என் மலர்
உள்ளூர் செய்திகள்

ஓமலூர் பஸ் நிலைய கடைகளில் பல மடங்கு கட்டணம் வசூல்
- ஓமலூர் பேரூராட்சியில் பஸ் நிலைய பகுதியில் 100-க்கும் மேற்பட்ட கடைகள் உள்ளன.
- விவ சாயிகள் தாங்கள் விளைய வைக்கும் காய்கறிகள் கீரை கள் உள்ளிட்டவைகளை கொண்டு வந்து பேருந்து நிலைய மார்க்கெட்டில் விற்பனை செய்கின்றனர்.
ஓமலூர்:
சேலம் மாவட்டம் ஓமலூர் பேரூராட்சியில் பஸ் நிலைய பகுதியில் 100-க்கும் மேற்பட்ட கடைகள் உள்ளன. மேலும் இரவு 1 மணி முதல் காலை 10 மணி வரை ஓமலூர் சுற்றுவட்டார பகுதியைச் சேர்ந்த நூற்றுக்கும் மேற்பட்ட விவ சாயிகள் தாங்கள் விளைய வைக்கும் காய்கறிகள் கீரை கள் உள்ளிட்டவைகளை கொண்டு வந்து பேருந்து நிலைய மார்க்கெட்டில் விற்பனை செய்கின்றனர்.
இந்த நிலையில் இங்கு சிறுகடைகள் மற்றும் வியாபாரிகளிடம் வசூலிக்க பேரூராட்சி நிர்வாகம் சார்பில் டெண்டர் விடப்பட்டு உள்ளது. இந்த நிலையில் பேருந்து நிலையப் பகுதிகளில் ஒரு கடைகளுக்கு 50 முதல் 200 ரூபாய் வரை கடைகளை பொருத்தவாறு வசூலிக்க பேரூராட்சி நிர்வாகம் அனுமதி வழங்கி உள்ளது.
தற்போது ஏலம் எடுத்த ஏலதாரர்கள் பல மடங்கு உயர்த்தி ஒரு கடைகளுக்கு 500 ரூபாய் வரை வசூல் செய்வதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. இதுகுறித்து பேரூராட்சி கவுன்சிலர் லோகேஸ்வரி மற்றும் தி.மு.க. பேரூர் துணைச் செயலாளர் செல்லதுரை ஆகியோர் பேரூராட்சி செயல் அலுவலருக்கு கடிதம் மூலம் ஏலதாரர்கள் அதிக வசூல் செய்வதை கட்டுப்படுத்த வேண்டும் என மனு அளித்துள்ளனர்.
இந்த மனுவில் தற்போது ஏலதாரர்கள் சிறு கடைகள் மற்றும் வியாபாரிகளிடம் அடாவடியாக வசூல் செய்வ தாகவும், இதனால் பொது மக்கள் மற்றும் விவசாயிகள் பாதிக்கப்பட்டு வருவதால் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுள்ளனர்.






