என் மலர்tooltip icon

    சேலம்

    • வாழப்பாடியில் உள்ள ஆய்வு மாளிகைக்கு நேற்று அமைச்சர் கே.என்.நேரு வந்தார்.
    • அனைத்து வளர்ச்சி திட்டப் பணிகளைதரமாகவும், குறிப்பிடப்பட்ட கால அளவில் முடித்து பொது மக்களின் பயன்பாட்டிற்கு கொண்டு வரவேண்டும் எனவும் அவர் தெரிவித்தார்.

    வாழப்பாடி:

    சேலம் மாவட்டம் வாழப்பாடியில் உள்ள ஆய்வு மாளிகைக்கு நேற்று அமைச்சர் கே.என்.நேரு வந்தார். அங்கு கலெக்டர் கார்மேகம் மற்றும் உயர் அதிகாரிகளுடன் அவர் ஆலோசனை நடத்தினார். அப்போது சேலம் மாவட்டத்தில் நடைபெற்று வரும் பல்வேறு வளர்ச்சி திட்டப்பணிகள் மற்றும் சேலம் ஈரடுக்கு பேருந்து நிலையம், மேம்பாலப் பணிகள், அரசு சட்டக் கல்லூரி கட்டுமானப்பணி கள் உள்ளிட்ட பணிகளை உரிய கால அளவில் முடித்திட ஆவண செய்திட அறிவுரை வழங்கினார்.

    மேலும், சேலம் மாவட்டத்தில் உள்ள அனைத்து நீர் நிலைகளையும் சீரமைக்கும் பணிகள் குறித்தும், குறிப்பாக , மாவட்டத்தில் மிகப்பெரிய ஏரியான பனமரத்துப்பட்டி ஏரியை சீரமைக்கும் பணி யில் தனிகவனம் செலுத்தி டவும் மாநகராட்சி நிர்வா கத்திற்கு அறிவுறுத்தினார்.

    கோடை காலம் தொடங்கிய நிலையில் மாவட்டத்தின் அனைத்து பகுதிகளிலும் சீரான குடிநீர் விநியோகம் கிடைக்க அலுவலர்கள் உரிய நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் எனவும், அரசால் செயல்படுத்தப்பட்டு வரும் அனைத்து வளர்ச்சி திட்டப் பணிகளைதரமாகவும், குறிப்பிடப்பட்ட கால அளவில் முடித்து பொது மக்களின் பயன்பாட்டிற்கு கொண்டு வரவேண்டும் எனவும் அவர் தெரிவித்தார்.

    ஆய்வின்போது சேலம் மாநகராட்சி மேயர் ராமச்சந்திரன், ஆணையா ளர் கிறிஸ்துராஜ், மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சிவகுமார், மாவட்ட வரு வாய் அலுவலர் மேனகா, சேலம் வடக்கு தொகுதி எம்.எல்.ஏ. ராஜேந்திரன், கிழக்கு மாவட்ட தி.மு.க. செயலாளர் எஸ்.ஆர்.சிவலிங்கம், மேற்கு மாவட்ட தி.மு.க. செயலாளர் டி.எம்.செல்வகணபதி, சேலம் கோட்டாட்சியர் (பொ) சரவணன் , முன்னாள் மாவட்ட ஊராட்சி தலைவர் பாரப்பட்டி சுரேஷ்குமார் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

    • முருகன் மீது பல்வேறு பிரிவின்கீழ் வழக்குகள் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
    • சந்தேகத்தால் மனைவியை ரோட்டில் ஓட ஓட விரட்டி கணவர் வெட்டிய சம்பவம் அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

    சேலம்:

    சேலம் நெத்திமேடு கே.பி.கரடு தென்புறம் பகுதியைச் சேர்ந்தவர் முருகன் (வயது 50). சலவை தொழிலாளியான இவருக்கு மலர் (37) என்ற மனைவியும், ஒரு மகனும், மகளும் உள்ளனர். மகளுக்கு திருமணம் ஆகிவிட்ட நிலையில் மகனும் வெளியூரில் வேலை பார்த்து வருவதாக கூறப்படுகிறது.

    கணவன், மனைவி இருவரும் தனியாக வசித்து வந்த நிலையில் சமீப காலமாக முருகனுக்கு மனைவி மீது சந்தேகம் ஏற்பட்டு அடிக்கடி தகராறு நடந்து வந்துள்ளது.

    நேற்றும் வழக்கம்போல் முருகனுக்கும் அவரது மனைவி மலருக்கும் தகராறு ஏற்பட்டதால் மதியம் மலர், நெத்திமேடு எம்.ஜி.ஆர். நகரில் உள்ள தனது தாய் வீட்டிற்கு சென்றுள்ளார். ஆனால் அங்கு அவரது பெற்றோர் வெளியூர் சென்றுவிட்டதால் அங்கு மலர் வீட்டில் தனியாக இருந்தார்.

    அப்போது அங்கு வந்த முருகன், மனைவியுடன் மீண்டும் தகராறில் ஈடுபட்டு மறைத்து வைத்திருந்த அரிவாளால் மலரை வெட்டினார். இதனால் நிலைகுலைந்த மலர் வெட்டுக் காயங்களுடன் தப்பித்து ரோட்டில் ஓடினார். ஆத்திரம் தீராத முருகன் ரோட்டில் ஓட ஓட விரட்டி மனைவியை சரமாரியாக வெட்டினார்.

    இதில் படுகாயம் அடைந்த மனைவி ரோட்டில் சுருண்டு விழுந்தார். இந்த சம்பவத்தில் எதிர்பாராத விதமாக முருகனுக்கும் கையில் வெட்டு விழுந்துள்ளது. இதைக் கண்ட அந்த பகுதி மக்கள் உடனடியாக கணவன்-மனைவி இருவரையும் மீட்டு சேலம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

    இதில் மலருக்கு தலை, கழுத்து, கை, நெஞ்சு என 10-க்கும் மேற்பட்ட இடங்களில் வெட்டுக்காயம் விழுந்ததால் உயிருக்கு ஆபத்தான நிலையில் சிகிச்சை பெற்று வருகிறார்.

    இது குறித்து புகாரின்பேரில் அன்னதானப்பட்டி போலீஸ் இன்ஸ்பெக்டர் சந்திரகலா மற்றும் போலீசார், முருகன் மீது பல்வேறு பிரிவின்கீழ் வழக்குகள் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    சந்தேகத்தால் மனைவியை ரோட்டில் ஓட ஓட விரட்டி கணவர் வெட்டிய சம்பவம் அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

    • தனியார் கூட்டுறவு சங்கத்திற்கு தமிழகத்தில் ஆயிரம் இடங்களில் கிளை தொடங்கி ரூ.58 கோடி வரை வசூலித்து திருப்பி தராமல் சங்கத்தை மூடி மோசடியில் ஈடுபட்டது தெரிய வந்தது.
    • மேச்சேரி எரப்பரெட்டியூர் பகுதியை சேர்ந்த சங்க கணக்காளர் கண்ணனை நேற்று போலீசார் கைது செய்தனர்.

    சேலம்:

    சேலம் அழகாபுரத்தில் அமுதசுரபி சிக்கன கூட்டுறவு கடன் சங்கம் பேரில் தனியார் கூட்டுறவு சங்கம் 2019-ல் தொடங்கப்பட்டது. அயோத்தியா பட்டினத்திலும் அதன் கிளை திறக்கப்பட்டு அதே ஊரைச் சேர்ந்த ஜெயவேல் தலைவராக செயல்பட்டார்.

    சேலம் அம்மாபேட்டை தங்க செங்கோடன் தெருவை சேர்ந்த பாஸ்கரன்(52) என்பவர் அயோத்தியாபட்டணம் சங்கத்தில் பல்வேறு திட்டத்தில் 2.92 லட்சம் ரூபாய் முதலீடு செய்தார். உரிய காலம் நிறைவடைந்த பின்னர் முதிர்வுத் தொகை கிடைக்காததால் 2020-ம் ஆண்டு நவம்பர் மாதம் சேலம் மாவட்ட பொருளாதார குற்றப்பிரிவு போலீஸ் புகார் அளித்தார்.

    விசாரணையில் இந்த தனியார் கூட்டுறவு சங்கத்திற்கு தமிழகத்தில் ஆயிரம் இடங்களில் கிளை தொடங்கி ரூ.58 கோடி வரை வசூலித்து திருப்பி தராமல் சங்கத்தை மூடி மோசடியில் ஈடுபட்டது தெரிய வந்தது. இது தொடர்பாக அந்த நிறுவனத்தை நடத்திய ஜெயவேல் என்பவரை கடந்த மாதம் போலீசார் கைது செய்தனர். இந்த நிலையில் மேச்சேரி எரப்பரெட்டியூர் பகுதியை சேர்ந்த சங்க கணக்காளர் கண்ணனை நேற்று போலீசார் கைது செய்தனர். மேலும் இதில் தொடர்புடையவர்கள் குறித்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    • உபரி நீர் திறக்கப்படாததால் ஒகேனக்கலில் நீர்வரத்து சரிந்தது.
    • மேட்டூர் அணைக்கு நீர்வரத்து குறைவாக உள்ளது.

    மேட்டூர்:

    கர்நாடகா மற்றும் கேரளாவில் காவிரி நீர்பிடிப்பு பகுதிகளில் போதிய மழை பெய்யாததால் கர்நாடகாவில் உள்ள கபினி மற்றும் கிருஷ்ணராஜசாகர் அணைகளுக்கு நீர்வரத்து குறைந்துள்ளது.

    2 அணைகளில் இருந்தும் உபரி நீர் திறக்கப்படாததால் ஒகேனக்கலில் நீர்வரத்து சரிந்தது. இதனால் மேட்டூர் அணைக்கும் நீர்வரத்து குறைவாக உள்ளது.

    இன்று காலை நிலவரப்படி மேட்டூர் அணை நீர்மட்டம் 102.99 அடியாக இருந்தது. அணைக்கு வினாடிக்கு 1260 கன அடி வீதம் தண்ணீர் வந்து கொண்டிருந்தது. அணையில் இருந்து வினாடிக்கு 1500 கன அடி வீதம் தண்ணீர் திறந்து விடப்பட்டது.

    • விசாரணையின்போது தப்பி ஓடிய போலீஸ்காரர் பிரபாகரனை பிடிக்க 3 தனிப்படைகள் அமைக்கப்பட்டன.
    • போலீஸ்காரர் பிரபாகரனை பணி இடைநீக்கம் செய்து, பெரம்பலூர் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சியாம்ளா தேவி உத்தரவிட்டு உள்ளார்.

    ஆத்தூர்:

    சேலம் மாவட்டம் தலைவாசல் அருகே உள்ள வேப்பநத்தம் கிராமத்தை சேர்ந்தவர் பிரபாகரன் (வயது 30). இவர் பெரம்பலூர் மாவட்ட ஆயுதப்படை போலீஸ்காரராக பணிபுரிந்து வருகிறார்.

    பிரபாகரன் மீது தலைவாசல் பகுதியைச் சேர்ந்த ஒரு மாணவியின் பெற்றோர் ஆத்தூர் அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்தில் ஒரு புகார் கொடுத்தனர்.

    அதில் எங்களது மகள் தலைவாசல் பகுதியில் உள்ள ஒரு பள்ளியில் 12-ம் வகுப்பு படித்து வருகிறாள். இந்த நிலையில் வேப்பநத்தம் கிராமத்தை சேர்ந்த பெரம்பலூர் மாவட்ட ஆயுதப்படை போலீஸ்காரர் பிரபாகரன் என்பவர் எங்களது மகளிடம் ஆசைவார்த்தை கூறி பலாத்காரம் செய்ததில் எங்கள் மகள் 7 மாத கர்ப்பிணியாக உள்ளார்.

    எங்களுடைய மகளுக்கு 17 வயதே ஆகிறது. எனவே எங்கள் மகளின் கர்ப்பத்துக்கு காரணமான போலீஸ்காரர் பிரபாகரன் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கூறியிருந்தனர்.

    இந்த புகார் குறித்து ஆத்தூர் அனைத்து மகளிர் போலீஸ் இன்ஸ்பெக்டர் தமிழரசி, வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினார்.

    இதில் மாணவியை கர்ப்பமாக்கிய பிரபாகரனுக்கு ஏற்கனவே திருமணம் ஆகி மனைவி மற்றும் 2 குழந்தைகள் உள்ளனர். இந்த நிலையில் ஆத்தூர் அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்தில் இருந்து போலீஸ்காரர் பிரபாகரனை அழைத்து வர 2 ஆண் போலீசார் அனுப்பி வைக்கப்பட்டனர்.

    அவர்கள் இருவரும் பிரபாகரனை கைது செய்து ஆத்தூர் அனைத்து மகளிர் போலீஸ் இன்ஸ்பெக்டர் தமிழரசி முன்னிலையில் விசாரணைக்கு ஆஜர்படுத்தினர்.

    தொடர்ந்து போக்சோ சட்டத்தில் வழக்குப்பதிவு செய்து, அவரை சேலம் போக்சோ நீதிமன்றத்துக்கு அழைத்து செல்வதற்கான ஏற்பாடுகளை செய்து வந்தனர்.

    அப்போது விசாரணையின் இடையே போலீஸ் நிலையத்தில் இருந்து தப்பித்து வெளியே வந்த அவர் அங்கிருந்த தனது நண்பர்களுடன் மோட்டார் சைக்கிளில் சென்று விட்டார்.

    விசாரணையின்போது தப்பி ஓடிய போலீஸ்காரர் பிரபாகரனை பிடிக்க 3 தனிப்படைகள் அமைக்கப்பட்டன. இதனிடையே போலீஸ்காரர் பிரபாகரனை பணி இடைநீக்கம் செய்து, பெரம்பலூர் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சியாம்ளா தேவி உத்தரவிட்டு உள்ளார்.

    இந்த நிலையில் போலீஸ்காரர் பிரபாகரன், கள்ளக்குறிச்சி மாவட்டம் இந்திலி பகுதியில் பதுங்கி இருப்பதாக தனிப்படை போலீசாருக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து போலீசார், அங்கு விரைந்து சென்று அவரை கைது செய்தனர்.

    • பெரும்பாலான மாணவர்களின் வங்கி கணக்கு நடப்பில் இல்லாமலும் , அவர்களின் வங்கி கணக்கு ஆதார் எண்ணுடன் இணைக்கப்படாமலும் உள்ளதை கண்டறியப்பட்டுள்ளது.
    • ஆதிதிராவிடர், பழங்குடியின மாணவ-மாணவிகளின் வங்கி கணக்கை ஆதார் எண்ணுடன் இணைக்க பள்ளிகளில் முகாம் நடைபெற்றது.

    சேலம்:

    2022-2023-ம் கல்வி யாண்டில் சேலம் மாவட்டத்தில் உள்ள பள்ளி களில் 9, 10-ம் வகுப்பு மற்றும் 11, 12-ம் வகுப்பு களில் பயிலும் ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியின மாணவ-மாணவியர்களுக்கான பிரிமெட்ரிக், போஸ்ட்மெட்ரிக் கல்வி உதவித்தொகை பெற விண்ணப்பிக்க மாணவ-மாணவிகளின் வங்கி கணக்கு ஆதார் எண்ணுடன் கட்டாய மாக இணைக்கப்பட்டிருக்க வேண்டும்.

    பெரும்பாலான மாணவர்களின் வங்கி கணக்கு நடப்பில் இல்லாமலும் , அவர்களின் வங்கி கணக்கு ஆதார் எண்ணுடன் இணைக்கப்படாமலும் உள்ளதை கண்டறிந்து, சம்பந்தப்பட்ட பள்ளி தலைமை ஆசிரியர்களுக்கு முதன்மை கல்வி அலுவலர் மூலமாக விவரம் அனுப்பி வைக்கப்பட்டு உரிய நேரத்தில் மாணவர்களுக்கு கல்வி உதவித்தொகை வழங்கிட நட வடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

    மேலும், வங்கி கணக்கு நடப்பில் உள்ளதை உறுதி செய்திடவும், புதிய அஞ்சல வங்கி கணக்குகள் தொடங்க சம்பந்தப்பட்ட பள்ளிகளில் சிறப்பு முகாம் நடத்தி கட்டணம் ஏதும் இல்லாமல் மாணவர்களின் ஆதார் அட்டை மற்றும் பெற்றோ ரின் தொலைபேசி எண் கொண்டு அஞ்சலக வங்கி கணக்கு தொடங்கிட அஞ்சல் அலுவலர்கள் அந்தந்த பள்ளிகளிலேயே முகாம் நடத்திட நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. எனவே இவ்வசதியினை மாணவர்கள் பயன்படுத்தி பயன்பெறுமாறு மாவட்ட கலெக்டர் கார்மேகம் கேட்டுக்கொண்டுள்ளார்.

    • சேலம் கன்னங்குறிச்சி பிறந்தநாள் கோவில் தெருவை சேர்ந்த வாலிபர் மாயமானார்.
    • இந்த நிலையில் கடந்த 20-ந் தேதி வீட்டில் இருந்து சென்ற கிருபாகரன் வீடு திரும்பவில்லை.

    சேலம்:

    சேலம் கன்னங்குறிச்சி பிறந்தநாள் கோவில் தெருவை சேர்ந்தவர் கந்தசாமி அமிர்தம். இவரது மகன் கிருபாகரன் (வயது 35). இவர், பிளஸ்- 2 வரை படித்துவிட்டு கூலி வேலைக்கு சென்றார். ஒரு விபத்தில் இவருக்கு மனநிலை பாதிக்கப்பட்டது. அதிலிருந்து இவர் வேலைக்கு செல்லாமல் வீட்டில் இருந்து வந்தார். இந்த நிலையில் கடந்த 20-ந் தேதி வீட்டில் இருந்து சென்ற கிருபாகரன் வீடு திரும்பவில்லை. இதையடுத்து அவரது பெற்றோர் மற்றும் உறவினர்கள் பல்வேறு இடங்களில் தேடி பார்த்தும் காணவில்லை. இதுகுறித்து கன்னங்குறிச்சி போலீசில் புகார் அளித்தனர். புகாரின் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து கிருபாகரனை தேடி வருகின்றனர்.

    • இவர் நேற்று அதிகாலை 2.30 மணி அளவில் சேலம் புதிய பஸ் நிலையம் ஆட்டோ ஸ்டாண்ட் அருகே நடந்து வந்து கொண்டிருந்தார்.
    • அப்போது மோட்டார் சைக்கிளில் வந்த 3 வாலிபர்கள் இளங்கோவன் கையில் வைத்திருந்த செல்போனை பறித்துக் கொண்டு மின்னல் வேகத்தில் தப்பி மறைந்தனர்.

    சேலம்:

    சேலம் சின்ன திருப்பதி சீனிவாசா நகர் பகுதியை சேர்ந்தவர் இளங்கோவன் (வயது 54). இவர் கன்னங்கு றிச்சி காவல் நிலையத்தில் தலைமை காவலராக பணி யாற்றி வருகிறார். இவர் நேற்று அதிகாலை 2.30 மணி அளவில் சேலம் புதிய பஸ் நிலையம் ஆட்டோ ஸ்டாண்ட் அருகே நடந்து வந்து கொண்டிருந்தார். அப்போது மோட்டார் சைக்கிளில் வந்த 3 வாலிபர்கள் இளங்கோவன் கையில் வைத்திருந்த செல்போனை பறித்துக் கொண்டு மின்னல் வேகத்தில் தப்பி மறைந்தனர்.

    இதுகுறித்து தலைமை காவலர் இளங்கோவன் பள்ளப்பட்டி போலீஸ் நிலையத்தில் புகார் செய்தார். குற்றப்பிரிவு இன்ஸ்பெக்டர் நெப்போலியன் வழக்கு பதிவு செய்து வழிப்பறிக் கொள்ளை யர்களை வலைவீசி தேடி வருகின்றார்.

    • கலைவாணி கடந்த 2 மாதத்திற்கு முன்பு அய்யனாரை விட்டுவிட்டு வேறு ஒருவருடன் சென்று விட்டார்.
    • நேற்று இரவு வீட்டில் மனைவியின் சேலையால் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.

    சேலம்:

    சேலம் சூரமங்கலம் கவுண்டம்பட்டி அருகே உள்ள சர்க்கரை புளியமரம் அருகில் வசித்து வந்தவர் அய்யனார் (வயது 32). இவருக்கு கலைவாணி ( 28) என்ற மனைவியும் 5 வயதில் ஒரு மகனும் உள்ளனர்.

    இந்த நிலையில் கலைவாணி கடந்த 2 மாதத்திற்கு முன்பு அய்யனாரை விட்டுவிட்டு வேறு ஒருவருடன் சென்று விட்டார். அதில் மனம் உடைந்த அய்யனார் நேற்று இரவு வீட்டில் மனைவியின் சேலையால் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.

    இது குறித்து தகவல் அறிந்த சூரமங்கலம் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று அய்யனார் உடலை மீட்டு சேலம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    • பெரியகளம் என்ற பகுதியில் சாலையைக் கடக்க முற்படும்போது அந்த வழியாக வந்த ஒரு மோட்டார் சைக்கிள் எதிர்பாராத விதமாக பொன்னமலை மீது மோதியது.
    • இதில் படுகாயம் அடைந்த பொன்னமலையை சேலம் அரசு மருத்துவமனைக்கு கொண்டு வந்தனர்.

    சேலம்:

    சேலம் கொண்டலாம்பட்டி அருகே உள்ள நெய்க்காரப்பட்டி அடுத்த இளங்கோப்பு பகுதியைச் சேர்ந்தவர் பொன்னமலை ( வயது 80). இவர் கடந்த 4-ம் தேதி பெரியகளம் என்ற பகுதியில் சாலையைக் கடக்க முற்படும்போது அந்த வழியாக வந்த ஒரு மோட்டார் சைக்கிள் எதிர்பாராத விதமாக பொன்னமலை மீது மோதியது. இதில் படுகாயம் அடைந்த பொன்னமலையை சேலம் அரசு மருத்துவமனைக்கு கொண்டு வந்தனர். பின்னர் அங்கிருந்து சேலம் சீலநாயக்கன்பட்டி பகுதியில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனைக்கு கொண்டு போய் சேர்த்தனர்.இதுகுறித்து கொண்டலாம்பட்டி போலீசார் வழக்கு பதிவு செய்து விபத்தை ஏற்படுத்தி விட்டு தப்பி சென்ற அந்த மோட்டார் சைக்கிளை தேடி வந்தனர். இதற்கிடையே மருத்துவமனையில் சிகிச்சை முடிந்து கடந்த 13-ம் தேதி வீடு திரும்பிய பொன்னமலை இன்று காலை வீட்டில் திடீரென உடல் நலக்குறைவு ஏற்பட்டு இறந்தார்.இது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    • இலக்கியா (வயது 24). மனநலம் பாதிக்கப்பட்ட இவரை இவரது பெற்றோர் சேலம் கன்னங்குறிச்சி பகுதி யில் உள்ள ஒரு தொண்டு இல்லத்தில் சேர்த்து விட்டனர்.
    • மேலும் அவருக்கு உடல் நலக்குறைவு ஏற்பட்டுள்ளது.

    சேலம்:

    சேலம் மாவட்டம் மேட்டூர் அருகே உள்ள லக்கம்பட்டி அடுத்த நீதிபு ரம் பகுதியை சேர்ந்தவர் வடிவேல் இலக்கியா (வயது 24). மனநலம் பாதிக்கப்பட்ட இவரை இவரது பெற்றோர் சேலம் கன்னங்குறிச்சி பகுதி யில் உள்ள ஒரு தொண்டு இல்லத்தில் சேர்த்து விட்ட னர்.மேலும் அவருக்கு உடல் நலக்குறைவு ஏற்பட்டு ள்ளது. அதற்கு தகுந்த சிகிச்சை அளிக்கப்பட்டு வந்த நிலையில் நேற்று முன்தினம் இரவு சாப்பிட்டு விட்டு தூங்கிய இலக்கியா நேற்று காலை வெகு நேரம் ஆகியும் எழுந்திருக்க வில்லை, இதை அறிந்த தொண்டு இல்ல நிர்வாகிகள் உடனடியாக இலக்கியவை மீட்டு சேலம் அரசு மருத்து வமனைக்கு கொண்டு வந்தனர்.

    அங்கு பரிசோதித்த டாக்டர்கள் இலக்கியா ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர். இது குறித்து தொண்டு நிறுவன அலுவலர் மாலதி கொடுத்த புகாரின் பேரில் கன்னங்குறிச்சி போலீசார் வழக்கு பதிவு செய்து விசா ரணை நடத்தி வருகிறார்கள்.

    • லாரி டிரைவர் உள்பட இருவர் படுகாயம் அடைந்தனர். மற்ற பயணிகள் லேசான காயத்துடன் உயிர் தப்பினர்.
    • விபத்து குறித்து வாழப்பாடி போலீசார் வழக்குப்பதிவு செய்து லாரி டிரைவரிடம் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    வாழப்பாடி:

    சேலம் மாவட்டம் வாழப்பாடி அருகே நேற்று நள்ளிரவு, டயர் பஞ்சராகி சாலையோரத்தில் நின்றிருந்த தனியார் பஸ் மீது லாரி மோதிய விபத்தில் ஒருவர் பரிதாபமாக உயிரிழந்தார். லாரி டிரைவர் உள்பட இருவர் படுகாயம் அடைந்தனர். மற்ற பயணிகள் லேசான காயத்துடன் உயிர் தப்பினர்.

    சேலம் இரும்பாலை, ஜாகிரெட்டிப்பாளையம் பகுதியைச் சேர்ந்த 9 பெண்கள் உள்பட 29 பேர், தனியார் பஸ்சில் காரைக்கால் பகுதியில் உள்ள திருநள்ளாறு சனீஸ்வரன் கோவிலுக்கு சென்றனர். நேற்றிரவு அதே பஸ்ஸில் சேலத்திற்கு திரும்பினார்கள்.

    இந்த பஸ், சேலம்-சென்னை தேசிய நெடுஞ்சாலையில், வாழப்பாடி அடுத்த சேசன்சாவடி அருகே நள்ளிரவு 2.30 மணியளவில் சென்றபோது திடீரென டயர் பஞ்சர் ஆனதால், டிரைவர், வாழப்பாடி அடுத்த முத்தம்பட்டியைச் சேர்ந்த அங்கமுத்து (வயது 52) என்பவர் சாலை ஓரத்தில் பஸ்சை நிறுத்தினார்.

    அப்போது மதுராந்தகத்திலிருந்து புகளூர் நோக்கி கரும்பு சக்கை லோடு ஏற்றிச் சென்ற லாரி, பஸ்ஸின் பின்புறத்தில் வேகமாக மோதியது.

    இந்த கோர விபத்தில், சேலம் இரும்பாலையை சேர்ந்த ரத்தனம் (57), ஜாகிரெட்டிப்பட்டி முருகேசன் (54), லாரி டிரைவர் நாமக்கல் மாவட்டம் சேந்தமங்கலம் பீமநாயக்கன்பாளையத்தை சேர்ந்த கண்ணன் (36) ஆகிய 3 பேர் படுகாயம் அடைந்தனர். வலியால் அவர்கள் அலறி துடித்தனர்.

    பஸ்ஸில் பயணித்த மீதமுள்ள 27 பயணிகள் லேசான காயத்துடன் உயிர் தப்பினர்.

    இது குறித்து தகவலறிந்த வாழப்பாடி போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று, விபத்தில் சிக்கி படுகாயமடைந்தவர்களை மீட்டு, மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

    இதில் சிகிச்சை பலனின்றி, இரும்பாலையைச் சேர்ந்த ரத்தினம் பரிதாபமாக உயிரிழந்தார். கண்ணன், முருகேசன் ஆகிய இருவரும் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

    இந்த விபத்து குறித்து வாழப்பாடி போலீசார் வழக்குப்பதிவு செய்து லாரி டிரைவரிடம் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    திருநள்ளாறு கோவிலுக்கு சென்று திரும்பியவர்கள் விபத்துக்குள்ளானது சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

    ×