என் மலர்
உள்ளூர் செய்திகள்

வனத்துறையினரால் கைது செய்யப்பட்ட 6 பேரையும் படத்தில் காணலாம்.
அருநூற்றுமலை வனப்பகுதியில் புள்ளிமானை வேட்டையாடிய 6 பேருக்கு ரூ.2.50 லட்சம் அபராதம்
- அரு நுாற்றுமலை வனப்பகுதியில் புள்ளிமான்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது.
- அருநுாற்றுமலை வனப்பகுதியில் இருந்து வெளியேறி வழிதவறி சென்று, ஆலடிப்பட்டி ஊராட்சி கோயில்காடு கிராமத்திற்குள் புகுந்த புள்ளிமானை சிலர் வேட்டையாடினர்.
வாழப்பாடி:
சேலம் மாவட்டம் வாழப்பாடி வனச்சர கத்திற்கு உட்பட்ட அரு நுாற்றுமலை வனப்பகுதியில் புள்ளிமான்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. இந்நிலையில், கோடைக்காலம் தொடங்கியதால், தண்ணீர் தேடி வரும் புள்ளிமான்கள், வழிதவறி வனத்தை ஒட்டியுள்ள கிராமங்களில் புகுந்து வருகின்றன.
இந்த நிலையில் சம்ப வத்தன்று அருநுாற்றுமலை வனப்பகுதியில் இருந்து வெளியேறி வழிதவறி சென்று, ஆலடிப்பட்டி ஊராட்சி கோயில்காடு கிராமத்திற்குள் புகுந்த புள்ளிமானை சிலர் வேட்டையாடினர். பின்பு அதன் கறியை சமைத்து சாப்பிட்டுஉள்ளனர். இது பற்றி வனத்துறை யினருக்கு ரகசிய தகவல் கிடைத்தது.
இதனையடுத்து, சேலம் மாவட்ட வன அலுவலர் கஷ்யப் சஷாங் ரவி உத்தர வின் பேரில், வாழப்பாடி வனச்சரகர் துரைமுருகன் தலைமையிலான வனத்து றையினர் தீவிர விசாரணை நடத்தி அருநுாற்றுமலை பகுதியை சேர்ந்த அருள்கு மார் (வயது 26), ராஜா (25), தேவராஜ் (45), சங்கர் (47), மணி (36), ராஜதுரை (21). ஆகிய 6 பேரை கைது செய்தனர்.
கைது செய்யப்பட்ட 6 பேருக்கும், தலா ரூ. 25 ஆயிரம் வீதம் மொத்தம் ரூ. 1.50 லட்சம் அபராதம் வசூ லித்தனர். இந்த குற்றத்தில் ஈடுபட்ட 6 பேரையும் கடுமையாக எச்சரித்து, வனவிலங்குகளின் பாதுகாப்பு குறித்து உரிய விழிப்புணர்வு வழங்கி அனுப்பி வைத்தனர்.
இது தொடர்பாக வனத்து றையினர் கூறியதாவது:-
கோடை காலம் தொடங்கி யுள்ளதால், இரை மற்றும் தண்ணீர் தேடி வனத்தை விட்டு வெளியேறும் புள்ளி மான், கேளையாடு, காட்டெருமை, கடமை உள்ளிட்ட விலங்குகள், வனத்தையொட்டியுள்ள கிராமங்களுக்கு புகும் வாய்ப்புள்ளது. வனவிலங்கு களை துன்புறுத்துவதோ, வேட்டையாடுவதோ தண்ட னைக்குரிய குற்றமாகும்.
எனவே, வனவிலங்குகள் நடமாட்டத்தை கண்டால், உடனடியாக அருகிலுள்ள வனத்துறை அலுவல கத்திற்கோ, வனத்துறை அலுவலர்கள், பணியா ளர்கள் அல்லது வனக்குழு வினருக்கு தகவல் தெரி வித்து, வனவிலங்குகளை பாதுகாக்க பொதுமக்கள் ஒத்துழைப்பு கொடுக்க வேண்டும். வனவிலங்கு களை வேட்டையாடினால், வனத்துறை சட்டப்படி கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும்.
இவ்வாறு அவர்கள் கூறினர்.






