குடும்ப தகராறில் போலீஸ் நிலையம் எதிரே வாலிபர் தீக்குளிக்க முயற்சி

ஆத்தூர் பஸ் நிலைய பகுதியில் புறநகர் காவல் நிலையத்தில் குடும்ப பிரச்சனை காரணமாக மண்ணெண்ணையை தலையில் ஊற்றிக் கொண்டு தற்கொலை செய்து கொள்ளப் போவதாக தெரிவித்தார். இதையடுத்து போலீசார் அவரை பிடித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
ஆத்தூர் பஸ் நிலைய புறநகர் காவல் நிலையம் எதிரே மண்டைக்கட்டு தீக்குளிக்க முயன்ற காட்சி. 
ஆத்தூர் பஸ் நிலைய புறநகர் காவல் நிலையம் எதிரே மண்டைக்கட்டு தீக்குளிக்க முயன்ற காட்சி. 
Published on

ஆத்தூர்:

சேலம் மாவட்டம் ஆத்தூர் பஸ் நிலைய பகுதியில் புறநகர் காவல் நிலையம் உள்ளது. இந்த காவல் நிலையம் அருகில் பழ வியாபாரம் செய்து வருபவர் மகேஸ்வரி. இவரது கணவர் மண்டைக்கட்டு ( வயது 40). இவர்களுக்கு ஒரு மகன் உள்ளார்.

இந்நிலையில் மகேஸ்வரிக்கும் மண்டைக்கட்டுக்கும் கடந்த சில நாட்களாக குடும்ப பிரச்சனை இருந்து வந்ததாக கூறப்படுகிறது. இந்நிலையில் பஸ் நிலையப் பகுதியில் பழ வியாபராம் செய்து வந்த மனைவி மகேஸ்வரியிடம், மண்டைக்கட்டுக்கும் இடையே வாக்குவாதம் நடைபெற்றது. அப்போது மண்டைக்கட்டு கையில் வைத்திருந்த மண்ணெண்ணையை தலையில் ஊற்றிக் கொண்டு தற்கொலை செய்து கொள்ளப் போவதாக தெரிவித்தார்.

இதை பார்த்து பஸ் நிலையப் பகுதியில் இருந்த பயணிகள் அலறியடித்து ஓடினர். உடனடியாக போலீஸ் நிலையத்தில் இருந்த போலீசார், அங்கு வந்து அவரை அழைத்துச் செல்ல முயன்றனர். ஆனால் மண்டைக்கட்டு தான் அணிந்திருந்த சட்டையை கழற்றி, பஸ் நிலையப் பகுதியிலேயே தீ வைத்து எரித்து, பின்னர் சிகரெட்டை கையில் வைத்துக் கொண்டு பஸ் நிலையப் பகுதியில் உலா வந்தார். இதையடுத்து போலீசார் அவரை பிடித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

இந்த சம்பவத்தால் பஸ் நிலைய பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com