என் மலர்
உள்ளூர் செய்திகள்

நாமக்கல் மாவட்டத்தில் 104.9 டிகிரி வெயில் பதிவு
- கடந்த ஒரு வாரமாக வெயிலின் தாக்கம் படிப்படியாக அதிகரித்து வந்தது.
- குறிப்பாக பகல் நேர அதிகபட்ச வெப்பநிலை 100 டிகிரி பாரன்ஹீட்டுக்கு குறையாமல் இருந்தது.
சேலம்:
சேலம் மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக வெயிலின் தாக்கம் அதிகரித்து வருகிறது. கடந்த ஒரு வாரமாக வெயிலின் தாக்கம் படிப்படியாக அதிகரித்து வந்தது. குறிப்பாக பகல் நேர அதிகபட்ச வெப்பநிலை 100 டிகிரி பாரன்ஹீட்டுக்கு குறையாமல் இருந்தது.
இந்த நிலையில் நேற்று முன்தினம் 105.4 டிகிரி வெயில் பதிவானது. இதனால் வெயில் சுட்டு எரித்தது. பொதுமக்கள் வெளியில் நடமாட முடியாமல் வீட்டில் முடங்கினர். தொடர்ந்து நேற்று 103.7 டிகிரி வெயில் பதிவானது.
100 டிகிரிக்கு மேல் வெயில் தாக்கம் இருந்ததால் சாலைகளில் அனல் காற்று வீசியது. இதனால் பொதுமக்கள் வெளியில் நடமாட முடியாமல் நேற்றும் கடும் அவதிப்பட்டனர்.
இதே போல நாமக்கல் மாவட்டம் பரமத்தி வேலூரில் 104.9 டிகிரி வெயில் நேற்று பதிவானது. இதனால் கடும் அனல் காற்று வீசியது. பொதுமக்கள் சாலைகளில் செல்ல முடியாமல் குடைகளை பிடித்து படியும், துணிகளால் தலையில் மூடிய படியும் சென்றனர்.
மேலும் வாகனங்களில் சென்றவர்களும் கடும் உஷ்ணத்தால் அவதிப்பட்டனர். இந்த வெயில் தாக்கம் மேலும் சில நாட்கள் நீடிக்கும் என்றும், இதனால் மதிய நேரங்களில் பொதுமக்கள் வெளியே வர வேண்டாம் என்றும் வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.






