என் மலர்
உள்ளூர் செய்திகள்

கலெக்டர் கார்மேகம் மற்றும் உயர் அதிகாரிகளுடன் அமைச்சர் கே.என்.நேரு ஆலோசனை நடத்திய காட்சி.
சேலம் மாவட்டத்தில் நடைபெற்றுவரும் வளர்ச்சி திட்டப்பணிகள் குறித்து அதிகாரிகளுடன் அமைச்சர் கே.என்.நேரு ஆலோசனை
- வாழப்பாடியில் உள்ள ஆய்வு மாளிகைக்கு நேற்று அமைச்சர் கே.என்.நேரு வந்தார்.
- அனைத்து வளர்ச்சி திட்டப் பணிகளைதரமாகவும், குறிப்பிடப்பட்ட கால அளவில் முடித்து பொது மக்களின் பயன்பாட்டிற்கு கொண்டு வரவேண்டும் எனவும் அவர் தெரிவித்தார்.
வாழப்பாடி:
சேலம் மாவட்டம் வாழப்பாடியில் உள்ள ஆய்வு மாளிகைக்கு நேற்று அமைச்சர் கே.என்.நேரு வந்தார். அங்கு கலெக்டர் கார்மேகம் மற்றும் உயர் அதிகாரிகளுடன் அவர் ஆலோசனை நடத்தினார். அப்போது சேலம் மாவட்டத்தில் நடைபெற்று வரும் பல்வேறு வளர்ச்சி திட்டப்பணிகள் மற்றும் சேலம் ஈரடுக்கு பேருந்து நிலையம், மேம்பாலப் பணிகள், அரசு சட்டக் கல்லூரி கட்டுமானப்பணி கள் உள்ளிட்ட பணிகளை உரிய கால அளவில் முடித்திட ஆவண செய்திட அறிவுரை வழங்கினார்.
மேலும், சேலம் மாவட்டத்தில் உள்ள அனைத்து நீர் நிலைகளையும் சீரமைக்கும் பணிகள் குறித்தும், குறிப்பாக , மாவட்டத்தில் மிகப்பெரிய ஏரியான பனமரத்துப்பட்டி ஏரியை சீரமைக்கும் பணி யில் தனிகவனம் செலுத்தி டவும் மாநகராட்சி நிர்வா கத்திற்கு அறிவுறுத்தினார்.
கோடை காலம் தொடங்கிய நிலையில் மாவட்டத்தின் அனைத்து பகுதிகளிலும் சீரான குடிநீர் விநியோகம் கிடைக்க அலுவலர்கள் உரிய நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் எனவும், அரசால் செயல்படுத்தப்பட்டு வரும் அனைத்து வளர்ச்சி திட்டப் பணிகளைதரமாகவும், குறிப்பிடப்பட்ட கால அளவில் முடித்து பொது மக்களின் பயன்பாட்டிற்கு கொண்டு வரவேண்டும் எனவும் அவர் தெரிவித்தார்.
ஆய்வின்போது சேலம் மாநகராட்சி மேயர் ராமச்சந்திரன், ஆணையா ளர் கிறிஸ்துராஜ், மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சிவகுமார், மாவட்ட வரு வாய் அலுவலர் மேனகா, சேலம் வடக்கு தொகுதி எம்.எல்.ஏ. ராஜேந்திரன், கிழக்கு மாவட்ட தி.மு.க. செயலாளர் எஸ்.ஆர்.சிவலிங்கம், மேற்கு மாவட்ட தி.மு.க. செயலாளர் டி.எம்.செல்வகணபதி, சேலம் கோட்டாட்சியர் (பொ) சரவணன் , முன்னாள் மாவட்ட ஊராட்சி தலைவர் பாரப்பட்டி சுரேஷ்குமார் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.






