என் மலர்tooltip icon

    சேலம்

    • கணபதி (வயது 20). இவர் சேலத்தில் ஒரு தனியார் கம்பெனியில் வேலை செய்து வருகிறார்.
    • நேற்று மாலை பணி முடிந்து வீட்டிற்கு தனது மோட்டார் சைக்கிளில் வந்து கொண்டிருந்தார்.

    தாரமங்கலம்:

    தாரமங்கலம் அருகிலுள்ள தெசவிளக்கு கிராமம் செங்கோடனுர் பகுதியை சேர்ந்தவர் பழனி, கூலி தொழிலாளி. இவரது மகன் கணபதி (வயது 20). இவர் சேலத்தில் ஒரு தனியார் கம்பெனியில் வேலை செய்து வருகிறார்.

    நேற்று மாலை பணி முடிந்து வீட்டிற்கு தனது மோட்டார் சைக்கிளில் வந்து கொண்டிருந்தார். கே.ஆர்.தோப்பூர் பவர் கவுஸ் அருகே முன்னால் சென்று கொண்டிருந்த ஆட்டோ திடீர் என்று திரும்பியதால் ஆட்டோவில் மோதி கீழே விழுந்த கணபதி தலையில் பலத்த அடிபட்டு மயங்கி விழுந்தார்.

    உடனே அவரை அக்கம் பக்கத்தினர் மீட்டு ஆம்புலன்ஸ் மூலம் சேலம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்துள்ளனர். அங்கு அவரை பரிசோதித்த மருத்துவர் அவர் வரும் வழியிலேயே இறந்து விட்டதாக தெரிவித்தனர். இதுபற்றி கணபதியின் தந்தை பழனி கொடுத்த புகாரின் பேரில் தாரமங்கலம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

    • கோட்டை மாரியம்மன் கோவில் ஊராட்சியில் டேங்க் ஆபரேட்டராக வேலை பார்த்து வந்தார். இவருக்கு மது குடிக்கும் பழக்கம் இருந்து வந்ததாக கூறப்படுகிறது.
    • இதனால் உடல்நிலை பாதிக்கப்பட்ட அவர், ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்றார்.

    ஓமலூர்:

    ஓமலூரை அடுத்த புளியம்பட்டி காலனியை சேர்ந்தவர் பெருமாள் (வயது 49). இவருக்கு தீபா என்கிற மனைவியும், 2 மகன்களும், 4 மகள்களும் உள்ளனர். இவர் கோட்டை மாரியம்மன் கோவில் ஊராட்சியில் டேங்க் ஆபரேட்டராக வேலை பார்த்து வந்தார். இவருக்கு மது குடிக்கும் பழக்கம் இருந்து வந்ததாக கூறப்படுகிறது. இதனால் உடல்நிலை பாதிக்கப்பட்ட அவர், ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்றார். இந்தநிலையில் உடல்நிலை குணமாகாததால், அவர் விஷம் குடித்தார். அவரை உறவினர்கள் மீட்டு சிகிச்சைக்காக ஓமலூர் ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். ஆனால் சிகிச்சை பலனின்றி பெருமாள் பலியானார். இது குறித்து போலீசார் வழக்குப் பதிவு செய்து, விசாரணை நடத்தி வருகிறார்கள். 

    • போலீஸ் ஏட்டாக பணியாற்றி வருகிறார். இவர் நேற்று முன்தினம் அதிகாலை 2.30 மணி அளவில் சேலம் புதிய பஸ் நிலையம் ஆட்டோ ஸ்டாண்ட் அருகே நடந்து வந்து கொண்டிருந்தார்.
    • மோட்டார் சைக்கிளில் வந்த 3 வாலிபர்கள் இளங்கோவன் கையில் வைத்திருந்த செல்போனை பறித்துக் கொண்டு மின்னல் வேகத்தில் தப்பி மறைந்தனர்.

    சேலம்:

    சேலம் சின்ன திருப்பதி சீனிவாசா நகர் பகுதியை சேர்ந்தவர் இளங்கோவன் (வயது 54). இவர் கன்னங்குறிச்சி போலீஸ் நிலையத்தில் போலீஸ் ஏட்டாக பணியாற்றி வருகிறார். இவர் நேற்று முன்தினம் அதிகாலை 2.30 மணி அளவில் சேலம் புதிய பஸ் நிலையம் ஆட்டோ ஸ்டாண்ட் அருகே நடந்து வந்து கொண்டிருந்தார். அப்போது மோட்டார் சைக்கிளில் வந்த 3 வாலிபர்கள் இளங்கோவன் கையில் வைத்திருந்த செல்போனை பறித்துக் கொண்டு மின்னல் வேகத்தில் தப்பி மறைந்தனர்.

    இதுகுறித்து ஏட்டு இளங்கோவன் பள்ளப்பட்டி போலீஸ் நிலையத்தில் புகார் செய்தார். அதன்பேரில் குற்றப்பிரிவு இன்ஸ்பெக்டர் நெப்போலியன் வழக்கு பதிவு செய்து வழிப்பறி கொள்ளையர்களை வலைவீசி தேடி வந்தனர். போலீஸ் ஏட்டுவிடமே கைவரிசை காட்டப்பட்ட இந்த வழிபறி சம்பவம் பொதுமக்கள் மத்தியில் அதிர்ச்சியையும், பரபரப்பையும் ஏற்படுத்தி இருந்தது.

    இதனிடையே இன்ஸ்பெக்டர் நெப்போலியன் தலைமையிலான தனிப்படை போலீசார், சேலம் புதிய பஸ் நிலையத்தில் உள்ள சி.சி.டி.வி. காமிராக்களில் பதிவான காட்சிகள் ஆய்வு செய்தனர். மேலும் பல்வேறு கோணங்களில் விசாரித்து வந்தனர். இதில் வழிப்பறியில் ஈடுபட்ட கொள்ளையர்கள் யார்? என கண்டுபிடிக்கப்பட்டது. அவர்கள் கோவை மாவட்டம் போத்தனூர் பகுதியை சேர்ந்த ேகாவிந்தராஜ் மகன் தீனா (28), சேலம் சிவதாபுரம் பனங்காடு ஆண்டிப்பட்டி பகுதியை சேர்ந்த ராமலிங்கம் மகன் சந்தோஷ் (26), அதே பகுதியை சேர்ந்த ராமசாமி மகன் அஜிஸ் (26) ஆகியோர் என்பது தெரியவந்தது.

    இதையடுத்து போலீசார், அவர்களை கைது செய்து, ஏட்டுவிடம் வழிபறி செய்த செல்போனை அவர்களிடம் இருந்து பறிமுதல் செய்தனர். பின்னர் அவர்கள் 3 பேரையும் கோர்ட்டில் ஆஜர்படுத்தி சேலம் மத்திய சிறையில் அடைத்தனர். வழிபறி கொள்ளையர்களை விரைந்து கண்டுபிடித்து கைது செய்த தனிப்படை போலீசாரை சேலம் மாநகர காவல் துறை உயர் அதிகாரிகள் பாராட்டி வருகின்றனர்.

    • தாதகாப்பட்டி அம்பாள் ஏரி ரோடு பகுதியில் உள்ள நண்பர் அருண் என்பவரின் வீட்டு முன்பு செஸ் விளை யாடிக் கொண்டி ருந்தனர்.
    • சரமாரியாக கத்தியால் வெட்டியும், இரும்பு ராடால் தாக்கியும் சட்டை பையில் வைத்திருந்த ரூபாய் 5400 பறித்துக் கொண்டு தப்பி ஓடி விட்டனர்.

    சேலம்:

    சேலம் தாதகாப்பட்டி திருச்சி மெயின் ரோடு மாரியம்மன் கோவில் தெருவை சேர்ந்தவர் செல்வம். இவரது மகன் அருண்குமார் (வயது 27). இவர் தனது நண்பர் தேவராஜ் என்பவருடன் நேற்று முன்தினம் இரவு தாதகாப்பட்டி அம்பாள் ஏரி ரோடு பகுதியில் உள்ள நண்பர் அருண் என்பவரின் வீட்டு முன்பு செஸ் விளை யாடிக் கொண்டி ருந்தனர். அப்போது அங்கு வந்த 5 பேர் கொண்ட கும்பல், அவர்களை சரமாரியாக கத்தியால் வெட்டியும், இரும்பு ராடால் தாக்கியும் சட்டை பையில் வைத்திருந்த ரூபாய் 5400 பறித்துக் கொண்டு தப்பி ஓடி விட்டனர். இதனால் அந்த பகுதியில் பதட்டமும் பரபரப்பு ஏற்பட்டது. இந்த திடீர் தாக்குதலில் காயம் அடைந்த அருண்கு மார் மற்றும் தேவராஜ் ஆகிய இரு வரையும் அக்கம்பக்கத்தில் உள்ள வர்கள் மீட்டு சேலம் அரசு மருத்துவமனையில் சேர்த்தனர்.

    இதுகுறித்து புகாரின் பேரில் அன்னதானப்பட்டி போலீஸ் இன்ஸ்பெக்டர் சந்திரகலா மற்றும் போலீ சார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு தாகூர் தெருவை சேர்ந்த ஆறுமுகம் மகன் பூபதி (23), மூணாங்கரடு திருவள்ளுவர் நகரைச் சேர்ந்தவர்கள் பாலு மகன் விஜய் (22), ராஜா மகன் ஆனந்தராஜ் (23),முத்துராமன் மகன் சாரதி (21),சீனி மகன் போஸ் (22) ஆகிய 5 பேரையும் கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

    • டாஸ்மாக் கடை திறந்தால் அந்த வழியாக சென்று வர முடியாது.
    • டாஸ்மாக் கடை தொடங்க கூடாது, மாவட்ட நிர்வாகம் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தி கோஷங்கள் எழுப்பியபடி சாலையில் நிறுத்தப்பட்ட அரசு பஸ் முன்பு படுத்து மறியலில் ஈடுபட்டனர்.

    சேலம்:

    சேலம் புதிய பஸ் நிலையம் அருகே கோவிந்த கவுண்டர் தோட்டம் பகுதியில் நாளை புதிதாக டாஸ்மாக் மதுபான கடை திறக்கப்பட உள்ளது.

    இதற்கான பணிகள் அப்பகுதியில் நடைபெற்று வந்த நிலையில் அப்பகுதியை சேர்ந்த பெண்கள் உட்பட 300-க்கும் மேற்பட்ட பொதுமக்கள் கடை திறப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து இன்று மதியம் சேலம் ஓமலூர் பிரதான சாலையில் திடீரென போராட்டத்தில் ஈடுபட்டனர்.

    இதனால் அப்பகுதியில் அரசு பஸ்கள், தனியார் பஸ்கள், கார்கள், ஆட்டோக்கள், இரு சக்கர வாகனங்கள் எதுவும் செல்ல முடியவில்லை. சுமார் 2 கிலோ மீட்டர் வரை வாகனங்கள் அணிவகுத்து நின்றதால் 1 மணி நேரத்திற்கும் மேலாக போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது.

    இது பற்றி தகவல் கிடைத்ததும் போலீசார், சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து மறியலில் ஈடுபட்ட பொதுமக்களிடம் சமாதான பேச்சுவார்த்தை நடத்தினர். ஆனால் போலீசாரின் இந்த பேச்சுவார்த்தைக்கு உடன்படாத மக்கள், கோவிந்தகவுண்டர் தோட்டம் பகுதியில் புதிய டாஸ்மாக் கடை தொடங்க கூடாது, மாவட்ட நிர்வாகம் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தி கோஷங்கள் எழுப்பியபடி சாலையில் நிறுத்தப்பட்ட அரசு பஸ் முன்பு படுத்து மறியலில் ஈடுபட்டனர். அப்போது அந்த வழியாக வந்த ஆம்புலன்ஸ் செல்ல முடியாமல் நின்று கொண்டிருந்ததது. இதனால் அங்கு, பதட்டமும், பரபரப்பும் நிலவியது. இதனை தொடர்ந்து மறியலில் ஈடுபட்ட நூற்றுக்கும் மேற்பட்டோரை போலீசார், கைது செய்தனர்.

    இது குறித்து அப்பகுதி மக்கள் கூறும்போது:- கோவிந்த கவுண்டர் தோட்டம் பகுதியில் சந்து கடைகள் 24 மணி நேரமும் செயல்பட்டு வருகிறது. தற்போது டாஸ்மாக் கடை திறந்தால் அந்த வழியாக சென்று வர முடியாது. குடித்து விட்டு ரோட்டில் தூங்குவார்கள். இதனால் பெண்கள், மாணவ- மாணவிகள் பாதிக்கப்படுவார்கள்.

    இவ்வாறு அவர்கள் கூறினர்.

    • ஓமலூர் பேரூராட்சியில் பஸ் நிலைய பகுதியில் 100-க்கும் மேற்பட்ட கடைகள் உள்ளன.
    • விவ சாயிகள் தாங்கள் விளைய வைக்கும் காய்கறிகள் கீரை கள் உள்ளிட்டவைகளை கொண்டு வந்து பேருந்து நிலைய மார்க்கெட்டில் விற்பனை செய்கின்றனர்.

    ஓமலூர்:

    சேலம் மாவட்டம் ஓமலூர் பேரூராட்சியில் பஸ் நிலைய பகுதியில் 100-க்கும் மேற்பட்ட கடைகள் உள்ளன. மேலும் இரவு 1 மணி முதல் காலை 10 மணி வரை ஓமலூர் சுற்றுவட்டார பகுதியைச் சேர்ந்த நூற்றுக்கும் மேற்பட்ட விவ சாயிகள் தாங்கள் விளைய வைக்கும் காய்கறிகள் கீரை கள் உள்ளிட்டவைகளை கொண்டு வந்து பேருந்து நிலைய மார்க்கெட்டில் விற்பனை செய்கின்றனர்.

    இந்த நிலையில் இங்கு சிறுகடைகள் மற்றும் வியாபாரிகளிடம் வசூலிக்க பேரூராட்சி நிர்வாகம் சார்பில் டெண்டர் விடப்பட்டு உள்ளது. இந்த நிலையில் பேருந்து நிலையப் பகுதிகளில் ஒரு கடைகளுக்கு 50 முதல் 200 ரூபாய் வரை கடைகளை பொருத்தவாறு வசூலிக்க பேரூராட்சி நிர்வாகம் அனுமதி வழங்கி உள்ளது.

    தற்போது ஏலம் எடுத்த ஏலதாரர்கள் பல மடங்கு உயர்த்தி ஒரு கடைகளுக்கு 500 ரூபாய் வரை வசூல் செய்வதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. இதுகுறித்து பேரூராட்சி கவுன்சிலர் லோகேஸ்வரி மற்றும் தி.மு.க. பேரூர் துணைச் செயலாளர் செல்லதுரை ஆகியோர் பேரூராட்சி செயல் அலுவலருக்கு கடிதம் மூலம் ஏலதாரர்கள் அதிக வசூல் செய்வதை கட்டுப்படுத்த வேண்டும் என மனு அளித்துள்ளனர்.

    இந்த மனுவில் தற்போது ஏலதாரர்கள் சிறு கடைகள் மற்றும் வியாபாரிகளிடம் அடாவடியாக வசூல் செய்வ தாகவும், இதனால் பொது மக்கள் மற்றும் விவசாயிகள் பாதிக்கப்பட்டு வருவதால் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுள்ளனர்.

    • செல்வம் (வயது 38). இவர் வைகுந்தம் காளிப்பட்டி பிரிவு ரோட்டில் பர்னிச்சர் கடை நடத்தி வருகிறார்.
    • மறுநாள் காலை கடைக்கு சென்றபோது பூட்டு உடைக்கப்பட்டு இருந்ததை கண்டு திடுக்கிட்டார்.

    சங்ககிரி:

    சேலம் மாவட்டம் சங்க கிரி பண்ணை கிணத்தூர் பகுதியைச் சேர்ந்தவர் இலக்கிய செல்வம் (வயது 38). இவர் வைகுந்தம் காளிப்பட்டி பிரிவு ரோட்டில் பர்னிச்சர் கடை நடத்தி வருகிறார்.

    கடந்த 21-ந் தேதி இரவு வழக்கம்போல் கடையை பூட்டி விட்டு சென்றார். மறுநாள் காலை கடைக்கு சென்றபோது பூட்டு உடைக்கப்பட்டு இருந்ததை கண்டு திடுக்கிட்டார். உள்ளே சென்று பார்த்த போது கல்லாவில் வைத்திருந்த ரூ. 11 ஆயிரம் பணத்தை காணவில்லை.

    நள்ளிரவு நேரத்தில் அங்கு வந்த மர்ம நபர் பூட்டை உடைத்து உள்ளே புகுந்து பணத்தை திருடி சென்றிருப்பது தெரிய வந்தது. இதேபோல், அருகில் உள்ள மற்றொரு கடையில் ரூ. 3,100 மற்றும் பக்கத்தில் உள்ள பேன்சி கடையில் ரூ. 5,200 பணத்தையும் திருடிச் சென்றார்.

    இது குறித்த புகாரின் பேரில், சங்ககிரி போலீசார் வழக்கு பதிந்து அப்பகுதியில் அமைக்கப்பட்டுள்ள கண்காணிப்பு கேமராவில் பதிவாகியுள்ள காட்சிகளை வைத்து விசாரித்து வந்தனர். அதனையடுத்து, சேலம் எஸ்.பி. சிவக்குமார் உத்தரவின் பேரில், சங்ககிரி டி.எஸ்.பி. ஆரோக்கியராஜ் மேற்பார்வையில், இன்ஸ்பெக்டர் தேவி, எஸ்.ஐ.க்கள் சுதாகரன், ஸ்ரீராமன், அருண் ஆகியோர் கொண்ட தனிப்படை அமைக்கப்பட்டது.

    தனிப்படை போலீசார் நேற்று சங்ககிரி பள்ளிபா ளையம் பிரிவு தீரன் சின்ன மலை நினைவிடம் அருகே வாகனத் தணிக்கை செய்து கொண்டிருந்தனர். அப்போது அங்கு ஈரோட்டில் இருந்து பஸ்சில் வந்த வாலிபர் ஒருவர் போலீ சாரை பார்த்ததும் பஸ்சில் இருந்து இறங்கி ஓடினார்.

    இதனால் சந்தேகம் அடைந்த போலீசார், அந்த வாலிபரை விரட்டிச் சென்று அவரை சுற்றி வளைத்து பிடித்து விசாரித்தனர். அப்போது அந்த நபர் முன்னுக்கு பின் முரணாக பதில் கூறினார். போலீசார் கிடுக்குப்பிடி விசாரணை நடத்தியதில், அவர் நாமக்கல் மாவட்டம் குமாரபாளையம், காமராஜ் நகரைச் சேர்ந்த சீனி என்ற சீனிவாசன் (32) என்பது தெரிந்தது.

    மேலும், அவர் கையில் வைத்திருந்த சிவப்பு நிற பையை பார்த்தபோது அதில் இரும்பு ராடு, டார்ச் லைட், திருப்புளி ஆகியவை இருந்தன. அதை கைப்பற்றி போலீசார் விசாரித்ததில், சீனிவாசன் கடந்த 21-ந்தேதி, காளிப்பட்டி பிரிவு ரோடு அருகே இரவில் கடைகளை உடைத்து பணத்தை கொள்ளை யடித்தது தெரியவந்தது.

    இதைடுத்து சீனிவாசனை போலீசார் கைது செய்தனர். சீனிவாசன் மீது ஈரோடு, தர்மபுரி உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் பல்வேறு குற்ற வழக்குகள் உள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.

    • கொளத்தூர் அடுத்த காரைக்காடு பகுதியில் நேற்று தமிழக வாழ்வுரிமை கட்சி சார்பில் பொதுக் கூட்டம் நடை பெற்றது.
    • கூட்டத்தில் மாநில நிர்வாகி முத்துலட்சுமி மற்றும் சிலர், பா.ம.க நிர்வா கிகள் குறித்து பேசியதற்கு அந்த பகுதியை சேர்ந்த பா.ம.க. தொண்டர் ஒருவர் எதிர்ப்பு தெரிவித்தார்.

    மேட்டூர்:

    சேலம் மாவட்டம் கொளத்தூர் அடுத்த காரைக்காடு பகுதியில் நேற்று தமிழக வாழ்வுரிமை கட்சி சார்பில் பொதுக் கூட்டம் நடை பெற்றது. கூட்டத்தில் கட்சியின் மாநில நிறுவன தலைவர் வேல்முரு கன் பங்கேற்றார்.

    இந்த கூட்டத்தில் மாநில நிர்வாகி முத்துலட்சுமி மற்றும் சிலர், பா.ம.க நிர்வா கிகள் குறித்து பேசியதற்கு அந்த பகுதியை சேர்ந்த பா.ம.க. தொண்டர் ஒருவர் எதிர்ப்பு தெரிவித்தார்.

    இதனை கண்ட தமிழக வாழ்வுரிமை கட்சி தொண்டர்கள் அவரை சூழ்ந்து வாக்குவாதம் செய்த னர். இதனால் பதட்டமான சூழ்நிலை ஏற்பட்டது. அப்பொழுது பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த போலீசார் அந்த பா.ம.க. தொண்டரை அந்த பகுதியில் இருந்து அப்புறப்படுத்தினார்கள்.

    இதனை தொடர்ந்து கூட்டம் முடிந்த பிறகு தமிழக வாழ்வுரிமை கட்சி நிறுவன தலைவர் வேல்முருகனை மாற்று பாதையில் போலீசார் பாதுகாப்பாக அழைத்துச் சென்றனர்.

    இதனிடையே தமிழக வாழ்வுரிமை கட்சி மாநில நிர்வாகிகள் பேசிய பேச்சுக்கு கண்டனம் தெரிவித்து மேச்சேரி பஸ் நிலையத்தில் பா.ம.க. வினர் திரண்டு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். ஆர்ப்பாட்டத்தில் நகர செயலாளர் கோபால், ஒன்றிய செயலாளர் அக்னி சுதாகரன், வக்கீல் துரை ராஜ், உதயகுமார், மாதப்பன், ஒன்றிய தலை வர்கள் பகத்சிங், மணி, பழனிச்சாமி, ராமகிருஷ் ணன், மாவட்ட பொறுப்பா ளர்கள் செந்தில், கோபால் உட்பட ஏராளமான பா.ம.க. நிர்வாகிகளும், தொண்டர்க ளும் கலந்துகொண்டனர்.

    • வாழப்பாடியை அடுத்த காட்டுவேப்பிலைப்பட்டி ஊராட்சி காளியம்மன் புதூர் ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளி ஆண்டு விழா நடைபெற்றது.
    • பல்வேறு கலைத்திறன், விளையாட்டு போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவ–-மாணவியர் மற்றும் சிறந்த பெற்றோர்க ளுக்கும் பரிசு வழங்கப்பட்டது.

    வாழப்பாடி:

    சேலம் மாவட்டம் வாழப்பாடியை அடுத்த காட்டுவேப்பிலைப்பட்டி ஊராட்சி காளியம்மன் புதூர் ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளி ஆண்டு விழா நடைபெற்றது.

    இந்த பள்ளியில் கடந்த 2019–-ம் ஆண்டில், வெறும் 3 மாணவர்கள் மட்டுமே படித்ததால், பள்ளி மூடப்படும் நிலையில் இருந்தது. இதற்கு பிறகு இப்பள்ளிக்கு நிய மிக்கப்பட்ட தலைமை ஆசிரியர் ஸ்ரீதர், ஆசிரியர் புவனேஸ்வரி ஆகியோரது முயற்சியால், படிப்படியாக மாணவர்களின் எண்ணிக்கை 50 ஆக உயர்ந்தது. விழாவுக்கு தலைமை ஆசிரியர் ஸ்ரீதர் வரவேற்றார். ஊராட்சி மன்றத் தலைவர் சிவராஜ் தலைமை வகித்தார். துணைத் தலை வர் சரவணன், ஒன்றிய குழு உறுப்பினர் ராஜி மற்றும் சமூக ஆர்வலர்கள் கவி ஞர்மன்னன், பழனிசாமி, அப்பாத்துரை, மகாலிங்கம், அசோக்குமார் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

    பல்வேறு கலைத்திறன், விளையாட்டு போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவ–-மாணவியர் மற்றும் சிறந்த பெற்றோர்க ளுக்கும் பரிசு வழங்கப்பட்டது. மாணவ–-மாணவிய கலை நிகழ்ச்சிகளும் நடந்தன. பள்ளியின் மேம்பாட்டிற்கு உதவிய முத்தம்பட்டி தனியார் பால் பண்ணை இயக்குநர் கோபால்சுவாமி மற்றும் தன்னார்வ லர்க ளுக்கு, பள்ளியின் சார்பில் பாராட்டு தெரி விக்கப்பட்டது. முடிவில் ஆசிரியை புவனேஸ்வரி நன்றி கூறினார்.

    • வாழப்பாடி பேரூராட்சி, 200-க்கும் மேற்பட்ட கிராமங்களுக்கு முக்கிய மையமாக விளங்கி வருகிறது.
    • அனைத்து ரக காய்கறிகள், வாழைத்தார்கள், பல்வேறு வகையான பூக்கள் ஆகியவற்றை நேரடியாக கொள்முதல் செய்வதற்கு வசதியாக, வாழப்பாடியில் உழவர்சந்தை அமைக்க வேண்டும்.

    வாழப்பாடி:

    சேலம் மாவட்டத்தில் வாழப்பாடி பேரூராட்சி, 200-க்கும் மேற்பட்ட கிராமங்களுக்கு முக்கிய மையமாக விளங்கி வருகிறது. சுற்றுப்புற கிராம மக்கள் விவசாய விளை பொருட்களை விற்பனை செய்யவும், அத்தியாவசிய பொருட்களை வாங்கிச்செல்லவும் வாழப்பாடிக்கு வந்து செல்கின்றனர்.

    வாழப்பாடி பகுதி கிராமங்களில் விளைவிக்கப்படும் தக்காளி, தேங்காய் உள்ளிட்ட அனைத்து ரக காய்கறிகள், வாழைத்தார்கள், பல்வேறு வகையான பூக்கள் ஆகியவற்றை நேரடியாக கொள்முதல் செய்வதற்கு வசதியாக, வாழப்பாடியில் உழவர்சந்தை அமைக்க வேண்டும் என வாழப்பாடி மற்றும் சுற்றுப்புற கிராமங்களைச் சேர்ந்த விவசாயிகளும், நுகர்வோர்களும் தமிழக அரசுக்கு கோரிக்கை விடுத்தனர்.

    இதனையடுத்து தமிழ்நாடு அரசு வேளாண் விற்பனை மற்றும் வணி கத்துறை வாழப்பாடியில் உழவர் சந்தை அமைக்க திட்டமிட்டுள்ளது. விவசாயிகள் மற்றும் நுகர்வோர்களும் வந்து செல்வதற்கு ஏற்ப பொருத்தமான இடத்தை தேர்வு செய்து உழவர் சந்தை அமைக்கும் பணியில் அதிகாரிகள் முழுவீச்சில் ஈடுபட்டுள்ளனர். வாழப்பாடி கடலுார் சாலையில் தனியார் பள்ளிக்கு அருகிலுள்ள அரசு புறம்போக்கு நிலத்தில் உழவர் சந்தை அமைக்க திட்ட முன்வரைவு தயாரிக்கப்பட்டு உள்ளது. இந்த இடத்தை கலெக்டர் கார்மேகம் ஆய்வு செய்தார்.

    வாழப்பாடி பகுதியில் அதிகம் விளைக்கூடிய தக்காளி, வாழை, தேங்காய் மற்றும் கருமந்துறையில் விவசாயிகளால் விளைவிக்கப்படும் முட்டைகோஸ், கேரட், பீட்ரூட், காலிபிளவர் உள்ளிட்ட காய்கறிகள் உள்ளிட்ட வேளாண் விளை பொருட்களை வாழப்பாடியில் அமைய உள்ள உழவர் சந்தையில் விவசாயிகள் விற்பனை செய்யலாம். இதனால் தனியார் மொத்த காய்கறி சந்தை விலையை விட, உழவர் சந்தையில் விவசாயிகளுக்கு 20 சதவீதம் அதிக விலையும், நுகர்வோர்களுக்கு தனியார் காய்கறிக்கடைகளை விட 15 சதவீதம் விலை குறைவாகவும் கிடைக்கும்.

    உழவர் சந்தைகளில் விவசாயிகள் தங்களது விளைப்பொருட்களை விற்பனை செய்வதற்கு , விளை நிலத்தின் கணினி பட்டா, சிட்டா, அடங்கல், வரைபடம், மார்பளவு புகைப்படம், குடும்ப அட்டை, ஆதார் அட்டை ஆகிய ஆவணங்களை உரிய விண்ணப்பத்துடன் இணைத்து சேலம் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் 4-ம் தளம் அறை எண் 404–-ல் செயல்படும் வேளாண் வணிகத்துறை துணை இயக்குநர் அலுவலகத்தில் வழங்கி அடையாள அட்டை யினை பெறலாம் என கலெக்டர் கார்மேகம் தெரிவித்தார்.

    இந்த ஆய்வின்போது மாவட்ட வருவாய் அலுவலர் மேனகா, கோட்டாட்சியர் (பொ) சரவணன், வட்டாட்சியர் கோபாலகிருஷ்ணன், வேளாண்மை அட்மா குழு தலைவர் சக்கரவர்த்தி, வருவாய் ஆய்வாளர் கார்த்திக், வி.ஏ.ஓ. பெரிய சாமி மற்றும் வேளாண் வணிகத்துறை அதிகாரிகள், சமூக ஆர்வலர்கள் உடனிருந்தனர்.

    • கோவிந்தன் (வயது 40),விவசாயி. இவர் பொன்னன் என்பவரது வயலில் வேலை செய்து வந்தார்.
    • டிராக்டர் மேடான பகுதியில் வந்து கொண்டிருந்த போது திடீரென கட்டுப்பட்டை இழந்து ஓடி கவிழ்ந்தது.

    ஏற்காடு:

    சேலம் மாவட்டம் ஏற்காடு அருகே உள்ளது பெலாக்காடு. இந்த ஊரைச் சேர்ந்தவர் கோவிந்தன் (வயது 40),விவசாயி. இவர் பொன்னன் என்பவரது வயலில் வேலை செய்து வந்தார். நேற்று கோவிந்தன் வயலில் இருந்து டிராக்டரை ஓட்டிக்கொண்டு பெலாக் காட்டிற்கு வந்து கொண்டி ருந்தார்.டிராக்டரில் பெலாக் காட்டைச் சேர்ந்த தொழிலா ளிகள் பழனிசாமி, இன்னொரு பழனிசாமி ஆகியோர் அமர்ந்து பயணம் செய்து கொண்டிருந்தனர். டிராக்டர் மேடான பகுதியில் வந்து கொண்டிருந்த போது திடீரென கட்டுப்பட்டை இழந்து ஓடி கவிழ்ந்தது.

    இதில் கோவிந்தன் டிராக்டரின் சக்கரத்தில் சிக்கிக்கொண்டார். பலத்த காயம் அடைந்த கோவிந்தன் சம்பவ இடத்திலேயே உடல் நசுங்கி பலியானார்.டிராக்ட ரில் இருந்த கூலி தொழிலா ளர்கள் பழனிசாமி உள்ளிட்ட 2 பேரும் லேசான காயங்களுடன் உயிர்தப்பி னர். இதுபற்றி ஏற்காடு போலீஸ் நிலையத்துக்கு தகவல் கொடுக்கப்பட்டது.

    சேலம் ரூரல் டி.எஸ்.பி. தையல்நாயகி மற்றும் ஏற்காடு இன்ஸ்பெக்டர் செந்தில்ராஜ் மோகன் மற்றும் போலீசார் விரைந்து வந்து பலியான விவசாயி கோவிந்தனின் உடலை மீட்டு பிரேத பரிசோ தனைக்காக அரசு மருத்துவ மனைக்கு அனுப்பி வைத்த னர். இதுபற்றி போலீசார் தொடர்ந்து விசாரித்து வருகிறார்கள். 

    • அரு நுாற்றுமலை வனப்பகுதியில் புள்ளிமான்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது.
    • அருநுாற்றுமலை வனப்பகுதியில் இருந்து வெளியேறி வழிதவறி சென்று, ஆலடிப்பட்டி ஊராட்சி கோயில்காடு கிராமத்திற்குள் புகுந்த புள்ளிமானை சிலர் வேட்டையாடினர்.

    வாழப்பாடி:

    சேலம் மாவட்டம் வாழப்பாடி வனச்சர கத்திற்கு உட்பட்ட அரு நுாற்றுமலை வனப்பகுதியில் புள்ளிமான்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. இந்நிலையில், கோடைக்காலம் தொடங்கியதால், தண்ணீர் தேடி வரும் புள்ளிமான்கள், வழிதவறி வனத்தை ஒட்டியுள்ள கிராமங்களில் புகுந்து வருகின்றன.

    இந்த நிலையில் சம்ப வத்தன்று அருநுாற்றுமலை வனப்பகுதியில் இருந்து வெளியேறி வழிதவறி சென்று, ஆலடிப்பட்டி ஊராட்சி கோயில்காடு கிராமத்திற்குள் புகுந்த புள்ளிமானை சிலர் வேட்டையாடினர். பின்பு அதன் கறியை சமைத்து சாப்பிட்டுஉள்ளனர். இது பற்றி வனத்துறை யினருக்கு ரகசிய தகவல் கிடைத்தது.

    இதனையடுத்து, சேலம் மாவட்ட வன அலுவலர் கஷ்யப் சஷாங் ரவி உத்தர வின் பேரில், வாழப்பாடி வனச்சரகர் துரைமுருகன் தலைமையிலான வனத்து றையினர் தீவிர விசாரணை நடத்தி அருநுாற்றுமலை பகுதியை சேர்ந்த அருள்கு மார் (வயது 26), ராஜா (25), தேவராஜ் (45), சங்கர் (47), மணி (36), ராஜதுரை (21). ஆகிய 6 பேரை கைது செய்தனர்.

    கைது செய்யப்பட்ட 6 பேருக்கும், தலா ரூ. 25 ஆயிரம் வீதம் மொத்தம் ரூ. 1.50 லட்சம் அபராதம் வசூ லித்தனர். இந்த குற்றத்தில் ஈடுபட்ட 6 பேரையும் கடுமையாக எச்சரித்து, வனவிலங்குகளின் பாதுகாப்பு குறித்து உரிய விழிப்புணர்வு வழங்கி அனுப்பி வைத்தனர்.

    இது தொடர்பாக வனத்து றையினர் கூறியதாவது:-

    கோடை காலம் தொடங்கி யுள்ளதால், இரை மற்றும் தண்ணீர் தேடி வனத்தை விட்டு வெளியேறும் புள்ளி மான், கேளையாடு, காட்டெருமை, கடமை உள்ளிட்ட விலங்குகள், வனத்தையொட்டியுள்ள கிராமங்களுக்கு புகும் வாய்ப்புள்ளது. வனவிலங்கு களை துன்புறுத்துவதோ, வேட்டையாடுவதோ தண்ட னைக்குரிய குற்றமாகும்.

    எனவே, வனவிலங்குகள் நடமாட்டத்தை கண்டால், உடனடியாக அருகிலுள்ள வனத்துறை அலுவல கத்திற்கோ, வனத்துறை அலுவலர்கள், பணியா ளர்கள் அல்லது வனக்குழு வினருக்கு தகவல் தெரி வித்து, வனவிலங்குகளை பாதுகாக்க பொதுமக்கள் ஒத்துழைப்பு கொடுக்க வேண்டும். வனவிலங்கு களை வேட்டையாடினால், வனத்துறை சட்டப்படி கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும்.

    இவ்வாறு அவர்கள் கூறினர்.

    ×