 4 மாவட்டங்களில் நிலவி வரும் சட்டம் ஒழுங்கு நிலவரம், எடுக்க வேண்டிய முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்து அதிகாரிகளிடம் கேட்டறிந்தார்.
பின்னர் இரவு சேலத்தில் தங்கும் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் நாளை (வியாழக்கிழமை) காலை சேலம் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் நடைபெறும் 4 மாவட்ட வளர்ச்சிப்பணிகள் குறித்து அரசுத் துறை அலுவலர்களுடனான ஆய்வுக் கூட்டத்தில் பங்கேற்கிறார்.
இதில் அமைச்சர்கள் கே.என்.நேரு, எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் மா.சுப்பிரமணியன் மற்றும் சேலம், நாமக்கல், தர்மபுரி மற்றும் கிருஷ்ணகிரி மாவட்ட கலெக்டர்கள் மற்றும் பல்வேறு துறை அதிகாரிகள் கலந்து கொள்கிறார்கள்.
மாவட்டத்தில் மேற்கொள்ளப்பட்டு வரும் வளர்ச்சி பணிகள் மற்றும் இனி வரும் நாட்களில் மேற்கொள்ளப்பட வேண்டிய நடவடிக்கைகள் குறித்தும் விவாதிக்கப்படுகிறது.
முன்னதாக நாளை காலை பள்ளி குழந்தைகளுக்கான காலை உணவு திட்டத்தை முதல்-அமைச்சர் பள்ளிகளுக்கு நேரில் சென்று ஆய்வு செய்வதாக கூறப்படுகிறது. இதே போல சேலம் அரசு மருத்துவமனை, மாநகரிலுள்ள ஓரிரு போலீஸ் நிலையம், அரசு அலுவலகங்கள் மற்றும் மாவட்டத்தில் நடந்து வரும் வளர்ச்சி திட்ட பணிகள் குறித்து முதல்-அமைச்சர் திடீர் ஆய்வு மேற்கொள்ளார் என்றும் கூறப்படுகிறது.
சேலத்தில் ஆய்வுக் கூட்டத்தை முடித்துவிட்டு ஓமலூர் அடுத்த காமலாபுரம் செல்லும் முதல்-அமைச்சர் மு. க . ஸ்டாலின் நாளை பிற்பகல் 4.30 மணி அளவில் தனி விமானத்தில் சென்னை புறப்பட்டு செல்கிறார்.
முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் வருகையையொட்டி சேலம் மாவட்டம் முழுவதும் பாதுகாப்பு ஏற்பாடுகள் தீவிரமாக மேற்கொள்ளப்பட்டுள்ளன.
கோவை மேற்கு மண்டல ஐ.ஜி. சுதாகர், சேலம் சரக டி.ஐ.ஜி. ராஜேஸ்வரி, மாவட்ட எஸ்.பி. சிவகுமார் ஆகியோர் காமலாபுரம் விமான நிலையத்தில் இருந்து மாநகர பகுதிக்கு வரும் பாதையில் பாதுகாப்பு ஏற்பாடுகளை கவனித்து வருகின்றனர்.
அஸ்தம்பட்டி ஆய்வு மாளிகை, கூட்டம் நடைபெறும் சேலம் மாவட்ட கலெக்டர் அலுவலக வளாகம் முழுவதும் மாநகர போலீஸ் கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வரப்பட்டுள்ளது. அங்கு வரும் பொது மக்கள் அனைவரும் தீவிர சோதனைக்கு பின்னரே அனுமதிக்கப்பட்டனர். மாநகர போலீஸ் கமிஷனர் நஜ்மல் ஹோதா தலைமையில் சேலம் உள்பட 5 மாவட்டங்களைச் சேர்ந்த 3000-க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.
- கல்லாநத்தம் கிராமத்தைச் சேர்ந்த செல்வராஜ் என்பவரிடம் வைக்கோல் கட்டுகளை வாங்கியுள்ளார்.
- கணேசனுக்கு சொந்த–மான வேனில் வைக்கோல் கட்டுகளை ஏற்றுக் கொண்டு தாண்டவராயபுரம் கிருஷ்ணாபுரம் ஊராட்சி வலசக்கல் பட்டி சென்றபோது மின் கம்பி மீது உரசி களால் வேன் தீப்பற்றிக் கொண்டது.
ஆத்தூர்:
சேலம் மாவட்டம் ஆத்தூர் அருகே உள்ள கல்லாநத்தம் பகுதியைச் சேர்ந்தவர் கணேசன். இவரும் இதே கிராமத்தைச் சேர்ந்த செல்வராஜ் என்பவரிடம் வைக்கோல் கட்டுகளை வாங்கியுள்ளார்.
கணேசனுக்கு சொந்த–மான வேனில் வைக்கோல் கட்டுகளை ஏற்றுக் கொண்டு தாண்டவராயபுரம் கிருஷ்ணாபுரம் ஊராட்சி வலசக்கல் பட்டி சென்ற–போது மின் கம்பி மீது உரசி களால் வேன் தீப்பற்றிக் கொண்டது. இதை அறிந்த டிரைவர் வாகனத்தை நிறுத்தினார்.
இதனை அடுத்து கெங்கவல்லி தீயணைப்புத்–துறையினர் சம்பவ இடத்திற்கு சென்ற தீயணைப்பு துறையினர் வேனில் பரவிய தீயை ஒரு மணி நேரம் போராடி தீயணைத்தனர். இந்த தீ விபத்தில் 200க்கும் மேற்பட்ட வைக்கோல் கட்டுகள் எரிந்து சாம்பல் ஆகியது.
- கோதுமலை வனப்பகுதி யில், மான்களை வேட்டையாடுவது தடுக்கப்–பட்டதால் கடந்த 5 ஆண்டுகளில் புள்ளி–மான்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது.
- தீவனம் மற்றும் தண்ணீர் தேடி வரும் புள்ளிமான்கள், வனத்தையொட்டியுள்ள விளைநிலங்கள், குடியிருப்பு பகுதிகளில் அடிக்கடி புகுந்து வருகின்றன.
வாழப்பாடி:
சேலம் மாவட்டம் வாழப்பாடி அடுத்த கோதுமலை வனப்பகுதி யில், மான்களை வேட்டையாடுவது தடுக்கப்–பட்டதாலும், மான்களை இரையாக கொள்ளும் சிங்கம், புலி,சிறுத்தை போன்ற ஊண் உண்ணும் விலங்குகள் இல்லாததாலும், கடந்த 5 ஆண்டுகளில் புள்ளி–மான்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது.
தீவனம் மற்றும் தண்ணீர் தேடி வரும் புள்ளிமான்கள், வனத்தையொட்டியுள்ள விளைநிலங்கள், குடியிருப்பு பகுதிகளில் அடிக்கடி புகுந்து வருகின்றன. கோதுமலை வனப்பகுதியில் இருந்து நேற்றிரவு வந்த புள்ளிமான் கூட்டத்தில் இருந்து பிரிந்த 3 வயதுடைய ஒரு ஆண் புள்ளிமான், வனத்தையொட்டியுள்ள சேலத்தை சேர்ந்த ஒருவருக்கு சொந்தமான கம்பி வேலி அமைக்கப்பட்டுள்ள தோட்டத்திற்குள் புகுந்தது. கம்பி வேலியை தாண்டி மீண்டும் வனப்பகுதிக்கு செல்ல முடியாததால் இரவு முழுவதும் தோட்டத்தை சுற்றி வந்து தவித்தது. இதில் மானின் கொம்பு மற்றும் முகத்தின் முன்பகுதியில் காயம் ஏற்பட்டுள்ளது.
இன்று காலை இதுகுறித்து தகவலறிந்த இப்பகுதியைச் சேர்ந்த சிலர் வனத்துறையினருக்கு தகவல் தெரிவித்தனர். இதனையடுத்து, வாழப்பாடி வனச்சரகர் துரைமுருகன் தலைமையிலான வனத்துறையினர் சம்பவ இடத்திற்கு சென்று, தோட்டத்திற்குள் சிக்கி தவித்த புள்ளிமானை மீட்டு சிகிச்சை அளித்து மீண்டும் கோதுமலை வனப்பகுதியில் விட முயற்சித்தனர்.
ஆனால், எதிர்பாராத விதமாக இந்த புள்ளிமான் இன்று காலை பரிதாபமாக உயிரிழந்தது. மானின் உடலை கைப்பற்றிய வனத்துறையின் பிரேத பரிசோதனைக்காக சேசன்சாவடி கால்நடை மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். விவசாய தோட்டத்திற்கு சிக்கி புள்ளிமான் உயிரிழந்த சம்பவம் இப்பகுதி மக்களிடையே சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
- தமிழகத்தில் கள ஆய்வில் முதல்-அமைச்சர்’ என்ற திட்டத்தின்படி ஆய்வு செய்வதற்காக தமிழக முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று காலை ஓமலூர் அருகே உள்ள காமலாபுரம் விமான நிலையம் வந்தார்.
- சேலம் மாவட்ட கலெக்டர் கார்மேகம்,சேலம் மாநகராட்சி ஆணையாளர் கிறிஸ்துராஜ் மற்றும் உயர் அதிகாரிகள் பூங்கொத்து கொடுத்து வரவேற்பு அளித்தனர்.
சேலம்:
'தமிழகத்தில் கள ஆய்வில் முதல்-அமைச்சர்' என்ற திட்டத்தின்படி ஆய்வு செய்வதற்காக தமிழக முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று காலை ஓமலூர் அருகே உள்ள காமலாபுரம் விமான நிலையம் வந்தார். முதல்-அமைச்சருடன் உயர்கல்வித்துறை அமைச்சர் பொன்முடி, தலைமைச் செயலாளர் இறையன்பு, முதல்-அமைச்சரின்தனிப்பிரிவு செயலாளர் உதயச்சந்திரன் ஆகியோர் உடன் வந்தனர். விமான நிலையம் முன்பு காவல்துறை சார்பில் நடந்த அணிவகுப்பு மரியாதையை முதல்-அமைச்சர் ஏற்றுக்கொண்டார். அவருக்கு தமிழக காவல்துறைத் தலைவர் சைலேந்திரபாபு, சேலம் மாவட்ட கலெக்டர் கார்மேகம்,சேலம் மாநகராட்சி ஆணையாளர் கிறிஸ்துராஜ் மற்றும் உயர் அதிகாரிகள் பூங்கொத்து கொடுத்து வரவேற்பு அளித்தனர்.
விமான நிலையத்தில் முதல்-அமைச்சருக்கு மாவட்ட நிர்வாகம் மற்றும் தி.மு.க. சார்பில் சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட்டது.
இதனையடுத்து முதல்-அமைச்சர் கள ஆய்வில் கலந்து கொள்வதற்காக அங்கிருந்து காரில் புறப்பட்டு சேலம் வந்தார். வழிநெடுகிலும் அவருக்கு சாலையின் இருபுறமும் கட்சி தொண்டர்கள், பொதுமக்கள் திரண்டு நின்று உற்சாக வரவேற்பு அளித்தனர்.
- (1 முதல் 5-ஆம் வகுப்பு வரை) குழந்தைகளுக்கு காலை உணவு வழங்கும் திட்டத்தினை முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் கடந்த 15.09.2022 அன்று மதுரையில் தொடங்கி வைத்தார்.
- சேலம் மாவட்டத்தில் 54 மாநகராட்சி தொடக்கப்பள்ளிகளில் பயிலும் 5447 மாணவ, மாணவியர்கள் காலை உணவுத் திட்டத்தின்கீழ் பயன்பெற்று வருகின்றனர்.
சேலம்:
தமிழ்நாட்டில் உள்ள மாநகராட்சி, நகராட்சி, ஊரக (கிராம ஊராட்சி) மற்றும் மலைப்பகுதிகளில் செயல்படும் 1,545 அரசுப் பள்ளிகளில் பயிலும் 1 லட்சத்து 14 ஆயிரத்து 95 தொடக்கப்பள்ளி (1 முதல் 5-ஆம் வகுப்பு வரை) குழந்தைகளுக்கு காலை உணவு வழங்கும் திட்டத்தினை முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் கடந்த 15.09.2022 அன்று மதுரையில் தொடங்கி வைத்தார். தொடர்ந்து மற்ற அனைத்து மாவட்டங்களிலும் 16.09.2022 அன்று இத்திட்டம் தொடங்கப்பட்டது.
சேலம் மாவட்டத்தில் சேலம் மாநகராட்சி பகுதிக்கு உட்பட்ட மணக்காடு ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில் இந்த திட்டம் தொடங்கி வைக்கப்பட்டது. சேலம் மாவட்டத்தில் 54 மாநகராட்சி தொடக்கப்பள்ளிகளில் பயிலும் 5447 மாணவ, மாணவியர்கள் காலை உணவுத் திட்டத்தின்கீழ் பயன்பெற்று வருகின்றனர்.
இத்திட்டத்தின் மூலம் மாணவ-மாணவியர்கள் பசியின்றி பள்ளிக்கு வருவதை உறுதி செய்வதோடு, ஊட்டச்சத்து குறைபாட்டினால் பாதிக்கப்படாமல் இருத்தலை உறுதி செய்ய முடியும்.
மேலும், மாணவ / மாணவியரின் ஊட்டச்சத்து நிலையை உயர்த்துதல் குறிப்பாக ரத்த சோகை குறைபாட்டினை நீக்குதல், பள்ளிகளில் மாணவ-மாணவியர்களின் வருகையை அதிகரித்தல் மற்றும் கல்வியில் தக்க வைத்துக் கொள்ளுதல் மற்றும் வேலைக்கு செல்லும் தாய்மார்களின் பணிச்சுமையைக் குறைத்தல் உள்ளிட்டவைகள் இந்த திட்டத்தின் முக்கிய நோக்கமாகும்.
சேலம் மாநகராட்சியில் காலை உணவாக உப்புமா வகைகள், கிச்சடி வகைகள் மற்றும் பொங்கல் வகைகள் உள்ளிட்டவை சுழற்சி முறையில் நாள்தோறும் மாணவ, மாணவியர்களுக்கு வழங்கப்பட்டு வருகிறது.
இதற்காக சேலம் மாநகராட்சியில் மணக்காடு சமுதாயக் கூடம், இரும்பாலை மெயின் ரோட்டில் உள்ள டாக்டர்ஸ் காலணி, அம்மாப்பேட்டை வித்யா நகர், களரம்பட்டி சமுதாயக்கூடம், மணியனுர் காத்தாயம்மாள் நகர் சமுதாயக்கூடம் ஆகிய 5 ஒருங்கிணைந்த சமையல் கூடங்கள் அமைக்கப்பட்டுள்ளது.
இந்த திட்டத்தினை சேலம் மாவட்டத்தில் திறம்பட செயல்படுத்திடவும், கண்காணித்திடவும் ஏதுவாக 54 பள்ளிகள் 3 குழுக்களாக பிரிக்கப்பட்டு தினசரி காலை உணவு முறையாக வழங்கப்படுவதை உறுதிசெய்திட துணை கலெக்டர் நிலையில் ஒருவர் தினசரி கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர் என்று கலெக்டர் கார்மேகம் தெரிவித்து உள்ளார்.
- வாழப்பாடி பகுதியில், தேசிய பறவையான மயில்களின் எண்ணிக்கை பல மடங்கு அதிகரித்துள்ளது.
- இரைத்தேடி சென்ற ஒரு ஆண் மற்றும் பெண் மயில்கள், சேலம் - விருத்தாசலம் ரெயில் பாதையை கடக்க முயன்றபோது, அவ்வழியாக வந்த ரெயிலில் அடிபட்டு பலியாகின.
வாழப்பாடி:
சேலம் மாவட்டம் வாழப்பாடி பகுதியில், தேசிய பறவையான மயில்களின் எண்ணிக்கை பல மடங்கு அதிகரித்துள்ளதால், வனப்பகுதிகளில் மட்டுமின்றி கிராமப்புற வயல்வெளிகளிலும் இரைத்தேடி கூட்டம் கூட்டமாக சுற்றித் திரிகின்றன. இந்நிலையில், வாழப்பாடி அருகே கோதுமலை வனப்பகுதியில் இருந்து இரைத்தேடி சென்ற ஒரு ஆண் மற்றும் பெண் மயில்கள், சேலம் - விருத்தாசலம் ரெயில் பாதையை கடக்க முயன்றபோது, அவ்வழியாக வந்த ரெயிலில் அடிபட்டு பலியாகின. இன்று காலை மயில்கள் ரெயில் பாதை அருகே இறந்து கிடந்ததை பார்த்து இப்பகுதி மக்கள் சோகமடைந்தனர். இதுகுறித்து வாழப்பாடி வனத்துறையினருக்கு தகவல் தெரிவித்தனர். வாழப்பாடி வனச்சரகர் துரைமுருகன் தலைமையிலான வனத்துறையினர், இதுகுறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
- காவல் மற்றும் நெடுஞ்சாலை, மின்வாரியம் உட்கோட்டம் உள்பட பல்வேறு அரசுத்துறை வட்டார அளவிலான அலுவலகங்களுக்கு தலைமையிடமாக விளங்குகிறது.
- வாழப்பாடி அடுத்த புழுதிக்குட்டை ஆனைமடுவு அணை மற்றும் கரியக்கோயில் அணைகளை மேம்படுத்தி சுற்றுலாத்தலமாக மாற்ற வேண்டும் எனவும் இப்பகுதி மக்கள் எதிர்பார்க்கின்றனர்.
வாழப்பாடி:
சேலம் மாவட்டம் வாழப்பாடி வருவாய் வட்டம், ஊராட்சி ஒன்றியம், காவல் மற்றும் நெடுஞ்சாலை, மின்வாரியம் உட்கோட்டம் உள்பட பல்வேறு அரசுத்துறை வட்டார அளவிலான அலுவலகங்களுக்கு தலைமையிடமாக விளங்குகிறது. 200-க்கும் மேற்பட்ட சுற்றுப்புற கிராமங்களுக்கு மட்டுமின்றி, கல்வராயன்மலை, அறுநூற்றுமலை, சந்துமலை, ஜம்பூத்துமலை கிராம மக்களின், கல்வி, போக்குவரத்து, வேலைவாய்ப்புக்கும் வாழப்பாடி மையமாக இருந்து வருகிறது.
இந்த பகுதி கிராமங்களில் அரசு மற்றும் தனியார் பள்ளிகளில் 12-ம் வகுப்பு படிப்பை நிறைவு செய்யும் மாணவ–-மாணவியர், பட்டப்படிப்பு படிப்பதற்கு, சேலம், ஆத்தூர், ராசிபுரம் பகுதியில் இயங்கும் அரசு மற்றும் தனியார் கல்லூரிகளுக்கு செல்ல வேண்டிய நிலை நீடித்து வருகிறது.
இதனால் தினந்தோறும் 100 கி. மீ., க்கு மேல் பயணிக்க வேண்டியுள்ளதால், கிராமப்புற மாணவ–-மாணவியர் பலர் மேற்படிப்பை தொடர முடியாத நிலை ஏற்படுகிறது. எனவே, வாழப்பாடி சுற்றுப்புற கிராம மாணவ-–மாணவியரின் நலன் கருதி, வாழப்பாடியில் அரசு கலை அறிவியல் கல்லூரி அமைக்க வேண்டும் என்று அந்த பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
வாழப்பாடி பகுதியில் பெரும்பாலான விவசாயிகள், காய்கறிகளை பயிரிட்டு வருகின்றனர். இதனால், சேலம் மாவட்டத்தில் காய்கறி உற்பத்தியில் வாழப்பாடி சுற்றுப்புற கிராமங்கள் முக்கிய பங்கு வகிக்கின்றன. இருப்பினும், காய்கறிகளை நியாயமான விலைக்கு விற்பனை செய்வதற்கும், நுகர்வோர்கள், விவசாயிகளிடம் நேரடியாக தரமான காய்கறிகளை கொள்முதல் செய்வதற்கும் வழிவகை இல்லாததால் அவதிக்குள்ளாகி வருகின்றனர்.
விவசாயிகள் உற்பத்தி செய்யும் காய்கறிகளை, தனியார் தரகு மண்டி வாயிலாக வியாபாரிகளிடம் விற்பனை செய்வதால், உரிய விலை கிடைக்காமல் இழப்பு ஏற்படுகிறது. எனவே, வாழப்பாடி பகுதி விவசாயிகள் மற்றும் பொதுமக்களின் நலன் கருதி, வாழப்பாடியில் உழவர்சந்தை அமைக்கவேண்டும் என்ற கோரிக்கையும் எழுந்துள்ளது.
வாழப்பாடி பகுதியைச் சேர்ந்த பட்டதாரி இளைஞர்கள் மற்றும் வேலைவாய்ப்பற்ற பெண்களுக்கும், விவசாயம் மற்றும் விவசாயம் சார்ந்த தொழில்கள் நலிவுறுதலால் பாதிக்கப்படும் தொழிலாளர்களுக்கும் வேலைவாய்ப்பு ஏற்படுத்தி, வாழ்வாதாரத்தை மேம்படுத்தும் வகையில், வாழப்பாடியில் தொழிற்பேட்டை அமைக்க வேண்டும்.
வாழப்பாடியிலுள்ள அரசு மருத்துவமனையை 150 படுக்கைகள் கொண்ட மருத்துவமனையாக தரம் உயர்த்த வேண்டும். வாழப்பாடி வட்டாரத்தில், சிங்கபுரம் மற்றும் புழுதிக்குட்டையில் புதிதாக இரு ஆரம்ப சுகாதார நிலையங்கள் அமைக்க வேண்டும். ஏத்தாப்பூரில் முடங்கி கிடக்கும் தொழுநோய் மருத்துவமனை வளாகத்தில், நெடுஞ்சாலை விபத்து, அவசர முதலுதவி சிகிச்சை மருத்துவமனை அமைக்க வேண்டும்.
வாழப்பாடி அடுத்த புழுதிக்குட்டை ஆனைமடுவு அணை மற்றும் கரியக்கோயில் அணைகளை மேம்படுத்தி சுற்றுலாத்தலமாக மாற்ற வேண்டும் எனவும் இப்பகுதி மக்கள் எதிர்பார்க்கின்றனர்.
இந்த கோரிக்கைகள் குறித்து, இன்று ஆய்வு மேற்கொள்ளும் தமிழக முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின், அமைச்சர்கள் மற்றும் மாநில உயரதிகாரிகளின் கவனத்திற்கு, மாவட்ட நிர்வாகமும், மக்கள் பிரதிநிதிகளும் கொண்டு செல்ல வேண்டுமென, வாழப்பாடி பகுதி மக்களிடையே எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது.
வாழப்பாடி பகுதி மக்களின் அத்தியாவசிய தேவை குறித்த கோரிக்கைகள், முதல்-அமைச்சர், அமைச்சர்கள் மற்றும் மாநில அதிகாரிகளின் கவனத்திற்கு கொண்டு செல்லப்பட்டால், இப்பகுதியின் வளர்ச்சிக்கும் மக்களின் எதிர்பார்ப்புக்கும் நல்ல பலன் கிடைக்குமென, சமூக ஆர்வலர்களும், தன்னார்வ அமைப்பினரும் நம்பிக்கை தெரிவித்துள்ளனர்.
- இந்த ரெயில்வே கேட் வழியாக உள்பட 200-க்கும் மேற்பட்ட கிராம மக்கள் சென்று வருகிறார்கள். தினமும் அந்த வழியாக 5 ஆயிரத்திற்கும் மேற்பட்ட வாகனங்கள் சென்று வருகின்றன.
- இந்த ரெயில்வே கேட் தினமும் 15-க்கும் அதிகமான முறை மூடப்படுகிறது.
சேலம்:
சேலம் மாவட்டம் மல்லூரை அடுத்த வேங்காம்பட்டி பகுதியில் ரெயில்வே கேட் அமைந்துள்ளது.
200 கிராமங்கள்
இந்த ரெயில்வே கேட் வழியாக வேங்காம்பட்டி, வாழ குட்டைப்பட்டி, ஏரியூர், செவந்தாம்பட்டி, பாலம்பட்டி, நெ. 3 குமாரபாளையம், கரட்டுப்பாளையம், ஆலாம்பாளையம், பொன்பரப்பிபட்டி, மின்னக்கல், மூக்குத்தி பாளையம் உள்பட 200-க்கும் மேற்பட்ட கிராம மக்கள் சென்று வருகிறார்கள். தினமும் அந்த வழியாக 5 ஆயிரத்திற்கும் மேற்பட்ட வாகனங்கள் சென்று வருகின்றன.
இந்த ரெயில்வே கேட் தினமும் 15-க்கும் அதிகமான முறை மூடப்படுகிறது. இதனால் அந்த வழியாக பள்ளி, கல்லூரிக்கு செல்லும் மாணவ-மாணவிகள், அலுவலக பணிகளுக்கு செல்வோர், விவசாயம் மற்றும் கூலி வேலைக்கு செல்வோர், ஆம்புலன்ஸ்களில் அவசர சிகிச்சைக்கு செல்வோர் கடுமையாக பாதிக்கப்பட்டு வருகிறார்கள்.
இந்த பகுதியில் நீண்ட காலமாக ரெயில்வே மேம்பாலம் அமைக்க கோரி பொது மக்கள் போராட்டம் நடத்தி வருகிறார்கள். மல்லூர் பேரூராட்சியில தீர்மானம் நிறைவேற்றியும் ஆர்ப்பாட்டம் போராட்டம் நடத்தியும் எந்த வித நடவடிக்கையும் எடுக்கவில்லை. பல முறை அதிகாரிகளிடம் மனு கொடுத்தும் எந்த நடவடிக்கையும் எடுக்கப்பட வில்லை.
போராட்டம்
இதனை கண்டித்து வருகிற 23-ந் தேதி சுற்று வட்டார கிராம மக்கள், மகளிர் சுய உதவி குழுவினர் என 10 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் திரண்டு மல்லூர் பேரூராட்சி துணை தலைவர் வேங்கை அய்யனார் தலைமையில் வேங்காம்பட்டி ரெயில்வே கேட் அருகே ரெயில் மறியல் போராட்டம் மற்றும் கண்டன ஆர்ப்பாட்டத்தை நடத்த முடிவு செய்துள்ளனர். இதனால் அந்த பகுதியில் தொடர்ந்து பரபரப்பு நிலவி வருகிறது.






