வாழப்பாடி அருகே 14 வயது சிறுமியை கர்ப்பமாக்கிய வாலிபர் கைது

சிறுமி அடிக்கடி மயங்கி விழுவதை கண்ட பெற்றோர் அரசு மருத்துவமனைக்கு அழைத்து சென்றனர். போலீசார் விசாரணை நடத்தி போக்சோ சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்து ஆனந்தை கைது செய்தனர்.
வாழப்பாடி அருகே 14 வயது சிறுமியை கர்ப்பமாக்கிய வாலிபர் கைது
Published on

ஆத்தூர்:

சேலம் மாவட்டம் பெத்தநாயக்கன்பாளையம் அருகே உள்ள ஒரு கிராமத்தில் 14 வயது சிறுமி பெற்றோருடன் வசித்து வருகிறார். இந்நிலையில், ராசிபுரம் தாலுகா மங்களபுரம் அருகே வேப்பிலைகுட்டை கிராமத்தைச் சேர்ந்த ஆட்டோ டிரைவர் ஆனந்த் (வயது 24) என்பவர், பால் கம்பெனியில் ஆட்டோவில் செல்லும் போது சிறுமியுடன் பழக்கம் ஏற்பட்டு, காதலித்து வந்துள்ளார்.

இதனிடையே, சிறுமி அடிக்கடி மயங்கி விழுவதை கண்ட பெற்றோர் அரசு மருத்துவமனைக்கு அழைத்து சென்றனர். அப்போது பரிசோதனை செய்த டாக்டர், சிறுமி கர்ப்பமாக இருப்பதாக தெரிவித்தார். இதை கேட்டு அதிர்ச்சியடைந்த பெற்றோர், இதுகுறித்து ஏத்தாப்பூர் போலீசில் புகார் அளித்தனர்.

இதன்பேரில், போலீசார் விசாரணை நடத்தி போக்சோ சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்து ஆனந்தை கைது செய்தனர்.

X

Maalai Malar
www.maalaimalar.com