என் மலர்
உள்ளூர் செய்திகள்

பூபதி, ஆனந்தராஜ், விஜய், சாரதி, ேபாஸ்
செஸ் விளையாடியவர்களை அரிவாளால் வெட்டி பணம் பறித்த 5 பேர் கைது
- தாதகாப்பட்டி அம்பாள் ஏரி ரோடு பகுதியில் உள்ள நண்பர் அருண் என்பவரின் வீட்டு முன்பு செஸ் விளை யாடிக் கொண்டி ருந்தனர்.
- சரமாரியாக கத்தியால் வெட்டியும், இரும்பு ராடால் தாக்கியும் சட்டை பையில் வைத்திருந்த ரூபாய் 5400 பறித்துக் கொண்டு தப்பி ஓடி விட்டனர்.
சேலம்:
சேலம் தாதகாப்பட்டி திருச்சி மெயின் ரோடு மாரியம்மன் கோவில் தெருவை சேர்ந்தவர் செல்வம். இவரது மகன் அருண்குமார் (வயது 27). இவர் தனது நண்பர் தேவராஜ் என்பவருடன் நேற்று முன்தினம் இரவு தாதகாப்பட்டி அம்பாள் ஏரி ரோடு பகுதியில் உள்ள நண்பர் அருண் என்பவரின் வீட்டு முன்பு செஸ் விளை யாடிக் கொண்டி ருந்தனர். அப்போது அங்கு வந்த 5 பேர் கொண்ட கும்பல், அவர்களை சரமாரியாக கத்தியால் வெட்டியும், இரும்பு ராடால் தாக்கியும் சட்டை பையில் வைத்திருந்த ரூபாய் 5400 பறித்துக் கொண்டு தப்பி ஓடி விட்டனர். இதனால் அந்த பகுதியில் பதட்டமும் பரபரப்பு ஏற்பட்டது. இந்த திடீர் தாக்குதலில் காயம் அடைந்த அருண்கு மார் மற்றும் தேவராஜ் ஆகிய இரு வரையும் அக்கம்பக்கத்தில் உள்ள வர்கள் மீட்டு சேலம் அரசு மருத்துவமனையில் சேர்த்தனர்.
இதுகுறித்து புகாரின் பேரில் அன்னதானப்பட்டி போலீஸ் இன்ஸ்பெக்டர் சந்திரகலா மற்றும் போலீ சார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு தாகூர் தெருவை சேர்ந்த ஆறுமுகம் மகன் பூபதி (23), மூணாங்கரடு திருவள்ளுவர் நகரைச் சேர்ந்தவர்கள் பாலு மகன் விஜய் (22), ராஜா மகன் ஆனந்தராஜ் (23),முத்துராமன் மகன் சாரதி (21),சீனி மகன் போஸ் (22) ஆகிய 5 பேரையும் கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.






