புரோட்டா மாஸ்டர் தூக்குப் போட்டு தற்கொலை

சேலம் அக்ரஹாரம் கமலா ஆஸ்பத்திரி பகுதியில் உள்ள ஒரு ஓட்டலில் புரோட்டா மாஸ்டராக வேலை பார்த்து வந்தார். நேற்று பணி முடித்து அறைக்கு சென்ற அவர், தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார்.
புரோட்டா மாஸ்டர்  தூக்குப் போட்டு தற்கொலை
Published on

சேலம்:

ராமநாதபுரம் மாவட்டம், தேவியாப்பட்டினம் ஆர்.சி. தெரு பகுதியை சேர்ந்தவர் ஜீவா என்கிற ஜெரால்டு (வயது 28). இவர் கடந்த 2 வருடங்களாக சேலம் அக்ரஹாரம் கமலா ஆஸ்பத்திரி பகுதியில் உள்ள ஒரு ஓட்டலில் புரோட்டா மாஸ்டராக வேலை பார்த்து வந்தார். இவர் அங்குள்ள காசி விஸ்வநாதர் கோவில் பகுதியில் அறை எடுத்து தங்கி இருந்தார்.

இந்த நிலையில் நேற்று பணி முடித்து அறைக்கு சென்ற அவர், தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார். இதனை பார்த்த அந்த பகுதியினர், டவுன் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். உடனே அங்கு விரைந்து சென்ற போலீசார் அவரது உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக, சேலம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

மேலும் உறவினர்களுக்கும் தகவல் தெரிவித்தனர். ஜெரால்டு எதற்காக தற்கொலை செய்து கொண்டார் என்ற விபரம் தெரியவில்லை. இதுகுறித்து டவுன் போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

X

Maalai Malar
www.maalaimalar.com