என் மலர்
சேலம்
- ராஷ்ட்ரீய ஸ்வயம் சேவக சங்கம் (ஆர்.எஸ்.எஸ்). சார்பில் கருங் கல்பட்டி பாண்டுரங்கன் விட்டல் 2-வது தெருவில் நேற்று மாலை 4.25 மணிக்கு ஆர்.எஸ்.எஸ். ஊர்வலம் தொடங்கியது.
- ஊர்வலத்தின் முன்பும், பின்பும், சாலையின் 2 ஓரமும் ஏராளமான போலீசார் குவிக்கப்பட்டனர். பலத்த பாதுகாப்புடன் ஊர்வலம் நடைபெற்றது.
ேசலம்:
சுப்ரீம் கோர்ட்டு அனுமதி அளித்ததை தொடர்ந்து சேலம் ஜில்லா ராஷ்ட்ரீய ஸ்வயம் சேவக சங்கம் (ஆர்.எஸ்.எஸ்). சார்பில் கருங் கல்பட்டி பாண்டுரங்கன் விட்டல் 2-வது தெருவில் நேற்று மாலை 4.25 மணிக்கு ஆர்.எஸ்.எஸ். ஊர்வலம் தொடங்கியது.
கிருஷ்ணம்மாள் நகர், கருங்கல் பட்டி பிரதான சாலை, பிரபாத், எம்.ஜி.ஆர். வளைவு, திருச்சி பிரதான சாலை வழியே வந்த ஊர்வலம் தாதகாப்பட்டி கேட் மைதானத்தில் 5 மணிக்கு நிறைவடைந்தது. ஆர்.எஸ்.எஸ். நிர்வாகிகள், உறுப்பினர்கள் 500-க்கும் மேற்பட்டவர்கள் ஒரே சீருடையில் அணிவகுத்து சென்றனர்.
ஊர்வலத்தின் முன்பும், பின்பும், சாலையின் 2 ஓரமும் ஏராளமான போலீசார் குவிக்கப்பட்டனர். பலத்த பாதுகாப்புடன் ஊர்வலம் நடைபெற்றது. அசம்பாவிதங்கள் ஏதும் நடந்து விடாமல் இருக்க ஊர்வல பாதையில் போலீஸ் கமிஷனர் விஜயகுமாரி தலைமையில் 650 போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.
- பேளூரில் 1973 டேணிடா திட்டத்தின் கீழ் சுகாதார மையம் அமைக்கப்பட்டு, இப்பகுதி மக்களுக்கு அடிப்படை சிகிச்சை அளிக்கப்பட்டது.
- 4 ஆண்டுக்கு பிறகு ஆரம்ப சுகாதார நிலையமாக மாற்றப்பட்டு மருத்துவர், செவிலியர் மற்றும் பணி யா ளர்கள் நியமிக்கப்பட்டனர்.
வாழப்பாடி, ஏப்.17-
வாழப்பாடி வட்டத்திற்கு உட்பட்ட பேளூரில் 1973 டேணிடா திட்டத்தின் கீழ் சுகாதார மையம் அமைக்கப்பட்டு, இப்பகுதி மக்களுக்கு அடிப்படை சிகிச்சை அளிக்கப்பட்டது. 4 ஆண்டுக்கு பிறகு ஆரம்ப சுகாதார நிலையமாக மாற்றப்பட்டு மருத்துவர், செவிலியர் மற்றும் பணியாளர்கள் நியமிக்கப்பட்டனர்.
இதனைத்தொடர்ந்து, வாழப்பாடி, திருமனுார் மற்றும் பேளூர் ஆரம்ப சுகாதார நிலையங்களை கட்டுப்படுத்தி இயக்கும் வட்டார சுகாதார நிலைய அந்தஸ்து வழங்கப்பட்டது.
இந்த வட்டார ஆரம்ப சுகாதார நிலையத்தில் சிகிச்சை பெறுவோரின் எண்ணிக்கை அதிகரித்த தால், கடந்த 2016–-ல் 30 படுக்கையுடன் கூடிய அரசு மேம்படுத்தப்பட்ட அரசு ஆரம்ப சுகாதார நிலையமாக தரம் உயர்த்தப்பட்டது.
6ஆண்டுக்கு முன் வாழப்பாடியைச் சேர்ந்த மருத்துவர் சி.பொன்னம்ப லம் வட்டார மருத்துவ அலு வலராக நியமிக்கப்பட்டார். இவரது ஒருங்கிணைப்பால், மருத்துவர்கள், செவிலி யர்கள் மற்றும் மருத்துவப் பணியாளர்கள், பொது மக்கள் ஒத்துழைப்போடு புதுப்பிக்கப்பட்டு, கனிவோடு சிகிச்சை அளிக்கப்படுகிறது.
அரசு சுகாதாரத்துறை, அரசு சாரா நிறுவனங்கள், பெரு நிறுவனங்களை அணுகிய மருத்துவக்குழு வினர்,ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு தேவையான அனைத்து அடிப்படை வசதிகள் மற்றும் கட்ட மைப்பு வசதிகளும் ஏற்படுத்தி யுள்ளனர். நாளொன்றுக்கு சராசரியாக சிகிச்சை பெறும் 300 பயனாளிகளின் அனைத்து விபரங்களும், மத்திய அரசின் டிஜிட்டல் திட்டத்தின் கீழ் கணினியில் பதிவு செய்யப்பட்டு, தொடர்ந்து பராமரிக்கப்ப டுகிறது.
இதுமட்டுமின்றி, சுகாதார மைய வளாகத்தில் எண் '8' வடிவ நடைபயிற்சி திடல், மூலிகைத் தோட்டம், பயாளிகள் ஓய்வறை, கரோனா சளி மாதிரி சேகர கூடாரம், கர்ப்பிணிகளுக்கான பிரத்யோக சிகிச்சை அரங்கு உள்ளிட்ட வசதிகள் ஏற்ப டுத்தப் பட்டுள்ளன. சிகிச்சை பெற வரும் பயனாளிகளை வர வேற்கும் வகையில், நுழைவு வாயிலில் தாமரைக்குளம், புல்வெளிப் பூங்காவும் அமைக்கப்பட்டுள்ளது.
ஆத்துார் சுகாதார மாவட்ட துணை இயக்குர் ஜெமினி வழிகாட்டுதலின் படி, வட்டார மருத்துவ அலு வலர் சி.பொன்னம்ப லம் தலைமையிலான குழு வி னர் சிறப்பாக பணியாற்றி வரும், இந்த ஆரம்ப சுகாதார நிலையத்தை ஆய்வு செய்த தேசிய தர மதிப்பீட்டு நிறுவனம், கடந்த ஆண்டு ஐ.எஸ்.ஓ., தரச்சான்று வழங்கி யது. இதனைத்தொடர்ந்து, சிறந்த சுகாதார நிலை யத்திற்கான காயகல்ப் விருது வழங்குவதற்காக மாநிலம் முழுவதும் சுகாதார நிலையங்களை தேசிய சுகாதார குழுமத்தின் குழு ஆய்வு செய்தது. இந்த குழுவினர் பேளூர் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தை மதிப்பீடு செய்து 100-க்கு 99.43 மதிப்பெண்கள் வழங்கிய தால், தற்போது மாநிலத்தில் முதலிடம் பிடித்து சாதனை படைத்துள்ளது.
மாநில அளவில் முதலி டம் பிடித்ததால் பேளூர் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு ரூ. 15 லட்சம் பரிசும் அறிவிக்கப்பட்டு உள்ளது. இந்த நிதியை சுகாதார நிலையத்தின் மேம்பாட்டிற்கு பயன்ப டுத்திக் கொள்ளலாம். விரைவில் சென்னையில் நடைபெறும் அரசு விழா வில் இந்த விருதும், பரிசுத் தொகையும் வழங்கப்பட உள்ளது.
- கொளத் தூர் அருகே கத்திரிப்பட்டி கிராமத்தின் வழியாக வைக்கோல் பாரம் ஏற்றிக் கொண்டு மினி லாரி சென்று கொண்டிருந்தது.
- எதிர்பாராத விதமாக மேலே சென்ற மின் கம்பி மீது உரசியதில், திடீரென வைக்கோலில் தீ பற்றியது.
மேட்டூர்:
சேலம் மாவட்டம் மேட்டூர் அடுத்த கொளத் தூர் அருகே கத்திரிப்பட்டி கிராமத்தின் வழியாக வைக்கோல் பாரம் ஏற்றிக் கொண்டு மினி லாரி சென்று கொண்டிருந்தது.
அப்போது, எதிர்பாராத விதமாக மேலே சென்ற மின் கம்பி மீது உரசியதில், திடீரென வைக்கோலில் தீ பற்றியது. இந்த தீ மளமள வென பரவியது. இதை யடுத்து, மினி லாரியின் டிரைவர், லாரியில் இருந்தவர்கள் வேகமாக கீழே இறங்கினர்.
இதுகுறித்து மேட்டூர் தீயணைப்பு துறையினருக்கு தகவல் அளித்தனர். கிராம மக்கள் உதவியுடன், வீரர்கள் தீயை அணைத்த னர். இந்த தீ விபத்தில் லாரியுடன், வைக்கோலும் எரிந்து அடைந்தது. இது குறித்து கொளத்தூர் போலீ சார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
- திருப்பூரில் பணியாற்றிய போது அரிய லுார் மாவட்டம் ஜெயங் கொண்டத்தை சேர்ந்த வர் அனுஷியா (25) என்ற பெண்ணை காதலித்து திரு மணம் செய்து கொண்டார்.
- இவர்களது திருமணத்துக்கு சுபாசின் தந்தை தண்டபாணி கடும் எதிர்ப்பு தெரிவித்தார்.
சேலம்:
கிருஷ்ணகிரி மாவட்டம் ஊத்தங்கரை அருகே உள்ள அருணபதி பகு தியை சேர்ந்த வர் தண்ட பாணி (வயது50). தொழி லாளி. இவரது மனைவி சுந்தரி. இவர்களது மகன் சுபாஷ் (25 ) எம்.பி.ஏ பட்டதாரி.இவர் திருப்பூரில் பணியாற்றிய போது அரிய லுார் மாவட்டம் ஜெயங் கொண்டத்தை சேர்ந்த வர் அனுஷியா (25) என்ற பெண்ணை காதலித்து திரு மணம் செய்து கொண்டார். இருவரும் வெவ்வேறு சமூகத்தை சேர்ந்தவர்கள். இவர்களது திருமணத்துக்கு சுபாசின் தந்தை தண்டபாணி கடும் எதிர்ப்பு தெரிவித்தார்.
இந்த நிலையில் கடந்த 14-ந்தேதி சுபாஷ் அருண பதியில் உள்ள தனது பாட்டி கண்ணம்மாள் வீட்டுக்கு தனது மனை வியை அழைத்து வந்தார். இரவு சாப்பிட்டு விட்டு அனை வரும் தூங்கிக் கொண்டி ருந்தனர். மறுநாள் அதிகாலையில் தண்டபாணி தனது மகனை அரிவாளல் கொடூரமாக வெட்டி ஆணவ கொலை செய்தார். தடுத்த தனது தாய் கண்ணம்மாளையும் வெட்டி கொலை செய்தார்.
பின்னர் மருமகள் அனுசி யாவை துரத்திச் சென்று கழுத்து, முகம் கை என தண்டபாணி கண்மூ டித்தன மாக வெட்டினார். உடல் முழுக்க ரத்த காயங்களுடன் வெளியே ஓடி வந்த அனுசியா வீட்டின் முன்பு மயங்கி விழுந்தார்.
பலத்த காயம டைந்த அனுஷியா ஊத்தங்கரை அரசு மருத்து வமனையில் சேர்க்கப்பட்டார். பின்னர் மேல்சிகிச்சைக்கு நேற்று முன்தினம் நள்ளிரவு சேலம் அரசு மருத்துவ மனையில் சேர்க்கப் பட்டார். சிகிச்சை பெற்று வரும் அனு ஷியா விடம், சேலம் நீதிமன்றம் 3-வது ஜூடிசியல் மாஜிஸ்திரேட் தங்க கார்த்திகா நேற்று வாக்குமூலம் பெற்றார்.
இந்த நிலையில் அனுஷி யாவிற்கு போலீஸ் பாதுகாப்பு டன் டாக்டர்கள் தீவிர சிகிச்சை அளித்து வருகின்ற னர்.
- முருகன் (வயது 45). இவர் குகை பிரபாத் அருகே உள்ள ஒரு காபி பாரில் டீ மாஸ்டராக வேலை பார்த்து வருகிறார்.
- முருகன் பணம் தர மறுத்த தால் ரவிக்குமார் கடையிலிருந்து டீ பாய்லர்,பிஸ்கட் வைத்துள்ள கண்ணாடி ஜார்கள்,மற்றும் கடையில் இருந்த பொருட்களை அடித்து நொறுக்கினார்.
சேலம்:
சேலம் தாதகாப்பட்டி பகுதியைச் சேர்ந்தவர் முருகன் (வயது 45). இவர் குகை பிரபாத் அருகே உள்ள ஒரு காபி பாரில் டீ மாஸ்டராக வேலை பார்த்து வருகிறார்.
இவரது கடைக்கு கிச்சிப்பாளையம் வீட்டு வசதி வாரிய குடியிருப்பு களரம்பட்டி மெயின் ரோடு பகுதியைச் சேர்ந்த ராஜா என்பவரின் மகன் ரவிக்கு மார் (29) என்பவர் வந்தார்.
அவர் முருகனிடம் பணம் கேட்டுள்ளார். முருகன் பணம் தர மறுத்த தால் ரவிக்குமார் கடையிலிருந்து டீ பாய்லர்,பிஸ்கட் வைத்துள்ள கண்ணாடி ஜார்கள்,மற்றும் கடையில் இருந்த பொருட்களை அடித்து நொறுக்கினார்.
இது குறித்து முருகன் செவ்வாபேட்டை போலீசில் புகார் செய்தார். போலீசார் வழக்கு பதிவு செய்து ரவிக்குமாரை கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தி சிறையில் அடைத்தனர்.
- வீட்டில் விறகு அடுப்பு மூலம் சமையல் செய்த போது திடீரென சேலையில் தீப்பிடித்தது.
- அந்த தீ மளமளவென உடலில் பரவியது.
சங்ககிரி:
சங்ககிரி அருகே தேவண்ணகவுண்டனூர் மட்டம்பட்டி வன்னியர தெருவை சேர்ந்தவர் ஆரோக்கியமேரி வயது (வயது 88). இவர், வீட்டில் விறகு அடுப்பு மூலம் சமையல் செய்த போது திடீரென சேலையில் தீப்பிடித்தது. அந்த தீ மளமளவென உடலில் பரவியது.
அவரது அலறல் சத்தம் கேட்டு அக்கம் பக்கத்தில் உள்ளவர்கள் ஓடி வந்தனர். ஆரோக்கியமேரி மீது பற்றி எரிந்த தீயை அணைத்தனர். பின்னர் அவரை சங்ககிரி அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கிருந்து மேல் சிகிச்சைக்காக சேலம் அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு சிகிச்சை பலன் அளிக்காமல் ஆரோக்கிய மேரி பரிதா பமாக இறந்தார். இதுகு றித்து சங்ககிரி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர்.
- சுமார் 65 வயது மதிக்கத்தக்க மூதாட்டி மயங்கிய நிலையில் இருந்தார்.
- அவரை, அங்கு துப்புரவு பணியில் ஈடுபட்டிருந்தவர்கள் மீட்டு, அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்கு சேர்த்தனர்.
சேலம்:
சேலம் அரசு ஆஸ்பத்திரி வளாகம், அம்மா உணவகம் அருகே, கடந்த 19.06.2022 அன்று சுமார் 65 வயது மதிக்கத்தக்க மூதாட்டி மயங்கிய நிலையில் இருந்தார். அவரை, அங்கு துப்புரவு பணியில் ஈடுபட்டிருந்தவர்கள் மீட்டு, அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்கு சேர்த்தனர்.
அங்கு சிகிச்சை முடிந்து வெளியே சென்ற மூதாட்டி, மீண்டும் உடல்நிலை பாதிக்கப்பட்டு, கடந்த பிப்ரவரி மாதம் 17-ந் தேதி அரசு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டார். அங்கு தீவிர சிகிச்சை அளித்தும் பலனின்றி கடந்த மாதம் 22-ந் தேதி மூதாட்டி இறந்து போனார்.
உயிரிழந்த மூதாட்டி யார்? எந்த ஊரை சேர்ந்தவர்? என்பது தெரியவில்லை. இதுகுறித்து அரசு ஆஸ்பத்திரி போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
- வாழப்பாடி மற்றும் சுற்றுப்புற கிராமங்களுக்கு வாழப்பாடி அருகே சிங்கிபுரத்தில் இயங்கும் துணை மின் நிலையம் வாயிலாக மின் விநியோகம் செய்யப்படுகிறது.
- நேற்று பகல் 2 மணி அளவில் திடீரென மின் பாதையிலும், மின் சாதனங்களிலும் பழுது ஏற்பட்டது. இதனால் வாழப்பாடி மற்றும் சுற்றுப்புற கிராமங்களில் மின் வினியோகம் முழுமையாக தடைப்பட்டது.
வாழப்பாடி:
சேலம் மாவட்டம் வாழப்பாடி மற்றும் சுற்றுப்புற கிராமங்களுக்கு வாழப்பாடி அருகே சிங்கிபுரத்தில் இயங்கும் துணை மின் நிலையம் வாயிலாக மின் விநியோகம் செய்யப்படுகிறது.
இப்பகுதியில் நேற்று பகல் 2 மணி அளவில் திடீரென மின் பாதையிலும், மின் சாதனங்களிலும் பழுது ஏற்பட்டது. இதனால் வாழப்பாடி மற்றும் சுற்றுப்புற கிராமங்களில் மின் வினியோகம் முழுமையாக தடைப்பட்டது.
இது குறித்து தகவலறிந்த மின்வாரிய பணியாளர்கள் 20-க்கும் மேற்பட்டோர் ஒருங்கிணைந்து, தொடர்ந்து பல மணி நேரமாக மின் பாதை மற்றும் மின் சாதனங்களில் ஏற்பட்ட பழுதை நீக்க போராடினர். ஆனால் மின் பழுதை சீரமைக்க முடியவில்லை.
இதனால் நேற்று இரவு முழுவதும் மின்வியோகம் முழுமையாக தடைபட்டது. இதனால் மக்கள் இரவில் தூங்க முடியாமல், வீட்டை விட்டு வெளியே வந்து தவித்தனர்.
சுட்டெரிக்கும் வெயிலின் தாக்கம் அதிகரித்துள்ள தருணத்தில், நேற்று பகல் 2 மணி முதல் இன்று காலை 9 மணிவரை தொடர்ந்து 19 மணி நேரத்திற்கு மேலாக மின் விநியோகம் தடைபட்டுப் போனதால், வாழப்பாடி மற்றும் சுற்றுப்புற கிராம மக்கள் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டது.
அரசு பொது தேர்வுக்கு படிக்க முடியாமல் மாணவ, மாணவிகள் தவித்தனர். மின் சாதனங்களை இயக்க முடியாமல் போனதால், பல்வேறு வணிகர்களுக்கும் இழப்பு ஏற்பட்டதாக கவலை தெரிவித்தனர்.
- நீர்வரத்தை விட அணையின் திறப்பு அதிகமாக இருப்பதால், அணையின் நீர்மட்டம் வேகமாக சரிந்து வருகிறது.
- இன்று அணையின் நீர்மட்டம் 102.45 அடியாக உள்ளது.
மேட்டூர்:
காவிரி நீர்ப்பிடிப்பு பகுதிகளில் பெய்யும் மழையை பொறுத்து ஒகேனக்கல், மேட்டூர் அணைக்கான நீர்வரத்து அதிகரிப்பதும், சரிவதுமாக உள்ளது.
ஒகேனக்கல் காவிரியில் நேற்று 1,000 கன அடியாக இருந்த நீர்வரத்து, நேற்று காலையும் அதே அளவில் நீடித்தது. அதே சமயம், மேட்டூர் அணைக்கு நேற்று காலை 1,109 கன அடியாக இருந்த நீர்வரத்து, இன்று காலை 948 கன அடியாக சரிந்துள்ளது.
அணையில் இருந்து குடிநீர் தேவைக்காக விநாடிக்கு 1,500 கன அடி வீதம் தண்ணீர் திறக்கப்பட்டு வருகிறது. நீர்வரத்தை விட அணையின் திறப்பு அதிகமாக இருப்பதால், அணையின் நீர்மட்டம் வேகமாக சரிந்து வருகிறது. இன்று அணையின் நீர்மட்டம் 102.45 அடியாக உள்ளது.
- என் பிரச்சினைகளை அம்மாவிடம் சொல்லி நாங்கள் எவ்வகையிலும் மீள முடியாது என்று நன்றாக தெரிந்ததால் இந்த முடிவை எடுத்தோம்.
- சாவிற்கு யாரும் பொறுப்பு இல்லை. நாங்களே சுயமாக எடுத்த முடிவு என்று இதன் மூலம் தெரிவித்துக் கொள்கிறோம்.
சேலம்:
கோவை பீளமேடு கோபால் நகர் பிஎஸ்எஸ் அவன்யூ பகுதியை சேர்ந்தவர் மோகன்பாபு (வயது 57). இவரது மனைவி ஜெயந்தி (50). இவர்களுக்கு 2 மகள்கள் உள்ளனர். மோகன்பாபுவும் அவரது மனைவியும் கடந்த 5-ந் தேதி வீட்டில் இருந்து மாயமாகினர். இதுகுறித்து பீளமேடு போலீஸ் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டது. அதன்பேரில் போலீசார் வழக்கு பதிந்து தேடி வந்தனர்.
இந்நிலையில் கடந்த 11-ந் தேதி அதிகாலையில் மோகன்பாபு தனது மனைவியுடன் சேலம் வந்துள்ளார். பின்னர் புது பஸ்நிலையம் அருகேயுள்ள விடுதியில் ஏசி அறை எடுத்து தங்கியுள்ளனர். அங்கு மறுநாள் (12-ந் தேதி) அறையில் இருந்து இருவரும் வெளியே வரவில்லை. இதனால் சந்தேகமடைந்த விடுதி ஊழியர்கள் நேற்று முன்தினம் மாலை பள்ளப்பட்டி போலீஸ் நிலையத்திற்கு தகவல் தெரிவித்தனர். அதன்பேரில் விரைந்து வந்த போலீசார் அறையின் கதவை உடைத்து பார்த்தபோது முன்பகுதியில் உள்ள அறையில் ஜெயந்தியும், கழிவறையில் மோகன்பாபுவும் தூக்கு போட்டு தற்கொலை செய்துகொண்டிருப்பது தெரியவந்தது. அங்கு மோகன்பாபு எழுதி வைத்திருந்த உருக்கமான 3 கடிதத்தையும் போலீசார் மீட்டனர். அதில் கூறியிருப்பதாவது:-
அன்பான என் மகள்கள் ரம்யா, அபர்ணா ஆகிய இருவருக்கும் எழுதிக் கொள்வது என்னவென்றால் முழுக்க முழுக்க இந்த முடிவிற்கு உங்கள் அப்பாவான நானே காரணம். நீங்கள் ஒன்றை புரிந்து கொள்வது இந்த தருணத்தில் நல்லது. நான் எப்பொழுதும் உங்கள் இருவரையும் மற்றும் குடும்பத்தை பற்றி சொல்லியோ எங்கும் கடன் பெறவில்லை. நான் யாருக்கும் உங்கள் செல்போன் நம்பர்கள் கொடுக்கவில்லை. நான் கடன் பெற்றது 90 சதவீதம் உங்கள் அம்மாவிற்கு தெரியாது.
இப்பொழுது என் பிரச்சினைகளை அம்மாவிடம் சொல்லி நாங்கள் எவ்வகையிலும் மீள முடியாது என்று நன்றாக தெரிந்ததால் இந்த முடிவை எடுத்தோம்.
என்னை நம்பி மட்டும் கடன் கொடுத்தார்களே தவிர வேறு யாரையும் நம்பி கடன் கொடுக்கவில்லை. வாங்கிய கடனுக்கு மேல் நான் வட்டி கட்டி விட்டேன். வட்டி வட்டி என்று மேலும் கடன் வாங்கி வட்டி கொடுத்ததால் தான் இந்த நிலைமை என்று புரிந்து கொண்டேன். ஆகையால் இனி தாங்க முடியாது என்றுதான் இந்த முடிவு. எங்களை மன்னித்து விடுங்கள். நான் வாங்கிய கடனுக்கு என்னைத் தவிர வேறு யாரும் பொறுப்பு இல்லை.
நீங்கள் இருவரும் உங்கள் குடும்பத்தாரிடம் நன்றாக நடந்து கொள்வீர்கள். உங்கள் இருவருடைய மாமனார் மற்றும் மாமியார் ஆகியோரை தாய்-தந்தையாக நினைத்து அவர்களை நன்றாக எந்த காலத்திற்கும் பார்த்துக் கொள்ளுங்கள். எங்களது உடலை இந்த ஊரிலேயே தகனம் செய்து விடவும்.
இன்னொரு கடிதத்தில், அம்மா எழுதிக் கொள்வது, என்னை பற்றி கவலை கொள்ள வேண்டாம். உங்களுக்கு நல்ல கணவர்கள் மற்றும் மாமனார், மாமியார் அமைந்து உள்ளார்கள். நீங்கள் இருவரும் மற்றும் உங்கள் குடும்பத்தாரும் நன்றாக இருக்க வேண்டும் என்று ஆண்டவனை பிரார்த்திக்கிறோம்.
இன்னொரு கடிதத்தில், காவல்துறை அதிகாரி அவர்களுக்கு மோகன் பாபு ஆகிய நானும் எம்.ஜெயந்தி ஆகிய என் மனைவியும் எழுதிக்கொள்வது. இந்த சாவிற்கு யாரும் பொறுப்பு இல்லை. நாங்களே சுயமாக எடுத்த முடிவு என்று இதன் மூலம் தெரிவித்துக் கொள்கிறோம். இது முழுக்க கடன் பிரச்சினையால் எடுத்தது. இவ்வாறு அவர்கள் எழுதியுள்ளனர். உடலை மீட்ட பள்ளப்பட்டி போலீசார் பிரேத பரிசோதனைக்கு பிறகு உடலை மகள்களிடம் ஒப்படைத்தனர். இதையடுத்து இருவரின் உடலும் சேலம் காக்காயன் சுடுகாட்டில் தகனம் செய்யப்பட்டது.
- கோழிக் கொண்டை பூ சீசன் என்பதால், அதிகளவில் பூத்து வருகிறது.
- வீராணத்தில் கோழிக் கொண்டை சாகுபடி செய்ய ப்பட்டுள்ள இடத்தில், கோழி க்கொண்டை பூ நல்ல முறையில் வளர்ந்து ள்ளது.
சேலம்:
சேலம் மாவட்டத்தில் பனமரத்துப்பட்டி, கம்மாளப்பட்டி, மங்களபுரம், வீராணம், வலசையூர், கன்னங்குறிச்சி, மேச்சேரி, மேட்டூர் உள்பட பல பகுதிகளில் கோழிக் கொண்டை பூச்சொடி அதிகளவில் சாகுபடி செய்யப்பட்டுள்ளது.
தற்போது கோழிக் கொண்டை பூ சீசன் என்பதால், அதிகளவில் பூத்து வருகிறது. வீராணத்தில் கோழிக் கொண்டை சாகுபடி செய்ய ப்பட்டுள்ள இடத்தில், கோழி க்கொண்டை பூ நல்ல முறையில் வளர்ந்து ள்ளது. இங்கு பறிக்கப்படும் பூக்களை, விவசாயிகள் சேலம் வ.உ.சி. பூ மார்க்கெட்டு க்கும், வேறு பகுதிகளுக்கும் விற்பனைக்கு அனுப்பு கின்றனர்.
- மேட்டூர் அணை பகுதியில் உள்ள சிறு மற்றும் குறு தொழிற்சாலைகள் வருகிற 20-ம் தேதி ஒரு நாள் கதவு அடைப்பு போராட்டம் நடத்த திட்டமிட்டுள்ளது.
- இந்த கதவடைப்பு காரணமாக பல கோடி ரூபாய் மதிப்புள்ள பொருட்கள் உற்பத்தி பாதிக்கப்படும் என தெரிய வருகிறது.
மேட்டூர்:
மேட்டூர் தொழிற் பேட்டை யில் 200-க்கும் மேற்பட்ட சிறுகுறு தொழிற்சாலைகள் இயங்கி வருகிறது. இங்கே உற்பத்தி செய்யப்படும் பல்வேறு பொருட்கள் வெளிநாடுகளுக்கும் வெளி மாநிலங்களுக்கும் வெளி மாவட்டங்களுக்கும் அனுப்பப்பட்டு வருகிறது. தற்போது மின்வாரியத்தில் தொழிற்சாலைகளுக்கு குறைந்தபட்சகட்டணம் ரூ35 என்பதை ரூ150 என உயர்த்தப்பட்டுள்ளது.
உச்ச பட்ச பயன்பாடு நேரம் என்பதை காலை 6 மணி முதல் 10 மணி வரையிலும் மாலை 4 மணி முதல் 10 மணி வரையிலும் பயன்படுத்தப்படும் மின்
கட்டணத்திற்கு 25 சதவீ தம் மின்கட்டணம் அதிக ரிக்கப்பட்டுள்ளது. இதன் காரணமாக சிறு மற்றும் குறு தொழிற்சாலைகள் முடங்கும் அபாயம் ஏற்பட்டுள்ளது. எனவே மின்கட்டண உயர்வையும் குறைந்தபட்ச மின் கட்டண உயர்வையும் முழுமையாக மின்வாரியம் ரத்து செய்ய வேண்டும் . தமிழ்நாடு சிறு தொழில் வளர்ச்சிக் கழகம் தொழிற் பேட்டையில் உள்ள நிலங்களை தொழில் முனைவோருக்கு 40 ஆண்டு காலம் குத்தகைக்கு விடும் திட்டத்தை ரத்து செய்ய வேண்டும் என்று கோரிக்கையை வலியுறுத்தி மேட்டூர் அணை பகுதியில் உள்ள சிறு மற்றும் குறு தொழிற்சாலைகள் வருகிற 20-ம் தேதி ஒரு நாள் கதவு அடைப்பு போராட்டம் நடத்த திட்டமிட்டுள்ளது. இந்த தகவலை மேட்டூர் அணை சிறு தொழில் அதிபர்கள் சங்க தலைவர் மாதப்பன் தெரிவித்துள்ளார், இந்த கதவடைப்பு காரணமாக பல கோடி ரூபாய் மதிப்புள்ள பொருட்கள் உற்பத்தி பாதிக்கப்படும் என தெரிய வருகிறது.






