என் மலர்
சேலம்
- சேலம் -சென்னை நான்கு வழிப் பாதையில் 4 -ம் நம்பர் அரசு டவுன் பஸ் சுமார் 50-க்கும் மேற்பட்ட பயணிகளை ஏற்றிக்கொண்டு சென்று கொண்டிருந்தது.
- அரசு பேருந்தின் டயர் மிகவும் மோசமாக இருந்ததால் டயர் வெடித்தது.
ஆத்தூர்:
சேலம் மாவட்டம் ஆத்தூர் அருகே உள்ள தலைவாசல் பகுதிக்கு ஆத்தூரிலிருந்து தலைவாசலுக்கு சேலம் -சென்னை நான்கு வழிப் பாதையில் 4 -ம் நம்பர் அரசு டவுன் பஸ் சுமார் 50-க்கும் மேற்பட்ட பயணிகளை ஏற்றிக்கொண்டு சென்று கொண்டிருந்தது.
அப்பொழுது மணி விழுந்தான் என்னும் இடத்தில் அரசு பேருந்தின் டயர் மிகவும் மோசமாக இருந்ததால் டயர் வெடித்தது. இதில் அதிர்ஷ்டவசமாக விபத்துக்கள் எதுவும் இல்லாமல் சாலையின் ஓரமாக பேருந்து நிறுத்தப்பட்டது. அதன் பின்னர் பேருந்தில் பயணிகள் அனைவரும் கீழே இ அந்த பேருந்தில் டயர் மாற்றுவதற்கான ஸ்டெப்னி டயர் இல்லாததால் மாற்று பேருந்து 31 -ம் நம்பர் பேருந்து வரவழைக்கப்பட்டு அதிலிருந்து ஸ்டெப்னி டயரை பயன்படுத்தினார்கள். பின்னர் பயணிகள் அனைவரும் மாற்று பேருந்தின் ஏற்றி தலைவாசலுக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். அரசு பேருந்தில் ஸ்டெபி டயர் இல்லாததால் சுமார் ஒரு மணி நேரமாக சாலையிலேயே பயணிகள் அனைவரும் நிறுத்தி வைக்கப்பட்டனர்.
- தக்காளி, கேரட், கத்தரி, வெண்டைக்காய், முள்ளங்கி என 160 டன் காய்கறிகள் விற்பனையானது.
- புளி கொட்டையுடன் உள்ள கூடை 6 கிலோ முதல் 7 கிலோ வரை ரூ.450 முதல் ரூ.600 வரை விலை போனது.
எடப்பாடி:
எடப்பாடி அருகே கொங்கணாபுரத்தில் உள்ள வார சந்தையில், ரம்ஜான் பண்டிகையையொட்டி நேற்று ஆடுகள் வரத்து அதிகரித்தது. பல்வேறு மாவட்டங்களில் இருந்து வியாபாரிகள், விவசாயிகள் சந்தைக்கு வந்து இருந்தனர். சேலம், நாமக்கல், தர்மபுரி, கிருஷ்ணகிரி, ஈரோடு மற்றும் கர்நாடகா, ஆந்திரா ஆகிய மாநிலங்களில் உள்ள பகுதியில் இருந்து சுமார் 9000 ஆடுகள், பந்தய சேவல், 4000 கோழிகள் என விற்பனைக்கு வந்தன. 10 கிலோ எடையுள்ள ஆடு ரூ.5200 முதல் ரூ.5700 வரையும், 20 கிலோ எடையுள்ள செம்மறி ஆடு ரூ.10,200 முதல் ரூ.11,600 வரையும், வளர்ப்பு குட்டி ஆடு ரூ.2500 முதல் ரூ.3000 வரையும் விலை போனது.
அதேபோல், பலாப்பழம் ரூ.200 முதல் ரூ.400 வரையும், பந்தய சேவல், காகம்கீரி, செங்கருப்பு மயில், சுருளி ரகத்தைச் சேர்ந்த பந்தய சேவல்கள் ரூ.1000 முதல் ரூ.6500 வரையும் விலை போனது. அதேபோல் தக்காளி, கேரட், கத்தரி, வெண்டைக்காய், முள்ளங்கி என 160 டன் காய்கறிகள் விற்பனையானது. புளி கொட்டையுடன் உள்ள கூடை 6 கிலோ முதல் 7 கிலோ வரை ரூ.450 முதல் ரூ.600 வரை விலை போனது.
சந்தையில் மொத்தம் ரூ.6.50 கோடிக்கு வர்த்தகம் நடந்தது என வியாபாரிகள் தெரிவித்தனர்.
- சிறுமி அடிக்கடி மயங்கி விழுவதை கண்ட பெற்றோர் அரசு மருத்துவமனைக்கு அழைத்து சென்றனர்.
- போலீசார் விசாரணை நடத்தி போக்சோ சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்து ஆனந்தை கைது செய்தனர்.
ஆத்தூர்:
சேலம் மாவட்டம் பெத்தநாயக்கன்பாளையம் அருகே உள்ள ஒரு கிராமத்தில் 14 வயது சிறுமி பெற்றோருடன் வசித்து வருகிறார். இந்நிலையில், ராசிபுரம் தாலுகா மங்களபுரம் அருகே வேப்பிலைகுட்டை கிராமத்தைச் சேர்ந்த ஆட்டோ டிரைவர் ஆனந்த் (வயது 24) என்பவர், பால் கம்பெனியில் ஆட்டோவில் செல்லும் போது சிறுமியுடன் பழக்கம் ஏற்பட்டு, காதலித்து வந்துள்ளார்.
இதனிடையே, சிறுமி அடிக்கடி மயங்கி விழுவதை கண்ட பெற்றோர் அரசு மருத்துவமனைக்கு அழைத்து சென்றனர். அப்போது பரிசோதனை செய்த டாக்டர், சிறுமி கர்ப்பமாக இருப்பதாக தெரிவித்தார். இதை கேட்டு அதிர்ச்சியடைந்த பெற்றோர், இதுகுறித்து ஏத்தாப்பூர் போலீசில் புகார் அளித்தனர்.
இதன்பேரில், போலீசார் விசாரணை நடத்தி போக்சோ சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்து ஆனந்தை கைது செய்தனர்.
- நாளொன்றுக்கு 24 ஆயிரம் டன் நிலக்கரி எரியூட்டப்பட்டு 1,440 மெகாவாட் மின்சாரம் உற்பத்தி செய்யப்படுகிறது.
- நிலக்கரி எரிப்பதால் 7 ஆயிரம் டன் வரை சாம்பல் வெளியேறுகிறது.
மேட்டூர்:
மேட்டூர் அனல்மின் நிலையத்தில், 840 மற்றும் 600 மெகாவாட் மின் உற்பத்தி திறன் கொண்ட 2 பிரிவுகள் செயல்பட்டு வருகிறது. நாளொன்றுக்கு 24 ஆயிரம் டன் நிலக்கரி எரியூட்டப்பட்டு 1,440 மெகாவாட் மின்சாரம் உற்பத்தி செய்யப்படுகிறது.
நிலக்கரி எரிப்பதால் 7 ஆயிரம் டன் வரை சாம்பல் வெளியேறுகிறது. இவை உலர் சாம்பலாகவும், ஈர சாம்பலாகவும் வெளியேற்றப்பட்டு வருகிறது. நாள்தோறும் நூற்றுக்கணக்கான லாரிகளில் சாம்பல் சிமெண்ட் ஆலைகளுக்கும், செங்கல் உற்பத்திக்கும் கொண்டு செல்லப்படுகிறது. இந்நிலையில், தமிழ்நாடு மின்சார வாரிய தலைவர் ராஜேஷ் லக்கானி, மேட்டூர் அனல்மின் நிலையத்தை நேற்று பார்வையிட்டார். அப்போது ஈர சாம்பல் விநியோகம் முன்னறிவிப்பின்றி திடீரென நிறுத்தப்பட்டது.
சாம்பல் அதிக அளவில் காற்றில் கலந்து பறப்பதால் லாரிகள், அனல்மின் நிலையத்திலிருந்து வெளியேற்றப்பட்டது. இதனால் மேட்டூர்-எடப்பாடி சாலையிலும், மேட்டூர்-சேலம் சாலையிலும் 2 கிலோமீட்டர் தொலைவிற்கு, லாரிகள் நீண்ட வரிசையில் நிறுத்தப்பட்டிருந்தன. ஈர சாம்பல் விநியோகம் நிறுத்தப்பட்டதால், அனல்மின் நிலையத்திற்கு ரூ.50 லட்சத்துக்கு மேல் வருவாய் இழப்பு ஏற்பட்டதாக தெரிய வந்துள்ளது.
- பரமேஸ்வரன் மீது போலியாக மருத்துவம் பார்த்து வருவதாக வீராணம் போலீசில் புகார் அளிக்கப்பட்டது
- மற்ற கிளினிக்குகளில் தொடர் சோதனை நடத்தப்படும் என, மருத்து கட்டுப்பாடு துறையினர் தெரிவித்தனர்.
சேலம்:
சேலம் வீராணம் அடுத்த பள்ளிப்பட்டியில் உள்ள தனியார் கிளினிக்கில் நேற்று சேலம் மாவட்ட சுகாதார நலப்பணிகள் இணை இயக்குனர் பானுமதி உத்தரவின்படி வேம்படிதாளம் அரசு மருத்துவமனை சித்தா உதவி டாக்டர் வெற்றிவேந்தன், மருந்துகள் ஆய்வாளர் மாரிமுத்து ஆகியோர் ஆய்வு செய்தனர்.
அப்போது, மருந்தாளுனருக்கு படித்து விட்டு, கிளினிக் வைத்து நோயாளிகளுக்கு பரமேஸ்வரன் (வயது 41) என்பவர் அலோபதி சிகிச்சையளித்து வந்தது கண்டுபிடிக்கப்பட்டது. இதையடுத்து அவரை பிடித்து விசாரணை நடத்தினர். அவர் சிகிச்சைக்கு பயன்படுத்திய மருந்து, மாத்திரை, ஊசி உள்ளிட்டவை பறிமுதல் செய்யப்பட்டன. இதையடுத்து, பரமேஸ்வரன் மீது போலியாக மருத்துவம் பார்த்து வருவதாக வீராணம் போலீசில் புகார் அளிக்கப்பட்டது
அதன்பேரில் போலீசார், இந்திய மருத்துவ கவுன்சில், 1956-ன் கீழ் வழக்குப்பதிந்து, பரமேஸ்வரனை கைது செய்தனர். மேலும் அதே பகுதியில் உள்ள மற்ற கிளினிக்குகளில் தொடர் சோதனை நடத்தப்படும் என, மருத்து கட்டுப்பாடு துறையினர் தெரிவித்தனர்.
- வாரம் முழுவதும் வெயில் அளவு 100 டிகிரிக்கு மேல் அதிகரிக்கும் என வானிலை ஆய்வு மைய அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
- மதிய நேரங்களில் வெளியே நடக்க முடியாத நிலை பொதுமக்களுக்கு ஏற்பட்டுள்ளது.
சேலம்:
கத்திரி வெயில் தொடங்குவதற்கு முன்பே, சேலத்தில் கடந்த சில நாட்களாக 100 டிகிரிக்கும் அதிகமாக வெயில் கொளுத்தி வருகிறது. சேலத்தில், நேற்று முன்தினம் 103.7 டிகிரி பாரன்ஹீட்டாக வெப்ப நிலை பதிவாகி இருந்த நிலையில், நேற்று 103.1 டிகிரியாக பதிவாகி இருந்தது. இன்றும் 103 டிகிரிக்கு அதிகமாக பதிவானது.
இந்த வாரம் முழுவதும் வெயில் அளவு 100 டிகிரிக்கு மேல் அதிகரிக்கும் என வானிலை ஆய்வு மைய அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். அதன்படி வெப்ப நிலை அதிகரிக்கிறது.
கடந்த 14-ம் தேதி அதிகபட்சமாக 105.7 டிகிரி பதிவானது. வெயில் தாக்கம் அதிகரிப்பால், மதிய நேரத்தில் இருசக்கர வாகனங்களில் செல்லும் இளம்பெண்கள் முகத்தை துப்பட்டா, சேலையால் மூடிக்கொண்டும், கைகளில் கிளவுஸ் மாட்டிக்கொண்டு பயணிக்கின்றனர். பகல் நேரங்களில் நீண்ட தூர பயணத்தை தவிர்க்கும் மக்கள், பெரும்பாலும் மாலை நேர பயணத்தையே மேற்கொள்கின்றனர். சேலம் மாநகரில் போதிய மரங்கள் இல்லாததால் வெப்பத்தின் தாக்கம் கடுமையாக இருக்கிறது. இதனால் மதிய நேரங்களில் வெளியே நடக்க முடியாத நிலை பொதுமக்களுக்கு ஏற்பட்டுள்ளது. மேலும் காலை முதல் மாலை வரை நிலவிய கடும் வெயிலால் இரவில் வீடுகளில் கடும் புழுக்கம் நிலவி வருகிறது. இதனால் இரவில் தூங்க முடியாமல் பொதுமக்கள் தவிக்கின்றனர்.
- லண்டனில் டி.டி.வி. தினகரனுக்கு சொத்து உள்ளதாக தி.மு.க.வினர் கூறினர்.
- அ.தி.மு.க. இன்று வலுவான கட்சியாக உள்ளது.
ஓமலூர் :
அ.தி.மு.க. பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி, சேலம் மாவட்டம் ஓமலூரில் உள்ள கட்சி அலுவலகத்தில் நேற்று நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-
நாளை (இன்று) அ.தி.மு.க. செயற்குழு கூட்டம் நடக்கிறது. அதில் கர்நாடக தேர்தலில் போட்டியிடுவது குறித்து முடிவு செய்யப்படும். அ.தி.மு.க. இன்று வலுவான கட்சியாக உள்ளது. இதனை ஜீரணிக்க முடியாத ஓ.பன்னீர்செல்வம் விரக்தியில், மாநாடு நடத்த போவதாக கூறுகிறார். பெரியகுளம் போலீஸ் நிலையத்தில் நடத்தப்பட்ட தாக்குதல், தமிழகத்தில் போலீசாருக்கே பாதுகாப்பு இல்லை என்பதை காட்டுகிறது.
சட்டசபையில் முதல்- அமைச்சர் பேசுவது ஒளிபரப்பு செய்யப்படுகிறது. நாங்கள் பேசுவது துண்டிக்கப்படுகிறது. நாங்கள் பேசுவதையும் ஒளிபரப்பு செய்ய வேண்டும் என்று பலமுறை கூறிவிட்டோம். இதுவரை எந்தவொரு நடவடிக்கையும் இல்லை.
அண்ணாமலை ஊழல் பட்டியலை வெளியிட்டுள்ளார் என்று கேட்கிறீர்கள். அவர் சொத்து பட்டியலை தான் வெளியிட்டு இருக்கிறார். அதனை செய்திதாள்களில் பார்த்து தெரிந்து கொண்டேன். தி.மு.க. சொத்து பட்டியலை வெளியிட்ட அண்ணாமலை, அ.தி.மு.க. முன்னாள் அமைச்சர்களின் பட்டியலை வெளியிட வேண்டும் என்று டி.டி.வி. தினகரன் கூறி இருக்கிறார். லண்டனில் டி.டி.வி. தினகரனுக்கு சொத்து உள்ளதாக தி.மு.க.வினர் கூறினர். முதலில் அந்த சொத்து பட்டியலைதான் வெளியிட வேண்டும்.
அண்ணாமலை பேட்டி கொடுத்து தன்னை முன்னிலைப்படுத்தி பெரிய ஆளாக காட்ட முயற்சி செய்கிறார். அவரை பற்றி என்னிடம் தயவு செய்து கேள்வி கேட்காதீர்கள். ஒரு முதிர்ந்த அரசியல்வாதியை பற்றி கேள்வி கேளுங்கள். நான் பதில் கூறுகிறேன்.
இவ்வாறு எடப்பாடி பழனிசாமி கூறினார்.
முன்னதாக ஓமலூர் அ.தி.மு.க. அலுவலகத்தில் புறநகர் மாவட்ட நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம், புதிய உறுப்பினர் சேர்க்கை படிவம் வழங்கும் நிகழ்ச்சி நடந்தது. மணி எம்.எல்.ஏ. வரவேற்றார். அமைப்பு செயலாளர் செம்மலை, சந்திரசேகரன் எம்.பி., எம்.எல்.ஏ.க்கள் ராஜமுத்து, சித்ரா, ஜெய்சங்கரன், நல்லதம்பி ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
அ.தி.மு.க. பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி கலந்து கொண்டு புதிய உறுப்பினர் சேர்க்கை படிவத்தை வழங்கி கட்சியினருக்கு ஆலோசனை வழங்கினார். அப்போது உறுப்பினர் சேர்க்கையின் போது ஒவ்வொருவரின் முழு விவரங்களையும் சேகரிக்க வேண்டும் என்றும், கோடைகாலம் தொடங்கி உள்ளதால் பொதுமக்களுக்கு பயன் அளிக்கும் வகையில் ஆங்காங்கே நீர்மோர் பந்தல் அமைக்க வேண்டும் என்று கட்சியினருக்கு அறிவுரை வழங்கினார். முன்னதாக கட்சி அலுவலகத்திற்கு வந்த எடப்பாடி பழனிசாமிக்கு புறநகர் மாவட்ட செயலாளர் இளங்கோவன், மணி எம்.எல்.ஏ. ஆகியோர் ஆளுயர மாலை அணிவித்து வரவேற்றனர்.
- அனைவரும் கைது செய்யப்பட்டு ஆத்தூரில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் அடைக்கப்பட்டனர்.
- மேற்கு மாவட்ட காங்கிரஸ் சார்பாக சங்ககிரியில் ரயில் மறியல் நடைபெற்றது.
ராகுல் காந்திக்கு வழங்கப்பட்ட 2 ஆண்டு சிறை தண்டனை தீர்ப்பை கண்டித்தும், மோடி அரசை கண்டித்தும் சேலம் மாவட்டம் ஆத்தூரில், சேலம் கிழக்கு மாவட்ட காங்கிரஸ் கட்சி சார்பில் ரெயில் மறியல் போராட்டம் அறிவிக்கப்பட்டு இருந்தது. அதன்படி, இன்று ரெயில் மறியல் போராட்டத்திற்காக காமராஜர் சிலையிலிருந்து, சேலம் கிழக்கு மாவட்ட தலைவர் அர்த்தனாரி தலைமையில் 500-க்கும் மேற்பட்ட காங்கிரஸ் கட்சியினர் ஊர்வலமாக சென்றனர்.
ரெயில் நிலையத்தில் உள்ளே செல்ல முயன்ற அவர்களை, ஆத்தூர் டி.எஸ்.பி நாகராஜன் தலைமையினான போலீசார், தடுத்து நிறுத்தனர். இதனால் போலீசாருக்கும், காங்கிரசாருக்கும் இடையே கடும் தள்ளுமுள்ளு ஏற்பட்டது.
இதையடுத்து ரெயில் நிலையம் முன்பு அமர்ந்து தர்ணாவில் ஈடுபட்டனர். பின்னர் அவர்கள் அனைவரும் கைது செய்யப்பட்டு ஆத்தூரில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் அடைக்கப்பட்டனர்.
இதேபோல் சேலத்தில் மாநகர் மாவட்ட தலைவர் பாஸ்கர் தலைமையில் ரயில்மறியல் நடைபெற்றது. மேற்கு மாவட்ட காங்கிரஸ் சார்பாக சங்ககிரியில் ரயில் மறியல் நடைபெற்றது. மாவட்டம் முழுவதும் ரயில் மறியலில் ஈடுபட்ட 500 பேரை போலீசார் கைது செய்தனர்.
- 300 ஆண்டு பழமையான கூத்தாண்டவர் கோயில் அமைந்துள்ளது.
- பிரசித்தி பெற்ற இக்கோவிலில் 2 ஆண்டுக்கு ஒருமுறை தேர்த்திருவிழா நடைபெற்று வருகிறது.
வாழப்பாடி:
வாழப்பாடி அடுத்த பனைமடல் கிராமத்தில் சுற்றுப்புற கிராம மக்களுக்கு காவல் தெய்வமாக விளங்கும், 300 ஆண்டு பழமையான கூத்தாண்டவர் கோயில் அமைந்துள்ளது. பிரசித்தி பெற்ற இக்கோவிலில் 2 ஆண்டுக்கு ஒருமுறை தேர்த்திருவிழா நடைபெற்று வருகிறது.இந்த ஆண்டு தேர்த்திரு விழா கடந்த 2 நாட்களாக கொண்டா டப்பட்டது. இவ்விழாவில், அரவான் பலி கொடுத்தல், கூத்தாண்டவர் கண் திறப்பு நிகழ்ச்சிகளும் திருநங்கைகள் பங்கேற்புடன் மரபு மாறாமல் நடத்தப்பட்டது.
இதனைத்தொடர்ந்து, மூலவருக்கு சிறப்பு அபிசேக ஆராதனைகளும், திருத்தேர் ரதமேறும் வைபோவமும், சன்னிதானத்தை சுற்றி தேரோட்டமும் நடைபெற்றது.
விழாவில் வாழப்பாடி, ஏத்தாப்பூர், பெத்தநா யக்கன்பாளையம், பேளூர், இடையப்பட்டி, தாண்டா னுார் மற்றும் சுற்றுப்புற கிரா மங்களை சேர்ந்த ஆயி ரக்க ணக்கான பக்தர்களும், பொது மக்களும் கலந்து கொண்டனர். முன்னதாக, வேண்டுதல் நிறை வேற்றிய சுவாமிக்கு கர கம் எடுத்தும், அலகு குத்தியும், பொங்கலிட்டு ஆடு, கோழி பலியிட்டும் ஏராள மான பக்தர்கள் நேர்த்திக்கடன் செலுத்தினர். இடையப்பட்டி யில் இருந்து கல்யாணகிரி வரை வழிநெடு கிலும், பாரம்ப ரிய முறைப்படி பொதுமக்கள் நீர் மோர் பந்தல் அமைத்தும், தானி யக்கூழ், அன்னதானம் வழங்கியும் பக்தர்களின் தாகம் தீர்த்த னர்.
- சேலம் ஏ.வி.ஆர் ரவுண்டான பகுதியில் மோட்டார் சைக்கிளில் சென்று கொண்டிருந்தார்.
- திடீரென நெஞ்சு வலி ஏற்பட்டதால் மோட்டார் சைக்கிளை நிறுத்திவிட்டு தரையில் உட்கார்ந்தார்.
சேலம்:
சேலம் தாதம்பட்டி எஸ்.கே.டவுன்ஷிப் பகுதியைச் சேர்ந்தவர் சரவணன் (வயது 44). தொழிலாளியான இவர், இன்று காலை சேலம் ஏ.வி.ஆர் ரவுண்டான பகுதியில் மோட்டார் சைக்கிளில் சென்று கொண்டிருந்தார்.
அப்போது திடீரென நெஞ்சு வலி ஏற்பட்டதால் மோட்டார் சைக்கிளை நிறுத்திவிட்டு தரையில் உட்கார்ந்தார்.
உடனே அந்த பகுதியினர் அவரை மருத்துவமனையில் சேர்ப்பதற்காக 108 ஆம்புலன்சுக்கு தகவல் தெரிவித்தனர். விரைந்து சென்ற ஆம்புலன்ஸ் குழுவினர், அவரை மீட்டு சேலம் அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்கு சேர்ந்தனர்.
அங்கு தீவிர சிகிச்சை அளித்தும் பலனின்றி, சிறிது நேரத்தில் சரவணன் உயிரிழந்தார். இந்த தகவல் அறிந்த உறவினர்கள் ஆஸ்பத்திரிக்கு விரைந்து வந்தனர். பின்னர் அவரது உடலை பார்த்து கதறி அழுதனர்.
இந்த சம்பவம் குறித்து சூரமங்கலம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
- கடந்த ஒரு வாரமாக வெயிலின் தாக்கம் படிப்படியாக அதிகரித்து வந்தது.
- குறிப்பாக பகல் நேர அதிகபட்ச வெப்பநிலை 100 டிகிரி பாரன்ஹீட்டுக்கு குறையாமல் இருந்தது.
சேலம்:
சேலம் மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக வெயிலின் தாக்கம் அதிகரித்து வருகிறது. கடந்த ஒரு வாரமாக வெயிலின் தாக்கம் படிப்படியாக அதிகரித்து வந்தது. குறிப்பாக பகல் நேர அதிகபட்ச வெப்பநிலை 100 டிகிரி பாரன்ஹீட்டுக்கு குறையாமல் இருந்தது.
இந்த நிலையில் நேற்று முன்தினம் 105.4 டிகிரி வெயில் பதிவானது. இதனால் வெயில் சுட்டு எரித்தது. பொதுமக்கள் வெளியில் நடமாட முடியாமல் வீட்டில் முடங்கினர். தொடர்ந்து நேற்று 103.7 டிகிரி வெயில் பதிவானது.
100 டிகிரிக்கு மேல் வெயில் தாக்கம் இருந்ததால் சாலைகளில் அனல் காற்று வீசியது. இதனால் பொதுமக்கள் வெளியில் நடமாட முடியாமல் நேற்றும் கடும் அவதிப்பட்டனர்.
இதே போல நாமக்கல் மாவட்டம் பரமத்தி வேலூரில் 104.9 டிகிரி வெயில் நேற்று பதிவானது. இதனால் கடும் அனல் காற்று வீசியது. பொதுமக்கள் சாலைகளில் செல்ல முடியாமல் குடைகளை பிடித்து படியும், துணிகளால் தலையில் மூடிய படியும் சென்றனர்.
மேலும் வாகனங்களில் சென்றவர்களும் கடும் உஷ்ணத்தால் அவதிப்பட்டனர். இந்த வெயில் தாக்கம் மேலும் சில நாட்கள் நீடிக்கும் என்றும், இதனால் மதிய நேரங்களில் பொதுமக்கள் வெளியே வர வேண்டாம் என்றும் வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.
- சேலம் அக்ரஹாரம் கமலா ஆஸ்பத்திரி பகுதியில் உள்ள ஒரு ஓட்டலில் புரோட்டா மாஸ்டராக வேலை பார்த்து வந்தார்.
- நேற்று பணி முடித்து அறைக்கு சென்ற அவர், தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார்.
சேலம்:
ராமநாதபுரம் மாவட்டம், தேவியாப்பட்டினம் ஆர்.சி. தெரு பகுதியை சேர்ந்தவர் ஜீவா என்கிற ஜெரால்டு (வயது 28). இவர் கடந்த 2 வருடங்களாக சேலம் அக்ரஹாரம் கமலா ஆஸ்பத்திரி பகுதியில் உள்ள ஒரு ஓட்டலில் புரோட்டா மாஸ்டராக வேலை பார்த்து வந்தார். இவர் அங்குள்ள காசி விஸ்வநாதர் கோவில் பகுதியில் அறை எடுத்து தங்கி இருந்தார்.
இந்த நிலையில் நேற்று பணி முடித்து அறைக்கு சென்ற அவர், தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார். இதனை பார்த்த அந்த பகுதியினர், டவுன் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். உடனே அங்கு விரைந்து சென்ற போலீசார் அவரது உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக, சேலம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.
மேலும் உறவினர்களுக்கும் தகவல் தெரிவித்தனர். ஜெரால்டு எதற்காக தற்கொலை செய்து கொண்டார் என்ற விபரம் தெரியவில்லை. இதுகுறித்து டவுன் போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.






