என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Sacrifice of Spotted Deer புள்ளிமான் பலி"

    • கோதுமலை வனப்பகுதி யில், மான்களை வேட்டையாடுவது தடுக்கப்–பட்டதால் கடந்த 5 ஆண்டுகளில் புள்ளி–மான்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது.
    • தீவனம் மற்றும் தண்ணீர் தேடி வரும் புள்ளிமான்கள், வனத்தையொட்டியுள்ள விளைநிலங்கள், குடியிருப்பு பகுதிகளில் அடிக்கடி புகுந்து வருகின்றன.

    வாழப்பாடி:

    சேலம் மாவட்டம் வாழப்பாடி அடுத்த கோதுமலை வனப்பகுதி யில், மான்களை வேட்டையாடுவது தடுக்கப்–பட்டதாலும், மான்களை இரையாக கொள்ளும் சிங்கம், புலி,சிறுத்தை போன்ற ஊண் உண்ணும் விலங்குகள் இல்லாததாலும், கடந்த 5 ஆண்டுகளில் புள்ளி–மான்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது.

    தீவனம் மற்றும் தண்ணீர் தேடி வரும் புள்ளிமான்கள், வனத்தையொட்டியுள்ள விளைநிலங்கள், குடியிருப்பு பகுதிகளில் அடிக்கடி புகுந்து வருகின்றன. கோதுமலை வனப்பகுதியில் இருந்து நேற்றிரவு வந்த புள்ளிமான் கூட்டத்தில் இருந்து பிரிந்த 3 வயதுடைய ஒரு ஆண் புள்ளிமான், வனத்தையொட்டியுள்ள சேலத்தை சேர்ந்த ஒருவருக்கு சொந்தமான கம்பி வேலி அமைக்கப்பட்டுள்ள தோட்டத்திற்குள் புகுந்தது. கம்பி வேலியை தாண்டி மீண்டும் வனப்பகுதிக்கு செல்ல முடியாததால் இரவு முழுவதும் தோட்டத்தை சுற்றி வந்து தவித்தது. இதில் மானின் கொம்பு மற்றும் முகத்தின் முன்பகுதியில் காயம் ஏற்பட்டுள்ளது.

    இன்று காலை இதுகுறித்து தகவலறிந்த இப்பகுதியைச் சேர்ந்த சிலர் வனத்துறையினருக்கு தகவல் தெரிவித்தனர். இதனையடுத்து, வாழப்பாடி வனச்சரகர் துரைமுருகன் தலைமையிலான வனத்துறையினர் சம்பவ இடத்திற்கு சென்று, தோட்டத்திற்குள் சிக்கி தவித்த புள்ளிமானை மீட்டு சிகிச்சை அளித்து மீண்டும் கோதுமலை வனப்பகுதியில் விட முயற்சித்தனர்.

    ஆனால், எதிர்பாராத விதமாக இந்த புள்ளிமான் இன்று காலை பரிதாபமாக உயிரிழந்தது. மானின் உடலை கைப்பற்றிய வனத்துறையின் பிரேத பரிசோதனைக்காக சேசன்சாவடி கால்நடை மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். விவசாய தோட்டத்திற்கு சிக்கி புள்ளிமான் உயிரிழந்த சம்பவம் இப்பகுதி மக்களிடையே சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

    ×